Tuesday 2 October 2012

நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக


நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்




குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
  • நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
  • நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
  • நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
    • பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
    • நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
    • நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
    • நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
    • நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
    • முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
    • மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
    • ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
    • இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
    • மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
    • ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
    • நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
    • நமது மூளை 80% நீரால்  ஆனது.
    • நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
    • நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
    • மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
    • பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
    • மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
    • மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்
    கண்கள்              31 நிமிடங்கள்

    மூளை               10 நிமிடங்கள்

    கால்கள்              4 மணி நேரம்
    தசைகள்              5 நாட்கள்
    இதயம்               சில நிமிடங்கள் ......
    நன்றி இப்படிக்கு உங்கள் நண்பன் >>>>ரினாஸ் <<<<


17 comments:

  1. சலாம் ரினாஸ். அருமையான தகவல்கள். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருக்கைக்கும் ..கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. அறியாத அரிய தகவல்கள்
    பதிவாகித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக என் தளத்துக்கு வருகை தந்து இருக்கும் சகோ ரமாமணி அவர்களை அன்போடு வரவேட்கின்றேன்

      Delete
  3. மிகவும் பயனுள்ள தகவல். அருமை ரினாஸ்.

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக என் தளத்துக்கு வருகை தந்து இருக்கும் சகோ .ஆர் வி ராஜி அவர்களை பணிவன்போடு வரவேட்கின்றேன்

      Delete
  4. நல்ல தகவல்கள் சகோ.!

    ReplyDelete
    Replies
    1. நன்றி .உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் சகோ

      Delete
  5. வாவ்வ்வ்வ்வ்வ்.. அருமையான தொகுப்பு

    வாழ்த்துகள் தம்பி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கும் ..வருகைக்கும் நன்றி சகோ

      Delete
  6. ரினாஸ்...

    எந்த புக் அது???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... புக்க பேசாம PDF ல போட்டுடுங்க...
    தினம் ஒரு பதிவா?? வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ...நன்றி சகோ

      Delete
  7. அருமையான பதிவு..ஜஷாக்கல்லாஹூ ஹய்ரா..
    இப்படியான விஷயங்கள் காலத்தின் தேவையும்
    பல்கலைகழகம் சென்றாலும் அங்கும் எமக்கு
    முன் தோன்றும் அருமையான வரிகள்
    சகோதரர்..றினாஸ் கான் .நன்றிகள் பல

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் .கருத்துக்கும் நன்றிகள் பல ...நண்பரே அஹமத் யஹ்யா

      Delete
  8. Mihavum payanulla pathivu nantri nanbare...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் .கருத்துக்கும் நன்றிகள் பல ...நண்பரே

      Delete