Follow by Email

Wednesday, 31 October 2012

காச ஏனப்பா கரிஆக்குரிங்க ????


நண்பர்களே ! தீபாவளி நெருங்கி விட்டது ...எல்லாம் வியாபாரிகளும் காசு பாக்கும் நேரம் இது ..எல்லா மக்களும் காசு இழக்கும் நேரமும் இதுதான் ...தீபாவளி இந்துமக்களின் மிக முக்கியமான பண்டிகை ஆகும் தீபாவளித் திருநாள். எங்கும் கோலாகலம். காலையிலேயே பட்டாசுகளை எடுத்துக் கொண்டு குழந்தைகள் வெடிக்கக் கிளம்பிவிடுவார்கள். தீபாவளி தினம் பெரும் சப்தத்துடன்தான் விடிகிறது. அதற்கு அடுத்த நாள் காலை தெருவெங்கும் பட்டாசு வெடித்த தாள் குப்பைகள் சிதறிக் கிடக்கும்...ஆனால் பட்டாசு வெடிப்பது இன்று அனைத்து வித மக்களும் மதம் சாராமல் பட்டாசை வெடித்து  காசை கரியாக்க கொள்ள போகிறார்கள் ......ஒரு ஆயிரம் ரூபாய் இனமாக யாருக்கும் குடுக்க மனசு வராது .ஆனால் ஆயிரம் ரூபாயில் பட்டாசு வாங்கி அதை கரியாக்க எப்புடித்தான் இந்த மக்களுக்கு மனசு வருதோ ...சரி பட்டாசு வெடிப்பது ஒரு சந்தோசமாக இருக்கிறது என்றால் அந்த பட்டாசால் எவ்வளவு தொந்தரவு இருக்கிறது தெரியுமா ....?  சுற்று சூழல் பாதிப்பு .போக்குவரத்து பாதிப்பு ..பட்டாசை சரியாக வெடிக்காமல் இருக்கும் நாம் அதை போய் பார்ப்போம் .அப்ப திடிரென்று அது வெடிக்கும் இது நமக்கு பாதிப்பு ..மற்றும் வீண் செலவு .....இப்படி கூறி கொண்டே போகலாம் ...


பட்டாசும், வெடியும் எரியும் அந்த நிமிட நேரத்தோடு மறைந்து போய் விடுகின்றன. ஆனால் அதற்குப் பின்னுள்ள பயங்கரம் பற்றி அறிந்தால், சற்று பயமாகவே இருக்கிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை ஒன்றின்படி சந்தையில் கிடைக்கும் 95 சதவீத பட்டாசுகள், மத்தாப்புகள் ஒலி, காற்று மாசுபாட்டு விதிமுறைகளை மீறுபவையே.
பட்டாசு வெடிப்பதால் கடுமையான தூசுப் புகை, நைட்ரஸ் ஆக்சைடு, சிறு துகள்கள் வெளியிடப்படுகின்றன. வண்ண வண்ண ஒளியை உமிழும் மத்தாப்புகளும், புஸ்வானங்களும் நச்சுத்தன்மை மிகுந்த கனஉலோகங்களான காரீயம், காட்மியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. அத்துடன் பட்டாசுகளில் சேர்க்கப்படும் ஆர்சனிக், பாதரசம், குரோமியம், இரும்பு ஆக்சைடுகள் எரிக்கப்பட்டவுடன் நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன.
குழந்தைகளின் மென்மையான சுவாசப் பாதைகள் பட்டாசுப் புகைக்கு எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அவர்கள் பெரும்பாலும் வாய் வழியாகவே சுவாசிக்கிறார்கள். இது நச்சுக்காற்றை வடிகட்டுவதில்லை. இதனால் சிறு துகள்கள் எளிதில் அவர்களது நுரையீரல்களைச் சென்றடைந்து விடுகின்றன. அவர்களது நுரையீரல்கள் வளரும் தன்மையுடன் இருப்பதால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகளுக்கு பாதிப்புகளில் முதலிடம்.
தீபாவளி தினத்தன்று காதைச் செவிடாக்கும் 120 டெசிபல் ஒலி வெளிப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய கணக்கீடுகள் கூறுகின்றன. பெரும்பாலான பட்டாசுகளின் ஒலி காதை பதம் பார்க்கிறது. பட்டாசு வெடிக்கும்போது எழும் சப்தத்தால் இதயத் துடிப்பும், அட்ரீனலின் சுரப்பும் அதிகரிக்கின்றன. ரத்தக் குழாய் சுருங்குதல், கண் கருவிழி வீங்குதல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தொடர் பட்டாசு சப்தத்தால் குழந்தைகள், முதியவர்கள் அச்சமடைகிறார்கள்.
நிம்மதியாகத் தூங்குவது அனைவரது அடிப்படை உரிமை என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இரவு 10 மணிக்கு மேல், காலை 6 மணி வரை பட்டாசு வெடிப்பதைத் தடை செய்துள்ளது. ஆனால் உள்ளூர் காவல்துறையின் அலட்சியத்தால் இந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பில் இருந்து குழந்தைத் தொழில் ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டாலும், வேலையை பிரித்துக் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் வைத்தே செய்ய வைப்பதால், மறைமுகமாக குழந்தை உழைப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மிக மோசமான, ஆபத்தான நிலைகளில் அவர்கள் பணிபுரிகின்றனர்.
எனவே, மேற்கண்ட காரணங்கள் அடிப்படையில் பட்டாசுகளை மறுப்பதன் மூலம் நமது உடல்நலத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்லாம். அதோடு குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான செயல்பாடாகவும் இது அமையும்......நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<
Monday, 29 October 2012

சும்மா குடுக்குராங்கடோய் .......................!!!!!


நண்பர்களே !இன்று நான் என்ன கூற வந்து இருக்கிறேன் என்றால் ...நான் கண்ட ஒரு சம்பவமும் .அதனின் வரலாறும் ....
நான் பொறந்தது வளர்ந்தது    இருப்பது எல்லாம் கோயம்புத்தூர் என்பது  எல்லோருக்கும் தெரியும் தெரியாத நபர்களுக்கும் இப்ப தெரிந்து இருக்கும் ....ஒரு நாள் நான் கல்லூரி விடுமுறை அன்று எங்க நண்னத்தா[தாத்தா] கடைக்கு சென்று இருந்தேன் .துணி கடை ..அப்பொழுது கடை வாசலில் ..பொழுது போவதற்காக ..வெளியே உட்கார்ந்து பராக் பார்த்து கொண்டு இருந்தேன்...அப்பொழுது வேறொருஊரில் இருந்து .ஒரு குடும்பம் ..நடந்து வந்து கொண்டு இருந்தது .அப்போது எங்க கடைக்கு அருகில் .வந்த அந்த குடும்ப்பத்தார் ...ஏன்ப்பா கொஞ்சம் குடிகுரதுக்கு தண்ணீர் குடுங்கப்பா .என்று  கேட்டார் நானும் உள்ள இருந்து ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு போய் குடுத்தேன்...வாங்கி குடித்தவருக்கு ஒரே மகிழ்ச்சி ...குடித்தவுடன் அவர் அருகில் இருந்தவரிடம் கூறின வார்த்தை ..இங்க பாருடா  .இளநீரை சும்மா குடுகுராங்கடோய்.....என்று உரக்க கூறினார் ..கோயம்பத்தூர் சிருவாணினா சும்மாவா ?   சரி அந்த சிரிவானியின் வரலாறை பார்ப்போமா ?சிறுவாணி நதி கோயம்புத்தூர் நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்றும், உலகில் மிக சுவையான தூய்மையான குடிநீர் மூலங்களில் ஒன்றான,நதியாகும்.கேரளாவின்பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு தாலுகாவில் உள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில்துவங்குகிறது. இது பவானி ஆற்றின் துணைநதியாகும்... ....

தமிழ்நாட்டில் ..அனைத்து மக்களுக்கும் மிக பிடித்த .இடமான .கோவை நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சிறு நீர்த்தேக்கம், வளர்ந்து வந்த நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில், 1969ஆம் ஆண்டு முதல் தமிழக அரசும் கேரள அரசும் ஆய்வுகள் நடத்தி ஆகஸ்ட்  19,1973அன்று ஓர் புதிய அணையைக் கட்ட உடன்பாடு கண்டனர்.இதன்படி கோவை நகரின் வீட்டு,சமூக மற்றும் தொழிற்சாலை பயனிற்கு தேவையான நீரைத்தேக்கிட (1300 மில்லியன் கனஅடி)கேரள அரசு சிறுவாணி அணையைக் கட்டி அதற்கான கேரள மாநில நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்தது.[1]இந்த அணையின் இருபுறமுள்ள வாயில்களும் முறையே தமிழக மற்றும் கேரள கட்டிட வடிவமைப்பைக் கொண்டு அழகாக விளங்குகின்றன.இது கோவை மற்றும் பாலக்காடு நகர மக்களின் விடுமுறை பயணத்தலமாக விளங்குகிறது.....

கோவை குற்றாலம் 

இது சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு அனுமதி கிடையாது......
நன்றி நண்பர்களே ! இனி அடுத்த பதிப்பில் சந்திக்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<


Wednesday, 24 October 2012

ஆண்கள் படிக்க வேண்டாம் !!!


ஏன் ? நான் இதை ஆண்களை படிக்கவேண்டாம்னு சொன்னேன் ?ஒரு ஆணாக இருந்துட்டு ஏன் நான் இப்படி சொன்னேன் இதில் ஏதாவது  வில்லங்கம் இருக்கிறதா அப்படினு பார்த்த ஒன்னுமே இருக்காது .இது ஆண்களுக்கு தேவைப்படாது .அப்படி தேவைப்பட்டாலும் அந்த ஆணின் தங்கைக்கோ அல்லது அக்கா மற்ற பெண்களுக்க்காகதான் தேவைப்படும் ...சரி அப்படி பெண்களுக்கு இந்த பதிப்பில் என்னதான் இருக்குனு .நினைத்தால் .நீங்கள் நினைக்கும் அளவுக்கு ஒன்னுமே இருக்காது ...விடுதியில் படிக்கும் பெண்களுக்காக ஒரு சகோதரனாக இருந்து  ஒரு ஸ்மால்  அட்வைஸ் .அவ்வளவுதான் .அப்படியே பொறுமையா படிங்க செல்லங்களா பார்ப்போம் ....

ல்லூரிகள் திறக்கும் நேரம் இது. புதிய கல்லூரியில் காலடி வைக்கும் பெண்கள் தங்கள் கல்லூரியில் இருக்கும் விடுதிகளில் தங்கி படிப்பார்கள். சிலர் தனியார் பெண்கள் விடுதியில் தங்குவார்கள். படிக்கும் பெண்கள் மட்டுமல்ல, பணிக்கு செல்லும் பெண்களும் தமிழ் நாட்டில் உள்ள பெரிய நகரம்மான  சென்னை கோவை  வந்தால் தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நாம் பணத்தை கொடுத்தும் சரியான உணவு கிடைக்காதது, மற்றும் பல தீங்கை உண்டாக்கும் விடுதிகளும் இருக்கிறது . சென்னை மற்றும் கோவைக்கு  புதிதாக வரும் இளம் பெண்கள்
எந்தெந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு விடுதிகளை தேர்வு செய்ய வேண்டும் என இதோ சில டிப்ஸ்..

* சென்னை மற்றும் கோவையில்  எப்படியும் உங்களுடைய உறவினர், நண்பர்கள் வீடு இருக்கும் ஏரியாவுக்கு அருகில் விடுதி பார்ப்பது நல்லது. விடுதியில் திடீரென மோட்டார் ரிப்பேராகி தண்ணீர் வரவில்லை என்றால் கூட அவர்கள் வீட்டுக்கு சென்று தயாராகிக் கொள்ளலாம். ஏதேனும் அவசர உதவி என்றால் அவர்களிடம் கேட்கலாம்.

* ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையத்திற்கு அருகில் விடுதி இருப்பது அவசியம். வெளியூரிலிருந்து வரும் பெண்கள் பெரும்பாலும் டூ-வீலர் பயன்படுத்தாமல் இருப்பதால், அதிக தூரம் நடக்க வேண்டியதை தவிர்க்கலாம். மேலும் நேரம் தாமதமாகி விடுதிக்கு வரும் போது நிகழ வாய்ப்பிருக்கும் பிரச்னைகளையும் தவிர்க்க இது உதவும்.

* உணவைப் பொறுத்தவரை சேரும் முன் அங்கே சாப்பிட்டு பார்ப்பது நல்லது. விடுதி என்றாலே சாப்பாடு அப்படி இப்படி தான் இருக்கும் என்றாலும் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தட்டை நீட்டினால் அவர்களாக அளவு சாப்பாடு வழங்கும் விடுதிகளை தவிர்க்கலாம்.

* ரூமுக்கு தனியாக டி.வி. இருந்தால் அந்த ஹாஸ்டல் பற்றி பரிசீலித்து கொள்ளலாம். ஆரம்பத்தில் ரூமில் டி.வி. இருக்கிறதே பாட்டு, சினிமா பார்த்துக் கொள்ளலாம் என சந்தோஷமாக தான் இருக்கும். 
ஆனால் நாம் கல்லூரிக்கோ அல்லது வேலைக்கோ சென்று அலுப்பாக  திரும்பி வரும் போது ரூமில் இருக்கும் மற்ற நபர்கள் டி.வி. யை இரவு நெடுந்நேரம் வரை அலறவிடுவது மிகவும் தொந்தரவாக இருக்கும்.

* விடுதியில் சேரும் முதல் நாளே அங்கிருக்கும் கார்டியன் உங்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறாரா.. இது உங்களை வேறு ஹாஸ்டல் போக விடாமல் மனதை மாற்றும் வித்தை. அந்த அக்கா தான் நல்லா பேசுறாங்களே, அந்த தாத்தா பாசமா லக்கேஜ்லாம் எடுத்து கொடுக்கிறாரே என்று உணர்ச்சிவசப்பட்டு அங்கேயே தங்கிவிட வேண்டாம். விடுதி சரியில்லை என்றால், கிளம்பிவிடுங்கள். உங்கள் சவுகரியமும் பாதுகாப்பும் தான் முதலில். அதற்குப் பிறகு தான் எல்லாமே.

* சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் கூட வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம். தண்ணீர் பிரச்னை என்றால் எங்கு போக முடியும்? அதனால் ஒன்றுக்கு இரண்டு முறை ஹாஸ்டலில் தங்கியிருக்கும் நபர்களிடம் கோடை காலத்திலும் தண்ணீர் பிரச்னை இல்லாமல் வருமா எனக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

* பண விஷயத்தில் அட்வான்ஸ் வாங்கி கொள்ளும் விடுதிகள், ' நீங்கள் ஹாஸ்டலை காலி செய்வதென்றால் மூன்று மாதத்திற்கு முன்பே நிர்வாகத்திடம் சொல்ல வேண்டும், அதும் அட்வான்ஸ் தொகையை பணமாக கொடுக்க மாட்டோம் காசோலையாக தான் கொடுப்போம் ' என சொல்பவர்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.

* சில விடுதிகளில் செல்போன் சார்ஜ் போட பிளக் பாயின்ட் உங்கள் ரூமில் இல்லாமல் வெளியில் பொது ஹாலில் மட்டுமே பிளக் பாயின்ட் இருக்கும். மின்சாரத்தை குறைக்கும் நடவடிக்கை இது. காஸ்ட்லி மொபைல் வைத்திருக்கும் நபர்கள் போனில் சார்ஜ் ஏறும் வரை பக்கத்திலே அமர்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்படும்.  உங்கள் செல்போன் சார்ஜ் ஏறும்வரை நீங்களும் அங்கேயே இருக்க வேண்டி வரும். உங்கள் நேரம் விரயமாகும்.

* லேப்டாப் பயன்படுத்தினால் அதற்கு தனியாக கட்டணம், அயன்பாக்ஸ் பயன்படுத்தினால் அதற்கு தனியாக கட்டணம், வாஷிங் மெஷின் பயன்படுத்த தனியாக கட்டணம்.. என பலவித கட்டணங்கள் வசூலிக்கும் விடுதிகளும் இருக்கின்றன. முதலிலேயே எல்லாவற்றையும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

* மிகவும் அவசியமான விஷயம் பாதுகாப்பு. விடுதிக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தாலோ, அதிகப்படியான ஆண்கள் கூடும் இடங்களுக்கு அருகில் விடுதி இருந்தாலோ.. கொஞ்சம் கவனம் தேவை. அதைத் தேர்வு செய்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.

* எப்படியிருந்தாலும் எடுத்ததுமே அட்வான்ஸ், வாடகை என முதல் நாளே அனைத்து தொகையும் செட்டில் செய்துவிடாமல் பாதித் தொகை மட்டும் கொடுத்துவிட்டு, பாக்கித் தொகையை இரண்டு நாட்கள் கழித்து தருகிறேன் என சொல்லுங்கள். ஒருவேளை நீங்கள் அங்கு சென்று தங்கிய பிறகு ஹாஸ்டல் பிடிக்கவில்லை என்றால் கொடுத்த பணத்தை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டாலும் நஷ்டம் பெரிதாக இருக்காது.

* ஹாஸ்டல் எனபது நாம் பெற்றவர்களை விட்டு தனியாக இருக்கும் இடம். மனது பல விஷயங்களுக்கு அலைபாயும் என்பதால் கூடுதல் கவனம் தேவை. ரூமில் உங்களுடன்  தங்கும் தோழிகளுடன் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவர்களின் நல்ல விஷயங்களை பின்பற்றலாமே தவிர, கெட்ட விஷயங்கள் உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

சொந்த ஊரைவிட்டு, பெற்றோர், சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களை விட்டு வெளியூருக்கு வரும் போது தங்கும் இடம் சவுகரியமாக இருந்தால் மட்டுமே நிம்மதியாக படிக்கவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும்.

ஹாஸ்டல் வாழ்க்கை என்பது உங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பங்களைத் தரக்கூடிய காலம். தங்கும் இடமும், உடன் இருக்கும் மனிதர்களும் உங்கள் நோக்கத்தை திசை திருப்பவோ, தடுக்கவோ வாய்ப்பளிக்காமல், கவனமாக விடுதியைத் தேர்வு செய்து நிம்மதியாக உங்கள் நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.. வாழ்த்துகள் சகோதரிகளே!.....நன்றி மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திக்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<


Monday, 22 October 2012

இந்தியாவிலேயே இதுதான் முதல்ல !!!!


இந்தியாவிலேயே இதுதான் முதல்ல !!!!

என்னுடைய நெருங்கிய மாற்று மத நண்பர்கள் ..என்னிடம் கேக்கும் கேள்வி . " மாப்ள எப்படா இந்தியாவுல இஸ்லாமிய மார்க்கம் பரவுச்சுனு " .நானும் என்னென்னமோ கூறி பார்த்தேன் ..யாரும் சரியாவே நம்பல..அப்பறம் தான் எனக்கு தெருஞ்சது இந்தியாவுல கட்டுன முதல் பள்ளிவாசல் தெரிஞ்சா ..இஸ்லாமிய மார்க்கத்தின் இந்திய வரலாறு தெரியும்னு தோனுச்சு ...அப்பறம்......... கீழ பொறுமையா படிங்க புரியும் .......


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு கனவில் வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி (ஸல்) அவர்களை பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபி (ஸல்) அவர்களை சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் அவர்கள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.

பின் இந்தியாவில் இஸ்லாம் மதத்தை பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (Port of Zabar, Yeman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

ஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசுதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார்....

இவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.,,,..அந்த மசூதீயில் ..மசூதியின் தோற்றம் கல்வெட்டின் மூலம் பொறிக்கப்பட்டுள்ளது .....

கட்டுமான அமைப்பு >>>>>


இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது....இஸ்லாத்தை முழுமையாக அறியாததால் . இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசசூதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது...முழுமையான இஸ்லாத்தின் அடிப்படையில் இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது). இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது........
இந்த விஷயத்தை என் நண்பர்களுக்கு கூறின பிறகுதான் ..அவர்கள் தெளிவு பெற்றார்கள் ..நானும் தான் ...................
நன்றி நண்பர்களே ! அடுத்த பதிப்பில் சந்திக்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<


Saturday, 20 October 2012

நீங்களும் சாக் ஆகுங்க நண்பர்களே !


நீங்களும் சாக் ஆகுங்க நண்பர்களே !நண்பர்களே ! நம் உடலை பற்றிய வியத்தகு உண்மைய்களை நான் உங்களிடம் ஏற்க்கனவே இந்த ப்ளோகில் பகிர்ந்து இருந்தேன் ..இந்த பதிப்பு நம் உடலை பற்றிய வியத்தகு உண்மைகளின்..இரண்டாம் பாகம் ..இதை நான் படித்தவுடனே சாக் ஆயுடேன் ...நீங்களும் சாக் ஆகுங்க நண்பர்களே !
இறைவன் மனித உடலின் பாகங்களை சிறப்பாக உருவாக்கி தொடர்ந்து அந்த உடலை பணி புரிய வைத்துக் கொண்டிருக்இருகின்றான் . ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஒயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை நமக்கு மாபெரும் வியப்பை உருவாக்குகிறது. 
கல்லீரல்: ஒரு வருடத்தில் ஒரு மனிதனின் கல்லீரல் 23 தண்ணீர் லாரியில் நிரப்பக்கூடிய அளவுக்கு ரத்தத்தை வடிகட்டுகிறது. 
மூளை: உடலின் கனமான உறுப்பு மூளை. இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ 
நீரின் அளவு: மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது. 
இதயம்: இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. 
பிட்யூட்டரி சுரப்பி: மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. 
உடலின் வளர்ச்சி: ஒரு மனிதனின் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குறுத்தெலும் புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். 
இதயத் துடிப்பு: ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப் பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சு கிறது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது. வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும். நாடித்துடிப்பு என்பது இதயத்தின் துடிப்பு என்பதையே குறிக்கிறது. 
சருமம் (தோல்): மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. 
ரோமங்கள் (முடி): சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை. 
எலும்புகள்: குழந்தை பிறக்கும் பொழுது 300 எலும்புகள் இருக்கும். இவற்றில் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லை விட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவு உள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும் அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.
(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது).......நன்றி நட்புடன் உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<


Wednesday, 17 October 2012

என்னை மன்னித்து விடுங்கள் !!!!
அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே ! இந்த ப்ளோகில் நான் கடைசியாக ஒரு பதிப்பு போட்டு இருந்தேன் >>>நான் கவிதை எழுதினேன் நீங்க ?<<< என்ற தலைப்பில் அந்த பதிப்பில் நான் சில சில தவறான வார்த்தைகளை உபயோகம் செய்து இருந்ததால் .என்னுடைய முகநூல் நண்பர்கள் .என் மீது அதிகபடியான பாசத்தினால் .அந்த பதிப்பில் உள்ள தவறை என்னிடம் சுட்டி காட்டினார்கள்..அந்த பதிப்பின் மீதும் அவர்களின் எதிர்பை தெரிவித்தார்கள் ..நான் விளையாட்டாக செய்த தவறு ..அதற்காக நான் மிகவும் கவலை படுகின்றேன் ...அதனால் நான் அந்த பதிப்பை அவங்களுக்காக அளித்து விட்டேன்...இதற்காக அந்த முகநூலில் உள்ள >>>டீக்கடை<<<<க்ரூபில்உள்ள நண்பர்கள் அல்லாஹுக்காக என்னை மன்னித்து விடுங்கள்...இன்ஷா அல்லாஹ் இது போன்ற தவருங்கள் இனி நடக்காது ........சரி இந்த பதிப்பில் என்ன போடலாம், இன்று பொதுவான பதிப்பை தங்களுடன் பகிர விரும்புகின்றேன்......இளநீர் பற்றி கூற ஆசை படுகின்றேன் .........  இளநீரில் இருப்பவை 

சோடியம் குளோரைடு,பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்ட மின்கள் நிறைந்திருக்கின்றன.

மருத்துவ குணம் எப்படி?

தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக்காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறிவிடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித்துடிப்பு தளர்வு, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு வெளியேறுவதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச் சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச் சீராக பாதுகாப்பதோடு, வெப்பநிலையை சரிவர உள் வாங்கி முறையே வெளித்தள்ளுகிறது. இதனால் வேனல்பிடிப்பு, வேனல் அதிர்ச்சி, அயர்ச்சி போன்ற கோடையின் ஆபத்தான விஷயங் கள் இல்லாமல் போகிறது.

எப்படிச் சாப்பிடலாம்?

இளநீரை உடனடியாக குடித்துவிடுவது தான் நல்லது. இரண்டு / மூன்று மணி நேரங்கள் வைத்திருப்பதோ, ‘ஃபிரிட்ஜில்’ வைத்திருந்து குடிப்பதோ அதன் மருத்துவக் குணங்கள் மந்தப்படுத்தக் கூடும். வேண்டுமானால் அரை மணிநேரம் வைக்கலாம். இதில் எதனையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக் கூடாது. இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.

இளநீருக்கு மாற்று குளிர்பானமா?
குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் ‘கார்பனேட்டட் வாட்டரும்’, காற்றும் தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும். இவையெல்லாம் தொடர்ந்து குடிப்பதில் உள்ள பக்க விளைவுகள். ஆக இளநீர் இளமைக்கும் வலிமைக்கும் இதம்.....
நன்றி நண்பர்களே ..மீண்டும் அடுத்த பதிப்புடன் உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<
Saturday, 13 October 2012

ஒரு சின்ன கதை சொல்லணும் ...அதில் பெரிய மெசேஜ் இருக்கணும் .......... இன்று அறிவுரை சொல்லலான்னு நினைகிறேன் .நான் சிறு வயது பையன் தான் . ஆனால் அறிவுரை கூறும் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது .இருந்தாலும் நான் பார்த்து பழகின நண்பர்களிடம் ஒரு கெட்டபழக்கம் இருக்கிறது ..அது எண்ணதுன்னா?  கோவம்தாங்க இந்த கோவத்த நான் நிறைய இடத்துல பாத்து இருக்கேன் ஒன்னுமே இருக்காது ஆனா மூக்குக்கு மேல கோவம் படுவாங்க ......கோவம் படும் இடத்துல கோவம் பட்டால் சரி ..ஒன்னுமே இருக்காது ஆனா அங்கே சண்ட ..சரி எனக்கு தெருஞ்ச ஒரு சின்ன கதையையும் .அதில் உள்ள பெரிய மெசேஜையும் ..அதன் அடிப்படையில் நம் மக்களின் வாழ்க்கை நடைமுறையையும் பார்ப்போம்  ...


ஒரு வயதானோர் மிகவும் ஏழ்மையானவர் ...அவர் தள்ளாடி கொண்டு காலில் செருப்பு கூட இல்லாமல்  நடந்து சென்று கொண்டு இருந்தார்..அப்போது தன் தேவைக்காக ஒரு வீட்டில் வெளிய இருந்து யாசகம் கேட்டு கொண்டு இருந்தார் .அப்போது அந்த வீட்டில் உள்ளவர் ஒரு மதபோதகர் அவர் வெளிய வந்து .இந்த வயதானோரை பார்கிறார்..பார்த்தவுடன் இந்த மத போதகருக்கு தெரிந்து விடுகிறது. .இவர் மிகவும் ஏழ்மையாக இருக்கிறார் .என்று .பார்த்தவுடன் இந்த மத போதகர் தன கையில் இருந்த சிறிது பணத்தை இவருக்காக தருகிறார் .ஆனால் இந்த வயதானோர் வாங்க மறுக்கிறார் ..இந்த மத போதகர் ஏன் நீங்க வாங்க மறுக்கீர்கள்  என்று கேட்டார் .அதற்க்கு அந்த வயதானோர் கூறினார் .நான் அந்த மரத்துக்கு அடியில் உறங்கி கொண்டு இருந்தேன் .என்னுடைய பிஞ்சு போன பழைய செருப்பை   யாரோ திருடி சென்று விட்டார்கள் ..அதனால் என்னால் இந்த வெயிலில் நடக்க முடியவில்லை .நீங்க எனக்காக பணம் எல்லாம் தரவேண்டாம் .எனக்கு ஒரு செருப்பு மற்றும் வாங்கி தாருங்கள் அதுவே போதும் என்றார் .இதை கேட்ட அந்த மத போதகருக்கு சரியான கோவம் ..இந்த முதியவர் கிட்ட செருப்பு திருடிய அந்த நபரை  சபிக்க போனார் இந்த மத போதகர் .இதை கேட்ட அந்த முதியவர் அய்யா ! தயவு செய்து உங்களின் வாயால் அவனை சபிக்காதிர்கள் .ஏன் என்றால் நீங்க ஐந்து நேரம் தொழுகை நடத்தக்கூடிய  ஒரு மத போதகர் வேண்டாம் .அறியாமல் செய்த தவறு .என்னிடம் செருப்பை திருடிய அந்த நபருக்கு..அந்த பிஞ்சுபோன செருப்பு கூட இல்லாதது நாள்தானே அவன் அந்த செருப்பை திருடினான் என்னையும் விட அவன் வறுமையில் இருப்பதனால் தான் .திருடி இருக்கின்றான் .அதனால் அவனை விட்டு விடுங்கள்  ...அவனை சபிக்காதீர்கள் .அவனுக்காக நீங்க தொழுகும் பொழுது அவனின் வறுமை தீரவும் அவன் நல்ல மனிதனாக மாறவும் நீங்க தூவா[ப்ராத்தனை] பண்ணுங்கள் அதுவே போதும் .என்றார் .இதை கேட்ட அந்த மத போதகர்..அந்த முதியவரை கட்டி தழுவினார் ...சகோதர சகோதரிகளே கோவப்  படும் இடத்தில கோவம்  வராமல் .அந்த முதியவர் எப்படி அன்பாக நடந்து கொண்டார் .இது போல் நாம் எப்போதாவது நடந்து இருப்போமா ? இல்லை ..நின்னா கோவம் நடந்த கோவம் ...சரி நம்ம மக்களின் கோவத்தை பாக்கலாம் 
டீக்கடைல டீ வர கொஞ்சம் நேரம் ஆச்சுனா போதும் அங்க சண்ட ...பஸ்ஸுல போகும் பொழுது சில்லறை இல்லன போதும் அங்கயும்  சண்ட .. எ டி எம் லா பணம் எடுக்கும் பொழுது பணம் எடுகுறவன் கொஞ்சம் லேடாச்சுன போதும் வெளிய வெயிட் பண்றவங்க அவ்வளவுதான் .இருக்குற கெட்ட வார்தய்லயே திட்டுவாங்க அவன மனசுல ........வண்டியில  போகும் பொழுது. பஸ்ல போகும் பொழுது .ட்ரைன்ல போகும் பொழுது .அங்க இங்க இப்படி சொல்லிகொண்ட போகலாம் ..சரி யோகா பண்ணும் இடத்துல அமைதி இருக்கும் அங்க போன அங்கயும் சண்ட .யோகா க்ளாஸ்க்கு பண கட்டலன்னு விரட்டி விரட்டி அடிக்கிறானுங்க .....சரி ஆம்பளைங்க தான் இப்படினா .பொம்பளைங்க சண்ட இதுக்கு மேல இருக்கு .பொம்பளைங்களுக்கு கோவமே வராதுன்னு நினைத்தேன் ஆனால்...ஒரு சம்பவம் நடக்குற வரைக்கும். அது எதுனா தண்ணீ பிடிக்கும் பொழுது போடுவாங்க பாருங்க சண்ட ..பொறுமையா தண்ணி புடுச்ச அழகாக எல்லாருக்கும் தண்ணி கிடைக்கும் .இவங்க சண்ட போட்டுட்டு இவங்களுக்கும் தண்ணீ கிடைக்காம .இவங்க பின்னாடி இருக்குரவங்களுக்கும் தண்ணி கிடைக்காம ...கடைசில யாருமே தண்ணீ பிடிக்க மாட்டங்க .கார்பரேசன் காரன் தண்ணீய நிறுத்திடுவான்...
கோவப் பட்டாதான் ஆம்பள .ஒத்துக்குறேன் . ஆனால் கோவப் படும் இடத்துல  எவன் கோவப் படமா இருக்கானோ  .அவன் மேல எனக்கே கோவம் வரும் .....என்ன பொருத்தவரைக்கும் ...நாம் எல்லாரிடமும் அன்பாக பேசுவோம் எதுக்கு எடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விளுகுறது நல்லாவா  இருக்கு. ..போகும் பொழுது என்னத்த கொண்டு போக போறோம் அன்பாக பேச பழகுவோம் நண்பர்களே !!! நம்முடைய மனச அன்பால பூட்டுங்க அதுவே போதும் நமக்குள்ள இருக்குற மிருகம் வெளிய போய்டும் ..நாம் கோவம் படும் பொழுது நமது முகத்தை நாமே கண்ணாடியில் பார்த்தால் போதும்  நமக்கு நம்மையே பிடிக்காது  ....அன்பை பற்றி  திருவள்ளுவர் அழகாக கூறியிருக்கிறார் 

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.....

    மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.....அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

    அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்....

அன்பை பற்றி வள்ளுவர் எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார் பார்த்திங்களா அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் பொருத்திய வீனா போன உடம்பு ஆகும்னு சொல்றாரு ...எதுக்குப்பா கோவம் படனும் அன்பாக இருங்களே வாழ்க்கை நல்ல இருக்கும் இந்த டையலாக் நான் சொல்றது ..கோவம் வரணும் அதுவும் காரணமான கோவமாக இருக்கணும் அப்படி காரணமாக வந்த கோவம் கூட நிலைக்ககூடது ...மறந்தரனும் ..யாரவது அப்படி பண்றோமா கிடையாது...யார்மேலாவது கோவத்தோடு பேசிட்டோயமையானால் .அதை மறந்து பழையபடி இருக்க்கனும் .அப்படி யார் இருக்காங்க  அதுவும் கிடையாது .இத பற்றி நம்ம நபி[ஸல்] அழகாக கூறியிருக்கிறார் 

 ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்...புகாரி .6076இஸ்லாத்தில் அன்பு காட்டுவதில் சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் மனஸ்தாபம் கொண்டு மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது  அனுமதி இல்லாதது..என்று நபி[ஸல்] அவர்கள் உறுதியாக கூறுகிறார்கள் .....ஆனால் நாம் எல்லார்கிட்டயும் சண்ட போடுறோம் ........நம்மை மாற்ற ஒருவர் நபரால்  தான் முடியும் அந்த நபர் நாம் தான்......
நன்றி ! நண்பர்களே என்றும் உங்கள் நட்புடன் >>>>ரினாஸ்<<<<
Thursday, 11 October 2012

என்னால் சங்கடபட்டவர்கள் .என்னாலயே சிரியுங்கள் ..நான் இந்த இணையத்தில்[blog ] கடைசியாக ....ஒரு பதிப்பை பகிர்ந்து இருந்தேன் .அது என்ன என்றால் . என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்! என்ற தலைப்பில் எல்லா நண்பர்களிடமும் பகிர்ந்து இருந்தேன் இதை படித்த நண்பர்கள் பல நபர்கள் .இந்த இணையத்தில் அவர்களால் கமன்ட் குடுக்க முடியாமல் .என்னுடைய பேஸ்புக்[facebook ] இணையத்திலும். என்னுடைய மின்னஞ்சலிலும்[email ] தொடர்பு கொண்டு . என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்! என்ற பதிப்பை பற்றி நிறைய பேசினார்கள் இந்த பதிப்பின் மூலம் நிறைய நபர்கள் .தன் குடும்பத்தை நினைத்து அழுதார்களாம் .அவர்களின் மலரும் நினைவுகள் அவர்களின் கண்முன் வந்ததாம் . தன குடும்பத்தைவிட்டு பிரிந்து வெளிநாட்டில் வேலை பாக்கும் .நபர்கள் அதிகமாக தங்களின் அப்பா அம்மா வை மிகவும் தொலைத்தவர்களாக .இருக்கிரார்கலம் ..இப்படி ஒவ்வொருவரும் தங்களின் ஆதங்கத்தை கூறினார்கள் .நான் போட்ட கடைசி பதிப்பினால்.இவர்கள் அனைவரும் மனது அளவில் பாதித்துல்லார்கள்.எனது வாழ்க்கை மிகவும் சோகமான வாழ்க்கை என்று அனைவரும் நினைத்து இருப்பார்கள் .ஆனால் அது தவறு மிகவும் காமடியான கலகலப்பு உள்ள வாழ்க்கை என்பதை .நான் என்னுடைய வாழ்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . இந்த நிகழ்ச்சி ஏற்க்கனவே நான் இந்த இணையத்தில் பகிர்ந்ததுதான் .நினைவூட்ட வந்துள்ளேன் . என்னால்  சங்கடபட்டவர்கள் .என்னாலயே சிரியுங்கள் ........என் வாழ்கையில் நடந்த ஒரு சிரிப்பான நிகழ்வு இதோ உங்களுக்காக .....
நான் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது என்னுடைய
பக்கத்து வகுப்பு என்சீசீ ல இருக்குற பொண்ணுகளை ஒரு கிராமத்துக்கு சேவை பண்ணுவதற்காக அழைத்து சென்றார்கள் அவர்களுக்கு என்னை காவலனாக அனுப்ப எங்க பள்ளி தலைமை ஆசிரியர் முடிவு பன்னுனாக ....அப்ப நானும் அந்த பொண்ணுகளும் புறப்பட்டோம்

அப்பொழுது எனக்குள்ளே என்னையும் அறியாத ஒரு இன்பம் இருக்கத்தானே செய்யும் என்னை சுற்றி பத்து பெண்கள் அப்படியே என் மனசு ரக்ககட்டி பறக்குது ....


அந்த கிராமத்துல சேவை பண்ணிமுடுச்ச பிறகு ..அந்த பெண்கள் எல்லாம் பந்தல் போட்டு அந்த பந்தளுக்குள்ள ஒய்வு எடுத்துகொண்டு இருந்தார்கள் அப்பொழுது அவர்களுக்கு காவலனாக நான் வெளிய உட்கார்ந்து கனவு கண்டு   கொண்டு இருந்தேன் .....
அப்பொழுது திடிருன்னு பெண்கள் எல்லோரும் சத்தம் போட்டு என்னை நோக்கி ஓடிவந்தார்கள் அப்படியே நான் சாக் ஆயுட்டேன் தெரியுமா அந்த பெண்கள் எல்லோரும் என்னுடைய கையே பிடுத்து ரினாஸ் என்ன காப்பாத்து ரினாஸ் என்ன காப்பதுன்னு சொன்னாங்க ....


எனக்கு ஒன்னுமே புரியல அப்படியே நான் கொஞ்சம் நேரம் மெளனமாக இருந்தேன்....திடிருன்னு அந்த பொண்ணுங்க என்ன தூக்கி கொண்டு அந்த பந்தளுக்குள்ள கொண்டு போய் போட்டார்கள் அந்த பத்துபொன்னுகளும் என்னை சுற்றி எங்களை காப்பது ரினாஷ் ..என்று கதருனார்கள் நான் அவர்களை நோக்கி என்ன ப்ராப்ளம் என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் கூறினார்கள் அங்க பாரு அந்த பெட்டிக்கு அருகில் பாம்பு என்று கூறினார்கள் 


.....நான் பல்லியை பார்த்தாலே பயபுடுவேன் ..பாம்புனா சொல்லவா வேணும் ...இருந்தாலும் அந்த பொண்ணுங்க முன்னாடி பயத்த காட்ட கூடாதுன்னு நினைச்சேன் அப்படியே ஒரு ஹீரோ மாதிரி என் முகத்த அவுங்க முன்னாடி காட்டினேன்..


ஆனா நான் மனசுல மிகவும் பயந்துகொண்டு பீதி யாகி ...பேதி ஆகல அவ்வளவுதான் அப்படி பயந்தேன் .........அப்படியே ஒரு கம்பு எடுத்து அந்த பாம்பு பக்கத்துல போய் அல்லாஹு என்ன காப்பதுன்னு சொல்லி ஓங்கி ஒரு அடி குடுத்தேன் 


ஆனா பாம்பு அசையவே இல்ல நானும் அந்த பாம்பு நல்ல தூங்குதுன்னு நினச்சு மறுபடியும் ஓங்கி ஒரு அடிகுடுத்தேன் அப்பவும் அந்த பாம்பு அசையவே இல்ல மறுபடியும் அல்லாஹுனு நினச்சு ஒரு அடி குடுத்தேன் அப்பவும் பாம்பு அசையவே இல்ல ..........பின்பு தான் தெருன்சது அது ஏற்க்கனவே செத்து போன பாம்புனு ......


அது அந்த பொண்ணுகளுக்கு தெருஞ்சு போச்சு என்ன கிண்டல் பண்ணி சிருச்சாங்க எனக்கு ரொம்பவே அசிங்கமாக போச்சு ...வெளிய காட்டிக்காம அப்படியா கெத்தா வந்தேன் ஆனால் அந்த பொண்ணுக பள்ளியில் போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டாங்க எல்லாத்துக்கும் நான் அசிங்கம் பட்டது தெருஞ்சு போச்சு அப்ப இருந்து செத்த பாம்ப அடுச்சவனு சொல்ல ஆரம்புசுட்டங்க ..இது என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் ஆகும் இப்ப இத நினைக்குபொழுது எனக்கு சிரிப்புதான் வருது..........................
இப்ப அனைவரும் சந்தோசமாக இருப்பிர்கள் என்று நம்புகிறேன் நன்றி அடுத்த பதிப்பில் சந்த்திப்போம் .இப்படிக்கு உங்கள் அன்பான நண்பன் >>>>ரினாஸ்<<<<


Tuesday, 9 October 2012

என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்!


என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்!

எனக்கு சிறுவயதில் இருந்து சளி தொந்தரவு இருந்துச்சு ...இதனாலயே நான் ஒரு வாரத்துக்கு ஒருமுறைதான் தலைக்கு குளிப்பேன் . சில சமயம் ஒருமாதம் வரைக்கும் குளிக்காமல் இருந்து இருக்கின்றேன் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது இந்த சளி அதிகமாக எனக்கு தொந்தரவு குடுக்க ஆரம்பித்தது  அது அப்படியேமுற்றி போய் ஒரு கட்டத்துல எனக்கு ஆஸ்துமா தொற்றிகொண்டது .


ஆஸ்துமா வந்தால் என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும் .சுவாசம் விட மிக சிரமமாக இருக்கும். தூங்குவதற்கு மிக சிரமமாக இருக்கும்..ஆனால் நான் கவலை படவில்லை என்னை விட என் தந்தைதான் கவலை பட்டார் .என் மகனுக்கு இந்த மாறி நோய வந்த்ருச்சுனு ..எல்லாம் மருத்துவமனைக்கும் கொண்டு போய் சிகிச்சை பார்த்தால் காலம் பூர மாத்திரை சாப்பிடனும் ...மாத்திர சாப்பிட்டால் தான்  உங்க பையன் நலமாக வாழ்வான் என்று மருத்துவர்கள் மேலும் மேலும் என் தந்தைக்கு கவலை ஏற்பட செய்தார்கள் ..

ஆனால் எனக்கு ஜாலியாக இருந்தது ஏன் தெரியுமா ? அப்பத்தான் பள்ளிக்கு போகாமல் வீட்டில் உட்கார்ந்து விளையாட முடியும் ....அப்படியே ஒரு நான்கு வருஷம் போச்சு என் கூட நெருங்கிய நண்பனாக மாறியது ஆஸ்துமா.எனக்கு பழகி விட்டது..இந்த நான்கு வருஷத்தில் எனக்குள்  வந்த இந்த நெருங்கிய நண்பன் ஆஸ்துமாவ என்ன விட்டு விரட்ட என் தந்தை.  எல்லா விதமான மருத்துவர்கல்கிட்டையும்  சென்று மருந்து வாங்கி கொண்டு வந்தார் .அதில்  சித்த மருத்துவம் .ஆய்ர்வேதிக் இப்படி சொல்லி கொண்டே போகலாம் ..சித்த மருத்துவரிடம் நானும் என் தந்தையும் சென்றோம் அவர் உங்க பையனுக்கு நான் குணம் ஆக்கி தருகின்றேன் .என்று கூறி ஒரு மருந்தை தந்தார் .இந்த மருந்தை நீங்க ஒரு மூணு மாத காலம் சாப்பிடனும் இந்த மருந்து சாப்பிடும் பொழுது இந்த மூணு மாதத்தில் .நீங்கள் மாமிசம் சாப்பிட கூடாது .வெறும் காய் கறிகளை மட்டும் சாப்பிடனும் அப்பததான் இந்த ஆஸ்துமா குணமாகும் .என்று கூறினார் இந்த மருந்துக்கு ரூபாய் 5000 ...ஆகும் என்றார் அப்பொழுது என் தந்தையிடம் பணம் இல்லை 3000 .ருபாய் மட்டுமே என் தந்தையிடம் இருந்தது .உடனே வீட்டுக்கு சென்ற அவர் எங்க அம்மா கையில் அணிந்து இருந்த தங்கம் வளையல்களை எனக்காக .வாங்கி கொண்டு அதனை வங்கியில் விற்று பணம் வாங்கி கொண்டு வந்தார் .பின்பு அந்த வைத்தியரிடம் அந்த மருந்தை வாங்கி கொண்டு வந்தார் .அந்த மூன்று மாதத்தில் எனக்காக எங்க வீட்டில் யாருமே கரி மீன் சாப்பிடுவது இல்லை .நான் கூறினேன் என் தந்தையிடம் நீங்க அனைவரும் .கரி மீன் சாப்புடுங்க எனக்காக நீங்க ஏன் சாப்பிடாமே இருக்கணும்னு கூறினேன் .அதற்க்கு என் தந்தை கூறினார் உன்னை பார்க்க வெய்த்து. எங்களுக்கு அந்த இறைச்சி முக்கியம் இல்லை .என் மகன் சாப்டாம இருக்கும் பொழுது எங்களுக்கு எதுக்கு அந்த கரி மீன் .என்று கூறினார் .எனக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது ....

மூன்று மாதமும் கழிந்தது ஆனால் என்னை விட்டு .என் நண்பன் ஆஸ்துமாவுக்கு போக மனம் இல்லை ....என் தந்தையின் முகத்தில் வாட்டம் அப்படியே நான் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதியில் இருகின்றேன் .ஒரு பக்கம் படிப்பு மறு பக்கம் என் நண்பனின் தொந்தரவு .என் நண்பனால் என்னால் படிக்க முடியவில்லை.......


ஒருநாள் என் தந்தைக்கு தொலைபேசியின் மூலம் அவர் நண்பர் அழைத்தார் ...அழைத்தவர் என்னை பற்றி பேச அழைத்தார் .இந்த மாறி மருதமலை பக்கத்தில் ஒரு இயற்கை வைத்திய சாலை இருக்கிறது , அங்கு போய் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தால் .உன்மகனுக்கு இருக்குற ஆஸ்த்துமா .குணம் ஆகும் என்று கூறினார் .... என் தந்தைக்கு மகிழ்ச்சி எவ்வளவோ பாத்தாச்சு இதையும் பார்ப்போம் என்றார் .

அப்படியே மருதமலை பக்கத்தில் இருக்கும் அந்த இயற்கை வைத்தியசாலைக்கு சென்றோம் ...அங்கு உள்ள மருத்துவர் என்னை பரிசோதனை செய்து பார்த்தார் . பார்த்தவர் .என் தந்தையிடம் கூறினார் ,இங்கு ஒரு வாரம் உங்களின் மகனை விட்டு செல்லுங்கள்...நாங்கள் இங்கயே தங்க வெயத்து .சில மூலிகை எல்லாம் உன்ன குடுப்போம் ..இந்த ஒரு வாரதிலயே உங்க மகனுக்கு குணம் ஆயிடும் ,என்று கூறியவர் இதற்க்கு ருபாய் 15000 ..செலவாகும் ஏன் என்றால் தங்கும் இடம் மூன்று நேரம் உணவு .இதற்க்கு எல்லாம் சேர்த்துதான் ருபாய் 15000 ..ஆகும் என்றார் .

என் தந்தையின் முகத்தில் மகிழ்ச்சி ..என் மகனுக்கு சரியாகி விடும் என்று ..ஆனால் ஒரு பக்கம் சோகம் 15000 ..ரூபாய்க்கு எங்க போறது .வீட்டில் ஏதேனும் வளையல் செயின் ஏதாவது வெய்த்து காசு வாங்குவோம் என்றால் வீட்டில் .ஒரு கிராம் தங்கம் கூட இல்லை ...அப்படியே என் தந்தையின் முகத்தில் சோகம் ...நான் அவரின் கண்களை கண்ணீருடன் பார்த்தேன்...

பின்பு எனக்காக கடனை வாங்கி வந்தார் ..அந்த இயற்கை வெய்திய சாலையில் என்னை அழைத்து சென்றார் ..ஆனால் எனக்கோ அங்க செல்ல மணம் இல்லை ஒருவாரம் எப்படி என் தந்தையை விட்டு இருப்பது என்று .அவருக்கும் சங்கடம்தான் எப்படி ஒரு வாரம் என்னை விட்டு இருப்பது என்று ...அப்படியே எனக்காக வாங்கின அந்த ருபாய் 15000 ....அந்த மருத்துவரிடம் குடுத்து என்னை அங்கே விட்டு சென்றார் ..சோகத்துடன் நானும் என் தந்தையும் அங்கே பிரிந்தோம் ....


இயற்கை வைத்திய சாலையில் முதல் நாளில் நான் என் தந்தையிடம் தொலை பேசியின் மூலம் தொடர்பு கொண்டேன் ..நானும் என் தந்தையும் பேசின உரையாடல் 


நான் ; அத்தா[அப்பா] நல்ல இருக்கியா

என் தந்தை ; நல்லா இருக்கேன் பா நீ எப்படி இருக்க உனக்கு அந்த இடம் பிடுச்சு இருக்கா ?

நான் : ம்ம்ம் பிடுச்சு இருக்குப்பா..எனக்கு நைட்  தூக்கம் வர மாட்டிங்குதுப்பா .அதனால என்னுடைய அந்த சின்ன ரேடியோ எடுத்துட்டு வாதா[வாபா] 

என் தந்தை :  ம்ம்ம் கண்டிப்பா  வருகிறேன் இன்று இரவு நானும் உன் அம்மாவும் வரோம் .அப்படியே உன்ன பாத்துட்டு .அந்த ரேடியாவ தரேன் ஓகே 

நான் ; ஓகே தா[பா] சரி வெக்குறேன் ......என்னை பார்பதற்கு என் தந்தையும் என் அம்மாவும் வந்தார்கள் ..வந்தவுடன் என் தந்தை என்னை கட்டி தழுவி முத்தம் இட்டார் என் அம்மாவும் கண்ணீர் விட்டார்கள் ..பையன் தனியாக இருக்கிறானே என்று அப்படி கொஞ்சம் நேரம் என்னிடம் பேசி விட்டு எனக்காக கொண்டு வந்த .ரேடியோ வ தந்தார்கள் .தந்து விட்டு என் தந்தை நான் நாளைக்கு இரவு வருகின்றேன் பார்த்து இருந்து கொள் என்று கூறி விட்டு சென்றனர் .

இரவு பத்து ஆச்சு எனக்கு தூக்கமே வரலை ...இரவு பன்னிரண்டு ஆச்சு அப்பவும் தூக்கமே எனக்கு வரல அந்த இரவு எனக்கு என்னுடைய வலது கை வலிக்க ஆரம்பித்தது ..நான் துடித்தேன் வலி தாங்க முடியாமல் ....எனக்கு எப்போதும் இந்த மாறி நடந்தது இல்லை . ஆனால் அன்று இரவு ஏதோ எனக்குள் ஒரு மாற்றம் . என்னுடைய வலது கையை அருவாளால் வெட்டினால் எப்படி இருக்குமோ அந்த மாறி மரண வேதனை என் அருகில் உறங்கி கொண்டு இருந்தவர்கள் .என்னுடைய சத்தம் தாங்க முடியாமல் எழுந்தனர் .எல்லோரும் என்னுடைய கையை அமுக்கி ஒன்னும் இல்ல தம்பி தூங்கு தூங்கு என்று கூறி என்னை சமாதானம் செய்தார்கள் .ஆனாலும் வலி விட்ட பாடு இல்லை .இரவு முழுக்க ஒரே அழுகையாக  இருந்தேன் வலி தாங்க முடியாமல் ..பொழுதும் விடிந்தது காலையில் வழக்கம் போல் எல்லோரும் அவர் அவர் வேலையை பார்த்தார்கள் ...எனக்கு ட்ரீட் மென்ட் சற்று நேரத்தில் நடக்க  இருக்கிறது ..அங்கு இருந்தவர்கள் கேட்டார்கள் .தம்பி இப்ப பரவாலய உனது கை வலி ..என்று அக்கறையாக விசாரித்தார்கள் ..சரி நமது கை வழியை பற்றி தந்தையிடம் கூறுவோமே என்று நினைத்து .என்னுடைய மொபைல் எடுத்து என் தந்தைக்கு அழைத்தேன் ..ஆனால் தந்தையின் தொலை பேசி அனைத்து வெய்க்கபட்டுள்ளது ...

எனக்கு ஒன்னுமே புரியல சரி அம்மாவோட மொபைல்க்கு  கூபிடுவோம்னு .அந்த மொபைல்க்கும் கூப்டேன் அதுவும் அனைத்து வெய்க்க பட்டது .சரி பேசாமே இருந்தேன் ..திடிரென்று பார்த்தால் என்னுடைய பெரியப்பா பையன் எங்க அண்ணன் என்னை பார்க்க இயற்கை வைத்திய சாலைக்கு வந்து இருந்தார் .புன்னகையுடன் அவரை வரவழைத்தேன்  ...வந்தவர் என்னிடம் கூறினார் .

நேற்று உங்கப்பா உன்ன பாக்க இங்க வந்துட்டு சென்ற போது ..வண்டியில் போகும் பொழுது ஒரு நாய் குறுக்க வந்துருச்சு ,அதனால தடம் புரண்டு விளுந்துட்டாறு  .பயப்படதே அம்மாக்கு ஒன்னும் ஆகலே .ஆனால் அப்பாக்கு வலது கை உடைந்து விட்டது என்றார்  ...மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்காரு ஆபேரசன் முடிந்து விட்டது .வலது கையில் கட்டு போட்டு இருக்காங்க .ஒரு நாற்பது நாளில் சரியாகி விடும்னு ..சொன்னார் ..அப்படியே என்னையையும் அறியாமல் சத்தம் மிட்டு அழுதேன் ...

அங்கே என் தந்தைக்கு வலது கையில் விபத்து ஆனால் .என் தந்தை அனுபவித்த வழியை அதே இரவு நான் அணுபவித்தேன்.... என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்!..என்று எனக்கு நினைக்கும் பொழுது. இந்த  நாள் தான் என் கண்முன் வருகிறது ..

நன்றி ! நட்புடன் உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<