Tuesday 8 January 2013

இன்று ஒரு சம்பவம்...




இன்று நான் வேலை பார்க்கும் ஷாப்பிங் மாலில் கூட்டமே இல்லை 
காத்துவாங்கி கொண்டு இருந்தது .....
சரி எவ்வளவு  நேரம் தான்  இப்படி சும்மாவே இருப்பது.. பேசுவதற்கு  யாராவது   வருவாங்களான்னு பார்த்துக்கொண்டு  இருந்தேன் ...........



உடனே ஒருவன் வந்தான் ???

அட அட அட அட  செமா மகிழ்ச்சி ....நானும் அவரை  அன்பாக பார்த்து  வாங்க வாங்கன்னு வரவழைத்தேன் ..




வந்தவன் சற்று நல்ல டிப்டாப்பாக அதாவது மொழு மொழுன்னு சேவிங் பண்ணி    ஜென்டில் மேன் லுக்காக அதாவது மெடிக்கல் ரெப் வருவார்கள் அல்லவா  அந்த மாறி இருந்தான் .  

அப்பவே எனக்கு தெரிஞ்சது  ..இவன் எதையோ நம்ம கிட்ட மண்டையை கழுவி விற்க வந்து இருக்கிறான் போல என்று .அவன் மார்க்கெட்டிங் சேல்ஸ் மேன் ...

வந்தவனும் நானும் பேசியவை >>>>>>>>>





வந்தவன் :  குட் மார்னிங் சார் 

நான்; ம்ம்ம்ம்ம்ம் குட் மார்னிங் வாங்க வாங்க 

வந்தவன் ; சார் நான் மேக்ஸ் எல் ஐ சி இன்சூரன்ஸ் கம்பனில இருந்து வருகிறேன் 

நான் ; ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்டியா  வெரி குட  வாங்க வாங்க  

வந்தவன் ; நீங்கள் எதாவது இன்சூரன்ஸ்  போட்டு இருக்கீங்களா ?

நான் ; ம்ம்ம்ம்ம் போட்டு இருக்கேனே !!!!!!

வந்தவன் ; ம்ம் குட் சார் என்ன பிளான் ?

நான் ; என்னுடைய டூ வீலருக்கு இன்சூரன்ஸ் போட்டு இருக்கேன் ...

வந்தவன் : ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது சரி ....சார் உங்களுக்கு எவ்வளவு வயது ஆகுது 

நான் ; எனக்கு இப்ப 24 வயது நடக்குது 

வந்தவன் ; சார் என்னிடம் இப்ப சூப்பர் பிளான் இருக்கிறது ?

நான் ; என்ன அது ????????? 

வந்தவன் ;  25 வயதுகுள்ள இளைஞர்களுக்கு  லைப் இன்சூரன்ஸ்  மாதம்  மாதம் வெறும் 720 ரூபாய் கட்டினால் போதும் ..வருடம் 8640 ரூபாய் ஆகும் ..நீங்கள் ஐந்து வருடம் கட்டினால் 43,200 ரூபாய் ..நீங்கள் கட்டுவீர்கள் ..ஆனால் நாங்களோ அந்த ஐந்து வருடத்தில் நீங்கள் கட்டின அந்த 43, 200 ரூபாய்க்கு கூடுதல் பணமாக 2,15000 ரூபாய் தருவோம் ..இது  இளைஞர்களுக்கு மட்டும் தான் இந்த பிளான் சார் . மிஸ் பண்ணிடாதிங்க சார் ........

நான் : அப்படியே வாயை பொழந்து அவனையே பாத்துட்டு இருந்தேன் வெறும்  43, 200 ரூபாய் கட்டினால் ,2,15000 ரூபாவா ? அங்கே எனக்கு வட்டி என்ற எண்ணம் ஏதும் வரவில்லை ..இந்த ஜென்டில் மேன் என் மனசை குழப்பி விட்டாரு ..அப்படியே சைத்தானும் வட்டியை வாங்க .என்னை ஊக்கபடுத்தி கொண்டே இருந்தது ......நான் மறுபடியும் வாயை பொலந்து  அவன்கிட்ட ..இவ்வளவுதான் ஆப்பரா வேற இன்னும் பூஸ்ட் தர மாறி ஏதாவது ஆப்பர் இருக்கா என்றேன் ....உடனே 

வந்தவன் ; பலத்த குரலில் ஓஹோ இருக்குதே சார் 

நான் : மகிழ்ச்சியோட ...இருக்கா அது என்ன ஆப்பர் ? என்ற சப்தத்துடன் 

வந்தவன் : நீங்கள் இன்று வெறும் 720 ரூபாய் குடுத்து இந்த பிளானை போட்டிங்கன்னா ?

நான் ;  மகிழ்ச்சியோடு ம்ம்ம்ம் போட்டுட்டேனா... ?

வந்தவன் ;உங்களுக்கு 25 வயது ஆகுவதற்குள் 

நான் ; ம்ம்ம்ம்ம்  எனக்கு 25 வயது ஆகுவதற்குள்  

வந்தவன் ; திடீர்ன்னு  ...நீங்கள் வண்டியில் போகும் பொழுது ஒரு லாரியோ பஸ்ஸோ உங்க மேல ஏறி நீங்க செத்துபோய்ட்டா   குறைந்த வயதில்  பெரும் விபத்துக்குள் ஆனதால். உங்கள்  குடும்பத்திற்கு. .3,50.000 கொடுக்கப்படும்  சார் ..எப்புடி  சூப்பர் ப்ளான் ..ஓகேவா? சார் .எப்புடி ஆப்பர் நல்ல சூப்பரா? பூஸ்ட் தர மாறி இருந்துச்சுல சார்  .....உங்க நேம் சொல்லுங்க இந்த பிளானை புக்  பண்றேன் 

நான் ; அப்படியே ஓடி போய்டு ....அல்லாஹு போர் அடிக்குது கொஞ்சம் மொக்க போடலான்னு நினைத்தால் ..கொய்யால லாரி ஏறிடும் பஸ்ஸு ஏரிடும்னா சொல்றா ....போயா வெளியே .......................






இன்சூரன்சில் வேலை பார்பவர்கள் இந்த பதிவை  படித்தீர்கள் என்றால் 

...அவர்களுக்கு என்னுடைய மெசேஜ் ..நீங்க யாரிடமோ இன்சூரன்ஸ் பற்றி  பேசும் பொழுது .நல்ல தெளிவாக நட்பு ரீதியாக ...உண்மையான பிளேனாக  இருந்தால் பேசுங்க அத விட்டுபுட்டு ..நீங்க செத்த பிறகு ..உங்களுக்கு அவ்வளவு  பணம் வரும் இவ்வளவு பணம் வரும் என்று சொல்லும் பொழுது .இன்சூரன்ஸ் போடலான்னு நினைக்குற நபர்கள் கூட போடவேண்டாம்னு தயங்குவார்கள் .ஏன் என்றால் இன்சூரன்ஸ்  போட்டு அடுத்த நாளிலே .நம்ம இறந்து   போய்டுவோமோ என்ற தயக்கம் ..ஒரு சிலருக்கு வரும் ....சோ இன்சூரன்ஸ் பற்றி பேசும் பொழுது மரணம் பற்றி பேசாமல் .சார் உங்களுக்கு அப்பறம் இந்த பணம் உங்க குடும்பத்துக்கு  வரும் சார் அப்படின்னு சொல்லி பாருங்க ?

                                                  நன்றி ...
                                            அன்புடன் உங்கள் ரினால் 








6 comments:

  1. நானும் இந்த மாதிரி ஆட்களை சந்தித்ததுன்டு!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ ???

      Delete
  2. யப்பா...சரி காமெடி.... அவர் சொன்னது கேட்க எனக்கே பகீர்னு இருந்துச்சு..... அப்புறம் நீங்க வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டது நினைத்து சரியான சிரிப்பு..... :)

    ReplyDelete
  3. இதை இஸ்லாம் அடியோடு மறுக்கிறதல்லவா !!

    ReplyDelete
    Replies
    1. ம் ம்ம் ஆமாம் சகோ ...இதுவும் வட்டி சம்பந்தம் தானே

      Delete