Monday, 22 October 2012

இந்தியாவிலேயே இதுதான் முதல்ல !!!!


இந்தியாவிலேயே இதுதான் முதல்ல !!!!

என்னுடைய நெருங்கிய மாற்று மத நண்பர்கள் ..என்னிடம் கேக்கும் கேள்வி . " மாப்ள எப்படா இந்தியாவுல இஸ்லாமிய மார்க்கம் பரவுச்சுனு " .நானும் என்னென்னமோ கூறி பார்த்தேன் ..யாரும் சரியாவே நம்பல..அப்பறம் தான் எனக்கு தெருஞ்சது இந்தியாவுல கட்டுன முதல் பள்ளிவாசல் தெரிஞ்சா ..இஸ்லாமிய மார்க்கத்தின் இந்திய வரலாறு தெரியும்னு தோனுச்சு ...அப்பறம்......... கீழ பொறுமையா படிங்க புரியும் .......






சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு கனவில் வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி (ஸல்) அவர்களை பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபி (ஸல்) அவர்களை சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் அவர்கள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.

பின் இந்தியாவில் இஸ்லாம் மதத்தை பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (Port of Zabar, Yeman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

ஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசுதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார்....

இவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.,,,..அந்த மசூதீயில் ..மசூதியின் தோற்றம் கல்வெட்டின் மூலம் பொறிக்கப்பட்டுள்ளது .....

கட்டுமான அமைப்பு >>>>>


இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது....இஸ்லாத்தை முழுமையாக அறியாததால் . இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசசூதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது...முழுமையான இஸ்லாத்தின் அடிப்படையில் இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது). இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது........
இந்த விஷயத்தை என் நண்பர்களுக்கு கூறின பிறகுதான் ..அவர்கள் தெளிவு பெற்றார்கள் ..நானும் தான் ...................
நன்றி நண்பர்களே ! அடுத்த பதிப்பில் சந்திக்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<


8 comments:

  1. உண்மையில் இந்தியாவுக்கு எவ்வாறு இஸ்ஸாம் பரவியது. கட்டப்பட்ட மசூதியின் வரலாறுகலையும், விளங்காத சகோதரருக்கு விளங்க வைத்ததும்....இது ஒரு பெரிய தியாகம் என்றால் அதை மறக்க, மறுக்க முடியாத விடையம் அருமையாக ஆக்கங்கள் வரையப்பட்டு தெளிவு பெற போதுமான விஷையங்கள் உள்ளடங்கப்பட்டிருக்கிறது ஜஷாக்கல்லாஹூ ஹய்ரா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ..தொடர்ந்து உங்களின் இந்த ஆதரவுக்கு .மிக்க மகிழ்ச்சி

      Delete
  2. சில திருத்தங்கள் ரினாஸ்
    //சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். //

    எட்டாம் நூற்றாண்டு அல்ல ஏழாம் நூற்றாண்டு

    //மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார்....//

    மசூதி கட்டப்பட்டதாக கூறப்படும் ஆண்டு கி.பி. 629

    ஆனால் உண்மையில் அங்கே மசூதி அப்பொழுது கட்டப்படவில்லை . அங்கே இருந்த புத்த மத கோயிலைத்தான் இசுலாமியர்கள் வழிபாட்டிற்கு கொடுத்தார்கள் என்று கூறப்படுகிறது.

    இதில் மேலும் சில கட்டுக்கதைகள் உள்ளன. அதை நீங்களே சில காலத்திற்கு பிறகு தெரிந்து கொள்ளலாம்.
    http://www.keralatourism.org/muziris/cheraman-juma-masjid.php

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோசம் சகோ தவறுகளை சுட்டி கான்பித்தர்க்கு நன்றி உங்களின் இந்த தெளிவான சான்றுக்கு ரொம்பவும் நன்றி சகோ ....தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

      Delete
  3. அருமையான தகவல்.. எனக்கு இன்று தான் தெரியும் ... நன்றி நன்றி

    நம்ம கடையில் இன்று
    http://tamilyaz.blogspot.com/2012/10/take-off.html

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கு நன்றி சகோ

      Delete
  4. நல்ல தகவல் பகிர்வு.... தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி சகோ

      Delete