Follow by Email

Wednesday, 30 January 2013

படம் பார்த்து கதை சொல் >>>>>படம் பார்த்து கதை சொன்னதுனால் தான் இவ்வளவு பிரச்சனை ....

முதலில் விஸ்வரூபம் படம் கமலின் விஸ்வரூபமாகா இருந்தது பின்பு 
அது திரைஅரங்கு உரிமையாளர்களின் விஸ்வரூபமாகா மாறியது பின்பு 
அது இஸ்லாமிய மக்களின் விஸ்வரூபமாகா இல்லை இல்லை சில இஸ்லாமிய 
இயங்ககளின் விஸ்வரூபமாகா .மாறியது ..ஆனால் இப்ப 
இது .. தமிழக அரசின்   விஸ்வரூபமாகா உருவெடுத்து இருக்கிறது ................


ஆம் இப்ப விஸ்வரூபதுக்கும் ..இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பிரச்சனை இல்லை ....தமிழக அரசுக்கும் .கமலுக்கும் உள்ள பிரச்சனை 

நேற்று எந்த டீ வீ  சேனல்களிலும் ..பிளாஸ் நீவ்ஸ் [flash news ] என்ன வென்றால் கோவையில் முஸ்லிம் மக்கள் அதிக வாழும் இடங்களில் கோவை கரும்புக்கடை .ஆசாத் நகரில்   ..சில மர்ம நபர்களால் பதிக்குவைக்கப்பட்ட  பெட்ரோல் குண்டு ..கண்டு பிடிக்க பட்டது ...இந்த பெட்ரோல் குண்டு எதற்க்காக  பதிக்கு வைக்கப்பட்டது ..யார் பதிக்கு வைத்தார்கள் ..விஸ்வரூபம் படத்தை திரையிடாமல் தடுக்க சில மர்ம நபர்களால் பதிக்க வைக்க பட்டதா ??? என்று போலீசார் ..விசாரணை செய்து கொண்டு வருகிறார்கள் ......

என்ற செய்தி வளம் வந்து கொண்டு இருந்தது ..இதை கண்டு நான் பெரிதும் வறுத்த பட்டேன் ..ஏன் என்றால் ..நானும் கோயம்புத்தூர் காரன் தான் அதுவும் நான் வசிப்பதும் கரும்புகடையில் தான் .....எனக்குள்ளே என் சமூதாயம் மக்களின் மேல் கோவம் வந்தது ஏன் என்றால் எதற்காக நம் மக்கள் இப்படி பெட்ரோல் குண்டுகளை எல்லாம் வைத்து இருப்பதனால்தானே ..மாற்று மத சகோதரர்கள் நம்மை தீவிரவாதி என்று எண்ணி கொண்டு இருக்கிறாகள் ..இதனால் இந்த பெட்ரோல் குண்டுகளினால் அவை  உறுதி செய்ய படுமே   என்று ..வருத்தப்பட்டேன் ...ஆனால் 

இன்று காலையில் நான் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ரெடி ஆகி கொண்டு இருந்தேன் ..உடனே என் தந்தை வந்து ஒரு செய்தி சொன்னார்கள் அது என்ன வென்றால் 

நேற்று போலீசார் ..கரும்புகடைக்கு வந்ததாகவும் .. அங்கே   ஆசாத் நகரில் அன்வர் என்ற நபர் கரி [இறைச்சி ]கடை  நடத்தி வருகிறார்  ..அந்த கடைக்கு அருகில் ஒரு காலி குடோன் இருந்தது ..அதை சாதகமாகா பயன் படுத்தியே போலீசார் .இந்த அன்வரை ..தனியாகா அழைத்து அந்த குடோனில் ..பெட்ரோல் குண்டு இருந்ததாகா அதை அன்வர் பார்த்து போலீசாரிடம் ..கூறியதாகவும்...உடனே வந்த போலீசார் அந்த பெட்ரோல் குண்டை .பறிமுதல் செய்து ..அந்த அன்வரை சாட்சியாகா ..அவரிடம் இருந்து கை எழுத்து வாங்கி கொண்டு வந்ததாகவும் .....ஒரு பொய்யான தகவலை போலீசார் நேற்று செய்து ..இருக்கிறார்கள்....

அன்வர் அவர்களும் போலிசார் சொல்லும் பொழுது பயந்து கொண்டு ..ஆம் நான் அந்த பெட்ரோல் குண்டை பார்த்தேன் என்று கை எழுத்து போட்டு குடுத்து விட்டார் ..ஆனால்  அவரின் மனசு அந்த பொய்யான தகவல்களுக்கு இடம் கொடுக்க வில்லை உடனே அவர் .அங்கே உள்ள ஜமாத்திடம் வந்து நடந்த உண்மையை சொல்லி விட்டார் ..இந்த செய்தியால் எங்கள் ஏரியாவில் ஒரே பரபரப்பு ......

மக்களிடம்...ஒற்றுமைக்ககா பாடு படும் அரசு ..இப்படி மக்களின் நடுவே பிளவை ஏற்படுத்தி .ஒருவருக்கொருவர் சண்டைஏற்படுத்த  பித்தனா  பண்ணி கொண்டு இருக்கிறது....இதனால் எனக்கு அமைதி படை படம் பார்த்த நியாபகம் தான் வருகிறது அந்த படத்தில் ...சத்யராஜ் மக்களின் ஓட்டுக்காக ..கீழ் சாதிக்கும் மேல் சாதிக்கும் சண்டையை ஏற்படுத்தி விட்டு ..அதை சிரித்த படி வேடிக்கை பார்ப்பார் ..சத்யராஜ்... பின்பு எல்லோரும் அடித்து சாகும் பொழுது ..சமாதானம் பேசுவது போல் ..வந்து தடுத்து நிறுத்துவார் .. ...

அந்த மாரிதான் நடக்க போகுது போல் தெரிகிறது..நம்ம தமிழகத்திலும் அல்லாஹ் தான் காப்பத்தனும் ....கமலுக்கும் .தமிழக அரசுக்கும் உள்ள பகையால் ..இடையே அப்பாவி முஸ்லிம் மக்கள்  மாட்டி கொண்டு முழிக்கிறார்கள் ..முஸ்லிம்களின்  பெயரை சொல்லி தமிழக அரசு காய் நகர்த்தி கொண்டு வருகிறது .......நம் முஸ்லிம் இயங்ககளே படத்தை வெளியிட சொன்னாலும் ..நம் தமிழக அரசு வெளியிடாது போல் தெரிகிறது ..அப்படியே என்னதான் பகை கமலின் மீது நம் தமிழக அரசுக்கு ???

 கடுமையாக இந்தப் படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணம்?  
அதிமுகவுக்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இந்த படத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும்,  ஆனால் திரைப்படத்தை 100 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரித்திருப்பதால் திரைப்படத்தை குறைந்த விலைக்கு விற்க மறுத்துவிட்டு அதிக விலைக்கு வேறு ஒரு தொலைக்காட்சிக்கு விற்றுவிட்டதுதான் காரணம் என்றும் கூறூகிறார்கள்.
அதைப்போல மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நூல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது,   வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக வரவேண்டும் என்று ப. சிதம்பரத்தை குறிப்பிட்டு பேசியதும் கோபத்திற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.  ஆனால், இந்த கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை....


அல்லாஹ்தான் காப்பத்தனும் ....நன்றி நட்புடன் உங்கள் >>>>ரினாஸ்<<<< 


8 comments:

 1. சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட கமலை பார்த்தால்,பரிதாபமாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. அந்த சூனியத்தால் நம் மக்களுக்கு எந்த பாதிப்பு வராமல் இருந்தால் சரி

   Delete
 2. இவர் முன்னமே அமைப்புகளுடன் சேர்ந்து பேசும் முடிவுக்கு வந்திருந்தால் இந்த நிலைக்கு ஆளாக வேண்டி இருக்காது.எப்படியோ இனி நன்மை விளைந்தால் சரிதான்.என்னது குண்டா இனி வீட்டுக்குள்ளையும் நல்லா சுத்தி பார்க்கணும் குடும்பதுகுள்ளையும் குட்டி கலாட்டா நடந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்.

  ReplyDelete
 3. சலாம் சகோ.ரினாஸ் கான் !

  நல்ல கருத்துள்ள பதிவு..! இங்கு கமலுக்கு நடந்து வரும் பிரச்சனைகளுக்கு திமுக தலைவர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்..அதில் தமிழக அரசுதான் காரணம் என்று ..நடந்ததை கொஞ்சம் என்ன என்று பார்ப்போம்...!!!யார் காரணம் என்றும் பார்ப்போம்..!!!

  ப.சி புத்தக வெளியீட்டு விழாவில் கமல் பேசியது :

  உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம். நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் (பிரதமர் பதவி) வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.

  அடுத்து திமுக தலைவர் பேசுவதை கவனியுங்கள் :

  'சிதம்பரம் 1984ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக் காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்! என்றார்.

  நீதி :

  இங்கு ஒரு விசயத்தை கமல் இலைமறைவு காய்மறைவாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்..ஆனால் அதை வேட்டி கட்டிய தமிழன்தான் வரவேண்டும் சேலை வரக்கூடாது என்று கூறியதாக இழுத்துவிட்டு கூத்து பார்த்துள்ளார் நமது தாத்தா !!! இப்போது அதற்க்கு காரணம் வேறு கூறுகிறார்.
  இவர் மட்டும் அன்று திருவாய் மலரவில்லை என்றால் பிரச்சனையை அரசு இந்த தடை அளவுக்கு கொண்டு வந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்..இங்கு கமலுக்கு வினை நிச்சயம் தாத்தாதான்..!!!

  யாருமே அரசியல் வாதிகளிடம் இருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது...!!!

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹ ஹ ...கடைசியில் இந்த பிரச்சனைகளின் நடுவில் ..நம்மை போன்ற அப்பாவி முஸ்லிம் மக்கள் பாதிக்க படாமல் இருந்தால் சரி

   Delete
 4. fine. Article has many spelling and grammatical mistakes.

  //விஸ்வரூபமாகா => விஸ்வரூபமாக
  //வறுத்த பட்டேன் => வருத்தப் பட்டேன்
  //வளம் வந்து => வலம் வந்து
  //பதிக்குவைக்கப்பட்ட => பதுக்கி வைக்கப்பட்ட
  //அந்த மாரிதான் => அந்த மாதிரிதான்
  //காப்பத்தனும் => காப்பாற்றனும்

  நண்பரே! தாய்மொழியில் எழுதும்போது பிழைகள் வராமல் பார்ததுக் கொள்ளவும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி ...சகோ ..நான் எழுதும் ஒவ்வொரு பதிப்பையும் எழுதிமுடித்த பிறகு ....பிழை திருத்தம் ஏதாவது இருக்கிறதா ? என்பதை என் நண்பர்களிடம் குடுத்து படிக்க சொல்லுவேன் ..ஆனால் இந்த பதிப்பை எழுதும் நோக்கமே எனக்கு இல்லை திடீரென்று எனக்கு கிடைத்த செய்தியின் மூலம்தான் ...இந்த பதிப்பை எழுதினேன் .....இதில் இருக்கும் பிழை திருத்தம் இருப்பதை நான் கவனிக்க மறந்துவிட்டேன் ...நன்றி உங்களின் இந்த ஆலோசனைக்கு ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள் சகோ

   Delete