Saturday 22 December 2012

ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி








அமெரிக்க பள்ளியில் ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி


அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூட்டுக்கு 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, டெக்சாஸ் நகர ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்துவர பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணம் நியூடவுண் நகரில் உள்ள சாண்டிஹூக் பள்ளியில் கடந்த வாரம் ஆசிரியை மகன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் 20 குழந்தைகள் உள்பட 28 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க புது சட்டம் கொண்டு வரப்படும் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்நிலையில், ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிப்பது குறித்து, ஓக்லஹோமா, மிசோரி, மின்னசோட்டா, தெற்கு தகோடா, ஓரிகான் போன்ற மாகாண அரசுகள் ஆலோசித்து வருகின்றன.

ஆசிரியர்கள் துப் பாக்கி வைத்து கொள்ள டெக்சாஸ் பள்ளி நிர்வாகிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 டெக்சாஸ் நகரில் உள்ள ஆசிரியர்கள் இப்போதே துப்பாக்கியை மறைத்து கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். அதனால் பெற்றோர்களும் குழந்தைகளும் பயமில்லாமல் பள்ளிக்கு சென்று வருகின்றனர் என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

பள்ளி கண்காணிப்பாளர் ஒருவர் கூறுகையில், பாதுகாவலர்களை நியமித்து அவர்களுக்கு சம்பளம் தரும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை. மேலும், துப்பாக்கியுடன் வரும் ஆசாமி காவலாளியை சுட்டுவிட்டு பள்ளிக்குள் எளிதில் நுழையவும் முடியும். ஆனால், எங்கள் ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். அனுபவம் மிக்கவர்கள். அவர்களிடம் துப்பாக்கி இருப்பது எங்களுக்கு பெரும் பலம் என்கிறார்.......................



ஹ ஹ ஹ இந்த சட்டம் நம்ம ஊர்ல இருந்துச்சுன ..வாத்தியார்கள் தூங்கும் பொழுது ..நம்ம மாணவர்கள் ..துப்பாக்கியை எடுத்து விளையாட ஆரபிச்சு இருப்பாங்கோ .....நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<




4 comments:

  1. வாத்தியாருங்கள்ள கிறுக்கன் எவனும் இல்லாம இருக்கணுமே!

    ReplyDelete
    Replies
    1. ///
      வாத்தியாருங்கள்ள கிறுக்கன் எவனும் இல்லாம இருக்கணுமே!//// கிறுக்கனாக இருந்தால் அம்புடுதான் >>>>>>>>>>>>

      Delete
  2. என்ன நாடுப்பா !?

    பார்த்து !? வாத்திங்க புள்ளைகளே சுட்டுப்புடாமே இருக்கணும் :)

    ReplyDelete