Follow by Email

Friday, 4 January 2013

ஹதீஸ்களின் தொகுப்புஅனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் ....நான் முகநூலில்  பார்த்த 

ஹதீஸ்கலை ..ஒன்று திரட்டி வைத்து இருந்தேன் ..சரி இவற்றை 

அனைவரும் பார்க்கும் வகையில் சேமித்து வைக்க  வேண்டும் என்ற 

எண்ணம் தோன்றியது .சரி உடனே அவற்றை ஒரு பதிப்பாக  

போடுவோம் 

என்ற 

எண்ணம்  

வந்தது...உடனே அவற்றை ஒரு பதிப்பாக  போட்டு விட்டேன் சிறந்த 

ஹதீஸ்களின் தொகுப்பு .இதோ............


   

வீட்டில் உருவப்படங்களை மாட்டுவது பற்றிய ஹதீஸ்


நான் ஒரு விருந்தை தயார் செய்து நபிகள் நாயகம் ஸல் அவர்களை அழைத்தேன்

அவர்கள் வந்து என் வீட்டில் உருவப்படத்தைக் கண்ட போது திரும்பி சென்றுவிட்டார்கள் .

[அலி ரலி ,நஸயீ 5256]புத்தாண்டை நிராகரிப்பீர்


'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். என்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறு யாரை?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்....... அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்....புகாரி அத்தியாயம் 96, எண் 7320


 அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகைஅதிகரிக்கப்பட்டது” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்........ அத்தியாயம் 8, எண் 350

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராத விதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா – பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என அனஸ்(ரலி) அறிவித்தார். இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது. அத்தியாயம் 80, எண் 6309

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்......... அத்தியாயம் 34, எண் 2059

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்............ அத்தியாயம் 50, எண் 2589

அனஸ்(ரலி) அறிவித்தார். (தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள். புகாரி அத்தியாயம் 10, எண் 603

“ஈமான் எழுபதுக்கும் மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளை(களை) உடையதாகும். அவற்றில் மிகச்சிறந்தது ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கூற்றாகும்) அதில் மிகக்குறைந்தது, பாதையை விட்டும் இன்னல் தருவதை அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானின் ஒரு கிளையாகும் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்............... முஸ்லிம் : ஹதீஸ் எண் : 30

கண் பார்வையற்ற ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக என்னை பள்ளிக்கு அழைத்து வரும் உதவியாளர் யாரும் எனக்கில்லை (எனக் கூறி) தனக்கு வீட்டில் தொழுது கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்கிறார். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், அவருக்கு அனுமதியும் வழங்கிவிட்டனர். அனுமதி பெற்று அவர் திரும்பியபோது அவரை அழைத்து தொழுகையின் அழைப்பை (பாங்கை) செவியுறுகிறீரா? என்று கேட்டனர். அதற்கவர் ஆம்! என்றார். (அதற்கு) பதில் கூறுவீராக! (பள்ளியில் வந்து தொழுவீராக!) என்று கூறினர்...............முஸ்லிம். ஹதீஸ் எண் : 321

இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள். நிச்சயமாக யாருடைய ஆமீன் அமரர்களின் ஆமீனுக்கு ஒத்து இருக்கிறதோ அவரது பாவத்தில் முந்தியதை அவருக்காக மன்னிக்கப்படுகிறது என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆமீன்” எனக் கூறக்கூடியவர்களாக இருந்தனர் என இப்னு ஷிஹாப் கூறுகிறார். 
முஸ்லிம்.; ஹதீஸ் எண் : 284

 ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'கால்நடைகள் அழிந்துவிட்டன் பாதைகள் துண்டிக்ப்பட்டுவிட்டன' என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜூம்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் அதே மனிதர் வந்து, 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன. மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் எழுந்து 'இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளைநிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)' என்றுபிரார்த்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது.................புகாரி ;1016.

 நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (ம்ரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள். புகாரி 1043. முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்.

 ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, ‘சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்........... புகாரி அத்தியாயம் 4, எண் 134


ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை’ என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்” என்றார்கள்........புகாரி அத்தியாயம் 34, எண் 2057


நாஃபிவு அறிவித்தார். ‘(தனியாகப் பிரிந்து வர முடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்துவிட்டால் நின்று கொண்டே ஸஹாபாக்கள் தொழுவார்கள்’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
“எதிரிகள் இதை விடவும் அதிகமாக இருந்தால் அவர்கள் நின்று கொண்டோ வாகனத்தில் அமர்ந்து கொண்டோ தொழலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) குறிப்பிடுகிறார்கள்.................. புகாரி ;943

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் ‘நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விளைவு இருந்தது. ஒரு நாள் அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள். மீண்டும் பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் என்னிடம், ‘நான் விளக்கம் கேட்ட விஷயத்தில் இறைவன் விளக்கம் தந்து விட்டான். என்னிடம் இருவர் வந்து, ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். ‘இவருக்கு என்ன நேர்ந்துள்ளது?’ என்று ஒருவர் கேட்டார். ‘சூனியம் செய்யப்பட்டுள்ளது’ என்று மற்றவர் கூறினார். ‘சூனியம் செய்தவன் யார்?’ என ஒருவர் கேட்க, ‘லபீத் பின் அல்அஃஸம்’ என மற்றவர் விடையளித்தார். ‘எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது’ என ஒருவர் கேட்க, ‘சீப்பு உதிர்ந்த தலைமுடி, ஆண் பேரீச்சை மரத்தின் பாளை ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது’ என்று மற்றவர் கூறினார். ‘எந்த இடத்தில்?’ என்று ஒருவர் கேட்க, ‘தர்வான் எனும் கிணற்றுக்குள்’ என்று மற்றவர் கூறினார்’ என்று கூறினார்கள். பின்னர் அங்கே புறப்பட்டுச் சென்று பின்னர் திரும்பி வந்தனர். அங்குள்ள பேரீச்சை மரங்களின் மேற்பகுதி ஷைத்தானின் தலையைப் போல் இருப்பதாகவும் கூறினார்கள். ‘அதை வெளியேற்றி விட்டீர்களா?’ என்று நான் கேட்டேன். ‘இல்லை, அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமைகள் பரவுவதை நான் அஞ்சுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி – 3268, முஸ்லிம் – 2189, வேறுசில மாற்றங்களுடன் புகாரி – 5763, 5765, 5766, 6063, 6391 ஆகிய எண்களில் இடம் பெற்றுள்ளது) 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்” என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!” என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்...புகாரி ;அத்தியாயம் 34, எண் 2067

நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் முதல் இருப்பில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்தபோது ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் முதல் இருப்பில் அமர மறந்ததற்குப் பரிகாரமாக ஒவ்வொரு ஸஜ்தாவிலும் தக்பீர் கூறி இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள். உடனே மக்களும் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து அந்த இரண்டு ஸஜ்தாக்களையும் செய்தனர்..........புகாரி : அத்தியாயம் 22, எண் 1230

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே என்று கூறுவான்.” ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார்....புகாரி அத்தியாயம் 24, எண் 1424

 யார் அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது அவர்களைத் தூதராகவும் பொருந்திக் கொண்டாரோ அவர், ஈமானின் சுவையை சுகித்தவராவார் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற செவியுற்றதாக, அப்பாஸ் பின் அப்துல் முத்தலீப் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்......முஸ்லிம் ;ஹதீஸ் எண் : 25

.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று உண்டு. அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படுவான் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.....புகாரி : அத்தியாயம் 90, எண் 6966

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். ‘இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்” என்று கூறினார்கள்...புகாரி :அத்தியாயம் 45, எண் 2431

உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே பதிவு செய்யப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.......புகாரி :அத்தியாயம் 2, எண் 42

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் ‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி” என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்” என்று சொல்லிக்கொண்டேன்..........புகாரி:அத்தியாயம் 67, எண் 5078

 ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘பித்உ’ குறித்துக் கேட்கப்பட்டது. அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும். யமன் வாசிகள் அதை அருந்தி வந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும்’ என்று கூறினார்கள்.,,,,,,,,,,,,,,,,புகாரி :அத்தியாயம் 74, எண் 5586

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்...புகாரி ; அத்தியாயம் 43, எண் 2400

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.................புகாரி :அத்தியாயம் 53, எண் 2697

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டும்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம். ...............புகாரி :அத்தியாயம் 17, எண் 1079

 ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் ‘இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்’ என்று கூறினார்கள்..........புகாரி;அத்தியாயம் 83, எண் 6527

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரின் மூளை கொதிக்கும். என நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்...........................புகாரி: அத்தியாயம் 83, எண் 6562

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கிறான் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.......புகாரி ; அத்தியாயம் 97, எண் 7378

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!” என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்......புகாரி ;அத்தியாயம் 8, எண் 444

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.........அவை 1..ஸலாமுக்குபதிலுரைப்பது, 2...நோயாளியைவிசாரிப்பது, 3...ஜனாஸாவப் பின்தொடர்வது 4....விருந்தழைப்பைஏற்றுக்கொள்வது. 5....தும்முபவருக்கு மறுமொழி கூறுவது...... ஆகியவையாகும்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். .....புகாரி : அத்தியாயம் 23, எண் 1240

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள் ...உளுவில் சரியாக கழுவப்படாத குதிகால்களுக்கு நரகம்தான் ,,,,, என்று கூறினார்கள்'..... அறிவிப்பவர் ; அபூ ஹுரைரா(ரலி புகாரி;165

. (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.....3 ;31நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அரபியர் சொன்ன சொற்களிலேய மிகவும் சிறந்தது (கவிஞர்) லபீத் சொன்ன 
"அறிக!
அல்லாவைத் தவிர 
அனைத்துப் பொருட்களுமே 
அழியக்கூடியைவேய''
எனும் சொல்தான் 
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.......... முஸ்லிம் ;4541

சாபிடுவதால் உழு நீங்குமா? நபி[ஸல்] அவர்கள் ஒரு ஆட்டின் தொடை பகுதியை சாப்பிட்டார்கள் பின்பு உழு செய்யாமல் தொழுதார்கள் ....... அறிவிப்பாளர் ;இப்னு அப்பாஸ் [ரலி]அவர்கள். அபூதாவுத்187

யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்...புகாரி 651


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.
இதை உஸ்மான்(ரலி) அவர்களிடமிருந்து அபூ அப்திர் ரஹ்மான் வழியாக ஸஅத் இப்னு உபைதா(ரஹ்) அறிவித்தார்....புகாரி;5027

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் ஓர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்துவிட்டால், அதை அவன்
மறுமை நாளிலும் மறைக்காமல் இருப்பதில்லை 
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;;;;முஸ்லிம் 5049

ஒருவர் தொழுது கொண்டு இருக்கும் போது காற்று பிரிவை உணர்வது பற்றி கேக்கப்பட்டது .....அதற்க்கு நபி[ஸல்] கூறினார்கள் காற்று பிரிவின் சப்த்தத்தையும் அல்லது அதன் நாற்றத்தையும் உணரும் வரை தொழுகையை முறிக்க வேண்டாம் ..அபூதாவுத் . பாடம் 68 ..எண் 176

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்....புகாரி ; அத்தியாயம் 30, எண் 1896

 சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்....புகாரி;2679......................
No comments:

Post a Comment