Saturday, 6 October 2012

பிறமொழிக்கு இணையான தமிழ்ச் சொற்கள்.......


நாம்  அன்றாடம் பேசும் மொழியும் உண்மையான தமிழ் மொழியும் உங்களுக்காக நண்பர்களே !





பிறமொழி                   தமிழ்மொழி
டிரேடர்ஸ்                      வணிகர்
ஆபத்து                               அல்லல்
ஆமோதி                              வழிமொழி
ஆரம்பம்                              தொடக்கம்
ஆரோக்கியம்                          நலம்
ஆயுள்                                வாழ்நாள்
ஆஸ்தி                               செல்வம்
இந்திரன்                              வேந்தன்
இஷ்டம்                               விருப்பம்
உத்தேசம்                       மதிப்பு
உத்தியோகம்                          அலுவல்
உபகாரம்                              நன்றி, உதவி
உற்சாகம்                       ஊக்கம்
உற்சவம்                              திருவிழா
உஷ்ணம்                       வெப்பம்
கஷ்டம்                               துன்பம்
கசாயம்                               கருக்கு
கிரீடம்                                முடி
கிருகப்பிரவேசம்                புது வீடு புகல்
சக்கரவர்த்தி                           மாவேந்தன்
சக்தி                                  ஆற்றல்
சகஜம்                                வழக்கம்
சகுனம்                                குறி
சகோதரர்                       உடன்பிறப்பு
சங்கடம்                               இடர்பாடு
சங்கீதம்                               இசை
சப்தம்                                ஓசை
சத்தியம்                               உண்மை
சந்திப்பு                               கூடல்
சந்திரன்                               நிலா
சந்தேகம்                              ஐயம்
சந்தோஷம்                     மகிழ்ச்சி
சந்நியாசி                       துறவி
சம்பந்தம்                       தொடர்பு
சம்பூரணம்                      முழுநிலா
சமாச்சாரம்                      செய்தி
சமுத்திரம்                      கடல்
சரணம்                                அடைக்கலம்
சன்மார்க்கம்                           நல்வழி
சாதம்                                 சோறு
சாதாரணம்                      பொதுவகை
சிநேகிதம்                       நட்பு
சீக்கிரம்                               சுருக்கு
சுத்தம்                                துப்புரவு
சுபாவம்                               இயல்பு
சுயமாய்                               தானாய்
சுரணை                               உணர்ச்சி
சுவாசம்                               மூச்சு
சேவை                                தொண்டு
ஞானம்                               அறிவு
ராஜா                                  அரசன்
ஆத்மா                               ஆன்மா
லசஷம்                               இலக்கம்
அஷ்டம்                              எட்டு
கோட்டி                               கோடி
நௌகு                               நாவாய்
மனஸ்                                மனது
வர்ணம்                               வண்ணம்
பர்ப்பட                               அப்பளம்
அம்பா                                அம்மை
ஆமாத்ய                              அமைச்சன்
ரங்க                                  அரங்கம்
ஹரா                                 ஆரம்
லோக                                 உலகம்
கந்தா                                 கந்தை
கால                                  காலம்
கோஷ்ட                              கோட்டம்
சங்க                                  சங்கம்
ஜட                            சடம்
ஜடா                                  சடை
சதுர்                                  சதுரம்
சர்க்கரா                               சருக்கரை
ஜீரக                                  சீரகம்
தண்ட                                தண்டம்
தாஹ                                 தாகம்
தாடிகா                                தாடி
நாகரிக                                நாகரிகம்
நாடக                                 நாடகம்
பட்டண                               பட்டணம்
பண்டித                               பண்டிதன்
பாண்ட்ய                              பாண்டியன்
பிண்ட                                பிண்டம்
மாஸ                                 மாதம்
பிளைவுட் சாப்                        பலகைக் கடை
சூமார்ட்                               காலணியகம்
ரைஸ் மண்டி                          அரிசி மண்டி
மியூசிக்கல்ஸ்                           இசையகம்
ஆயில் ஸ்டோர்                 எண்ணெய் அங்காடி
டிராவல்ஸ்                      செலுகை ஏற்பாட்டகம்
ஸ்டீல் பைப்ஸ்                  இரும்புக் குழாய்
டிரேடர்ஸ்                      வணிகரகம்
ஜுவல்லரி                      நகையகம்
பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ்        ஞெகிழித் தொழிலகம்
இன்ஜினியரிங்                   பொறியியல்
கன்ஸ்ட்ரக்‌ஷன்                  கட்டுமானம்
கெமிக்கல்ஸ்                           வேதிப் பொருள்
நாமம்                          நெடும்பட்டை
நாசி                           மூக்கு
புருசன்                         துணைவன்
வார்த்தை                       சொல்
சம்புத்தீவு                      நாவலம் பொழில்
நட்டம்                         இழப்பு
வருசம்                         ஆண்டு
சீரணம்                         செரிமானம்
திருப்தி                        பொந்திகை
தந்திரம்                        வலக்காரம்
சுத்தம்                          துப்புரவு
சத்தியம்                        உண்மை
நிசம்                           வாய்மை
வாஸ்தவம்                      மெய்மை
பசு                            கோ
பெளர்ணமி                     வெள்ளுவா
அமாவாசை                           காருவா
விதி                           நெறி
ஞாபகம்                        நினைவு
அலங்காரம்                            அணி
நியாயம்                        முறை
ஆதி                           முதல்
வயது                          அகவை
உதாரணம்                      எடுத்துக்காட்டு
தாமிரபரணி                            பொருநை
அங்கம்                               உறுப்பு
அத்தியாவசியம்                 இன்றியமையாதது
அசாத்தியம்                           கூடாமை
அதிசயம்                              வியப்பு
அதிர்ஷ்டம்                            ஆகூழ்
அந்தரங்கம்                            மறைமுகம்
அபராதம்                      தண்டம்
அபிவிருத்தி                           மேம்பாடு
அபூர்வம்                       அருமை
அர்ச்சனை                      தொழுகை, போற்றி
அர்த்தம்                              பொருள்
அவசரம்                              விரைவு
அவசியம்                             தேவை
அற்புதம்                              மருட்கை
அன்னசத்திரம்                         சோற்றுமடம்
அந்நிய                               அயல்
அனாவசியம்                          தேவையின்மை
அனுபவி                              நுகர், பட்டறி
அனுபவம்                      பட்டறிவு
அத்தா                                அத்தை
கச்ச                                  கச்சை
கசட, கசட                     கசடு
காவ்                                  காவு
கொக்கை                       கொக்கு
கக்கூசு                                கழிப்பறை
பம்பளிமாசு                            பப்பாளிப்பழம்
துட்டு                                 பணம்
திருக்கு                               தாழ்ப்பாள்
ரோந்து                               சுற்றுக்காவலர்
லாந்தர்                                விளக்கு
பீரோ                                 நெடும்பேழை
அலமாரி                              நெடும்பேழை
சாவி                                  திறவுகோல்
சன்னல்                               சாளரம், பலகணி, காலதர்
பாதிரியார்                      சமய போதகர், திருத்தந்தை
பேனா                                தூவல்
கடுதாசி                            தாள்...............
நன்றி ..அடுத்த பதிப்பும் தமிழை பற்றியாக தான் இருக்கும் ..இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் சிந்திப்போம் என்றும் உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<


14 comments:

  1. பசு தானே தமிழ் வார்த்தை? கோ சமஸ்க்ரிதம் ஆச்சே!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ .கேர் தான் சுத்த தமிழ் வார்த்தை. சமஸ்கிரதம் என்பது எனக்கு தெரியவில்லை சகோ ..காத்துருங்கள் சகோ ஆராய்ந்து வருகின்றேன்

      Delete
  2. டெல்லியில் கோ-மூத்ரா விற்கிறார்கள்; கான்சருக்கு மற்றும் எல்லா வியாதிக்கும் நல்ல மருந்து என்று!

    கோ-மாதா
    பசு-அம்மா

    ReplyDelete
    Replies
    1. ///டெல்லியில் கோ-மூத்ரா விற்கிறார்கள்; கான்சருக்கு மற்றும் எல்லா வியாதிக்கும் நல்ல மருந்து என்று!

      கோ-மாதா
      பசு-அம்மா//// நன்றி சகோ .உங்களின் கருத்துக்கு

      Delete
  3. பயனுள்ள பதிவு சகோ. இப்படியான சொற்களைத் தொகுத்து ஒரு இணைய அகராதியை எவரேனும் உருவாக்கித் தந்தால், பதிவர்கள் பலருக்கும் பயன் தரக் கூடியதாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. /// பயனுள்ள பதிவு சகோ. இப்படியான சொற்களைத் தொகுத்து ஒரு இணைய அகராதியை எவரேனும் உருவாக்கித் தந்தால், பதிவர்கள் பலருக்கும் பயன் தரக் கூடியதாக இருக்கும்//// ம்ம் ஆமாம் ..நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. அப்போ இதெல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லையா???

    ReplyDelete
    Replies
    1. // அப்போ இதெல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லையா???//// ஹ ஹ ஹ நம்மை பொறுத்த வரை இதெல்லாம் தமிழ் சொற்கள் என்று நினைத்து கொண்டு இருந்தோம் ஆனால் உண்மை இதுதான் ..நன்றி சகோ உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  5. உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது. அப்படியே அகர வரிசையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி சகோ ..உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ...

      Delete
  6. பிறமொழியாஆஆஆ? நம்பவே முடியலை.... பிறமொழிக்குப் போனவையாக இருக்கும்னு நினைக்கிறேன்...
    நல்ல பகிர்வு....

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹ ஹ ...உங்களின் கருத்துக்கு நன்றி enrenrum16

      Delete
  7. Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ முனைவர்.இரா.குணசீலன்

      Delete