Friday 5 July 2013

வருது வருது ரமலான் வருது ..........






           ரமலான் எம்மை நோக்கி வந்துகொண்டுஇருக்கிறது .வான்மறை வந்திறங்கிய மாதம் .அருள் மறையாம் திருமறைக் குரான் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதன் சிறப்பு பெற. நோன்பு இருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும் .

நோன்பு என்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு ..உண்ணுதல் பருகுதல் .உடலுறவில் ஈடுபடுதல் ..ஆகியவை அதிகாலை முதல் மாலை வரை செய்யாமல் இருப்பது ஆகும்.

நோன்பு மனிதனின் ..நடைமுறைகளை சீராக்கி அவனிடம் உருவாகும் கெட்ட சிந்தனைகளை அழித்து...அவனை ஒழுக்கமுள்ள மனிதனாக மாற்றுகிறது ...

நோன்பை பற்றி அல்லாஹ் கூறுகிறான் .

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்..திருக்குர்ஆன் .2:183

மேற்படிய வசனம் நோன்பு என்பது தூய்மையாக இருக்க உதவக்கூடியது.என்பது தெரிகிறது 

இன்று உலகைக்  உலுக்கி வரும் அநேக பிரச்சனைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதைத்  நுணுக்கமாக ஆராய்ந்தால் அறியலாம் ...அவற்றுள் .......

1.உடல் இச்சை 
2. கோபம் 
3.தவறான உணவுமுறை 
4.தவறான பேச்சு 

இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும் 

உடல் இச்சை....

மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது..உலக இருப்புக்கும் உயிரினங்களின் உற்பத்திக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும் ..எனினும் இந்த உணர்வு சரிபடுத்தப்  பட வேண்டும்..கட்டு படுத்தப்  படவேண்டும் .தவறானமுறையில் இந்த உணர்வுகளைக் தீர்த்து கொள்ள கூடாது...

இன்று நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாக கொண்டவை ஆகும் ....இளம் பெண்கள் அதிகமானவர்கள் ..கொலை செய்ய படுவதும் தற்கொலை செய்யப்  படுவதும் ..இந்த பாலியல் பிரச்சனைகளால் தான் ..[உதாரணத்துக்கு] டெல்லியில் ஓடும் பஸ்ஸில் ஒரு இளம்பெண்ணை கற்பழித்து ..கொலை செய்தார்கள் இதை அனைவரும் அறிந்ததே ....உலகம் சந்தித்து வரும் பாலியல் நோய்களை தீர்த்து கொள்ள ..அரசுகள் திண்டாடி கொண்டு வருகிறது 

ஆனால் நோன்பு நோற்க்கும் ஒருவன் தனது மனைவியிடம் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னை கட்டு படுத்தி கொள்கின்றான் .நோன்பு பாலியல் உணர்வை கட்டுபடுத்தும் என்பதாலேயே இது ..சாத்தியமாகின்றது...

பாலியல் உணர்வை பற்றி நபி மொழியை பார்ப்போம் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இளைஞர்களே  உங்களில் , திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப்பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும் என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நூல்: புகாரி - 1905.  

கோபம்....

இன்று மனிதன் இயந்தரமாகி மனிதத் தன்மையைத் இழந்து வருகின்றான்.கோபத்தை கட்டு படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான் 

ஆனால் நோன்பு மனிதனின் கோப உணர்வுகளை கட்டு படுத்துகின்றது .நீ நோன்புடன் இருக்கும் பொழுது யாரவது உன்னிடம் சண்டையிட்டால் .அவனிடம் நீ... நான் நோன்பாளி என்று கூறி விலகிவிடு என்று இஸ்லாம் கூறுகின்றது 
கோப உணர்வுகளை ஒருவன் கட்டுப்படுத்தி வாழ பழக்க பட்டால் அவன் பல ஆபத்துகளில் இருந்து விடுதலை பெற்று விடலாம்.....

தவறான உணவு முறை

உலகம் இப்பொழுது பாஸ்ட் புட்டுக்கு மாறி வருகிறது ...அதாவது கண்ட கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் தின்று ..உடலில் கொழுப்புகள் அதிகமாக மாறி உடல் கொழுப்புகளை கரைக்க .சிலர் மருத்துவர்களை நாடுகின்றார்கள்...ஒரு மனிதன் நோன்பு வைக்கும் பொழுது ...இந்த பிரச்சனைகளில் இருந்து அவன் எளிதாக விடை பெறலாம் ..என்று அறிவியல் அறிஞர்களே ஆராய்ந்து கூறும் அளவுக்கு நோன்பு ஒரு நன்மையை மனிதனுக்கு  வகுக்கின்றது...

தவறான பேச்சு 
 
தவறான பேச்சுகளில் இருந்தும் .தவறாக பேசுபவர்களும் இந்த நோன்பு மாதத்தில் .அதிகம் அதிகமாக பள்ளியுடன்  இணைவார்கள்...இந்த நோன்பு மாதத்தில் சண்டைக்கும் சச்சரவுக்கும் செலவழிக்காமல்..இபாதத்துக்கும் பக்குவத்தை ஏற்படுத்துவதர்க்கும்...அனைவரும் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் ...எல்லாம் வல்லா அல்லாஹுதால உதவி செய்வானாக   

நன்றி ..இப்படிக்கு உங்கள் நண்பன் ரினாஸ்