Saturday 5 January 2013

அடடே இதுவும் நல்லா இருக்கே !!!!!!


நம்முடைய தமிழக அரசு ..நம் தமிழ் மக்களின் வறுமையை ஒழிக்க .அவர்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாட ...அனைத்து மக்களும் மகிழ்ச்சியில் மிதக்க.....சீரோடும் சிறப்போடும்.என்றும் நம் தமிழக அரசை மறக்காமல் இருக்க.....அதிரடி சலுகையாக ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் ரூ. 100 ரொக்கம்: குடுக்க முன்வந்துள்ளது......
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இவர்களிடம் யாரு கேட்ட இந்த பணத்தை ..நார்மலாக ஒரு சராசரி மனிதன் அவனுடைய ஒருநாளின் அன்றாட செலவை போக்க ..குறைந்தது ரூபாய் 150 வது வேணும் .....இப்ப விக்குற விலைவாசிக்கு அதுவும் கொஞ்சம் கஷ்டம் தான் .....இவர்களிடம் யாரு கேட்ட 100 ருபாய் எல்லாம் ...

பொங்கல் சிறப்பு பரிசாக ..24 மணிநேரமும் தடை இல்லாத மின்சாரம் வழங்கப்படும் என்றால் ..அதுவல்லவா சிறப்பு பரிசு .அதை விட்டு புட்டு இதெல்லாம் .யாருக்கு வேணும் ..........இவர்கள் எல்லாம் நல்லா வருவாங்க ...

இவர்களின் இந்த அதிரடி சலுகையை கீழே படியுங்கள் .....




பொங்கலுக்கு சிறப்பு பரிசு… ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் ரூ. 100 ரொக்கம்: தமிழக அரசு அறிவிப்பு 

தமிழகத்தில் மழை பொய்த்ததாலும், வறட்சி நிலவுவதாலும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.100ரூபாய் ரொக்கமும் 60ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசும் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் சுமார் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 160 ரூபாய் மதிப்பிலான சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்று அளிக்கப்படும். இந்த தொகுப்பில், 20 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ பச்சரிசி, 40 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக்காக இதர பொருட்கள் வாங்குவதற்காக 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கும். இந்த தொகுப்பு அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இதனால், விவசாயிகளின் துயர் துடைக்க வழி வகுப்பதோடு, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்"" என்று அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.......


இதை படித்ததும் நீங்கள் கூறுவது எனக்கு கேக்கிறது . இதயும்மாச்சு நம்ம தமிழக  அரசு ஒழுங்கா தரட்டுமே என்ற ஆதங்கம் தானே ..ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ,,,,,,,,,,,,,,,,,,,



இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் ..கீழ ஓட்டு பதிவு லிங்க் தந்து இருக்கின்றேன் ஓட்டு போடுங்கள் ..மாற்று கருத்து இருந்தால் .கீழே கமண்ட் இருக்கிறது அங்கே உங்களின் கருத்தை தெரிவியுங்கள் ..நன்றி இனி அடுத்த பதிப்புடன் உங்கள் >>>>ரினாஸ்<<<<< 


ஓட்டு பதிவு லிங்க் 






4 comments:

  1. ஆட்சி அவங்க கையில இருக்கு என்ன நினைக்கிறார்களோ அதை செய்கிறார்கள்....

    செய்யட்டும்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..சகோ தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

      Delete
  2. டாஸ்மாக் கடைக்குத்தானே அந்த 300 கோடி வருமானம் போகப்போகுது... கொடுக்குறாப்புல கொடுத்து வாங்கிறாப்புல வாங்கிப்புடுவாங்க... நல்லாருங்குங்க... நடத்துங்க...

    ReplyDelete
    Replies
    1. /// டாஸ்மாக் கடைக்குத்தானே அந்த 300 கோடி வருமானம் போகப்போகுது... கொடுக்குறாப்புல கொடுத்து வாங்கிறாப்புல வாங்கிப்புடுவாங்க...///// ஹ ஹ ஹ ஹ உண்மை உண்மை சகோ ...........

      தொடர்ந்து ஆதரவு தாருங்கள் சகோ தொடர்ந்து உங்களின் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன நன்றி

      Delete