Follow by Email

Sunday, 2 December 2012

இறைவனின் அருள்
என் நண்பரின் வாழ்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு இதோ .............................
என் நண்பர் ஊர் அரசர்குலம் ..அவர் திருநல்வேலியில் நடக்கும் ஒரு இஸ்லாமிய மாநாட்டுக்காக ...செல்ல தன ஊருக்காரர்களை அழைத்து ஒரு நான்கு சக்கர வாகனம் வண்டியை பிடித்து சென்றார் .....மாநாடும் முடிந்தது சரி அப்படியே திருநல்வேலியில் உள்ள இருட்டு கடை அல்வா கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டு அப்படியே திருநல்வேலியை ஒரு வளம் வந்து ...பின்பு சொந்த ஊர்ருக்கு செல்ல அதே வேனில் புறப்பட்டனர் ...வண்டி அப்படியே மிக வேகமாக வந்து கொண்டு இருந்தது ......
திடிரென்று என் நண்பருக்கு வயிற்று வலி வர ஆரம்பித்தது ..இருட்டு கடை அல்வாவ ஒரே ஆல் யாருக்கும் குடுக்காம சாப்பிட்டால் வயிற்று வலி வரதானே செய்யும் .........சரி அவர் வண்டியை ஓட்டும் டிரைவரிடம் சென்று தம்பி எனக்கு வயிறு வலிக்கிறது ..அப்படியே ஒதுக்கு புறமாக ஏதாவது தண்ணீர் வசதியுடன் இடம் இருந்தால் நிறுத்து ..நான் மலம் கழிக்க வேண்டும் என்றார் ...டிரைவரும் சரி சரி என்று தலை ஆட்டி விட்டுட்டு ....வண்டியை நிருத்தாமே ஓட்டி சென்றார் ..என் நண்பருக்கும் அடக்க முடியாமல் அந்த டிரைவரை பார்த்து டே அறிவு கெட்டவனே வண்டியை நிறுத்துடா என்று கோவத்துடன் கூறினார் ..பின்பு அந்த டிரைவர் வண்டியை நிறுத்தினார் .....என் நண்பரும் மலம் கழிக்க சென்று விட்டார் ...உடனே அந்த டிரைவர் வண்டியிலிருந்து இறங்கி ...புகை பிடித்து கொண்டு இருந்தார் ..சற்று வண்டியின் கீழ பார்த்தால் ..வண்டியின் பேட்டரியின் கரண்ட சப்ளே ஆகும் ஒயர் .இஞ்சின் மேல பட்ட படி இருந்தது ....உடனே டிரைவர் சாக் ஆயிட்டார் ..இப்படியே இன்னும் ஒரு ஐந்து நிமிடம் வண்டியை ஓட்டினால் ..இந்நேரம் வண்டியில் தீ பற்றி இருக்குமே என்று பெரும் மூச்சு விட்டார் ..என் நண்பருக்கு வயிற்று வலி ஏட்பட்டதுனால் தானே வண்டியை நிறுத்தினோம் இல்லை என்றால் ..இந்நேரம் அனைவரும் வண்டியில் தீ பற்றி அனைவரும் எரிந்து இருப்போமே ..என்று பயந்த படியே ..என் நண்பரை கட்டி தலிவினார் அந்த டிரைவர் ...............இறைவனின் அருளால் அந்த நான்கு சக்கர வாகனத்தில் உள்ள அனைவரும் தப்பித்தனர் ......இந்த கதையில் வரும் என் நபர் என்று நான் குறிப்பிடும் நபர் .என் முகநூல் நண்பர் ஜப்பார் அவர்களின் வாழ்கையில் நடந்த நிகழ்வு தான் இது ....நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<11 comments:

 1. அல்ஹம்துலில்லாஹ் ...மறைவானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான் அல்லாஹ்..இறைவன் போதுமானவன் ..

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ....தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

   Delete
 2. Masha Allah!! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் ( அல்குர்ஆன் 10 : 107)

  ReplyDelete
 3. இது போன்ற நிகழ்வுகள்தான் இறை நம்பிக்கை வலுப்பெற உதவுகின்றன.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நமக்கு ஏதேனும் இது போல் நடக்கும் பொழுதுதான் .....இறைஅச்சமே வருகிறது ........நன்றி சகோ உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

   Delete
 4. என்ன சொல்ல வர்றீங்க.. இருட்டுகடை அல்வாவா ஜப்பார் மாதிரியே யாருக்கும் கொடுக்காம திங்கணும்னா?? ஹி..ஹி..ஹி..ஹி..ஹி..

  ReplyDelete
  Replies
  1. ///என்ன சொல்ல வர்றீங்க.. இருட்டுகடை அல்வாவா ஜப்பார் மாதிரியே யாருக்கும் கொடுக்காம திங்கணும்னா?? ஹி..ஹி..ஹி..ஹி..ஹி../// இல்லை இல்லை சகோ இருட்டுக்கடை அல்வா என்றாலும் .....அளவாக சாபிட்டால் போதும் சகோ ..இது போன்ற கக்கா பிரச்சனை எல்லாம் வராது ஹ ஹ ஹ ஹ

   Delete
 5. வர வர ஜப்பார் கக்கா போனதெல்லாம் நியூசா வருதுப்பா.... முடியல...

  ReplyDelete
  Replies
  1. ///வர வர ஜப்பார் கக்கா போனதெல்லாம் நியூசா வருதுப்பா..[.. முடியல...] என்னது உங்களுக்கும் முடியலையா சரி இதையும் நியூசா போட்டுடுவோம் ஹ ஹ ஹ

   Delete
 6. அல்ஹம்துலில்லாஹ் இவ்விடத்தில் கருத்துப் பரிமாற வேண்டும் என்றால் என்னால் முடிந்தது ஒன்றுதான் அது....
  யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ அதே அல்லாஹ்வைத் தவிர அவருக்கு யாராலும் ஒரு கெடுதியைக் கொடுக்க முடியாது..யாருக்கு அல்லாஹ் கெடுதியைக் கொடுக்கின்றானோ அதே அல்லாஹ்வைத் தவிர வேரு யாராலும் ஒரு நலவைக் கொடுக்க முடியாது..எல்லாம் அவன் செயல் வயிற்று வலி வர வைக்கிறதும் அவனே அல்வாவை சாப்பிட வைத்ததும் அவனே சாரதியை தான் ஓட்டும் வாகனத்தைக் கொஞ்சம் உற்றுப் பார் என்று முன்னெச்சரிக்கை விட்டதும் அவனே.. தன் மனதில் ஒரு ஆழமான சந்தோஷத்தைக் கொடுத்ததும் அவனே ...அவனுக்கு நன்றி சொல்லி எல்லா நேரங்களிலும் ,எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வின் பெயர் கூறி தன் பயணங்களை மேற்கொண்டால் அவன் நாட்டம் இல்லாமல் எவும் நடக்காது இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
  Replies
  1. அல்ஹம்துல்லாஹ் அல்லாவே அனைத்தையும் அறிந்தவன்

   Delete