Thursday 13 December 2012

சலாம்’ கூற மறந்த அரசு ஊழியர் மீது வழக்கு!



தான் தெரிவித்த ‘ஸலாம்’- முகமனுக்குப் பதிலளிக்கவில்லை என்று அரசு ஊழியர் ஒருவர் மீது ஜெத்தா நகர பிரஜை ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார். இத்தகவலை சவூதி அரேபியாவின் அல்ஹயாத் நாளேடு வெளியிட்டுள்ளது.


இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மனுதாரரின் வழக்குரைஞர் அப்துல் அஸீஸ் அல் ஸாமில் “குறிப்பிட்ட ஒருநாளன்று அந்த அரசு ஊழியரின் அலுவலகத்திற்குச் சென்ற மனுதாரர் சலாம் உரைத்த போது பதிலுரைக்காமல் இருந்தார்.

சவூதி அரேபிய சட்டப்படி, அரசு ஊழியர் என்பவர் நல்ல குணாம்சங்களோடு நன்னடத்தைக் குரியவராக இருக்கவேண்டும் – இது சட்ட விதி நான்கிற்கு உட்பட்டது” என்றார். மேலும், “இஸ்லாம் மத ஆசாரப்படி, சலாமுக்கு பதில் சலாம் உரைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் அதன்படி நடக்கவில்லை” என்றும் வழக்குரைஞர் அப்துல் அஸீஸ் அல் ஸாமில் கூறினார்.

சலாமுக்கு பதிலுரைக்காத விதயம் சவூதி அரேபியாவில் அரிதே என்றாலும் இவ்வழக்கில் அந்த அரசு ஊழியருக்கு ஷரியா சட்டப்படி தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்று வழக்குரைஞர் அல்ஸாமில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்வது அரசு ஊழியர்களின் இயல்பாக இருக்க வேண்டும்” என்றார் அல்ஸாமில்......

இப்படி இருக்கும் பொழுது  நமது ஊரில் சலாம் சொல்லுவதற்கு நாம் தயங்குகிறோம் ..மற்றும்..தெரிந்த முகத்திற்கு மட்டும் நாம்  சலாம் சொல்கின்றோம் ....என்ன கொடுமை இது 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும்.10 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்...புகாரி .அத்தியாயம் 79, எண் 6231

நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<





4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ தம்பி.. :)

    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக

    நல்ல தகவல்

    ReplyDelete
    Replies
    1. வா அழைக்கும் அஸ்ஸலாம்

      இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வா அழைக்கும் அஸ்ஸலாம்

      இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக

      Delete