Follow by Email

Monday, 31 December 2012

புது வருசத்துல சபதமா ?......


ஒவ்வொருவருக்கும் ஒரு சில பழக்கங்கள் இருக்கும். சிலது நல்லதாக இருக்கும். சில பழக்கங்கள் கெட்டதாக இருக்கும். நல்ல பழக்கத்தை நல்லபடியாக தொடரலாம். ஆனால் கெட்டப்பழக்கத்தை விட்டு ஒழித்தே ஆகவேண்டும். நம்ம கிட்ட இருக்கிற கெட்ட பழக்கத்தாலே எத்தனை பேருக்கு பாதிப்பு வருது. குடும்பம், குழந்தைகள் கூட பாதிக்கப்படுறாங்க. இதை விட்டே ஆகனும் என்று முடிவு செய்திருக்கிறீர்களா? இதோ பிறக்கப்போகுது..நீங்கள் இப்ப படிக்கும் பொழுது பிறந்து இருக்கும்  2013 புத்தாண்டு. என்னென்ன கெட்டப் பழக்கத்தை விடலாம்னு...பட்டியல் போட்டு இருகிங்கள் ? ...........இப்படி புது வருஷம் பிறக்கும் பொழுது நம் நண்பர்கள் நம்மிடம் கேக்கும் கேள்வி தான் இது ..

எனக்கு ஒரு சந்தேகம் ..வருடம் வருடம் ..புது ஆண்டு வருகிறது..நாமளும் இந்த வருடத்தில் இந்த மாறி நல்ல நல்ல விஷயம் செய்யணும் ..இந்த மாறி கெட்ட கெட்ட ..பழக்கங்களை கைவிடனும் ..என்று ஒவ்வொரு மனிதனும் வெளியே சொல்லாமல் .மனதுகுள்ளயே நினைத்து பார்ப்பான் ..இது யாரும் மறுக்கபடாத உண்மை ...இருந்த போதிலும் அந்த ஆண்டு அவன் எந்த கெட்ட பழக்கத்தை விடணும்னு நினைத்தானோ ..அந்த பழக்கத்தைத்தான் ..அதிகமாக செய்வான் ..ஹ ஹ ஹ ஹ .இதுதான் உண்மை ......

நம்முடைய வாழ்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன் ஒவ்வொரு நொடியையும் நாம் புத்தாண்டாக மனதில் நினைத்தால் போதும் ..அந்த நாளில் ..நாம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இருக்கலாம் .............

[பின்குறிப்பு ] 2013 முதல் மாதம் முதல் நாளில் ஏதேனும் பதிப்பு போடணும் என்பதற்காக மட்டுமே ...இது யார் மனதையும் புண் படுவதற்கு இல்லை ..............

நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<Thursday, 27 December 2012

காதல்!.காதல்!.காதல்! ......பள்ளிபடிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடங்குவார்கள் ..கூடவே காதலையும் தொடங்குவார்கள் 
கல்லூரியில்  படித்தால் ...ஒருவன் கட்டாயம் காதல் செய்வான் என்பது  ..இளசுகளின் மனபக்குவம் ..நானும் இளசு அதனால்தான் .இப்படி உறுதியாக கூறுகின்றேன்.....

காதலிப்பதும் திடீரென மனம் மாறுவதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சகஜமான விஷயமாக மாறிவிட்டது. அதற்கு பல காரணங்கள். பழக ஆரம்பிக்கும்போது தெரியாத பல விஷயங்கள் பிறகு தெரிய வரும். அதனால் காதலை தொடர மனமில்லாமல் கட் பண்ண நினைப்பார்கள். இருவரும் விரும்பி காதலித்த பிறகு, ஒருவர் மட்டும் விலக நினைத்தால் மற்றொருவர் விடமாட்டார். அப்போதுதான் பிரச்னை ஆரம்பமாகும். வெட்டு, குத்து, ஆசிட் வீச்சு என பயங்கரத்தில் முடியும். அப்படித்தான் காதலித்த பெண், திடீரென பேச மறுத்ததால் தலையை தனியாக வெட்டி எடுத்து கொன்று விட்டார் காதலன். நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி. மனைவி மாடத்தி, மகள் பிரேமா. பி.காம். மாணவி. பக்கத்து வீட்டு வாலிபர் மணிகண்டன், ராணுவ வீரர். இருவரும் 3 ஆண்டாக காதலித்தனர். 

6 மாதம் முன் ஊருக்கு மணிகண்டன் வந்தார். அப்போது காதல் விவகாரம் பிரேமாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. ‘மணிகண்டனுக்கு குடிப்பழக்கம், கெட்டப் பழக்கங்கள் உண்டு. அவனிடம் பழகாதே’ என்று மகளுக்கு அறிவுரை கூறினர். மனம் மாறிய பிரேமா, மணிகண்டனுடன் பேசுவதை தவிர்த்தார். இது மணிகண்டனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. காதலியை பார்ப்பதற்காக ஒருவாரத்திற்கு முன் ஊருக்கு வந்தார் மணிகண்டன்.


 என்னை காதலிக்காவிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.  பயந்து போன குடும்பத்தினர், தாத்தா வீட்டுக்கு பிரேமாவை அனுப்பி வைத்தனர். மணிகண்டன் ஜம்முவுக்கு சென்று விட்டதாக தகவல் வந்ததையடுத்து  ஊர் திரும்பினார் பிரேமா. இது தெரிந்து கையில் அரிவாளுடன் வெறிபிடித்தவர் போல் மணிகண்டன் வந்தார். 

பிரேமாவை சரமாரியாக வெட்டினார். ஆட்டை அறுப்பது போல தலையை அறுத்தார். பின்னர் துண்டித்த தலையையும், அரிவாளையும் அருகில் உள்ள முள்புதரில் வீசிவிட்டு ஓடிவிட்டார். தலைமறைவாகிவிட்ட மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 


காதலித்த பெண்ணை காயப்படுத்தவே மனம் வரக் கூடாது காதலனுக்கு. ஆனால் தலையையே தனியாக வெட்டி எடுத்திருக்கிறார். இது என்ன காதல்? ..உண்மையாக காதலித்த பெண் ..நமக்கு கிடைக்கவில்லை என்றால் ..அவள் எங்கு இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்னும் பழக்கம் உடையவன்தான் உண்மையான காதலன் ..இது காதலே கிடையாது ..ஒருவகை மன நோய் ..இந்த நோயை வேரமாதிரியாகவும் நான் கூறுவேன் ..இந்த பதிப்பை என் குடுபத்தினர் படிப்பார்கள் என்பதனால்..நாகரிகமாக கூறுகின்றேன் ..இது காதல் கிடையாது ஒருவகை மனநோய்..............காதல் என்ற போர்வையில் போத்திகொள்ளும் ...இளசுகளே ...நானும் இளசுதான் . உங்களுக்கு கூறும் அறிவுரை ..காதல் செய்வது தவறில்லை ..கல்யாணத்துக்கு பிறகு .................என்பதை புரிந்தால் சரி ......

நன்றி அடுத்த பதிப்புடன்.உங்கள் இளம்நண்பன் >>>>ரினாஸ்<<<<    Tuesday, 25 December 2012

இந்தியா விளங்கிடும்..

டெல்லியில் கடந்த 16-ம் தேதி இரவு மருத்துவ மாணவி ஒருவர், 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அத்துடன் அவரை உயிர் போகும் அளவுக்கு கொடூரமாக தாக்கி, சாலையில் வீசிச் சென்றனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர்.

அதேசமயம் டெல்லி சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் டெல்லியில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தைச் சேர்ந்த தலித் சிறுமியை அவரது வீட்டில் இருந்து 4 பேர் கடந்த 15-ம் தேதி டெல்லிக்கு கடத்தி வந்து காரில் வைத்து கற்பழித்துள்ளனர். பின்னர் அவரை மீண்டும் பைசாபாத் கொண்டு சென்று பஸ் நிறுத்தத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் ஜம்முவின் புறநகரான அம்குரோடாவில் கடந்த சனிக்கிழமை இரவு 18 வயது பெண்ணை டிரைவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் வனப்பகுதிக்கு கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர். குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பை பந்த்ராவைச் சேர்ந்த கல்லூரி மாணவியை அவரது கல்லூரி நண்பர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி, இன்று காலையில் இறந்தார். கத்தியால் குத்திய அந்த மாணவனும் தற்கொலை செய்துகொண்டான்.

இதுபோன்று நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் கற்பழிப்பு புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ................

இந்த மாறி நடந்த ..இந்திய விளங்கிடும் ......................இது போன்ற பன்னாடைகளால் இந்தியாவுக்கே அவமானம் .............

நட்புடன் இந்திய நண்பன் >>>>ரினாஸ்<<<<<


Monday, 24 December 2012

படித்தால் பிடிக்கும் ...........................


இறைவனின் அருளால் ..இது என்னுடைய 50 வது பதிப்பு ..இந்த பதிப்புக்கு நான் படித்தால் பிடிக்கும் என்ற தலைப்பு வைத்தேன் ..ஏன் என்றால் ..நீங்கள் வந்து என் தளத்துக்கு படித்தால்  அது எனக்கு பிடிக்கும் ..அதான் படித்தால் பிடிக்கும் என்ற தலைப்பில் உங்களை நான் வரவேட்கின்றேன் .........இதுவரைக்கும் என்னுடைய பதிப்புக்கு ஆதரவு தந்த ..அனைத்து நல் உள்ளங்களுக்கும் ...நன்றி ..தொடர்ந்து ஊக்கபடுத்தி கொண்டு வந்த .என்னுடைய முகநூலில்  உள்ள டீக்கடைநண்பர்களுக்கும்  நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி !


 
சரி இன்றைய பதிப்பு .....................

தலைநகர் டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட கொடூரம்,... நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலை..இது அனைவரும் அறிந்ததே ...காதலிக்க மறுத்ததால், மூன்று இளைஞர்களால், "ஆசிட்' வீச்சுக்கு இலக்காகி, முகத்தை பறிகொடுத்த, சோனாலி முகர்ஜி என்ற இளம் பெண், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் பங்கேற்று, 25 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இது போன்றதொரு, கொடுமையான செயலுக்கு ஆளாக்கப்பட்டவர், சோனாலி முகர்ஜி."ஆசிட்' வீச்சுக்கு ஆளான அவருக்கு முகமே கிடையாது; கருகிய சதை துணுக்குகள் தான் முகத்தில் ஆங்காங்கே உள்ளது. அழகிய முகத்தை இழந்த அந்த பெண், தன் முகத்தையே வெளியே காட்டுவது கிடையாது. ஆனால், அவரை அந்த கொடுமைக்கு ஆளாக்கிய, மூன்று நபர்கள், வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இப்போது இருக்கும் அளவுக்கு, "மீடியா' தாக்கம் இல்லை என்றாலும், அப்போதும் பரபரப்பாக இந்த செய்தி பேசப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின், தன்பாத் நகர கல்லூரி ஒன்றில் படித்து வந்தார், சோனாலி முகர்ஜி. கல்லூரிக்கு செல்லும் வழியில், மூன்று இளைஞர்கள், அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்தனர். வலுக்கட்டாயமாக, காதலிக்க வற்புறுத்தி வந்தனர்; அதை அந்த பெண் மறுத்து வந்தார்.


வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த அந்த கயவர்கள், கனரக இரும்பு பொருட்களில், துரு அகற்ற பயன்படுத்தப்படும், பயங்கரமான, "ஆசிட்'டை, அந்தப் பெண்ணின் முகத்தில் வீசி விட்டு ஓடினர்.இதில், முகம் பூராவும் வெந்து, இரு கண்களும் குருடாகி, ஒரு காது முற்றிலும் கேட்காத நிலையை அடைந்த சோனாலி, அதற்கு பிறகு வெளியே வருவதே இல்லை.

கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள், ஒன்றிரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு பிறகு, வெளியே வந்து விட்டனர். ஆனால், அந்தப் பெண் வீட்டிலேயே முடங்கி விட்டாள். எனினும், தன்னம்பிக்கையை கைவிடாமல், "டிவி'யில், நடிகர், அமிதாப் பச்சன் நடத்தும், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், சமீபத்தில் பங்கேற்றார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து, 25 லட்சம் ரூபாயை வென்றுள்ளார்.

""இந்த பணத்தைக் கொண்டு, என் முகத்தில் உரிந்து வரும் பிளாஸ்டிக் இழைகளை சரி செய்ய முடியும்; சில நாட்களுக்கு நிம்மதியாக சாப்பிட முடியும். எனினும், முகம் இனி கிடைக்கப் போவதில்லை. அதற்காக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், வாழ்க்கை என்னாவது என்ற எண்ணத்தில், போட்டியில் பங்கேற்றேன். என் முகத்தை, "டிவி'யில் காட்டினர். அதுவே, அந்த கயவர்களுக்கு உண்மையான தண்டனையாக இருக்கும்,'' என, சோனாலி கூறினார்.நிகழ்ச்சியின் போது, சோனாலியை, நடிகர் அமிதாப் பச்சன், "வீரமான பொண்ணு' என, பாராட்டினார்..................................


இந்த பெண்மணிக்கு என்னுடைய பாராட்டுகளும் ..........................................


நன்றி உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<<


Saturday, 22 December 2012

ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி
அமெரிக்க பள்ளியில் ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி


அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூட்டுக்கு 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, டெக்சாஸ் நகர ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்துவர பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணம் நியூடவுண் நகரில் உள்ள சாண்டிஹூக் பள்ளியில் கடந்த வாரம் ஆசிரியை மகன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் 20 குழந்தைகள் உள்பட 28 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க புது சட்டம் கொண்டு வரப்படும் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்நிலையில், ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிப்பது குறித்து, ஓக்லஹோமா, மிசோரி, மின்னசோட்டா, தெற்கு தகோடா, ஓரிகான் போன்ற மாகாண அரசுகள் ஆலோசித்து வருகின்றன.

ஆசிரியர்கள் துப் பாக்கி வைத்து கொள்ள டெக்சாஸ் பள்ளி நிர்வாகிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 டெக்சாஸ் நகரில் உள்ள ஆசிரியர்கள் இப்போதே துப்பாக்கியை மறைத்து கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். அதனால் பெற்றோர்களும் குழந்தைகளும் பயமில்லாமல் பள்ளிக்கு சென்று வருகின்றனர் என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் கூறுகையில், பாதுகாவலர்களை நியமித்து அவர்களுக்கு சம்பளம் தரும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை. மேலும், துப்பாக்கியுடன் வரும் ஆசாமி காவலாளியை சுட்டுவிட்டு பள்ளிக்குள் எளிதில் நுழையவும் முடியும். ஆனால், எங்கள் ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். அனுபவம் மிக்கவர்கள். அவர்களிடம் துப்பாக்கி இருப்பது எங்களுக்கு பெரும் பலம் என்கிறார்.......................ஹ ஹ ஹ இந்த சட்டம் நம்ம ஊர்ல இருந்துச்சுன ..வாத்தியார்கள் தூங்கும் பொழுது ..நம்ம மாணவர்கள் ..துப்பாக்கியை எடுத்து விளையாட ஆரபிச்சு இருப்பாங்கோ .....நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<
Thursday, 20 December 2012

21/12/2012...ஹ ஹ ஹ ஹ ஹ21/12/2012 பற்றி தெரியாத மக்களே இருக்க முடியாது..ஏன் என்றால் அப்படி .பீதியை கிளிப்பி விட்டு இருக்காங்கோ ...எந்த பத்திரிகையை பார்த்தாலும் இது பற்றிய செய்திதான் ..மாயன் இனத்தவரின் காலண்டரின் .. 21/12/2012  முடிவடைகிறது ..இந்த பஞ்சாயத்துதான் ...இப்படி உலகம் முழுவது உலகம் அழிய போகிறது என்ற பீதியை கிளப்பி விட்டு இருக்கிறது .........இதனால் நாடு முழுவது சில ...மக்கள் தங்களின் செல்வத்தை எல்லாம் துறந்து ......தியாகியாக மாறி வருகின்றார்கள் .ஹ ஹ ஹ ஹ ...இதனால் ஒவ்வொரு பத்திரிகை களிலும் ..இது போன்ற செய்திகள் அடிகடி வருகின்றது ....அதில் நான் படித்து சிரித்த ஒன்றுதான் இது 

21ம் தேதி உலகம் அழியும் என்ற தகவலால்

வங்கியில் இருந்து 1 லட்சம் எடுத்து மக்களுக்கு கொடுத்தார் வியாபாரி.....ஹ ஹ ஹ இவங்க எல்லாம் நல்லா வருவாங்கோ .........சரி யார் அந்த மாயங்கள் சாரி மாயன்கள் 


யார் அந்த மாயன்கள்?

கி.மு 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்காவில் மாயா என்ற ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். வானவியல் சாஸ்திரம், கணித சூத்திரம் மற்றும் பல கலைகளில் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.  அவர்கள் குறிப்பிட்டுள்ளபடியே சில விஷயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன. அவர்கள் உருவாக்கியதுதான் இந்த மாயன் காலண்டர். இக்காலண்டர் கி.மு. 3113-ல் தொடங்கி கி.பி. 2012 டிசம்பர்  21-ம் தேதி முடிவுக்கு வருகிறது.  அக் காலண்டரில் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கிறது.  13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் ஆகின்றன. அவர்கள் காலண்டரின் முதல் தேதியான 0, 0, 0, 0, 0 என்பது  தற்போதுள்ள நவீன நாள்காட்டியின் படி கி.மு. 3114-ஐ குறிக்கிறது. மாயன்  காலண்டரின் முடிவடையும் தேதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நமது நாள்காட்டியின் படி கி.பி. 2012 டிசம்பர் மாதம் 21-ம் தேதி 11:11:11  மணிக்கு முடிவடைகிறது.
மாயன்கள் தங்கள் காலண்டரை டிசம்பர் 21,2012ம் தேதியிடன் முடித்தது ஏன்? அன்றுடன் உலகம் அழிந்து விடுமா! இதுதான் இக்காலண்டரை நம்புவோர் உலகம் அழிந்துவிடும் என்று கூறுவதற்கு முக்கிய காரணம். மேலும் அழியாவிட்டாலும் நிச்சயம் அன்று மிகப்பெரிய ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படும் என்றும் கருதுகின்றனர்.......
இஸ்லாமிய நம்பிக்கை படி உலக அழிவை பற்றி ..குரான் ஹதீஸ் என்ன சொல்ல பட்டு இருக்கிறது என்பதை பார்ப்போம் 
உலகம் அழியுமுன் நடக்கும் சிறிய பெரிய அறிகுறிகள். இவைகள் நடக்காமல் உலகம் அழியாது. அதனால் யாரும் கவலை பட வேண்டாம். சிறிய அறிகுறிகள் எல்லாம் ஓரளவு நடந்து விட்டன. இன்னும் ஒரு சில சிறிய அறிகுறிகள் தான் நடக்க வேண்டும். அதன் பிறகு அந்த 10 பெரிய அறிகுறிகள் நடக்க ஆரம்பிக்கும். அதுவும் இறைவனுக்கு மட்டுமே தெரியும் எப்போது நடக்கும் என்பது. 
 
Sun Rise from West சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும், Anti Christ தஜ்ஜால் வருவது, Jesus Christ (ஜீசஸ்) வருவது அடக்கம்.
Jesus Christ (ஜீசஸ்) ஒரு முஸ்லிம். அவர் இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர்.
 

மகளின் தயவில் தாய்

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777, 50
பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவதுயுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)
குறிப்பிட்டார்கள்.
நூல்: புகாரி 50
குடிசைகள் கோபுரமாகும்
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 7121
விபச்சாரமும்மதுப்பழக்கமும் பெருகும்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும்மதுவும் பெருகும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231
தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்
நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு
காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று
விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 59, 6496
பாலை வனம் சோலை வனமாகும்
செல்வம் பொங்கிப் பிரவாகித்துஅதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும்அரபுப் பிரதேசம் நதிகளும்சோலைகளும் கொண்டதாக
மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம் 1681
காலம் சுருங்குதல்
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)
ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.
(
இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு
விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
நூல் : திர்மிதீ 2254)

கொலைகள் பெருகுதல்
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம்
(
ஸல்) கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 85, 1036, 6037, 7061
நில அதிர்வுகளும்பூகம்பங்களும் அதிகரித்தல்
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள்
நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல்: புகாரி 1036, 7121

பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.

நெருக்கமான கடை வீதிகள்
கடைகள் பெருகி அருகருகே அமைவதும்நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: அஹ்மத் 10306

பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098
உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.
நூல்: அஹ்மத் 11365
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்
வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: அஹ்மத் 1511
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல்
செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.
நூல்: புகாரி 7115, 7121
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக
முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 3609, 7121
முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான்முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'
அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும்கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3456, 7319
யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.
நூல்: புகாரி 2926
கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள்
சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.
நூல் : புகாரி 5179
யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 7119
கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 3517, 7117
அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது
நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5183
எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்
பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5191
செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 1036, 1412, 7121
ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424
மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்
ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே
வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936
பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1. 
எனது மரணம்

2. 
பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. 
கொத்து கொத்தாக மரணம்

4. 
நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. 
அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6. 
மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12ஆயிரம் பேர் இருப்பார்கள்.
நூல் : புகாரி 3176
மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 2451
அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 3546
மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து
விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - 
புகை மூட்டம்

2 - 
தஜ்ஜால்

3 - (
அதிசயப்) பிராணி

4 - 
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - 
ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - 
யஃஜுஜ்மஃஜுஜ்

7 - 
கிழக்கே ஒரு பூகம்பம்

8 - 
மேற்கே ஒரு பூகம்பம்

9 - 
அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - 
இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்
நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.
புகை மூட்டம்
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக!
அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்இது கடுமையான வேதனையாக
அமைந்திருக்கும்.

(
அல்குர்ஆன் 44:10,11)
உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்
பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.
மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)
நூல்: தப்ரானி

யஃஜுஜ்மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை

இறுதியில் யஃஜுஜ்மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(
அல்குர்ஆன் 21:96)
ஈஸா(அலை) அவர்களின் வருகை
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
(
அல்குர்ஆன் 43:61)
மூன்று பூகம்பங்கள்

(
மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம்அரபு
தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்

பெரு நெருப்பு
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்
செல்லும்அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்


Tuesday, 18 December 2012

ஒருவேளை பாகிஸ்தானில் ஓடிடுமோ
நம் ..பங்காளி நாடான...பாகிஸ்தானின் முன்னணி  நாளிதழ்.தனது இணையத்தளத்தில் .கமல்ஹாசனின் விஸ்வரூபம் பற்றி ஒரு செய்தி .ஒன்று வெளியிட்டுள்ளது   ......

கமல்ஹாசனின் .விஸ்வரூபம் ..அதன் தொழில்நுட்பத்திற்காக..பெரிய அளவில் பேசப்படும்..என்றார்கள் ...ஆனால் அதன் ட்ரைலர் .பாகிஸ்தானை பெரிதளவு கவர்துள்ளது..என்பது குறிப்பிட தக்கது 

பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான .. டெய்லி டைம்ஸ்...அதன் இணையத்தளத்தில் ...கமல்ஹாசன் நடித்து வெளிவர இருக்கும் ..விஸ்வரூபம் திரைப்படத்தை பற்றி செய்தி வந்துள்ளது....

கமலின் விஸ்வரூபம் ..ட்ரைலர் .இந்திய முழுவதும் பெரும்  வரவேற்பை பெற்றுள்ளது....இஸ்லாமியர்களின் நடுவே..சர்ச்சையும் எழுந்துள்ளது இந்த படத்துக்கு ..ஏன் என் என்றால் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து உள்ளார்களா என்ற .கண்ணோட்டத்தில் ...
இந்த செயதியை ...பாகிஸ்த்தானின் முன்னணி பத்திரிக்கையான ..டெய்லி டைம்ஸ்..வெளியிட்டுள்ளது ...

கமலின் பேட்டி 
விஸ்வரூபம் ..சர்வதேச கதை கொண்டது ..இந்த படம் சர்வதேசத்தை எட்டினால் எங்கள் பணியை நாங்கள் சரியாக செய்தோம் என்று அர்த்தம் ..என்று கூறியுள்ளார் ..
உலகம் முழுவதும் 3000 பிரிண்டுக்களில்.வெளியாகும் ஒரே படம் இதுதான் என்றும் கூறி உள்ளார் .....................

இந்த படம் இந்தியாவில் ஓடாமல் போனால் ..ஒருவேளை பாகிஸ்தானில் ஓடிடுமோ .......................அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...
Thursday, 13 December 2012

சலாம்’ கூற மறந்த அரசு ஊழியர் மீது வழக்கு!தான் தெரிவித்த ‘ஸலாம்’- முகமனுக்குப் பதிலளிக்கவில்லை என்று அரசு ஊழியர் ஒருவர் மீது ஜெத்தா நகர பிரஜை ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார். இத்தகவலை சவூதி அரேபியாவின் அல்ஹயாத் நாளேடு வெளியிட்டுள்ளது.


இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மனுதாரரின் வழக்குரைஞர் அப்துல் அஸீஸ் அல் ஸாமில் “குறிப்பிட்ட ஒருநாளன்று அந்த அரசு ஊழியரின் அலுவலகத்திற்குச் சென்ற மனுதாரர் சலாம் உரைத்த போது பதிலுரைக்காமல் இருந்தார்.

சவூதி அரேபிய சட்டப்படி, அரசு ஊழியர் என்பவர் நல்ல குணாம்சங்களோடு நன்னடத்தைக் குரியவராக இருக்கவேண்டும் – இது சட்ட விதி நான்கிற்கு உட்பட்டது” என்றார். மேலும், “இஸ்லாம் மத ஆசாரப்படி, சலாமுக்கு பதில் சலாம் உரைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் அதன்படி நடக்கவில்லை” என்றும் வழக்குரைஞர் அப்துல் அஸீஸ் அல் ஸாமில் கூறினார்.

சலாமுக்கு பதிலுரைக்காத விதயம் சவூதி அரேபியாவில் அரிதே என்றாலும் இவ்வழக்கில் அந்த அரசு ஊழியருக்கு ஷரியா சட்டப்படி தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்று வழக்குரைஞர் அல்ஸாமில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்வது அரசு ஊழியர்களின் இயல்பாக இருக்க வேண்டும்” என்றார் அல்ஸாமில்......

இப்படி இருக்கும் பொழுது  நமது ஊரில் சலாம் சொல்லுவதற்கு நாம் தயங்குகிறோம் ..மற்றும்..தெரிந்த முகத்திற்கு மட்டும் நாம்  சலாம் சொல்கின்றோம் ....என்ன கொடுமை இது 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும்.10 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்...புகாரி .அத்தியாயம் 79, எண் 6231

நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<

Wednesday, 12 December 2012

இத்துனை ஆர்ப்பாட்டங்கள் எதற்கு ?
ஒரு சாதரணமான மனிதனுக்கு இன்று பிறந்தநாள் அதுவும் இன்று ...12/12/12 ..இந்த நாளை நாம் இவ்வளவு விமர்சியாக பார்க்க..அப்படி என்னதான் இருக்கிறது இந்த நாளில்  என்று பார்த்தால் பெரிதாக கூறும் அளவுக்கு ஒன்றும் இல்லை ..
ஒன்று வேணா விமர்சியாக கூறலாம் ..12/12/12 காண இன்னும் நூறு வருடம் வேண்டும் ..அவ்வளவுதான் ..இப்படி இருக்கும் பொழுது ..ஒரு சாதாரன நம்மை போன்ற மனிதனுக்கு இன்று பிறந்த நாள் ..அவர் யார் என்று  உங்களுக்கே தெரியும் ..நடிகர் .ரஜினிகாந்த் ...இவரின் பிறந்தநாள் வருடம் வருடம் வருகிறது ..ஆனால்  இந்த வருடம் 12/12/12 வருவதனால் ...ஒரே சிறப்பு என்று பலர் கூறுகிறார்கள் ..இதனால் பல தொலைக்காட்சிகளில்  ..தீபாவளி பொங்கல் போன்ற தினங்களுக்கு சிறப்பான நிகழ்சிகளை போடுவது போல ..இவரின் பிறந்தநாள் அன்றும் ....சில  தொலைக்காட்சிகளில் ...>>>>சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு <<<< உங்கள்---------- டீ வியில் சிறப்பு நிகழ்சிகளை காண தவறாதீர்கள் ..........என்று தேவை இல்லாத பில்டப் எதற்கு இந்த மாறி இவரை இப்படி ஒரே அடியாக தூக்கி பேசுகிறார்கள் .அப்படி இவர் நம் நாட்டுக்கு என்ன நல்லது செய்தார் ...ஏழை மக்களுக்கு இலவச  மருத்துவமனைகளை ..இவர் கட்டினார ?  இல்லை ஏழை மக்களுக்கு இலவச கல்வியை வழங்கினாரா ? இல்லை ஆதரவு இல்லாத எத்துணையோ மக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஏதாவது நன்மை செய்தாரா ? இதில் ஏதாவது ஒன்றை அவர் செய்திருந்தால் ..இந்த மாறி  தொலைக்காட்சிகளில் கொண்டாடுவதற்கு அர்த்தம் உண்டு...ஒன்னுமே பண்ணாத இந்த மனிதருக்காக ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ..என்பதுதான் எனது கேள்வி ரஜினி ரசிகர்கள் என் மீது கோவம் படவேண்டாம் ......உங்கள் மனம் புண் படுவதற்காக நான் இந்த பதிப்பை போடா வில்லை ..ஆதங்கம் மாகத்தான் இந்த பதிப்பை நான் போடுகிறேன் அவ்வளவுதான் ......
நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<


Tuesday, 11 December 2012

.நம்மெல்லாம் அப்பவே அந்த மாறி இப்ப சொல்லவா வேணும்


அமெரிக்கர்கள் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறார்கள்.”

இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.”

இந்தியர்களும் தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அறிவித்தார்கள், “எங்களது மூதாதையர் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.” 
 ஹ ஹ ஹ ஹ ஹ ..நம்மெல்லாம் அப்பவே அந்த மாறி இப்ப சொல்லவா வேணும் 


Monday, 10 December 2012

இதுக்கு மேல எதுவும் இல்ல ..........நம் உலகத்தில உள்ள புவி அமைப்பின் சில உச்சங்களை ...நான் படித்து தெரிந்து கொண்டேன் ..நீங்களும் அறிவதற்காக இங்கே பகிர்ந்து இருக்கின்றேன் இதோ 

மிக உயர்ந்த பகுதி                        எவரெஸ்ட் சிகரம், நேபாளம்
மிக தாழ்ந்த பகுதி                         சாக்கடல், ஜோர்டான்
மிகப் பெரிய கடல்                        தென் சீனக்கடல், பசிபிக் பெருங்கடல்
மிக நீளமான ஆறு                        நைல், ஆப்பிரிக்கா
மிக பெரிய பாலைவனம்                   சஹாரா, வட ஆப்பிரிக்கா
மிக வெப்பமான பகுதி                     தலோல், டானகில் டிப்ரெஷன், எத்தியோப்பியா (34.4 செல்ஷியஸ்) (வருட சராசரி)
மிக குளிரான பகுதி                       பிளோட்டோ ஸ்டேஷன், அண்டார்டிகா (-56.7 செல்ஷியஸ்) (வருட சராசரி)
மிக ஈரமான பகுதி                        மௌசின்ராம், மேகாலயா, இந்தியா (11,873 மி.மீ) (வருட சராசரி)
மிக உலர்ந்த பகுதி                        அட்டகாமா பாலைவனம், சிலி
மிகப்பெரிய கண்டம்                       ஆசியா
மிகப்பெரிய உப்பு நீர் ஏரி                  காஸ்பியன் கடல்
மிகப்பெரிய நன்னீர் ஏரி                           சுப்பீரியர் ஏரி, அமெரிக்கா – கனடா
மிகப்பெரிய நீர்வீழ்ச்சி                      ஏஞ்சல், வெனிசுவேலா
மிகப்பெரிய டெல்டா                       சுந்தரவனம், இந்தியா
மிகப்பெரிய தீவு                                  கிரீன்லாந்து
மிகப்பெரிய தீவுக்கூட்டம்                   இந்தோனேஷியா
மிகப்பெரிய சமவெளி                      கங்கைச் சமவெளி
மிகப்பெரிய வனம்                         கோனிஃபெரஸ், வட ருஷ்யா
மிகப்பெரிய ஆலையம்                     அங்கோர்வாட், கம்போடியா
மிகப்பெரிய விமான நிலையம்        மன்னர் காலத் சர்வதேச விமான நிலையம், சௌதி அரேபியா
மிகப்பெரிய தேவாலயம்                    செயின்ட் பீட்டர்ஸ் பஸலிக்கா, வாடிகன்
மிகப்பெரிய இராணுவம்                           பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி, சீனா

நன்றி மீண்டும் அடுத்த பதிப்பில் இணையும் உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<<