Monday 21 January 2013

சாதனை படைத்த தமிழகம் ......


முதலில் ஒரு சிறிய ஹதீஸ் ஒன்றை அனைவருக்கும் நினவுபடுத்துகிரேன்...இந்த ஹதீஸை ஏன் நான் உங்களுக்கு இப்ப கூறுகிறேன் என்பது உங்களுக்கு .கீழே படிக்க படிக்க புரியும் ....சரி ஹதீஸை பார்ப்போம் ..................

 'போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.....புகாரி ;242

நபி(ஸல்) அவர்கள் என்னையும் முஆத்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, '(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)'' என்று (அறிவுரை) கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் வாற்கோதுமையில் தயாரித்த ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாரித்த ஒருவகை பானமான 'பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)'' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் விலக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள்....புகாரி ;4344

போதை தரும் அனைத்தும் விளக்கப்பட்டது என்று நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள் ..ஆனால் நம் தமிழகத்தில் ?????????????




தமிழகத்தில் தற்போது 6,823 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகளோடு இணைந்த 4,730 அனுமதிப்பெற்ற பார்கள் செயல்படுகிறது. 
காந்தி ஜெயந்தி, திருவள்ளூவர் தினம், மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்தநாள், வள்ளலார் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினம் ஆகிய 8 நாட்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.  மற்றபடி சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள்  என்று எதுவும் இல்லை. அதிக கட்டணம் வசூல், போலி மதுபான விற்பனையை தடுக்க கேரளமாநிலத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை மதுபான கடைகள் திறந்திருக்கும். தொழிலாளர் நல சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட எல்லா சலுகைகளும் வழங்கப்படுகிறது.  மதுபான கடை மேற்பார்வையாளருக்கு ரூ.22 ஆயிரமும், விற்பனையாளருக்கு ரூ. 17 ஆயிரமும் மாதஊதியமாக வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்யும் இவர்களுக்கு 8 மணிநேரம் போக, கூடுதலான 4 மணிநேரத்துக்கு,  ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மேற்பார்வையாளருக்கு ரூ.75ம், விற்பனையாளருக்கு ரூ.50 வழங்கப்படுகிறது.  

  தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டுமில்லாமல் அதன் வருவாயும் அதிகரித்துள்ளது. டாஸ்மாக் மூலம் அரசே சில்லறை விற்பனையில் ஈடுபட்டபோது 2003&04ம் ஆண்டில் 139.57 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் கிடைத்த வருவாய் 3639.93 கோடி ரூபாய். ஆனால் கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 536.35 லட்சம் பெட்டியாக அதிகரித்துள்ளது.  டாஸ்மாக் கடைகளின் ஆண்டு சராசரி வருமானம் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து தற்போது 18 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டு முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள சூழலில் தமிழகத்தில் மதுபான விற்பனை மற்றும் கலால் வரியாக ரூ.23,500 கோடி வருமானத்துடன் முதலிடத்தை பெற்றுள்ளது.மதுவால் உருவாகும் சமூக பதற்றம்: குளோபல் சர்வே என்ற ஆய்வு மையம் நாடு முழுவதும் ‘குடிமகன்கள்‘ குறித்த ஆய்வை மேற்கொண்டது. இதில் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்திரபிரதேசத்தில் 21 சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் 16 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.


 மது குடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பவர்களை மது குடிக்கும் நோய் பீடித்துள்ளது என்று தான் கருதவேண்டியுள்ளதாகவும் அந்த அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.அரசுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பூர்த்தி செய்வதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்காற்றுகிறது என்பது நிதர்சனம். அதேசமயத்தில், மது குடிப்பதால் ஏற்படும் சமூக பதற்றமே அதை மூடவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதற்கான காரணம்.  சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் கடந்த ஆண்டில் மட்டும் 16 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 60 சதவீத விபத்துகளுக்கு ஏதாவது ஒரு வகையில் மது குடிப்பதே காரணமாக அமைந்துள்ளதாக அரசு தரப்பிலேயே ஒப்பு கொள்ளப்படுகிறது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். அல்லது குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துகின்றனர்.அதேபோல் தமிழகத்தில் ஏற்படும் 65 சதவீத கொலைகளுக்கும் மதுவே காரணமாக உள்ளது. 

டாஸ்மாக் பாரில் நண்பர்களாக நுழைந்து ஒரே டம்பளரில் மாறி, மாறி குடித்து கொண்டாடிய பலர், கடைக்கு வெளியில் எதிரிகளாக மாறுவதும், ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சம்பவங்களையும் பார்க்க முடிகிறது. அதன் உச்சகட்டம் கொலையில் முடிகிறது. போதை தெளிந்த பின்னர் தான் நண்பனையே கொலை செய்த ஒரு துர்பாக்கியத்தையும் கொலையாளி அறிந்து கொள்ள முடிகிறது. மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல், தற்போது மது குடிப்பவனின் சராசரி வயது 13 என்பது தமிழகத்தில் அரங்கேறியுள்ள மிகப்பெரிய கேடு. 1980 வரை மது குடிப்பவனின் சராசரி வயது 28 ஆக இருந்தது. ஆனால் இப்போது பதின் பருவத்து இளைஞனும் காலை நேரத்திலேயே டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்கால தமிழ் சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்தை இப்போதே தடுக்க தவறி வருகிறோம் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

*தமிழகம் , மற்ற தென் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி இதில் மட்டும் பல மடங்கு  முன்னேறிக் கொண்டிருக்கிறது. 
*கல்வியிலோ, மற்ற துறைகளிலோ இந்த  அளவுக்கு சாதனை இல்லை. ‘படி’மகன்கள் சாதிக்காததை, ‘குடி’மகன்கள் சாதித்துள்ளனர். 
*ஆம், டாஸ்மாக் மது விற்பனையில் சாதித்து விட்டது; மற்ற துறைகளில் முன்னேறி வரும் தென் மாநிலங்கள் பாவம், இதில் பின்னுக்கு போய் விட்டன. 
* தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் கடந்த  நவம்பர் 29, 2003ம் ஆண்டு முதல் மதுபான விற்பனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவதற்காக 35 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் இயற்கை மரணம், வேலை நீக்கம், தற்காலிக பணிநீக்கம் காரணமாக வேறு வேலை தேடி சென்றவர்கள் என 5 ஆயிரம் ஊழியர்கள் பணியில் இல்லை. நகரப்பகுதி கடைகளில் 4 பேர் வீதமும்,  கிராமப்புற கடைகளில் 2 பேர் வீதம் பணியாற்றி வருகின்றனர். 


தினசரி ஒரு குவார்ட்டர் தான்
5 ஆண்டில் ரூ.1.25லட்சம் காலி
 தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானவர்களில் 20 சதவீதத்தினர் தினமும் ஒரு குவார்ட்டரையாவது காலி செய்யும் குடிமகன்கள்.  தினசரி ஒரு குவார்ட்டர் அடிக்க 80 ரூபாய் செலவு என்றால் ஒரு ஆண்டில் 24 ஆயிரம் காலி. ஐந்து ஆண்டுகளில் சத்தமில்லாமல் 1.25 லட்ச ரூபாயை காலி செய்கின்றனர்.  இந்த ஐந்தாண்டில் அதை சேமித்தால், வீட்டுக்கு தேவையான பிரிட்ஜ், டிவி, ஏசி, மிக்சி, கிரைண்டர் என்று எல்லாம் வாங்கி விடலாமே.....எல்லாம் வாங்குறோமோ இல்லையோ ..உடல் ஆரோக்க்யத்தோடு நலமாய் வளமாய் வாழலாம் ......


நன்றி ..இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் .ஓட்டு போடுங்கள் கீழே ஓட்டு  லிங்க் தந்து இருக்கின்றேன் மற்றும் உங்களின் நண்பர்களோடும் இதை ஷேர் பண்ணுங்கள் ...இதில் ஏதேணும் மாற்று கருத்து இருந்தால் ...கீழே கமண்ட் இருக்கிறது ..தாரளமாக கமண்ட் பண்ணுங்கள்  ..உங்களின் வாக்குகள் ..வரவேட்கபடுகின்றது .....நன்றி மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திக்கும் உங்கள் 
>>>>ரினாஸ்<<<<








ஓட்டு லிங்க் 









6 comments:

  1. அரசால் மட்டும் குடியை தடுக்கமுடியாது,தடை செய்தால் கள்ளச்சாராயம் குடிப்பார்கள்,இறை நம்பிக்கையும்,நன்மார்கம் பேணுதலும் தான் குடியை தடுக்கும்!அரசும் தன் பங்குக்கு பள்ளிகளிலும் தகவல் சாதனங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தனும்! நல்ல பதிவு!

    ReplyDelete

  2. உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி >>>>>>>>>>சகோ

    ReplyDelete
  3. தடை செய்வதாலும், தண்டனையை கடுமையாக்குவதன் மூலமும் கட்டாயம் குறைக்கலாம். இறை நம்பிக்கையை வளர்ப்பது அதை அறவே ஒழிக்கும். இரண்டையுமே செய்யவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி >>>>>>>>>>சகோ

      Delete
  4. இது பற்றி நான் விரிவாக எழுதி உணர்வில் வந்த கட்டுரை '' போதையில் தள்ளாடும் தமிழகம்''
    http://tntjsalem.blogspot.in/2011/10/blog-post_08.html

    ReplyDelete
    Replies
    1. இதோ பார்க்கிறேன் சகோ

      Delete