Monday, 24 December 2012

படித்தால் பிடிக்கும் ...........................


இறைவனின் அருளால் ..இது என்னுடைய 50 வது பதிப்பு ..இந்த பதிப்புக்கு நான் படித்தால் பிடிக்கும் என்ற தலைப்பு வைத்தேன் ..ஏன் என்றால் ..நீங்கள் வந்து என் தளத்துக்கு படித்தால்  அது எனக்கு பிடிக்கும் ..அதான் படித்தால் பிடிக்கும் என்ற தலைப்பில் உங்களை நான் வரவேட்கின்றேன் .........இதுவரைக்கும் என்னுடைய பதிப்புக்கு ஆதரவு தந்த ..அனைத்து நல் உள்ளங்களுக்கும் ...நன்றி ..தொடர்ந்து ஊக்கபடுத்தி கொண்டு வந்த .என்னுடைய முகநூலில்  உள்ள டீக்கடைநண்பர்களுக்கும்  நன்றி ! நன்றி ! நன்றி ! நன்றி !


 
சரி இன்றைய பதிப்பு .....................

தலைநகர் டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட கொடூரம்,... நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலை..இது அனைவரும் அறிந்ததே ...







காதலிக்க மறுத்ததால், மூன்று இளைஞர்களால், "ஆசிட்' வீச்சுக்கு இலக்காகி, முகத்தை பறிகொடுத்த, சோனாலி முகர்ஜி என்ற இளம் பெண், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் பங்கேற்று, 25 லட்சம் ரூபாய் பரிசு வென்றார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இது போன்றதொரு, கொடுமையான செயலுக்கு ஆளாக்கப்பட்டவர், சோனாலி முகர்ஜி."ஆசிட்' வீச்சுக்கு ஆளான அவருக்கு முகமே கிடையாது; கருகிய சதை துணுக்குகள் தான் முகத்தில் ஆங்காங்கே உள்ளது. அழகிய முகத்தை இழந்த அந்த பெண், தன் முகத்தையே வெளியே காட்டுவது கிடையாது. ஆனால், அவரை அந்த கொடுமைக்கு ஆளாக்கிய, மூன்று நபர்கள், வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இப்போது இருக்கும் அளவுக்கு, "மீடியா' தாக்கம் இல்லை என்றாலும், அப்போதும் பரபரப்பாக இந்த செய்தி பேசப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின், தன்பாத் நகர கல்லூரி ஒன்றில் படித்து வந்தார், சோனாலி முகர்ஜி. கல்லூரிக்கு செல்லும் வழியில், மூன்று இளைஞர்கள், அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்தனர். வலுக்கட்டாயமாக, காதலிக்க வற்புறுத்தி வந்தனர்; அதை அந்த பெண் மறுத்து வந்தார்.


வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த அந்த கயவர்கள், கனரக இரும்பு பொருட்களில், துரு அகற்ற பயன்படுத்தப்படும், பயங்கரமான, "ஆசிட்'டை, அந்தப் பெண்ணின் முகத்தில் வீசி விட்டு ஓடினர்.இதில், முகம் பூராவும் வெந்து, இரு கண்களும் குருடாகி, ஒரு காது முற்றிலும் கேட்காத நிலையை அடைந்த சோனாலி, அதற்கு பிறகு வெளியே வருவதே இல்லை.

கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள், ஒன்றிரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு பிறகு, வெளியே வந்து விட்டனர். ஆனால், அந்தப் பெண் வீட்டிலேயே முடங்கி விட்டாள். எனினும், தன்னம்பிக்கையை கைவிடாமல், "டிவி'யில், நடிகர், அமிதாப் பச்சன் நடத்தும், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில், சமீபத்தில் பங்கேற்றார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து, 25 லட்சம் ரூபாயை வென்றுள்ளார்.

""இந்த பணத்தைக் கொண்டு, என் முகத்தில் உரிந்து வரும் பிளாஸ்டிக் இழைகளை சரி செய்ய முடியும்; சில நாட்களுக்கு நிம்மதியாக சாப்பிட முடியும். எனினும், முகம் இனி கிடைக்கப் போவதில்லை. அதற்காக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், வாழ்க்கை என்னாவது என்ற எண்ணத்தில், போட்டியில் பங்கேற்றேன். என் முகத்தை, "டிவி'யில் காட்டினர். அதுவே, அந்த கயவர்களுக்கு உண்மையான தண்டனையாக இருக்கும்,'' என, சோனாலி கூறினார்.நிகழ்ச்சியின் போது, சோனாலியை, நடிகர் அமிதாப் பச்சன், "வீரமான பொண்ணு' என, பாராட்டினார்..................................


இந்த பெண்மணிக்கு என்னுடைய பாராட்டுகளும் ..........................................


நன்றி உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<<


30 comments:

  1. Replies
    1. உங்களின் ஆதரவுக்கும் உங்களின் வருகைக்கும் நன்றி நன்றி சகோ

      Delete
  2. சகோதரருக்கு வாழ்த்துகள் !

    தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆதரவுக்கும் உங்களின் வருகைக்கும் நன்றி நன்றி சகோ

      Delete
  3. காமம், காதல், உடலுறவு, பற்றி முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், பல்வேறு ஊடகங்களும் காமறியூட்டும்படி செயல்படும்போது அப்பாவி பெண்கள் இது போன்ற முட்டாள்தமான தாக்குதல்களுக்கு ஆளாவதை தடுக்க முடியாது. திரைப்படங்களும் முட்டாள்தனமாக காதலை ஊக்குவிக்காமல் காதலை மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கையில் உள்ள சிரமங்களைப் பற்றி விளக்கும் படங்களை எடுக்கப்பபட்டால் சமுதாயத்திற்கு நல்லது. பெண்கள் பற்றிய பார்வைக் கோணமே மாறும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படாத வகையில் பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாவதை தடுக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ..
      ஆபாச ஆடைகளே .........பாலியல் வன்முறைக்கு முதல் படி......என்பது என்னுடைய கருத்து சகோ

      Delete
  4. தன்னம்பிக்கை பதிவு வாழ்த்துக்கள் ரினேஷ்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி சகோ ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

      Delete
  5. படித்தால் பிடிக்கும் - விளக்கம் அருமை. ஆசிட் சம்பவங்க மனதை வருத்துகிறது. அந்த பெண்ணுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. என் ப்ளாகில் கேள்விகள் ஆயிரம்...பதில் ஒன்றே...
    http://enrenrum16.blogspot.com/2012/12/blog-post_23.html

    ReplyDelete
    Replies
    1. ம்ம் வருகிறேன் சகோ .......இதோ

      Delete
  7. Replies
    1. நன்றி நன்றி சகோ ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

      Delete
  8. சிறந்த பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி சகோ ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

      Delete
  9. வாழ்த்துக்கள் 50 வது பதிவுக்கு..தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. தொடர் ஆதரவுக்கு நன்றி சகோ ..துவா செயுங்க சகோ

      Delete
  10. வீட்டுக்குள் முடாங்கமால் வெளியே வந்தா அந்த பெண்னின் தன்நம்பிக்கையை பாரட்டுகிறேன்... சிறந்த பதிவு சகோ.ரினாஸ் தொடந்து எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ////சகோ.ரினாஸ் தொடந்து எழுத வாழ்த்துக்கள்//// துவா செயிங்க சகோ

      Delete
  11. best wishes may allah increase your knowledge.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி சகோ ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

      Delete
  12. அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய பகிர்வு. அருமை.


    தங்களின் 50-வது பகிர்வு... அர்த்தமுள்ள பகிர்வு...!
    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி சகோ ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

      Delete
  13. ம்ம்ம்ம் வாழ்த்துகள் வாழ்த்துகள் நண்பா , கலக்குங்க.. தொடர்ந்து நல்ல பதிவுகளை கொடுங்க..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் கண்டிப்பாக சகோ..தொடர்ந்து உங்களைப்போல் நல உள்ளங்களின் ஆதரவு இருந்தால் போதும் சகோ

      Delete
  14. ரினாஸ்...

    மாஷா அல்லாஹ்.. குறுகிய நாட்களில் 50 பதிவுகள்.. கிரேட் வொர்க்... நான் இதுவரை 40 ஓ என்னமோ தான் எழுதி இருக்கேன்... ஆல் மொக்கைஸ்...

    ReplyDelete
  15. /// மாஷா அல்லாஹ்.. குறுகிய நாட்களில் 50 பதிவுகள்.. கிரேட் வொர்க்.//// நன்றி அண்ணா

    ReplyDelete
  16. சலாம் சகோ ரினாஷ்,

    மாஷா அல்லாஹ் சிறந்த பகிர்வு.உங்கள் 50 வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.நான் நம் சகோதரர்களின் அணைத்து தளங்களையும் படிப்பேன் ஆனால் பின்னூட்டம் இடுவது கிடையாது மிகவும் குறைவு.உங்க 50 வது பதிவுக்கு வாழ்த்து தெரிவிக்கவே இந்த கம்மென்ட்.அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்கலுக்கு அறிவாற்றலையும் எழுத்தாற்றலையும் அதிகப் படுத்தி மென்மேலும் நல்ல பதிவுகள் எழுத கூடிய பாக்கியத்தை தந்து அருள் புரிவானாக.

    ReplyDelete
    Replies
    1. ..வா அழைக்கும் அஸ்ஸலாம் ...
      ///மாஷா அல்லாஹ் சிறந்த பகிர்வு.உங்கள் 50 வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.//// மிக நன்றி சகோ

      ///நான் நம் சகோதரர்களின் அணைத்து தளங்களையும் படிப்பேன் ஆனால் பின்னூட்டம் இடுவது கிடையாது மிகவும் குறைவு.உங்க 50 வது பதிவுக்கு வாழ்த்து தெரிவிக்கவே இந்த கம்மென்ட்.அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்கலுக்கு அறிவாற்றலையும் எழுத்தாற்றலையும் அதிகப் படுத்தி மென்மேலும் நல்ல பதிவுகள் எழுத கூடிய பாக்கியத்தை தந்து அருள் புரிவானாக.//// ஆமீன் ...தொடர்ந்து ஆதரவு தாருங்கள் சகோ

      Delete