Follow by Email

Wednesday, 23 January 2013

இது கமலுக்கு ஆதரவானா பதிப்பு அல்ல...


இன்று எங்கு பார்த்தாலும்..கமலின் விஸ்வரூபத்தின் படத்தை பற்றி தான் எங்கும் பேச்சு ...ஏன் என்றால் இதில் இஸ்லாமியர்களை ...இழிவு படுத்தும் காட்சிகள் படத்தில் இல்லை ...படமே இஸ்லாமியர்களை இழிவு படுத்திதான் எடுக்க பட்டு இருக்கின்றது என்று.... 21.01.2013  அன்று இஸ்லாமியர்களின் அமைப்பின் தலைவர்களுக்கு மட்டும் இந்த படம் காண்பிக்க பட்டது ...படம் பார்த்த தலைவர்கள் சொன்ன கருத்து தான் .....இது 

இந்த கருத்து வந்ததில் இருந்து பெரும் பரபரப்பு ..இந்த படத்தை திரையிட விடமாட்டோம் ..அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இந்த படத்துக்கு எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர் ....

சில இளைனர்கள் வரும் வெள்ளி அன்று இந்த படம் ரிலீசாகும் தியேட்டர் முன்பு நின்று படத்தை ஓட விடமாட்டோம் 
எங்கள் உயிர் இருக்கும் வரையுளும் இந்த படத்தை ஓட விடமாட்டோம் ....என்று உறுதியாக தங்களின் எதிர்ப்பை கூறி கொண்டு வருகின்றனர் ........இது ஒரு பக்கம் நடக்க ..........


இந்த படத்துக்கு தியேட்டர்களில் முன்பதிவு வேகமாக தமிழ்நாடு முழுவதும் நடந்து கொண்டு வருகின்றது சில தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கு டிக்கட் இல்லை என்று செய்தி வருகின்றது .....சில தியேட்டர்களில் ரிலீசாகும் நாளுக்கு முன்தன நாளே ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி ..என்ற உறுதியான செய்தியும் வளம் வருகின்றது ...


கமல் இந்த படத்தை தன்னுடைய சொந்த செலவில் [சூனியம்] அதிகபட்சமாக 100 கோடி மதிப்பில் எடுத்து இருக்கிறார் .
ஏற்கனவே இந்த படத்தை d t h ல் ஒளிபரப்பாகும் என்றார் ..பின்பு திரை அரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தின் பேரில் அது கை விட பட்டது ..பின்பு தியேட்டர்களில் ரிலீசாகும்  என்ற அறிவித்தார் ...இப்ப இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் ..என்ற செய்தி ......

ஆகா மொத்தத்தில் கமலுக்கு பைத்தியம் பிடிக்கும் என்று நினைகிறேன் ..........

சரி இதெல்லாம் இருக்கட்டும் என்னுடைய ஆதங்கம் என்ன வென்றால் ...இஸ்லாமிய இளைனர்கள் தியேட்டர் முன்பு போராட்டம் நடத்த போகிறார்கள் ..என்று அறிவித்தார்கள் ..அங்கே கமலின் ரசிகர்களும் இருப்பார்கள் அல்லவா ...ஆகா மொத்தத்தில் இது மதம் பிரச்சனையாக மாறாமல் இருந்தால் சரி .....

என்னுடைய கருத்து ...கமல் எல்லா இஸ்லாமியகளிடமும் பொது மன்னிப்பு கேட்டால் ..அனைவரும் அதை பெரும் மனதாக ஏற்று கொண்டு ...விலக வேண்டும் ..ஏன் என்றால் ஒருப்பா இரண்டுரூபாவா? ..100 கோடி போட்டு எடுத்து இருக்கிறார் மனுஷன் அவரும் போட்ட பணத்தை திருப்பி எடுக்கனும்ல .....

இது கமலுக்கு ஆதரவானா பதிப்பு அல்ல....

நம் ஒற்றுமைக்கானா பதிப்பு..... ..

அந்த படத்துக்கு நம்முடைய எதிர்ப்பை தொடர்ந்து தெரிவிப்போம் அதற்காக கமலை பொது மன்னிப்பு கேக்க வைப்போம் .....இதுதான் நல்ல வழி ...தியேட்டர்களின் முன்பு ஆர்ப்பாட்டம் இந்த மாறி செய்வது சரி அல்ல...

அல்லாஹ் கூறுகிறான் :

.(பயபக்தியுடையோர் ]கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்....3;134


கமல் செய்த பிழையை நாம் மன்னிப்போம் ....

ஆகமொத்தத்தில் இது யாருடைய விஸ்வரூபமாக இருக்கும் என்று தெரியவில்லை ....அல்லாஹ் தான் காப்பத்தனும் 

நன்றி உங்கள் >>>>ரினாஸ்<<<<

19 comments:

 1. குவைத் தமிழ் இஸ்லாமியச் (K -Tic) சங்கத்தின் உயர்மட்ட குழு நேற்றிரவு அவசரமாக கூடி விஸ்வரூபம் என்ற இழிவான திரைப்படம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டது.


  குவைத் அரசாங்க அதிகாரிகளை நேரிடையாக சந்தித்து இந்த திரைப்படத்தின் கதை குறித்தும், இதனால் விளையப்போகும் மோசமான விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து, குவைத் நாட்டில் இந்த திரைப்படம் வெளியாகாமல் இருக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கத்தின் நிர்வாகிகள் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.


  நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட தமிழக நாளிதழை குவைத்தில் தடை செய்தவர்கள் இந்த அமைப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
  Replies
  1. குவைத்தில் பிரச்சனை இல்லை சகோ..ஏன் என்றால் நம் தமிழகத்தில் இதை எதிர்த்து தியேட்டர்களின் போராட்டம் ..என்பதை நினைக்கும் பொழுதுதான் பயமாக இருக்கு ..அல்லாஹ்வே

   Delete
 2. நீங்க எம்புட்டு அடிச்சாலும் தாங்குரீங்கலே ரினாஸ் ரொம்ப நல்லவரா இருப்பீங்க போலயே

  ReplyDelete
  Replies

  1. ஹ ஹ ஹ ..வாங்க வாங்க ..நீங்களே சொல்லுங்க இந்த பிரச்சனை மதம் பிரச்சனையாகா மாறா ஏதுவானா வழி தானே சொல்லுங்க சகோ ?????????????

   Delete
 3. இதை எதிர்த்து போராடுபவர்களும் சில ஆயத்துகளை ஆதாரமாக காட்டக்கூடுமே...(ஒவ்வொருவரின் எண்ணமும் வித்தியாசப்படக்கூடியதே)

  ReplyDelete
  Replies
  1. ///இதை எதிர்த்து போராடுபவர்களும் சில ஆயத்துகளை ஆதாரமாக காட்டக்கூடுமே//// காட்டி என்ன பலன் சகோ

   Delete
 4. //100 கோடி போட்டு எடுத்து இருக்கிறார் மனுஷன் அவரும் போட்ட பணத்தை திருப்பி எடுக்கனும்ல .....//

  ஓநாய் நனையுதேன்னு ஆடு கவலைபடுறத பார்த்தா ஆடு மேல் இரக்கம் தான் வருகிறது!!! :( :( :( :( :( :(

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹ ஹ சகோ ..இதில ஆடு யாரு ஓநாய் யாரு ?? ஹ ஹ ஹ

   Delete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் ஐயா.. நியாயவான் அவர்களே....

  நாம் எல்லாரும் நன்கு அறிந்த 'அவனை போலவே ஒருவன்'...
  பட்டப்பகலில் பலர் அறிய விஷப்பாம்பை பிடித்து வந்து நமது வீட்டின் உள்ளே வீசி விட்டான்.

  'விஸ்வரூப படமெடுத்து' பிள்-நாக்கை நீட்டி சீறி ஆடும் அந்த பாம்பை,
  என்னை அது கொத்திவிடும் முன்னர் நான் உடனே அதை அடிக்க ஆயத்தமாகிறேன்.

  இப்போது நீங்கள் ஓடோடி வந்து..................

  'பாம்பை அடிப்பது சரியா...'
  'ஓர் உயிரை வதைப்பது பாவம் இல்லையா...'
  'ஏனப்பா உனக்கு இம்புட்டு கொலைவெறி...'
  'அமைதி மார்க்கம் அமைதி மார்க்கம்னு சொல்றீங்க... பாம்பை அடிக்க போறீங்களே..'
  'இதை கொன்றால் உன் மீது மிருக வதை தடுப்பு சட்டப்படி தப்பாச்சே...'
  'நீங்களே அதை பிடித்து கொண்டு போய், பாம்பு பண்ணையில் சேர்த்து விட்டால் நல்லா இருக்குமே...'

  -----என்று ஆயிரம் கருத்தும் அறிவுரையும் இப்போது சொல்கிறீர்கள்..!

  அட... ஐயா நியாயவான் அவர்களே...

  அந்த விஷப்பாம்பை கொண்டு வந்து எனது வீட்டில் போட்டவனின் செயல் பற்றி ஏதுமே சொல்லாமல்...


  //100 கோடி போட்டு பாம்பை வாங்கி கஷ்டப்பட்டு எடுத்து வந்து இருக்கிறார் மனுஷன். போட்ட பணத்துக்கு உங்களை கொஞ்சம் அது கடிச்சிக்கட்டுமே சகோ.... விட்டுக்கொடுங்க அவரும் அவர் பாம்பு போட்ட நோக்கத்தை திருப்பி எடுக்கனும்ல.....//

  இப்படி சொல்றீங்களே சகோ.ரினாஷ்...?

  கொஞ்சங்க்கூட மனசாட்சியே இல்லையா...???

  ReplyDelete
  Replies
  1. ஒகே அந்த விசபாம்பை அடிக்க நீங்கள் தயாரா ?? இல்லை சவுண்டு மட்டும் தானா??

   ///கொஞ்சங்க்கூட மனசாட்சியே இல்லையா...???/// மனசாட்சி இருந்தது நாள் தான் பேசு கிரேன் சகோ ..என் சகோதரன் அடி பட்டு சாக வேண்டாம்..ஒற்றுமையுடன் மற்ற மத மக்களுடன் வாழ வேண்டும் ...என்ற எண்ணத்தில்

   நீங்கள் தான் துளி அளவு மனசாட்சியே இல்லாமல் பேசு கீர்கள் ..ஏன் எவனோ போராட போறான் எவனையோ காவல் துறை கைது செய்ய போகிறது ..எவனுடைய குடுபதிலோ ஒருவனை இலக்க போகிறார்கள் ..நாம் இங்கு அமர்ந்து விஸ்வரூபத்துக்கு எதிர்ப்பு என்ற கோசத்தை மட்டும் போடலாம் என்று ..மனசாட்சி இல்லாமல் நீங்கள் தான் பேசுகீர்கள்

   Delete
 6. ///////////// அல்லாஹ் கூறுகிறான் :

  .(பயபக்தியுடையோர் ]கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்....3;134

  //////////////////

  இந்த வசனம் தனிப்பட்ட இருவருக்கிடையே உள்ள கோபம் மன்னிப்பு பற்றியது.


  சகோ. ரினாஷ்,

  உங்களை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறாக ஒருவன் படம் எடுத்து இருந்தால்... அதை நீங்கள் மட்டும்தான் மன்னிக்கலாம். எனக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இல்லை.

  ஆக, ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களும் மண்ணிப்பதாக இருந்தால் மட்டுமே உங்கள் பதிவு சரி என்றாகும். புரிந்து கொள்ளுங்கள் சகோ.ரினாஷ்.

  ReplyDelete
 7. ரினாஸ், வித்தியாசமான பார்வை வாழ்த்துக்கள். படத்தை பார்த்துவிட்டு போராடவோ, வாழ்த்தவோ செய்யுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ...//போராடவோ, வாழ்த்தவோ செய்யுங்கள். //// இன்ஷா அல்லாஹ் சகோ

   Delete
 8. இது உங்களுக்கு எதிரான செய்தி அல்ல..!

  Flash News :

  http://dinamani.com/latest_news/article1432742.ece

  'விஸ்வரூபம் திரைப்படம் வெளியிட தமிழக அரசு தடை'

  By dn, சென்னை

  First Published : 23 January 2013 08:39 PM IST

  கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. அதில் இஸ்லாமியர்களை தவறாக விமர்சித்திருப்பதாக முஸ்ஸீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று உள்துறை அமைச்சகத்திடம் விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என முஸ்ஸீம் அமைப்புகள் மனு கொடுத்தனர். இதனையடுத்து விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  ReplyDelete
 9. yethana kodi kuduthu yedutha yenna rinas bhai yedukurathuku munnadi la yosikanum kasukaga islathai vitu vida mudiyuma Quranil sollapadum vasanam nengal sollum karuthai kurikathu manithargalukul yerpadum piratchanaiyai manipathu. oru samogathuku yethiraga ilaikapadum anithiyai kandum kanamal iruka sollavillai... nenga padam pakanumnu asai pattaal firste namma sagothargalodu nengalum poi iruka vendi thane bhai atharkaga ipdi yellam karuthukalai pathiyathenga ungalai mathiri nabargal ipdi karthu pathivenganu ninachu kuda paakala..

  ReplyDelete
  Replies
  1. சகோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை இருக்கும் சகோ ..என்னுடைய பார்வை இதுதான் .இஸ்லாமிய இளைனர்கள் தியேட்டர் முன்பு போராட்டம் நடத்த போகிறார்கள் ..என்று அறிவித்தார்கள் ..அங்கே கமலின் ரசிகர்களும் இருப்பார்கள் அல்லவா ...ஆகா மொத்தத்தில் இது மதம் பிரச்சனையாக மாறாமல் இருந்தால் சரி .....

   Delete
 10. //அங்கே கமலின் ரசிகர்களும் இருப்பார்கள் அல்லவா//
  அப்போ கமல் ரசிகர்கள் இல்லாத இடத்தில் போராட்டம் நடத்தினால் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை அப்படிதானே

  ReplyDelete
  Replies
  1. எனக்கு எந்த பிரச்னையும் இல்லை ..சகோ ..போராட்டம் பண்ண போகும் என் சகோதரங்களுக்குதான் ..பிரச்சனை சகோ .... ..ஆகா மொத்தத்தில் இது மதம் பிரச்சனையாக மாறாமல் இருந்தால் சரி ....

   Delete