Monday, 29 October 2012

சும்மா குடுக்குராங்கடோய் .......................!!!!!


நண்பர்களே !இன்று நான் என்ன கூற வந்து இருக்கிறேன் என்றால் ...நான் கண்ட ஒரு சம்பவமும் .அதனின் வரலாறும் ....
நான் பொறந்தது வளர்ந்தது    இருப்பது எல்லாம் கோயம்புத்தூர் என்பது  எல்லோருக்கும் தெரியும் தெரியாத நபர்களுக்கும் இப்ப தெரிந்து இருக்கும் ....ஒரு நாள் நான் கல்லூரி விடுமுறை அன்று எங்க நண்னத்தா[தாத்தா] கடைக்கு சென்று இருந்தேன் .துணி கடை ..அப்பொழுது கடை வாசலில் ..பொழுது போவதற்காக ..வெளியே உட்கார்ந்து பராக் பார்த்து கொண்டு இருந்தேன்...அப்பொழுது வேறொருஊரில் இருந்து .ஒரு குடும்பம் ..நடந்து வந்து கொண்டு இருந்தது .அப்போது எங்க கடைக்கு அருகில் .வந்த அந்த குடும்ப்பத்தார் ...ஏன்ப்பா கொஞ்சம் குடிகுரதுக்கு தண்ணீர் குடுங்கப்பா .என்று  கேட்டார் நானும் உள்ள இருந்து ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு போய் குடுத்தேன்...வாங்கி குடித்தவருக்கு ஒரே மகிழ்ச்சி ...குடித்தவுடன் அவர் அருகில் இருந்தவரிடம் கூறின வார்த்தை ..இங்க பாருடா  .இளநீரை சும்மா குடுகுராங்கடோய்.....என்று உரக்க கூறினார் ..கோயம்பத்தூர் சிருவாணினா சும்மாவா ?   சரி அந்த சிரிவானியின் வரலாறை பார்ப்போமா ?







சிறுவாணி நதி கோயம்புத்தூர் நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்றும், உலகில் மிக சுவையான தூய்மையான குடிநீர் மூலங்களில் ஒன்றான,நதியாகும்.கேரளாவின்பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு தாலுகாவில் உள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில்துவங்குகிறது. இது பவானி ஆற்றின் துணைநதியாகும்... ....

தமிழ்நாட்டில் ..அனைத்து மக்களுக்கும் மிக பிடித்த .இடமான .கோவை நகரின் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்ற ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சிறு நீர்த்தேக்கம், வளர்ந்து வந்த நகரின் தேவைகளை ஈடுகட்ட முடியாத நிலையில், 1969ஆம் ஆண்டு முதல் தமிழக அரசும் கேரள அரசும் ஆய்வுகள் நடத்தி ஆகஸ்ட்  19,1973அன்று ஓர் புதிய அணையைக் கட்ட உடன்பாடு கண்டனர்.இதன்படி கோவை நகரின் வீட்டு,சமூக மற்றும் தொழிற்சாலை பயனிற்கு தேவையான நீரைத்தேக்கிட (1300 மில்லியன் கனஅடி)கேரள அரசு சிறுவாணி அணையைக் கட்டி அதற்கான கேரள மாநில நிலத்தை தமிழகத்திடம் பராமரிப்பிற்கு ஒப்படைத்தது.[1]இந்த அணையின் இருபுறமுள்ள வாயில்களும் முறையே தமிழக மற்றும் கேரள கட்டிட வடிவமைப்பைக் கொண்டு அழகாக விளங்குகின்றன.இது கோவை மற்றும் பாலக்காடு நகர மக்களின் விடுமுறை பயணத்தலமாக விளங்குகிறது.....

கோவை குற்றாலம் 

இது சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு அனுமதி கிடையாது......
நன்றி நண்பர்களே ! இனி அடுத்த பதிப்பில் சந்திக்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<


9 comments:

  1. நல்ல தகவல் சகோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ உங்களின் வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி

      Delete
  2. சிறுவாணி நதி பது தகவல் ...

    ReplyDelete
  3. சலாம் அலைக்கும் ..சகோ
    நானும் சிறுவாணி பத்தி கேள்விபட்டுயிருக்கிறேன்
    ஆனா தண்ணிய குடித்ததில்லை ....
    ஓபனிங் இன்ட்ரோ அட்டகாசமாக கொடுத்து பதிவ இப்படி
    சப்புன்னு [அதிகமான செய்திகள் இல்லாமல்] முடித்துவிட்டீர்களே ..!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ .....உங்களின் கருத்துக்காக ..இன்னும் அதிக விசயத்துடன் அடுத்த பதிப்பில் சந்திக்கிறேன் சகோ

      Delete
  4. Replies
    1. நானும் ரசித்தேன் .உங்களின் கருத்தை

      Delete
  5. ஒரு பெரிய வரலாற்று பதிவைப் படிக்க மனதைத் தயார்படுத்திகொண்டே வாசித்தால் ...ரத்தினச்சுருக்கமாக முடிச்சிட்டீங்க....:(( பலருக்கும் தெரியாத தகவல்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹ ஹ ..நன்றி சகோ உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete