Follow by Email

Tuesday, 4 December 2012

மறக்கமுடியாத சம்பவம் [பாகம் இரண்டு ]

மறக்க முடியாத சம்பவம் என்ற தலைப்பில் நான் உலகில் நடந்த மக்களின் மனதில் இன்னும் நீங்காத நிகழ்வுகளை நான் என்னுடைய மறக்க முடியாத சம்பவம் பாகம் ஒன்றில் தெரிவித்து இருந்தேன் ..அது போல இந்த இரண்டா பாகத்தில் நான் வசிக்கும் கோயம்புத்தூர்ல்  நடந்த மக்களின் மனதில் இன்னும் நீங்காத நினைவுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்து இருக்கின்றேன் ................
கோயம்புத்தூர்ல் வசிக்கும் துணிக்கடை அதிபரின். மகள்  முஸ்கின் மகன்  ரித்திக் .....இருவரையும் அவர்களின் வீட்டில் முன்னாள்  கார் டிரைவராக வேலை பார்த்த  மோகன் என்னும் வீனபோனவன் ..கடத்தி சென்று .அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தும் .மற்றும் அந்த சிறுவனையும் அந்த சிறுமையையும் .கொலை செய்து வாய்க்காலில் .தூக்கி வீசி எறிந்தான் ..பின்பு காவல்துறையினர் மோகனை கைது செய்து ...என் கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர் என்பது குறிப்பிட தக்கது ..........
கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த, தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், 58 பேர் பலியாயினர். தடை செய்யப்பட்ட அல் - உம்மா இயக்கத் தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானி உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதானி உள்ளிட்ட எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். பாஷா உள்ளிட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .....தமிழ்நாட்டில் குண்டு வெடித்தது கோவையில் மட்டு தான் என்பது குறிப்பிட தக்கது ......
கோவை உக்கடம் கோட்டைமேடு இஸ்லாமியர்கள் அதிக வசிக்கும் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து 12 பேர் பலியானார்கள் பெரும் மழை வெள்ளத்தால் அந்த அடுக்கு மாடி கட்டிடமே தரைமட்டமானது .இதனால் பல இஸ்லாமிய குடும்பங்கள் இருக்க இடமின்றி தவித்தனர்..இந்த சம்பவத்தையே இன்னும் கோவை மக்கள் மனதிலிருந்து புரட்டிப் போட முடியவில்லை....
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும்சேர்த்து நடத்தப்பட்டது.....இதனால் கோயம்புத்தூர்ல் உலக தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டார்கள்..........
நன்றி நட்புடன் உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<5 comments:

 1. உலகத்துல என்னவெல்லாம் நடைபெருகின்றது..
  ஒரு சமூகம் கீழே விழுந்து அந்த சமூகம் தானாக எழுந்து செல்ல முன் அவைகளை உடனுக்குடன் உலக மக்களுக்கு வெளிப்படுத்தும். ஒரு அருமையான பாகம் இது...
  எல்லாமே இரண்டு இறைவன் படைத்ததும் இரண்டு மனிதன் படிப்பினை பெற வேண்டியதும் இரண்டு (நல்லது கெட்டது.)சந்தோஷம்,கவலை கவலைக்குள்ளன விஷயங்களை சந்தோஷத்தோடு வெளியிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 2. வித்தியாசமாக யோசித்து நடந்தவற்றை திரும்பி பார்க்கும் விதமாக பதிவிட்டு உள்ளீர்கள்..தொடருங்கள்....

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள் சகோ

   Delete
 3. முதல் செய்தியே மனசுக்கு ரொம்ப கஷ்டத்தைக் கொடுத்து விட்டது...:((

  நல்ல விதமாகத் தொகுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டீர்கள்.

  ReplyDelete