Follow by Email

Wednesday, 28 November 2012

நான் கோயம்புத்தூர்காரங்கோ நீங்க ?


                                                      எங்க கோயம்புத்தூர் ரயில் நிலையம் 

தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை; 
மதுரையைக் கடக்கிறது வைகை; 
நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி; 
தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது; 
திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது;
 என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.

வற்றாத ஒரு நதியுமில்லை; வானளாவிய ஒரு கோவிலுமில்லை; இதிகாசத்திலே இடமுமில்லை; எந்த அரசும் இந்நகரைக்[கோயம்புத்தூர்] கவனிப்பதுமில்லை; இன்னும் சொல்ல வேண்டுமானால் , 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.
தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக்[சென்னை] கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார். இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை; ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?
விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன; ஆனால்,

எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.
சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம். மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம். கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம். வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது. எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.
பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை. உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...
அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான். எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.
இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது


 கோவையை மேலும் அழகாக காட்டுகிறது  உலகமக்களை  ருசிக்க தூண்டும்   
சிறுவாணி ; 
மரியாதைக்குரிய கொங்குத் தமிழ், 

அத்துப்படியான
ஆங்கிலம், 

இதமான
காலநிலை, 
அதிரடியில்லாத அரசியல்... இவற்றையெல்லாம் தாண்டி, அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து  உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.
புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி பீடு நடை போடுகிறது. அதைக்கொண்டாட வேண்டிய அழகான ஊர் . என்ர ஊரு கோயமுத்தூருங்கோ! ............................ நன்றி இனி அடுத்து கோவையை பற்றி என் முகம் அறியாத கோவை நண்பன் அருமையான முறையில் இயக்கிய பாடலை கீழ பகிர்ந்து இருக்கின்றேன் அதையும் பார்த்து ரசியுங்கள் நன்றி இப்படிக்கும் உங்கள் கோவை நண்பன் >>>>ரினாஸ்<<<< 

.Tuesday, 27 November 2012

மறக்க முடியாத சம்பவம்....நிஜ சம்பவங்களின் நிழலாக அமைந்து உலக மக்களிடையே பெரும் கொதிப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய புகைப்படங்களை இங்கே அதன் சம்பவங்களோடு காண்போம்................................

        
 innocence of muslims இறைத்தூதர் நபி[ஸல்]அவர்களை இழிவு படுத்தும் வகையில்  சித்தரித்து எடுக்கப்பட்ட குறும்படம்  தான் innocence of muslims .இந்த திரைப்படத்தை உலக முஸ்லிம் மக்கள் அனைவரும் எதிர்த்தனர் ........உலகில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றிகை இட்டு அவர் அவர் எதிர்ப்பை தெரிவித்தனர் .....

உலகை ஸ்தம்பிக்க வைத்த மாவீரனின் மரணம் !

சேகுவேரா என்ற மனிதன் எங்கெங்கோ உள்ள உலக இளைஞர்களின் ஆடைகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் 'எல்லா நாடும் என் தாய் நாடே..  அநியாயங்களைக் கண்டு நீங்கள் பொங்கினால் நானும் உங்கள் தோழனே 'என்ற சே'வின்  தாழாத மனித குணத்தால் தான். அக்டோபர் 9 ம் தேதி அவர் சுட்டக்கொல்லப்பட்ட பின்னர்  உலக நாளேடுகளில் யாவும் தவறாமல் சே'வின் மரணப்படத்தையே தம் முகப்பில் வைத்து அஞ்சலி செலுத்தியது.

போரை நிறுத்திய சிறுமியின் கதறல் !

ஜூன் 8,1972. வியட்நாம் போரில் கடுமையான தாக்குதல் நடந்த கொண்டிருந்த போது 'ட்ராங் பாங்' என்ற பகுதியில் குண்டு வெடிக்கையில், அதிலிருந்து தப்பி வந்தவளாய் கிம் புக் என்ற சிறுமி நிர்வாண கோலத்தில் கதறிக்கொண்டே ஓடி வர, அப்படமே அப்போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்த காரணமாயிற்று.   

வறுமை உடலை கொத்த நின்ற கழுகு

1994-ம் ஆண்டு சூடானின் கடுமையான வறுமையில் மக்கள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 'சாக இருந்த குழந்தையை கொத்திச் சென்றிட காத்திருக்கும் கழுகை' ஒரு புகைப்படம் எடுத்தார் கெவின் கார்டர் என்னும் புகைப்படக்காரர். இன்றும் வறுமை என்றால் இப்படத்தை தான் உதாரணம் காட்டுவார்கள். புகைப்படம் எடுத்த நேரம் பசியில் தவித்த குழந்தையை காப்பாற்றி இருக்கலாமே' என்ற சர்ச்சை எழ, பின்னாளில் குற்ற உணர்வால் கெவின் கார்டர் தற்கொலை செய்து கொண்டார்.


கற்பிழந்த இந்திய ஆர்மி !


மணிப்பூர் பெண்களை இந்திய ராணுவப் படை கற்பழித்தது என்று மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம் நடத்தினர். இது போல் எந்தவொரு தேசத்திலும் நடந்தது இல்லை. இந்த போராட்டம் இந்திய ராணுவத்தை உலக அரங்கில் கற்பிழக்க செய்தது...


பிரபாகரன் இல்லை !

"பிரபாகரன் இல்லை..  இல்லை.. ஆனால் பிரபாகரன் தான்" என்று இலங்கை அரசு  காட்டிய பிரபாகரனின் மரணப் புகைப்படம்  வெளிவந்த நிமிடம் பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியது. சர்வதேச ஊடகங்கள் அப்புகைப்படத்தின் மீதான ஆய்வை நடத்தின. இதுவரை அதை பற்றிய தெளிவான தகவல் இல்லை.

ஆப்கானை தகர்க்கும் அமெரிக்க உடைப்பு !


செப்டம்பர் 11,2001 சர்வதேச தீவிரவாதத்தின் மீதான பார்வை உக்கிரமான நாள். அன்று தான் உலக வர்த்தக மையமாக கருதப்படும் 'ட்வின் டவர்ஸ்' மீது அல்கொய்தா இயக்கம் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அது அமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்த சில நாட்களுக்கு அந்த புகைப்படமே உலக ஏடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்தன.  அன்று ஆடிப்போன அமெரிக்கா, பின்லேடனை கொன்றதோடு, இன்று வரை ஆப்கானையும் அம்மக்களையும் மெல்ல மெல்ல தகர்த்து கொண்டிருக்கிறது.

நெஞ்சில் புதைந்த அணுக்குண்டு


இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுக்குண்டே உலகில் அணுக்குண்டால் ஏற்பட்ட முதல் தாக்கம். அந்த அணுவின் விஷம் அம்மக்களை பலவாறு பாதித்தது. கருவை அழித்தது, ஊனமாக பிறக்க வைத்தது, தோலை கருக்கியது, கதிர்வீச்சு நோய்களை உண்டாக்கியது. இந்த அணுக்குண்டு வீசப்பட்ட காட்சி ஒவ்வொரு ஜப்பானியன் நெஞ்சிலும் இடம் பெற்றிருக்கும். அணுக்குண்டு என்றுமே ஆபத்தானது என்பதை இப்புகைப்படம் தன்னுள் எப்போதும் புதைத்திருக்கும்.........
    ஒசாமா பின்லேடன்...........

ஒசாமா பின்லேடன் 2011 மே முதல் நாள் நள்ளிரவில் பாக்கிஸ்தானில் அபோதாபாத்தில் அவர் தங்கியிருந்த வீட்டில் அமெரிக்காவின் அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்....பின்னர் அங்கிருந்து அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்டது...என்பத குறிப்பிட தக்கது ..


கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து 
கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து என்பது 2004, சூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தைப் பற்றியது. இவ்விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர. இறந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்களாவர். 18 நபர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. இத்தீவிபத்து மதிய உணவு தயாரிக்கும்போது ஏற்பட்டது..... சுனாமி ஆழிப்பேரலை 26-12-2004 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமி ஆழிப்பேரலை ..உலகத்தையே திருப்பி போட்டது .பல மக்கள் உயிர்களையும் .உடமைகளையும் .சொந்தகளையும் இழந்து தவித்தனர் ........


      நன்றி மீண்டும் அடுத்த பதிப்புடன் சந்திக்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<.
Thursday, 22 November 2012

கோவையில் நான் கண்ட அதிசயம்ஜீரணிக்க முடியாமல் திகைத்து போய் இருக்கின்றேன் நான் ..ஏன் என்றால் நான் கண்ட காட்சி அப்படி .நீங்களும் கேட்டல்  ஆச்சரியப்படுவீர்கள்  .இதோ 
என்னுடைய பெரியத்தா[பெரியப்பா] பையன் என்னுடைய அண்ணா அவர் பெயர் சித்திக். அவருடைய மச்சானுக்கு குழைந்தை பிறந்தது ஆண் குழந்தை .பெயர் முகமது சமில் ..அவரின் குடும்பமே மகிழ்ச்சியாக இருந்தனர் .....அப்படியே காலமும் நகர்ந்தது . குழந்தைக்கு இரண்டு வயது ஆனது 
18 /11 /2012 ...ஞாயிறு அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு விட்டு குழந்தைக்கும் .பால்ஊட்டி குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு அனைவரும் உறங்கிவிட்டனர் ................
பொழுதும் விடிந்ததது ...வழக்கம் போல அனைவரும் அவர் அவர் வேலையை பார்த்தனர் ..சரி தொட்டிலில் இருக்கும் குழந்தை விடிய விடிய அழுமே ஏன் அழுகவில்லை புரியாமல் குழந்தையை போய் எடுக்க சென்றனர் ..குழந்தையின் முகத்தில் ஏதோ என்னில் அடங்காத மகிழ்ச்சி ..ஒரு புன்னகையில் குழந்தை ..சற்று கீழ குழைந்தையின் ஆண் உறுப்பில் ..சுன்னத் செய்யப்பட்டு இருந்தது யாருக்கும் ஒன்னுமே புரியல .என்ன நடந்தது ஏது நடந்தது ஒன்னுமே புரியல ....அந்த சுன்னத் பண்ணும் இடத்தில சிறுது ரத்தம் கூட இல்லை ..பொதுவாக சுன்னத் பண்ணும் பொழுது வலிக்கும் .எனக்கு ஏழுவயதில் சுன்னத் பன்னுனாக .பயங்கரமாக  வலி எடுத்துது ..அந்த சுன்னத் பண்ணுன இடத்துல காய்வதற்கு ..ஒரு ஏழு எட்டுநாள் ஆகும் .. .இப்படி இருக்கும் தருவாயில் ...அந்த குழந்தைக்கு நடுராத்திரியில் வீட்டுக்குள் வந்து யார் சுன்னத் பண்ணுனா அதுவும் சுன்னத் பண்ணும் இடத்தில சிறுது ரத்தம் கூட இல்லை ..அதுவும் குழந்தை அழுகவும் இல்லை .சாதரணமாக குழந்தைகள் கொசு  கடி என்றாலே அந்த அழுகை அழுகும் ..ஆனால் இந்த குழந்தையோ சுன்னத் பண்ணும் பொழுது ஒரு சத்தம் கூட விடலை அல்லாஹு ஒன்னுமே புரியல அதுவும் விடிய காலைல அந்த குழந்தையின் ஆண் உறுப்பு சுன்னத் பண்ணி நன்றாக காய்ந்து போய் இருக்கிறது இது எப்படி சாத்தியம் ஒரு இரவில் .காய்வது எப்புடி சாத்தியம் ...இது எங்க கோயம்புத்தூர்ல் இஸ்லாமியர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்திஉள்ளது ...... யாருக்கும் ஒன்னுமே புரியாமே சில இஸ்லாமிய மத போதகர்களிடையே போய் இது எப்புடி சாத்தியம் என்று கேட்டனர் அதற்க்கு அவர்கள் கூறினார்கள் ..இது ஜின்களின் வேலை என்று ....ஜின்கள் தான் இரவில் இந்த குழந்தைக்கு .சுன்னத் பண்ணிஇருக்கிறார்கள் .இதை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் ....அனைவரும் தொழுது அல்லாஹ்விடம் துவா[ப்ராத்தனை] கேளுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்றார் .......இந்த விஷயத்தால் அந்த குழந்தையை எல்லோரும் வியப்பாக பார்க்கிறார்கள் ..எப்புடி இது நடந்தது என்பது எனக்கும் ஒன்னுமே புரியல... இதுபத்தி இன்னும் முழு விவரம் யாருக்காவது வேணும்னா இதோ என்னுடைய மின்னஞ்சல்rinakhan786@gmail.com  இதில் வந்து என்னிடம் கேளுங்கள் நான் என்னுடைய மொபைல் நம்பர் தருகிறேன் ..அது மூலமாக இன்னும் விரிவாக  பேசுவோம் இத பத்தி ......................என்னுடைய கேள்வி என்ன வென்றால் எப்புடி இது நடந்தது ..எப்புடி பாத்தாலும் எனக்கு ஒன்னுமே புரியல உண்மையாலுமே ஜின்கல்தான் இத பண்ணி இருக்குமா ?????  எல்லாமே இறைவனின் நாட்டம் தான் ..நம் உடல் சார்ந்த விஷயம் என்பதனால்தான் இவ்வளவு வியப்பாக இருக்கிறது . குழப்பத்தில் நான் .....உங்களின் விடைக்காக காத்து இருக்கின்றேன்....நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<


Saturday, 17 November 2012

இஸ்லாமியர்களின் விளம்பரம் !!


தீபாவளிக்கு ரிலீசான ...விஜய்யின்  துப்பாக்கி படத்தில் ..இஸ்லாமியர்களை தாக்கும் விதத்தில் ஒரு காட்சி இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே ..அந்த காட்சியை தவிர்க்க  கூறி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன அல்லவா ......இதனால் விஜய்யின் வீட்டில் போலிஸ் பாதுக்காப்பு......தேசிய முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் ...பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் ..இப்படி இந்த ஒருவாரத்தில் .இந்த படத்தை பற்றி ...நடந்த விசயங்களை கூறிக்கொண்டே போகலாம் .......


என்னை பொறுத்தவரை.  எந்த வித இஸ்லாமிய அமைப்புகளும் இந்த படத்தை பற்றி எதுவுமே பேசாமல் இருந்தால் .இந்த படம் எல்லா தியேட்டர் களிலும் ..நாலு நாளில் தூக்கி இருப்பார்கள் ..படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது ......ஆனால் இந்த படத்தில் இஸ்லாமியர்களை தாக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட அந்த ஒரு காட்சியால் ..ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் கண்டனத்தால் .படத்துக்கு பெரும் விளம்பரம் கிடைத்துவிட்டது .....படமே பாக்காத இஸ்லாமியர்கள் ..இந்த படத்தை போய் பார்ப்பதை நான் பார்த்தேன் .....இஸ்லாமிய மக்கள் குடும்பம் குடும்பமாய் அப்படி இந்த படத்தில் என்னதான் .இஸ்லாமியர்களை தப்பாக சொல்லி இருக்கிறார்கள்  என்பதை தெரிந்து கொள்ள இந்த படத்தை போய் பார்க்கிறார்கள் ...ஏன் என் குடுப்பதில் கூட என் அம்மா ..என் கிட்ட கூறுகிறார்கள் ..>>>>ரினாஸ்<<<<  இந்த துப்பாக்கி படத்ததோட சி டி கேசட்டு இருந்த வாங்கி தாட ..அதுல என்னமோ நம்மள பத்தி தப்பா போட்டு இருக்காமே  .அப்படின்னு எங்கம்மா என் கிட்ட கேக்குறாங்க ..என்ன பொருத்தவரைக்கும் இஸ்லாமியர்களின் விளம்பரம் இந்த படத்துக்கு பக்க பலமாக மாறி விட்டது ....படம் பாக்காதவங்க கூட இந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள் .

இந்த சினிமா காரர்கள் இப்படித்தான் ..நாம் இதை கண்டுக்காம இருந்தால் இந்த படத்துக்கு இவ்வளவு வரவேற்ப்பு  கிடைத்திருக்காது ....இனி அடுத்தது கமலின் விஸ்வரூபம் என்ற படம் முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது ..அதுக்கும் நாம் கண்டனம் என்று கூறி ..விளம்பரம் படுத்தவேண்டாம் என்பது .என்னுடைய தாழ்மையான கருத்து ...........நன்றி நட்புடன் என்றும் உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<


Tuesday, 13 November 2012

இந்த தீபாவளியில் நாலு காசு பாத்தாச்சு


யப்பப்பா ......முடுஞ்சுபோசுப்பா தீபாவளி ....நானும் என் வாழ்கையுல எத்தனையோ பண்டிகைய பாத்து இருக்கேன் 
ஆனா வருசத்துல ஒரே நாள்ல இந்த தீபாவளி வந்து நான் படர அவஸ்த்த  இருக்கே அய்யயையையோ  ......
ஓகே சகோ வருசத்துல இந்த தீபவளியில்தான் நாலு காசு பாக்கமுடியும் ......தீபாவளிக்கும் எனக்கும்  எந்த சம்மந்தமும் இல்லை ஆனால் ..தீபாவளி ஏவரத்துக்கும் .எனக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது .............தீபாவளி அதிக மக்கள் பணத்தை பார்க்கும் நேரமும் இதுதான் அதிக மக்கள் பணத்தை இழக்கும் நேரமும் இதுதான்
தீபாவளி இந்துமக்களின் மிக பெரிய பண்டிகை....வருடத்தில் ஒரு நாளில் வரும் இந்த பண்டிகைக்காக ..இவ்வளவு ஆர்ப்பாட்டம் ....ஆமாம் நான் ஆர்ப்பாட்டம் என்று சொன்னது ஒவ்வொரு மக்களின்  வீட்டில் நடக்கும் சம்பவத்தைதான் 
தீபாவளியில் .துணி கடை .நகை கடை .செருப்பு கடை .மளிகை கடை .பட்டாசு கடை இப்படி கடைகளை சொல்லி கொண்டே போகலாம் ...இந்த கடைகளில்  தீபாவளி ஏவாரம் சும்மா களைகட்டும்...முதலாளியாக இருப்பவர்கள் மேலும் சொத்து சேர்க்க ஒரு ஆயித்தம் ஆகும் நாள் தீபாவளி . ...தீபாவளியில் இந்து மக்கள் மட்டும் சந்தோசமாக இருப்பது இல்லை ..மாற்று மதம் மக்களும் சந்தோசமாகத்தான் இருக்கிறார்கள் .ஏன் நானும் இந்த தீபவளியில்தான் மிகவும் சந்தோசமாக இருந்தேன் ................................................................................அவசர படவேண்டாம் நான் சந்தோசமாக இருந்தேன் என்று சொன்னது .எனக்கு கிடைத்த எக்ஸ்ட்ரா சம்பளமான .போனஸ் பணத்தைதான் .தீபாவளி வந்தால் தான் .இந்த மாறி எக்ஸ்ட்ரா பணத்தை பார்க்க முடிகிறது சகோஸ் ..ஆம் அதனால்தான் நானும் இந்த தீபவளியில்தான் மிகவும் சந்தோசமாக இருந்தேன்.........
தீபாவளி என்றால் 


ஒருபக்கம் புத்தாடை ஒரு பக்கம் பட்டாசு .ஒரு பக்கம் சினிமா ..


இது மூனும் சேர்ந்தால் அன்று மக்களுக்கு தீபாவளிதான் .............ஓகே இந்த தீபாவளியில் நாலு காசு பாத்தாச்சு இனி அடுத்த தீபவளியில்தான் .நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<     [பின்குறிப்பு] இந்த பதிப்பை நான் ஏன் பதிந்தேன் என்றால் .நான் தீபாவளி ஏவாரம் பிசியால் என்னால் சரி வர இந்த ப்ளோகில் கவன செலுத்த முடியலை அதனால் உங்களின் கவனத்துக்காக ஏதாச்சு பதிய வேண்டும் என்ற மன ஆருதளுக்காக இந்த மொக்க பதிப்பை நான் பதிந்தேன் ....யாரும் என்னை மறந்து விடாதீர்கள் .மறந்தும் இருந்து விடாதீர்கள் .....உங்களின்  விலை மதிப்பில்லாத ஆதரவை தாருங்கள் சகோஸ்