Follow by Email

Friday, 5 July 2013

வருது வருது ரமலான் வருது ..........


           ரமலான் எம்மை நோக்கி வந்துகொண்டுஇருக்கிறது .வான்மறை வந்திறங்கிய மாதம் .அருள் மறையாம் திருமறைக் குரான் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதன் சிறப்பு பெற. நோன்பு இருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும் .

நோன்பு என்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு ..உண்ணுதல் பருகுதல் .உடலுறவில் ஈடுபடுதல் ..ஆகியவை அதிகாலை முதல் மாலை வரை செய்யாமல் இருப்பது ஆகும்.

நோன்பு மனிதனின் ..நடைமுறைகளை சீராக்கி அவனிடம் உருவாகும் கெட்ட சிந்தனைகளை அழித்து...அவனை ஒழுக்கமுள்ள மனிதனாக மாற்றுகிறது ...

நோன்பை பற்றி அல்லாஹ் கூறுகிறான் .

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்..திருக்குர்ஆன் .2:183

மேற்படிய வசனம் நோன்பு என்பது தூய்மையாக இருக்க உதவக்கூடியது.என்பது தெரிகிறது 

இன்று உலகைக்  உலுக்கி வரும் அநேக பிரச்சனைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதைத்  நுணுக்கமாக ஆராய்ந்தால் அறியலாம் ...அவற்றுள் .......

1.உடல் இச்சை 
2. கோபம் 
3.தவறான உணவுமுறை 
4.தவறான பேச்சு 

இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும் 

உடல் இச்சை....

மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது..உலக இருப்புக்கும் உயிரினங்களின் உற்பத்திக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும் ..எனினும் இந்த உணர்வு சரிபடுத்தப்  பட வேண்டும்..கட்டு படுத்தப்  படவேண்டும் .தவறானமுறையில் இந்த உணர்வுகளைக் தீர்த்து கொள்ள கூடாது...

இன்று நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாக கொண்டவை ஆகும் ....இளம் பெண்கள் அதிகமானவர்கள் ..கொலை செய்ய படுவதும் தற்கொலை செய்யப்  படுவதும் ..இந்த பாலியல் பிரச்சனைகளால் தான் ..[உதாரணத்துக்கு] டெல்லியில் ஓடும் பஸ்ஸில் ஒரு இளம்பெண்ணை கற்பழித்து ..கொலை செய்தார்கள் இதை அனைவரும் அறிந்ததே ....உலகம் சந்தித்து வரும் பாலியல் நோய்களை தீர்த்து கொள்ள ..அரசுகள் திண்டாடி கொண்டு வருகிறது 

ஆனால் நோன்பு நோற்க்கும் ஒருவன் தனது மனைவியிடம் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னை கட்டு படுத்தி கொள்கின்றான் .நோன்பு பாலியல் உணர்வை கட்டுபடுத்தும் என்பதாலேயே இது ..சாத்தியமாகின்றது...

பாலியல் உணர்வை பற்றி நபி மொழியை பார்ப்போம் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இளைஞர்களே  உங்களில் , திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப்பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும் என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நூல்: புகாரி - 1905.  

கோபம்....

இன்று மனிதன் இயந்தரமாகி மனிதத் தன்மையைத் இழந்து வருகின்றான்.கோபத்தை கட்டு படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான் 

ஆனால் நோன்பு மனிதனின் கோப உணர்வுகளை கட்டு படுத்துகின்றது .நீ நோன்புடன் இருக்கும் பொழுது யாரவது உன்னிடம் சண்டையிட்டால் .அவனிடம் நீ... நான் நோன்பாளி என்று கூறி விலகிவிடு என்று இஸ்லாம் கூறுகின்றது 
கோப உணர்வுகளை ஒருவன் கட்டுப்படுத்தி வாழ பழக்க பட்டால் அவன் பல ஆபத்துகளில் இருந்து விடுதலை பெற்று விடலாம்.....

தவறான உணவு முறை

உலகம் இப்பொழுது பாஸ்ட் புட்டுக்கு மாறி வருகிறது ...அதாவது கண்ட கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் தின்று ..உடலில் கொழுப்புகள் அதிகமாக மாறி உடல் கொழுப்புகளை கரைக்க .சிலர் மருத்துவர்களை நாடுகின்றார்கள்...ஒரு மனிதன் நோன்பு வைக்கும் பொழுது ...இந்த பிரச்சனைகளில் இருந்து அவன் எளிதாக விடை பெறலாம் ..என்று அறிவியல் அறிஞர்களே ஆராய்ந்து கூறும் அளவுக்கு நோன்பு ஒரு நன்மையை மனிதனுக்கு  வகுக்கின்றது...

தவறான பேச்சு 
 
தவறான பேச்சுகளில் இருந்தும் .தவறாக பேசுபவர்களும் இந்த நோன்பு மாதத்தில் .அதிகம் அதிகமாக பள்ளியுடன்  இணைவார்கள்...இந்த நோன்பு மாதத்தில் சண்டைக்கும் சச்சரவுக்கும் செலவழிக்காமல்..இபாதத்துக்கும் பக்குவத்தை ஏற்படுத்துவதர்க்கும்...அனைவரும் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் ...எல்லாம் வல்லா அல்லாஹுதால உதவி செய்வானாக   

நன்றி ..இப்படிக்கு உங்கள் நண்பன் ரினாஸ் Saturday, 27 April 2013

பலவீனம் இல்லை .......


அஸ்ஸலாமு அழைக்கும் சகோதர சகோதரிகளே ...

அல்லாஹ்வுக்கு பலவீனம் இல்லை ........

இதோ திருமறையில் தன்னை பற்றி அல்லாஹ் கூறுகின்றான் 


தூக்கம் இல்லை .......

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்..... திருகுர்ஆன்.2:255

சோர்வு இல்லை .....

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை...திருகுர்ஆன்.50:38

மரணம்இல்லை 

அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்..திருகுர்ஆன்.3:2

மறதி இல்லை 

(மலக்குகள் கூறுகிறார்கள்; நபியே!) "உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பது அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்..திருகுர்ஆன்.19:64

பசி தாகம் இல்லை .

அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை..திருகுர்ஆன்.51:57

உதவியாளன் இல்லை 

"அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அமைத்தும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. திருகுர்ஆன்.17:111

வீண் விளையாட்டு இல்லை 

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்றும்;) திருகுர்ஆன்.. 3:191

தேவை இல்லை ..

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான்...திருகுர்ஆன்.22:64

மனைவி இல்லை 

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். திருகுர்ஆன்.6:101

மகன் இல்லை ..

இன்னும் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்" என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை. இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன. திருகுர்ஆன்.2:116

பெண் மக்கள் இல்லை ...

இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான். திருகுர்ஆன்.6:100

பெற்றோர் இல்லை ...

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. திருகுர்ஆன்.112:3
Wednesday, 27 February 2013

இஸ்லாத்தில் ஐந்தில் ஒன்று <><><><>இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றில் மட்டும் தான் ஒற்றுமையாக இருக்கிறோம்.


1. கலிமா (ஈமான்) 
- இதில் மட்டும் தான் ஒற்றுமை 

2. தொழுகை 
- விரலை ஆட்டலாமா, கூடாதா?
- தொப்பி போடலாமா, போடா கூடாதா?
- நெஞ்சில் கட்டுவதா? வயிற்றில் கட்டுவதா?
- ஆமீன் சத்தமா சொல்லலாமா?

3. நோன்பு 
- சவூதி பிறையா?
- ஊர் பிறையா?
- சர்வதேசப் பிறையா?

4. ஜகாத் 
- ஒரு பொருளுக்கு வாழ்க்கையில் ஒரு முறையா?
- அல்லது வருடத்திற்கு ஒரு முறையா?

5. ஹஜ் 
- இங்கும் அதே பிறை பிரச்சனை தான்.

சில விஷயங்கள் மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின்  கலந்து ஆலோசித்த பிறகு  மக்களிடம் முறையான சட்ட விளக்கங்களாக வெளிவர வேண்டும்.  அதையெல்லாம் விட்டு விட்டு ஆளுக்கொரு பத்வா  என்று மக்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இதெற்கெல்லாம் சமுதாயத்தலைவர்கள் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை மறுத்துவிட முடியாது.

இஸ்லாத்தின் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆரம்பித்து, சிறு, சிறு ஷரியக்களில் நுழைந்து இப்போது அரசியல் சாக்கடையில் இஸ்லாமிய போர்வையில் நுழைந்திருக்கிறோம். கேவலமான அரசியல்வாதிகளை ஆதரிக்க ஹதீஸ்களை ஆதாரமாக காட்டும் பாணியை நானே நேரில் பார்த்து கொதித்து போயிருக்கிறேன். எங்கு தான் சென்றுகொண்டிருக்கிறோம்?

சகோதர மதத்தவர்களிடமே (வேதம் கொடுக்கப்பட்டவர்கள்) உங்களுக்கும், எங்களுக்கும் பொதுவான கருத்தின் பக்கம் வாருங்கள் என இஸ்லாம் அழைப்பு கொடுக்கும் போது, நமக்குள் ஏனிந்த பேதம், இயக்க வெறி, ஒற்றுமையற்ற தன்மை? நாமும் பொதுவான கருத்தின் பக்கம் கவனம் செலுத்தி சிறு சிறு விஷயங்களுக்காக நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளும் நிலைமை மாறும்காலம் எப்போது வரும்? ஒரு சகோதரனை, மனம் வருந்தும் படியாக நடத்துவது அல்லது பேசுவதை அவர் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்கிற ஹதீஸை நான் கேட்டிருக்கிறேன். அப்படி இருக்க அந்த ஹதீஸின் நடைமுரைபடித்தான் இயக்கவாதிகள் வாழ்கிரோமா? சிந்திப்பது நம்முடய கடமையாக இருக்கிறது. 

இதற்கும் என்ன விதமான பதில்கள் வரும் என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். பெருமானாரின் (ஸல்) வாக்கிற்கிணங்க நாம் கடல் நுரைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.............
                                                       

                                                             நன்றி சகோ ..Habeebulla
                                                               


நபி(ஸல்) அவர்கள் தனது உம்மத் 73 பிரிவுகளாக பிரிந்து விடும் என்றும் அதில் ஒன்றை தவிர ஏனைய பிரிவினர் நரகம் செல்வர் என்று  கூறியுள்ளார்கள்  ...
இந்த பிரிவுகள் பிரிந்தால் என்ன செய்யவேண்டும் என்பதையும்  நபி(ஸல்) கூறியிருக்கிறார்கள் ....


ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார் 

மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதூ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தார்கள். நான், 'இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதூ?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், 'அந்தக் கலங்கலான நிலை என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்" என்று பதிலளித்தார்கள். நான், 'அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்" என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், 'அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்... (என்ன செய்வது)?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலம்) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)" என்று பதிலளித்தார்கள். ....(புகாரி :ஹதீஸ்:3606 ,7084 )  

இதன் மூலமாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது அனைவருக்கும் தெருஞ்சு இருக்கும் என்று நம்புகிறேன் 
நன்றி இப்படிக்கு உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<
Thursday, 14 February 2013

குழந்தைகள் கண்ணாடி மாதிரி .<><><><><>
         
 இந்த புகைப்படத்தில் இருக்கும் குழ்நதை நான் தான் ஆறு மாத குழந்தையாக  இருக்கும் பொழுது எடுத்தது 
                                                 

நம் வீட்டில் நம் அப்பா அம்மா போடும் சண்டைகளை நாம் நம் நண்பர்களிடம் கூறுவோமா ? இல்லை 
ஏன் என்றால் அதை நாம் அவமானமாக நினைப்போம் .மற்றும் நம் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் இன்ன இன்ன விசயங்களை  வெளியுலகில் சொல்ல கூடாது என்று நமக்கு தெரியும் அதில் அப்பா அம்மா சண்டைகளும் கூட 
ஆனால் குழந்தைகளுக்கு அது தெரியுமா இல்லை ? 

ஏன் என்றால் குழந்தைகளின் பார்வையில் எல்லாமே விளையாட்டு பொருளாகத்தான் தெரியும் குழந்தைகள் கண்ணாடி மாதிரி ..அவர்களிடம் நல்லதை காட்டினால் தெரிவது நல்லதாகத்தான் தெரியும் அவர்களிடம் கெட்டதை காட்டினால் தெரிவது கெட்டத்தாகத்தான்..தெரியும் .....


இப்படி இருக்கும் பொழுது .சன் தொலைக்காட்சியில் ...இமான் அண்ணாச்சி நடத்தும் குட்டீஸ் சுட்டீஸ் ..என்ற நிகழ்ச்சி குழந்தைகளை வைத்து நடத்துவது. அதில் வரும் குழந்தைகளில் இமான் அண்ணாச்சி ..உங்கள் வீட்டில் அப்பா அம்மா சண்டை போடுவார்களா என்று குழந்தைகளிடம் கேலியாக கேக்கிறார் ..குழந்தைகளும் ..அப்பா அம்மாவை  பெல்ட்டால் அடிப்பதையும்..அம்மாக்கு  உதவியாகா அப்பா துணி துவைப்பதையும்  கழுத்தை நெரித்து சண்டை போடுவதையும் ...அந்த குழந்தைகள் வெகுளித்தனமாக..கூறுவதை அனைவரும் சிரித்து ரசித்து அந்த நிகழ்சிகளை பார்கின்றனர் ......

நானும் விழுந்து விழுந்து அதை சிரித்து ரசித்து பார்த்தேன் ஏன் என்றால் நம் வீட்டில் தான் இந்த மாறி நடக்குதுன்னு நினைத்தேன் ஆனால் எல்லோர் வீட்டிலும் இப்படித்தானா ..ஹி ஹி ஹி ஹி ..ஒரே சந்தோசம் .........உங்கள் வீட்டில் ?????

பெற்றோர்களே சண்ட போடுங்க தப்பு இல்ல குழந்தைகள் முன்னாடி சண்ட போடாதிங்க அது குழந்தைகளின் மனதை ரொம்ப பாதிச்சுரும் .இதை நான் சொல்லித்தான் தெருஞ்சுக்கனும்னு இல்லை உங்களுக்கே அது புரியும் .....

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே 
அவர் நல்லவராவதும் தீயவராவதும் .அன்னை வளர்ப்பினிலே 

இது ஏதோ  பாடலில்  வரும் வரிதான் அப்படின்னு நீங்க நினைக்கிரிங்க ..இது உண்மைதான்  ஆனால் இதில் உள்ள தத்துவமும்  100/100  உண்மை 

குழந்தை வளர்ப்பு பற்றி 
நபி[ஸல்] அவர்களும் தெளிவாக கூறுகிறார் 


இவ்வுலகத்தில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கெட்ட குழந்தையாக பிறப்பதில்லை. எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத் தான் பிறக்கின்றன.
அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு தான் அவர்களை நல்லவனாக அல்லது கெட்டவனாக மாற்றி விடுகிறது. (ஆதாரம் புகாரி 1385)

இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.
எனவே நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்வது பெற்றோர்களின் கடமையாகும்.............

 நான் பார்த்து ரசித்த குட்டீஸ் சுட்டீஸ் வீடியோ கீழே பகிர்ந்துள்ளேன் அனைவரும் பார்த்து ரசியுங்கள் .....நன்றி நட்புடன் உங்கள் >>>>ரினாஸ்<<<<

Tuesday, 12 February 2013

காலம் மாறும் பொழுது விளம்பரமும் மாறுது <><>


விளம்பரம் விளம்பரம் விளம்பரம் ..............விளம்பரம் இந்த உலகில் முக்கியமான ஒன்றாகும் பிறப்பு இறப்பு அனைத்துக்கும் விளம்பரம் தேவை படுகிறது .....விளம்பரத்துக்கு  மனிதனின் வாழ்கையில் முக்கிய பங்குண்டு ...........தான் உற்பத்தி பண்ணு பொருளை மக்களிடம் கொண்டு செல்ல விளம்பரம் தேவைப்படுகிறது 

ஒரு உற்பத்தியாளர் தான் உற்பத்தி பண்ணுன பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம் தேவை படுகிறது ...உற்பத்தி பண்ணும் பொருளை  விட. விளம்பரத்துக்கு  அதிகம் செலவு பண்ணுகிறார்கள் உற்பத்தியாளர்கள் ....

[உதாரணத்துக்கு] பெப்சி நிறுவனம் குறைந்த செலவில்   ஒரு சிறிய பாட்டில் பெப்சி  தயாரிக்கிறார்கள்....அந்த பெப்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரபலமான நடிகர் நடிகைகளை கொண்டு அந்த பெப்சி பாட்டிலை விளம்பரம் செய்கிறார்கள் ..இதற்காக அந்த பெப்சி நிறுவனம் ..அந்த நடிகர் நடிகைகளுக்கு கோடி கோடியாக பணத்தை தருகிறார்கள்..
பின்பு பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப ..ஒரு பெரிய தொகை வழங்கப்படுகிறது அதுவும் பிரபலமான சில ப்ரோக்ராம்களுக்கு[program] நடுவே இந்த  விளம்பரத்தை ஒளிபரப்ப அதுக்கு ஒரு பெரிய தொகை ....

மற்றும் சில பத்திரிக்கைகளில் இந்த பெப்சி பற்றி விளம்பரம் படுத்த அதுக்கு ஒரு தொகை ..முதல் பக்கத்தில் போட்டால் அதுக்கு ஒரு தொகை....ரேடியோவில் பெப்சி நிறுவனத்தைப்  பற்றி பேச ஒரு தொகை ..மக்கள் அதிக விரும்பும் நிகழ்சிகளின் நடுவே பெப்சி நிறுவனத்தைப்  பற்றி பேச அதுக்கு கூடுதல்  தொகை ...மற்றும் 


மக்கள் அதிக நடமாடும் இடம் ..பஸ் நிலையம் .ரயில் நிலையம்...பொருட்க்காட்சி வணிக வளாகம் .. இங்கே மக்கள் காணும் இடத்தில போஸ்டர்கள் கட்டவுட்  வைக்க அதுக்கு அரசாங்கத்திடம் உத்தரவு வாங்கி,மற்றும் அதுக்கும் ஒரு தொகை குடுக்க வேண்டும் இப்படிஒரு உற்பத்தி பண்ண பொருளை..விளம்பரம் செய்து மக்களிடம்..கொண்டு சேர்க்க படாதபாடு பட வேண்டி இருக்கிறது ..........

இவை.அனைத்துமே மக்களிடம்  சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செய்யப்படுகிறது .1658இல் இலண்டனில் வெளியான இதழில் விளம்பரம் முதன்முதலில் வெளியிடப்பட்டது.இப்படி அன்று முதல் இன்று வரை இப்படித்தான்  காலம் காலமாக நடந்து கொண்டு வருகிறது...........

எங்க அத்தா [அப்பா] அடிகடி கூறுவார் காலம்  மாறும் பொழுது வியாபாரத்தையும் காலத்துக்கு தகுந்த மாறி மாற்றவேண்டும் .....

அந்த மாறி ஆகி போனது இன்றைய விளம்பரத்தின் நிலை ..காலம் மாறும் பொழுது காலத்துக்கு தகுந்த மாறி விளம்பரத்தையும் மாற்றி வருகிறார்கள் ...ஆம் 

மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் படாத பாடு பட்டு  செய்யப்படும் விளம்பரம் போய் .....எந்த கஷ்டமும் இல்லாமல் இலவசமாக எளிதாக மக்களே மக்களிடம் விளம்பரம் செய்யும் யுக்தியை  ....உற்பத்தியாளர்கள் செய்து கொண்டு வருகிறார்கள்  

இன்று மக்களே மக்களிடம் விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் ...ஆமாம் 

சினிமாவிலோ இல்லை ஒரு பத்திரிக்கைகளிலோ  ஒரு சமூகத்தை தவறாக சித்தரித்து படமோ செய்தியோ  எடுத்தால்...அந்த சமூகம் அந்த செய்தியையும் படத்தையும் எதிர்த்து போராட்டம் பண்ணுகிறார்கள் .இந்த போராட்டம் 100/100 சரியானதே ...நம்மை பற்றி அவதூறாக ஒருவன் கூறினால்..அந்த அவதூறான செய்திக்கு  நம்முடைய எதிர்ப்பை காட்டனும் ..அப்பத்தான் நாம் நேசிக்கும் சமூகத்துக்கு நாம் காட்டும் நன்றி !!!!!!

இந்த போராட்டம் ஆர்ப்பாட்டம் ..இதன் பேரில் மக்களே இந்த உற்பத்தியை இலவசமாக மக்களிடம் கொண்டு செல்கிறார்கள் ..இதன் மூலம் உற்பத்தியாளருக்கு இலவசமான விளம்பரம் கிடைக்க செய்கிறது அனைத்து தரப்பு மக்களிடமும் நேரடியாக இந்த உற்பத்தி கொண்டு செல்ல படுகிறது.....உற்பத்தியாளர்கள் எதிர் பாக்காத வருவாய் இந்த இலவச விளம்பரம் மூலம் கிடைக்கிறது ............

காலம் மாறும் பொழுது விளம்பரத்தையும் மாற்றிக்கொண்டு வருகிறார்கள் உற்பத்தியாளர்கள் ...ஹி ஹி ஹி  இவர்கள் எல்லாம் நல்லா வருவார்கள்.................

இந்த உற்பத்தியாளர்கள் தெரிந்து செய்கிறார்களா ? இல்லை தெரியாமல் செய்கிறார்களா ? என்று தெரியவில்லை ..ஆனால் மக்கள் தெரிந்தோ தெரியாமலையோ இவர்களின் பொருட்களுக்கு  விளம்பரம் செய்கிறார்கள் ......................

நன்றி நட்புடன் உங்கள் >>>>>ரினாஸ்<<<<<Wednesday, 30 January 2013

படம் பார்த்து கதை சொல் >>>>>படம் பார்த்து கதை சொன்னதுனால் தான் இவ்வளவு பிரச்சனை ....

முதலில் விஸ்வரூபம் படம் கமலின் விஸ்வரூபமாகா இருந்தது பின்பு 
அது திரைஅரங்கு உரிமையாளர்களின் விஸ்வரூபமாகா மாறியது பின்பு 
அது இஸ்லாமிய மக்களின் விஸ்வரூபமாகா இல்லை இல்லை சில இஸ்லாமிய 
இயங்ககளின் விஸ்வரூபமாகா .மாறியது ..ஆனால் இப்ப 
இது .. தமிழக அரசின்   விஸ்வரூபமாகா உருவெடுத்து இருக்கிறது ................


ஆம் இப்ப விஸ்வரூபதுக்கும் ..இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பிரச்சனை இல்லை ....தமிழக அரசுக்கும் .கமலுக்கும் உள்ள பிரச்சனை 

நேற்று எந்த டீ வீ  சேனல்களிலும் ..பிளாஸ் நீவ்ஸ் [flash news ] என்ன வென்றால் கோவையில் முஸ்லிம் மக்கள் அதிக வாழும் இடங்களில் கோவை கரும்புக்கடை .ஆசாத் நகரில்   ..சில மர்ம நபர்களால் பதிக்குவைக்கப்பட்ட  பெட்ரோல் குண்டு ..கண்டு பிடிக்க பட்டது ...இந்த பெட்ரோல் குண்டு எதற்க்காக  பதிக்கு வைக்கப்பட்டது ..யார் பதிக்கு வைத்தார்கள் ..விஸ்வரூபம் படத்தை திரையிடாமல் தடுக்க சில மர்ம நபர்களால் பதிக்க வைக்க பட்டதா ??? என்று போலீசார் ..விசாரணை செய்து கொண்டு வருகிறார்கள் ......

என்ற செய்தி வளம் வந்து கொண்டு இருந்தது ..இதை கண்டு நான் பெரிதும் வறுத்த பட்டேன் ..ஏன் என்றால் ..நானும் கோயம்புத்தூர் காரன் தான் அதுவும் நான் வசிப்பதும் கரும்புகடையில் தான் .....எனக்குள்ளே என் சமூதாயம் மக்களின் மேல் கோவம் வந்தது ஏன் என்றால் எதற்காக நம் மக்கள் இப்படி பெட்ரோல் குண்டுகளை எல்லாம் வைத்து இருப்பதனால்தானே ..மாற்று மத சகோதரர்கள் நம்மை தீவிரவாதி என்று எண்ணி கொண்டு இருக்கிறாகள் ..இதனால் இந்த பெட்ரோல் குண்டுகளினால் அவை  உறுதி செய்ய படுமே   என்று ..வருத்தப்பட்டேன் ...ஆனால் 

இன்று காலையில் நான் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ரெடி ஆகி கொண்டு இருந்தேன் ..உடனே என் தந்தை வந்து ஒரு செய்தி சொன்னார்கள் அது என்ன வென்றால் 

நேற்று போலீசார் ..கரும்புகடைக்கு வந்ததாகவும் .. அங்கே   ஆசாத் நகரில் அன்வர் என்ற நபர் கரி [இறைச்சி ]கடை  நடத்தி வருகிறார்  ..அந்த கடைக்கு அருகில் ஒரு காலி குடோன் இருந்தது ..அதை சாதகமாகா பயன் படுத்தியே போலீசார் .இந்த அன்வரை ..தனியாகா அழைத்து அந்த குடோனில் ..பெட்ரோல் குண்டு இருந்ததாகா அதை அன்வர் பார்த்து போலீசாரிடம் ..கூறியதாகவும்...உடனே வந்த போலீசார் அந்த பெட்ரோல் குண்டை .பறிமுதல் செய்து ..அந்த அன்வரை சாட்சியாகா ..அவரிடம் இருந்து கை எழுத்து வாங்கி கொண்டு வந்ததாகவும் .....ஒரு பொய்யான தகவலை போலீசார் நேற்று செய்து ..இருக்கிறார்கள்....

அன்வர் அவர்களும் போலிசார் சொல்லும் பொழுது பயந்து கொண்டு ..ஆம் நான் அந்த பெட்ரோல் குண்டை பார்த்தேன் என்று கை எழுத்து போட்டு குடுத்து விட்டார் ..ஆனால்  அவரின் மனசு அந்த பொய்யான தகவல்களுக்கு இடம் கொடுக்க வில்லை உடனே அவர் .அங்கே உள்ள ஜமாத்திடம் வந்து நடந்த உண்மையை சொல்லி விட்டார் ..இந்த செய்தியால் எங்கள் ஏரியாவில் ஒரே பரபரப்பு ......

மக்களிடம்...ஒற்றுமைக்ககா பாடு படும் அரசு ..இப்படி மக்களின் நடுவே பிளவை ஏற்படுத்தி .ஒருவருக்கொருவர் சண்டைஏற்படுத்த  பித்தனா  பண்ணி கொண்டு இருக்கிறது....இதனால் எனக்கு அமைதி படை படம் பார்த்த நியாபகம் தான் வருகிறது அந்த படத்தில் ...சத்யராஜ் மக்களின் ஓட்டுக்காக ..கீழ் சாதிக்கும் மேல் சாதிக்கும் சண்டையை ஏற்படுத்தி விட்டு ..அதை சிரித்த படி வேடிக்கை பார்ப்பார் ..சத்யராஜ்... பின்பு எல்லோரும் அடித்து சாகும் பொழுது ..சமாதானம் பேசுவது போல் ..வந்து தடுத்து நிறுத்துவார் .. ...

அந்த மாரிதான் நடக்க போகுது போல் தெரிகிறது..நம்ம தமிழகத்திலும் அல்லாஹ் தான் காப்பத்தனும் ....கமலுக்கும் .தமிழக அரசுக்கும் உள்ள பகையால் ..இடையே அப்பாவி முஸ்லிம் மக்கள்  மாட்டி கொண்டு முழிக்கிறார்கள் ..முஸ்லிம்களின்  பெயரை சொல்லி தமிழக அரசு காய் நகர்த்தி கொண்டு வருகிறது .......நம் முஸ்லிம் இயங்ககளே படத்தை வெளியிட சொன்னாலும் ..நம் தமிழக அரசு வெளியிடாது போல் தெரிகிறது ..அப்படியே என்னதான் பகை கமலின் மீது நம் தமிழக அரசுக்கு ???

 கடுமையாக இந்தப் படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணம்?  
அதிமுகவுக்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இந்த படத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும்,  ஆனால் திரைப்படத்தை 100 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரித்திருப்பதால் திரைப்படத்தை குறைந்த விலைக்கு விற்க மறுத்துவிட்டு அதிக விலைக்கு வேறு ஒரு தொலைக்காட்சிக்கு விற்றுவிட்டதுதான் காரணம் என்றும் கூறூகிறார்கள்.
அதைப்போல மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நூல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது,   வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக வரவேண்டும் என்று ப. சிதம்பரத்தை குறிப்பிட்டு பேசியதும் கோபத்திற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.  ஆனால், இந்த கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை....


அல்லாஹ்தான் காப்பத்தனும் ....நன்றி நட்புடன் உங்கள் >>>>ரினாஸ்<<<< 


Saturday, 26 January 2013

இஸ்லாம் வளர்கிறது >>>>>>>


நான் இதுக்கு முன்னாடி இரண்டு பதிப்புகள் போட்டேன் ஒன்று 


மற்றொன்று .


என்ற தலைப்பில்

இந்த இரண்டு பதிப்புகளுக்கும் எனக்கு நிறைய மாற்று கருத்து வந்தது..தனிப்பட்ட முறையில் முகநூலிலும் 

.என்னுடைய மின் அஞ்சலிலும்......

சரி பரவாலை ஒவ்வொருவரின் 

பார்வையும் மாறுபடும் அல்லவா

என்னுடைய பார்வையில் நான் போட்டதுக்கு எதிர்ப்பு ..அனைவரும் பார்வையும் ஒரேமாரி இருக்கும் பொழுது 

என்னுடைய பார்வை சற்று விலகும் பொழுது ..அனைவருக்கும் என்னுடைய பதிப்பு 

அந்நியமாகத்தான் தெரியும் 

அவ்வளவுதான் அப்படி அந்நியமாகா பார்க்கப்பட்ட பதிப்புதான் மேல 

குறிபிட்டுள்ள இரண்டு பதிப்புகள் சரி இந்த பிரச்சனைகளின் மூலம் நான் கண்ட சிறு சிறு 

நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள 

விரும்புகின்றேன்....


முதலில் inocence of Muslims என்ற குறும்படம் நபி[ஸல்] அவர்களை இழிவு படுத்தி எடுத்த படத்துக்கு உலகம் 

முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் எதிர்த்தோம் ....

பின்பு துப்பாக்கி திரைபடத்தில் வந்த சர்ச்சை குரிய காட்சியை அனைத்தும் இஸ்லாமிய மக்களும் எதிர்த்தனர் 


இப்ப விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை இழுவு படுத்தும் காட்சிகள் இருப்பதாக ..பிரச்சனை 

எழுந்து வருவது அனைவருக்கும் 

தெரிந்ததே.......

இந்த மூன்று பிரச்சனைகளும் மூலமாகா .....இஸ்லாம் என்ன வென்றே தெரியாத மக்களுக்கும் ...இஸ்லாம் என்றால் என்ன ? என்பதை தெரிய ஆவல் எழுந்துள்ளது ....என்பதை நான் தெரிந்து கொண்டேன் ..

ஆமாம் இஸ்லாமியர்கள்   inocence of Muslims  என்ற திரைப்படத்தை எதிர்த்தனர் அல்லவா ...அதை பார்த்த மாற்று மத நண்பர்கள் என்னிடம் [எனக்கு அதிக அளவு மாற்று மத நண்பர்களே உள்ளனர் ] அதில் ஒருவர் என்னிடம் கேட்டார் மாப்ள யாருடா இந்த நபி[ஸல்] இவருக்காக  ஏன் நீங்கள் இப்படி போராட்டம் செய்கீறீர்கள்  ..அப்படி இவர் என்ன  பணினார் உங்களுக்கு ???? 

தாவா பண்ணுவதற்கு ஒரு அறிய வாய்ப்பு அப்பவே வந்தது ..அதையும் உபயோகம் செய்தேன் நீங்களும் செய்து இருபிங்கள் என்று நினைகிறேன் ??? இதை நான் அப்பவே  என் முகநூலிலே கூறி இருந்தேன்..

சரி அடுத்தது துப்பாக்கி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிக்கும் 
இன்று நடக்கும் விஸ்வரூபதுக்கும் ..இந்த கேள்வி மக்களிடம் எல  தொடங்கி உள்ளது..ஏன் இவர்கள் ஆவூனா போராட்டாம் பன்றார்கள் ?

இவர்கள் சொல்வதும் ஒரு வகையில் நியாமாகத்தானே தெரிகிறது ..ஏன் தீவிரவாதி? என்றால்  அது இஸ்லாமியர்கள் தானா ? ஏன் இந்து மதத்தில் தீவிரவாதி இல்லையா ? கிருஸ்துவ மதம் ? மற்றும் பிற மதங்களில் தீவிரவாதிகளே இல்லையா ?என்று கேட்டனர் 

முஸ்லிம் மக்களை அநியாயமாக கொன்ற இந்து தீவிரவாதத்தை பற்றி இந்து நண்பர்கள்  என்னிடம் கூறி ....இந்து தீவிரவாதத்தை பற்றி ஏன் படம் எடுக்க எந்த நடிகரும் இயக்குனரும் முன் வர மாட்டிங்குறாங்க ..என்று அவர் அவர் ஆதங்கத்தை கூறி வருகிறார்கள் ...இது நான் என் நண்பர்களிடம் இருந்து ..நேரடியாகா பார்த்தது 

என்னுடைய நண்பர்களுக்கும்.என்னால் புரிய வைக்க முடிந்தது .தீவிரவாதி என்றால் அது முஸ்லிம்கள் மட்டும் இல்லை ..பிற மதங்களிலும் இருக்கிறார்கள் ...முஸ்லிம்கள் மட்டும் விளம்பரம் படுத்த படுகிறார்கள் தீவிரவாதியாகா என்று ..நான் இணையத்தளத்தில் இருந்து சில ஆதாரங்களை எடுத்து  என் நண்பருக்கு காண்பித்தேன்....

அதை கண்ட நண்பர்கள் இவ்வளவு கொடுமை படுத்த பட்டுருகிரார்களா ? முஸ்லிம் மக்கள் ?[குஜராத் சம்பவத்தை பற்றி காண்பித்தேன் ] பாவம் முஸ்லிம் மக்கள் . என்று நமக்காக அனுதாபம் படுகிறார்கள் என் நண்பர்கள் 

இதில் இருந்து நமக்கு தாவ பண்ணுவதற்கும் ..முஸ்லிம்கள் மட்டுதான் தீவிரவாதி கிடையாது மாற்று மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று உண்மையை ...தெரியாத மக்களுக்கும் எடுத்து கூற ஒரு அறிய வாய்ப்பு தான் இது ..   inocence of Muslims    மற்றும் விஸ்வரூபம் ..........

இதன் மூலம் இஸ்லாத்தின் வழியில் அழைக்க நல்ல ஒரு சந்தர்ப்பம் மற்றும் மறைக்கப்பட்ட இந்து தீவிரவாதத்தை தெளிவாகா..கூற அறிய ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது ...இந்த நிகழ்வுகளின் மூலம் எனது பார்வையில் அல்லாஹ்வின் உதவியால்  இஸ்லாம் வேகமாகா வளர தொடங்கி உள்ளது ....

அனைவரும் இந்த நல்லதொரு சந்தர்பத்தை பயன்படுத்துவோமாகா ..நன்மையை ஏவி தீமையை தடுப்போமாகா .....இதன்குண்டானா கூலியை அல்லாஹ் நமக்கு மறுமையில் தருவான் ..அனைவரும் இந்த சந்தர்பத்தை நழுவ விடாதீர்கள் .....  

யாராவது நேர்வழியின் பக்கம் அழைக்கும் போது அதனை(நேர்வழியை) 

பின்பற்றி நடப்பவருக்கு கிடைக்கக் கூடிய கூலியைப் போன்றே அவருக்கும் கிடைக்கும்.அதனைப் 

பின்பற்றுபவருக்கு அதனால் எந்தக் குறைவும் ஏற்படாது என்று .நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(முஸ்லிம் : 4831)

                                              அல்லாஹ் கூறுகிறான் 
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெற்றோர்.(3:104)
அல்லாஹ் காட்டித் தந்த நல்வழியின் பக்கம் யார் அழைக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் அதுவல்லாததின் பக்கம் அழைக்கக் கூடியவர்கள் தோற்றுப் போனவர்கள் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் தெளிவாக அறிய முடியும்....

அல்லாஹ்வை நோக்கி(மக்களை)அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லை கூறுபவன் யார்?(41:33)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைப்பவரை விட சிறந்தவர் யாரும் இல்லை என்பதை இறைவன் தெளிவாக சொல்வதுடன் இந்தப் பணி மிகத் தூய்மையான பணி என்பதையும் நமக்கு தெளிவு படுத்துகிறான்..................

நன்றி நாம் அனைவரும் நன்மையை ஏவி தீமையை தடுப்போம்மாக