அஸ்ஸலாமு அழைக்கும் ....
நான் ஒரு மறுமைப் பயணி
நான் ஒரு மறுமைப் பயணி’ என்ற எண்ணம் ஒருவருடைய உள்ளத்தில் வேரூன்றி விட்டால் அதற்குப் பிறகு அவருடைய பார்வையும் செயலுமே அலாதியாக மாறிவிடும்.
ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு மறுமை வாழ்வில் எத்தகைய மதிப்பும் இல்லையென்று தெரிந்தால், மற்றவர்களின் பார்வையில் அது எத்தனை பகட்டாக, மினுமினுப்பாக இருந்தாலும் அவரைப் பொறுத்தவரை அந்தப் பொருள் இவ்வுலகிலும் இழிவானதே.
அதுபோன்றே ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு மறுமையில் மதிப்பு உண்டு என்றால் அந்த மறுமைப் பயணியைப் பொறுத்தவரை, மற்றவர்களின் ப £ர்வையில் அது எத்தனை இழிவானதாக இருந்தாலும் அப்பொருள் இங்கும் மதிப்பு வாய்ந்ததே.
சத்தியத்தை மறுப்பதற்கும் அசத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கும் மனிதன் இன்று தன் நாவன்மையைப் பயன்படுத்துகிறான். ஒருவருடைய வாதத் திறமையால் நீதி அநீதியாகிறது; அநீதி நீதியாகிறது. ஆனால் இவையெல்லாம் மறுமையில் அவனுக்கு எந்தப் பயனையும் தராது.
வலிமையுள்ளவன் இன்று பலவீனமான மக்களைக் கசக்கிப் பிழிந்து அதன் மூலம் தன் சொகுசு வாழ்வுக்கு வழிதேடிக் கொள்கிறான். எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்தாலும் அதை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தனக்கு வலிமை இருப்பதாக எண்ணி மகிழ்கிறான். ஆனால் மறுமையில் அவனுடைய வலிமை இம்மியளவும் அவனுக்குத் துணை வராது.
செல்வத்தையும் சொத்து சுகங்களையும் பெற்ற மனிதன் செருக்குற்று அகம்பாவக் கோட்டை கட்டுகிறான். அதில் தன் ஆணவக் கொடியைப் பறக்க விடுகிறான். ஆனால் மறுமையில் அவனுடைய சொத்துகளும் செல்வமும் எத்தகைய உதவியையும் அளிக்காது என்பதை அறிந்து கொள்வான்.
நரகவாசிகளின் வேதனைப் புலம்பல்களை இறைவன் தன் திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான். நரகவாசிகளின் கூற்றாக ஓரிடத்தில் குர்ஆன் கூறுகிறது: ‘‘இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனையும் அளிக்கவில்லையே! என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடி ந்துபோய் விட்டதே!’’ (குர்ஆன் 69 : 28 29)
நம் வாழ்க்கை இவ்வுலகோடு சரி என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஓர் இறை நம்பிக்கையாளன், தான் மறுமைவரை போக வேண்டியிருப்பதை எண்ணி இறையச்சத்தோடு வாழ்கிறான். இந்த மறுமைப் பயணி ஒருபோதும் நரகத்துக்குரிய செயல்களைச் செய்ய மாட்டான். சொர்க்கத்தை நோக்கியே அவனுடைய சிறகுகள் விரியும்......அல்லாஹுதாலாவின் உதவியால் நான் ஒரு மறுமை பயணியா ? என்று தெரியவில்லை அல்லாஹுதால உங்கள் அனைவரையும் ஒரு நல்ல மறுமை பயணியாக மாற்ற அருள் புரிவானாக
அதுபோன்றே ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு மறுமையில் மதிப்பு உண்டு என்றால் அந்த மறுமைப் பயணியைப் பொறுத்தவரை, மற்றவர்களின் ப £ர்வையில் அது எத்தனை இழிவானதாக இருந்தாலும் அப்பொருள் இங்கும் மதிப்பு வாய்ந்ததே.
சத்தியத்தை மறுப்பதற்கும் அசத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கும் மனிதன் இன்று தன் நாவன்மையைப் பயன்படுத்துகிறான். ஒருவருடைய வாதத் திறமையால் நீதி அநீதியாகிறது; அநீதி நீதியாகிறது. ஆனால் இவையெல்லாம் மறுமையில் அவனுக்கு எந்தப் பயனையும் தராது.
வலிமையுள்ளவன் இன்று பலவீனமான மக்களைக் கசக்கிப் பிழிந்து அதன் மூலம் தன் சொகுசு வாழ்வுக்கு வழிதேடிக் கொள்கிறான். எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்தாலும் அதை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தனக்கு வலிமை இருப்பதாக எண்ணி மகிழ்கிறான். ஆனால் மறுமையில் அவனுடைய வலிமை இம்மியளவும் அவனுக்குத் துணை வராது.
செல்வத்தையும் சொத்து சுகங்களையும் பெற்ற மனிதன் செருக்குற்று அகம்பாவக் கோட்டை கட்டுகிறான். அதில் தன் ஆணவக் கொடியைப் பறக்க விடுகிறான். ஆனால் மறுமையில் அவனுடைய சொத்துகளும் செல்வமும் எத்தகைய உதவியையும் அளிக்காது என்பதை அறிந்து கொள்வான்.
நரகவாசிகளின் வேதனைப் புலம்பல்களை இறைவன் தன் திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான். நரகவாசிகளின் கூற்றாக ஓரிடத்தில் குர்ஆன் கூறுகிறது: ‘‘இன்று என்னுடைய செல்வம் எனக்கு எவ்விதப் பயனையும் அளிக்கவில்லையே! என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடி ந்துபோய் விட்டதே!’’ (குர்ஆன் 69 : 28 29)
நம் வாழ்க்கை இவ்வுலகோடு சரி என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஓர் இறை நம்பிக்கையாளன், தான் மறுமைவரை போக வேண்டியிருப்பதை எண்ணி இறையச்சத்தோடு வாழ்கிறான். இந்த மறுமைப் பயணி ஒருபோதும் நரகத்துக்குரிய செயல்களைச் செய்ய மாட்டான். சொர்க்கத்தை நோக்கியே அவனுடைய சிறகுகள் விரியும்......அல்லாஹுதாலாவ
Tweet |
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ....தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Deleteஅலைக்கும் ஸலாம் வரஹ்...
ReplyDeleteசகோ.ரினாஷ் கான்,
அருமையான பதிவு சகோ.
//நான் ஒரு மறுமைப் பயணி’ என்ற எண்ணம் ஒருவருடைய உள்ளத்தில் வேரூன்றி விட்டால் அதற்குப் பிறகு அவருடைய பார்வையும் செயலுமே அலாதியாக மாறி...//
....இங்கே, சக மனிதனுக்கு ஓர் இடைஞ்சல்/பாவம்/குற்றம் ஏதும் செய்தால் மறுமையில் நரகில் தண்டனை நிச்சயம் .... என்ற பயம் வந்து விடும்..!
அப்புறம், சக மனிதனுக்கு நல்லதை மட்டுமே அனைவரும் நாடுவோம். உலகம் முழுக்க சமாதானமும் மகிழ்ச்சியும் மட்டுமே நிலவும்..! இப்படியாக, உலக அமைதிக்கு வித்திடும் ஒரு மார்க்கம் இஸ்லாம் என்பதே உண்மை..!
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ....தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசகோதரர் ரினாஷ் கான்,
மிக அழகான பதிவு. ஜசாக்கல்லாஹ். தொடர்ந்து சிறப்பாக செயல்பட பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ....தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Deleteசலாம் சகோ....
ReplyDeleteஅருமையான பதிவு சகோ....தொடருங்கள்...
இன்ஷா அல்லாஹ்..தொடர்கின்றேன் .நீங்களும் என்னை பின் தொடருங்கள் சகோ
Deleteஇஸ்லாமிய பெண்மணி தளத்தில் இருந்து இங்கே வருகிறேன். நீங்கள் என் கேள்விகளுக்கு பதில் தருவதாக கோரினீர்கள். நான் என் தளத்தில் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். வந்து பார்த்து பதில் கொடுக்க முடிந்தால் கொடுங்கள். அவ்வாறாக நமது பகிர்வை ஆரம்பிப்போம். நானும் உங்கள் பதிவுகளைப் பார்த்து விட்டு புதுக் கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேட்கிறேன்.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ்....கண்டிப்பாக சகோ
Deleteமாஷா அல்லாஹ் சகோ. நல்ல பதிவு. நினைவூட்டலுக்கு ஜசகல்லாஹைர்.
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ....தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Delete