மறந்து போன பழந்தமிழர் விளையாட்டுக்கள்.....
உங்களுக்கு நினைவூட்ட வந்துள்ளேன் நண்பர்களே ......
தொலைகாட்சிகளும் கணிணியும் திரைப்படங்களும் நம் நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாம் மறந்து போன சில பழந்தமிழர் விளையாட்டுகளை நினைவு கூற விரும்புகிறேன். பொதுவாக இவை நட்பு /அன்பு வலுப்பெற உதவுபவை.
1 . புனல் விளையாட்டு :
நீரில் விளையாடுவது. சில தருணம் நீரில் அடித்துச் செல்லப்படும் தலைவியை தலைவன் காப்பாற்றுவதும் இதில் அடங்கும்.
2 . பந்து விளையாட்டு :
பழங்காலத்தில் ஆண்கள் தேங்காய் நார் , பஞ்சு , சிறிய அளவிலான இரும்பு களிமண் முதலியவற்றில் ஆடினர். பெண்கள் பூக்களைக் கொண்டு ஆடினர். குதிரையில் பயணம் செய்தும் பந்து விளையாடினர். இப்போது விளையாடும் போலோ என்கிற விளையாட்டு இந்த வகையைச் சார்ந்தது.
3 . அசதியாடல் :
ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்து விளையாடுவது
4 . அம்மானை
பெண்கள் குழுக்களாக வினா, விடைகளை பாடல்களாகப் பாடப்படுவது அம்மானை. பாடலின் முடிவில் அம்மானை என்ற சொல் இடம் பெற வேண்டும்.
5 . ஊசல்
ஊஞ்சல் விளையாட்டு. ஆலம் விழுது முதல் அம்பொன் வரை விளையாட்டுக் கருவிகளாக பயன்பட்டன.
6 . கழங்கு
ஒரு காயைத் தூக்கி போட்டு பிடித்தாடும் ஆட்டம். புளியங்காய், சிறு கற்கள் முதலியன கொண்டு ஆடப்படுவது.
7 . கண் புதைந்து ஆடுதல்
8 . கறங்கு
கறங்கு என்றால் சுழற்சி. பனை ஓலையை சீவி வெட்டி காற்றாடி போல செய்து காற்று வரும் திசையை நோக்கி ஓடினால் விசிறியைப் போல சுழற்றிக் கொண்டு விளையாடுவது.
9 . குரவை
பெண்கள் வட்டமாக கை கோர்த்து பாடி ஆடுவது
10. சிறு சோறாக்கல்
கூட்டாஞ் சோறு ஆக்கல்
11 . சிற்றில் செய்தல்
கடல் அல்லது ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுதல்
12 . வட்டு
பொருளை உருட்டி விளையாடும் ஆட்டம் ( தாயம் போல)
13 . ஏறுகோள் ஜல்லிக்கட்டு
14 . வள்ளை
உரலில் ஒரு பொருளைக் குத்திக் கொண்டு பாடும் ஒரு விளையாட்டு
15 . சதவி
பட்டம் விளையாடுதல் போன்ற ஒரு விளையாட்டு.
இப்போதெல்லாம் நாம் விளையாட கூட கணிணியை நாடுவதால் கண் கெடுவதோடு உடலும் கெடுகிறது. உடல் வலிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவ்விளையாட்டுக்களை இனியாவது ஆடத்
தொடங்கலாமா? யோசிச்சு சொல்லுங்க அடுத்த பதிப்பில் சந்திகின்றேன்! நன்றி நட்புடன் உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<
Tweet |
பயனுள்ள பதிவு நண்பரே படங்களுடன் தாங்கள் சொன்னவிதம் மிகவும் அருமை
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் .கருத்துக்கும் நன்றி சகோ...சில விளையாட்டுக்கு எனக்கு படங்கள் கிடைக்கவில்லை சகோ
Deleteஅன்பு நண்பரே தங்கள் மேலான பார்வைக்காக
ReplyDeleteபழந்தமிழர் விளையாட்டுகள் 36 என்ற இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்
http://www.gunathamizh.com/2009/06/36.html
பகிர்வுக்கு நன்றி
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபடங்களை தேட மிக சிரமப்பட்டிருப்பிர்கள் ...உங்கள் உழைப்பு படங்களில் தெரிகிறது.இன்னும் பல விளையாட்டுக்கள் உள்ளன.நாம்தான் மறந்துவிட்டோம்,மறைக்கிறோம்.
ReplyDeleteநமது கிளித்தட்டு விளையாட்டு இன்று தேசிய அளவில் ஆடப்படுகிறது.மேலும் அறிய http://tamilmottu.blogspot.in/2012/06/atya-patya.html.
நமது சிறு வயது விளையாட்டுக்கள் எனக்கு பாதுகாப்பு படையில் உதவியுள்ளது என்றால் பாருங்களேன்....
உண்மைதான் சகோ படங்களை தேட மிகவும் சிரமப்பட்டேன் ..சில விளையாட்டுகளுக்கு எனக்கு புகைப்படம் கிடைக்கவில்லை சகோ....
Deleteநன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
அருமை சகோ....இந்த விளையாட்டுக்களின் உண்மையான பெயரை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்...
ReplyDeleteநன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Delete