Follow by Email

Thursday, 4 October 2012

யாரப்பா இந்த மனுநீதிச்சோழன் ?


எல்லோருக்கும் இது தெரிந்த கதையே  இருந்தாலும் மறந்த நண்பர்களுக்கும் தெரியாத நண்பர்களுக்கும் 
அறிந்து கொள்ள ஒரு அலசல் ஆகும்..மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தில் உள்ள பல்வேறு சிலைகளில் கம்பீரமாக இருப்பது மனு நீதி சோழ சிலையாகும்...ஏன் இன்று இந்த மனுநீதி சோழன் போல ஆட்சி செய்யும் ஆட்ச்யாளர்கள் நம்நாட்டுக்கு இல்லை என்ற வருத்தத்துடன்.. உங்கள் நண்பன் நான் 
இந்த சிலை பின்னணியில் உள்ள வரலாறு பற்றி  உங்களுக்காக நினைவூட்ட வந்துள்ளேன்.....


  


 மனு நீதிச்சோழன் அல்லது மனுநீதி கண்டசோழன் என்பவன் நீதி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன்   ஆவான். வரலாற்றில் இவ்வாறு ஒரு மன்னன்  இருந்ததற்கான சான்று கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
எனினும் மிகப்பழமையான  மனுநீதிச்சோழன் கதை பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரிந்த கதை யாகும்.இக்கதை பள்ளிப்பாடப் புத்தங்களிலும் இடம் பெற்றுள்ளது. மனுநீதிச்சோழனது மகன் ஒரு நாள் தேரேறி ஊர் சுற்றக் கிளம்பினான்.அவனை அறியாமல் தேரின் சக்கரங்கள் ஏறி ஒரு பசுவின் கன்று இறந்து விட்டது.
இதைக்கண்ட தாய்ப்பசு மன்னன் அவை சென்று ஆராய்ச்சி மணியை முட்டி அடித்தது.  பசுவின் துயர் அறிந்த மன்னவன் தானும் தன் மகனை இழத்தலே தகும் என்று மந்திரியிடம் இளவரசனை தேரேற்றிக் கொல்ல உத்தரவிட்டான்.
மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டேன் என்று கூற மன்னனே தன் மகனை தேரேற்றிக்கொன்றான். சோழ நாட்டின் நீதி முறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச்சோழன் பற்றிக்கண்ணகி குறிப்பிடுவதாகச் சிலப்பதிகாரத்தில் இந்த கதை வருகிறது.
இக்கதை தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்துக்கும் நீதி முறை சார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன் பட்டு வருகிறது.  சோழன் நீதி தவறாதவன் என்பதால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச்சோழன் சிலை நிறுவப்பட்டுள்ளது.........இந்த மனுநீதி சோழனை நினைக்கும் பொழுது ரொம்ப பெருமையாக இருக்கிறது ஆனால் இன்று தலைவர்களும் .மக்களும் எப்படி இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது மனிதர்களிலயே மிகவும் மோசமானவன் நீதி தவறுபவன் இரட்டை முகமாக நடிப்பவன் ஆவான் .. 

நம் நபி[ஸல்] அவர்களே கூறியுள்ளார்கள் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்..  புகாரி ;  அத்தியாயம் 93, எண் 7179  

 ஒவ்வொரு மனிதனும் உண்மையாக இருக்கணும் ஆட்சி அதிகாரத்தில் 
உள்ளவர்கள் நீதி மறவாது நடக்கணும் .ஆனால் இன்று நடப்பதை பார்க்கும் பொழுது ..உங்களுக்கே தெரியும் நம் நாட்டில் என்ன நடக்குது என்று .......நன்றி நண்பர்களே !இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>ரினாஸ்<<<


26 comments:

 1. கதைகளிலும் சிலைகளிலும் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்!
  த.ம.8

  ReplyDelete
 2. சலாம் சகோ.ரினாஷ்...
  காமடி பதிவா... இல்லே சீரியஸ் பதிவா..?
  காமடி பதிவு என்றால் மேலே படிக்க வேண்டாம்.
  சீரியஸ் என்றால் அவசியம் படிங்கள்.

  ///அவனை அறியாமல் தேரின் சக்கரங்கள் ஏறி ஒரு பசுவின் கன்று இறந்து விட்டது.///---தன்னை அறியாமல் நிகழ்ந்த விபத்துக்கு மரண தண்டனையா..? இது அப்பட்டமான அநீதி.

  சொல்லப்போனால் அந்த மன்னன் மகன், தன்னை அறியாமல் ஒரு மனிதனையே தேர்க்காலில் இட்டு கொன்றிருந்தாலும்... தட் இஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்..!

  விபத்துக்கு நம் நாட்டு சட்டத்திலும் தண்டனை இல்லை. மன்னிப்பே உண்டு. இஸ்லாமிய சட்டத்திலும் மன்னிப்புதான். தண்டனை இல்லை.

  உண்மையில் மன்னன் மகன் அந்த கதையில் செய்ததது கொலை இல்லை. விபத்து. மனு நீதிச்சோழன் செய்ததுதான் கொலை..!

  நான் அந்நாட்டு நீதிபதி என்றால்... மகனை கொலை செய்த குற்றத்துக்காக... அந்த சோழ மன்னனை வேண்டுமானால்... தேர்க்காலில் இட்டு கொல்லுமாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருப்பேன்..! :-))

  ReplyDelete
  Replies
  1. ////நான் அந்நாட்டு நீதிபதி என்றால்... மகனை கொலை செய்த குற்றத்துக்காக... அந்த சோழ மன்னனை வேண்டுமானால்... தேர்க்காலில் இட்டு கொல்லுமாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருப்பேன்..! :-))///// அவசரப்பட்டு இந்த மாறி முடிவு பண்ணகூடாது சகோ ...கூழ் டௌன்

   Delete
  2. //விபத்துக்கு நம் நாட்டு சட்டத்திலும் தண்டனை இல்லை. மன்னிப்பே உண்டு. இஸ்லாமிய சட்டத்திலும் மன்னிப்புதான். தண்டனை இல்லை. //

   முஹம்மத் நீங்க ஒரு பாயிண்ட் மிஸ் பண்ணிடீங்க .. நான் பில் பண்ணிக்கிறேன் ...
   இழந்த குடும்பத்துக்கு பலகாரம் பண்ணனும் சாரி பரிகாரம் பண்ணனும் ... இழப்பீட்டு தொகை கொடுக்கணும் ...

   நெற்றி கண் லாம் திறக்க வேணாம் நா ..

   Delete
 3. மனு நீதி சோழன் எனப்படும் சோழன் குறித்து தமிழ் இலக்கியங்களில் குறிப்புக்கள் இருந்தனவா என தெரியாது, ஆனால் இலங்கையின் பழமையான மகாவம்ச நூலில் குறிப்புக்கள் உள்ளன, சோழர் பரம்பரையில் இருந்து வந்து இலங்கைத் தீவை ஆட்சி செய்த எல்லாள சோழனையே மகாவம்சம் மனுநீதி சோழனாக கூறுகின்றது. எல்லாளன் ஒரு பௌத்த மன்னன் என்றும், சோழர்களிலேயே மிகவும் சாந்த குணம் உடையவன், நீதி தவறாதவன் போன்று மகாவம்சன் சித்தரிக்கின்றது. தமது மகனை தேரில் ஏற்றிக் கொண்டதாகவும், பல பௌத்த பள்ளிகளைக் கட்டியதாகவும் கூறுகின்றது..

  http://en.wikipedia.org/wiki/Elara_(monarch)

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்களின் கருத்துக்கும் ..வருகைக்கும் சகோ

   Delete
 4. @ மு.ஆ

  //உண்மையில் மன்னன் மகன் அந்த கதையில் செய்ததது கொலை இல்லை. விபத்து. மனு நீதிச்சோழன் செய்ததுதான் கொலை..! //

  அது எப்படி விபத்து என அடித்து சொல்லுகின்றீர்கள் ...

  உதா. நீங்கள் வாகனம் செலுத்துகின்றீர்கள்.. அப்போது சிவப்பு விளக்கு எரிகின்றது, பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போது நீங்கள் உங்கள் வாகனத்தை பாதசாரிகள் மீது மோதினால் விபத்தா ?

  அதுவும் நீங்கள் குடித்துவிட்டு வண்டியை செலுத்தி இருந்தால், அதுவும் விபத்தா ?

  இப்போது நீங்கள் அதிபரின் மகன் என்று வைத்துக் கொள்வோம், விபத்து எனச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாமா ?

  ஆறறிவு உடைய நீங்கள் ஐந்தறிவு உடைய பிராணி மீது வாகனத்தைக் கொண்டு போய் தாக்கினால் அதுவும் விபத்தா ?

  கனடாவில் பல சாலைகளில் வாத்துக்கள், மான்கள் போன்றவை குறுக்கில் வரும் எனவும், நிதானித்து செல்லவும் என பலகைகள் இருக்கும், பல சமயங்களில் வாத்துக்கள் சாலையை அடைத்து நின்றுவிடும், அவற்றின் மீது நீங்கள் மோதிவிட்டால் அதுவும் கடும் குற்றமே. விபத்து எனச் சொல்லி தப்பிக்க முடியாது ...

  ஆனால் உயிருக்கு உயிர் என்பதில் எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அக்காலத்தில் அறிவு வளர்ச்சி குன்றியக் காலத்தில் அதுவே சட்டமாக இருந்தன, அந்த சட்டங்களை இப்போதும் நிலைநிறுத்த பலர் போராடி வருவது தனிக்கதை. ஆகவே எல்லாள சோழன் தம் மகனை கொன்று தண்டனை வழங்கியது தவறில்லை ( அக்கால நிலையில் ) என்றே நான் கருதுகின்றேன்.

  http://www.sinhalaheritage.org/concisemahavamsa.pdf

  ReplyDelete
  Replies
  1. ///ஆனால் உயிருக்கு உயிர் என்பதில் எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அக்காலத்தில் அறிவு வளர்ச்சி குன்றியக் காலத்தில் அதுவே சட்டமாக இருந்தன,////சரியாக கூறினீர்கள் சகோ

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 5. மனுநீதி சோழன் கதை முழுவதும் உண்மை. ஒத்துக்கொள்கிறேன்...
  ஒரே கேள்வி? அந்த சோழனுக்கு,"மனு" என்ற அடை மொழி ஏன்?

  மனுஸ்ம்ரிதிக்கும் இந்த சோழனுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?


  ReplyDelete
  Replies
  1. //"மனு" என்ற அடை மொழி ஏன்?//// இந்துக்களின் சாஸ்திரத்தில் மனு தர்மத்தில் .இந்த சோழனை பற்றி குரிபிடுவதால் என்று நினைகிறேன் ..பொறுங்கள் ஆராச்சி பண்ணி குரிபிடிகின்றேன் சகோ நம்பள்கி காத்து இருங்கள்

   Delete
 6. இ.செ

  ஏதாவது மறுப்பு சொல்லியே ஆக வேண்டும் என்றே கிளம்பி வருவது. பதிவில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது, என்ன கமெண்டில் உள்ளது என்றும் பார்ப்பது இல்லை. ம்ம்ம்.. இபப்டி இருந்தா வெளங்கிரும்..!

  //உதா. நீங்கள் வாகனம் செலுத்துகின்றீர்கள்.. அப்போது சிவப்பு விளக்கு எரிகின்றது, பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போது நீங்கள் உங்கள் வாகனத்தை பாதசாரிகள் மீது மோதினால் விபத்தா ? //
  ---விபத்து இல்லை. அறிந்து செய்ததால் கொலை.

  //அதுவும் நீங்கள் குடித்துவிட்டு வண்டியை செலுத்தி இருந்தால், அதுவும் விபத்தா ?//
  ---விபத்து இல்லை. போதையில் சிந்தனை தவறும், கண்ட்ரோல் இன்றி விபத்து நடக்கும் என்று அறிந்து செய்ததால் கொலை. (குடிப்பது எல்லாம் உங்கள் பழக்க வழக்கம் அல்லவா..? :-))


  //ஆறறிவு உடைய நீங்கள் ஐந்தறிவு உடைய பிராணி மீது வாகனத்தைக் கொண்டு போய் தாக்கினால் அதுவும் விபத்தா ?//
  ---விபத்து இல்லை. அறிந்து செய்ததால் கொலை. அதுவா வந்து விழலை அல்லவா..?

  //இப்போது நீங்கள் அதிபரின் மகன் என்று வைத்துக் கொள்வோம், விபத்து எனச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாமா ?//
  ---தவறு. தப்பிக்க கூடாது. கொலை என்றால் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

  //கனடாவில் பல சாலைகளில் வாத்துக்கள், மான்கள் போன்றவை குறுக்கில் வரும் எனவும், நிதானித்து செல்லவும் என பலகைகள் இருக்கும், பல சமயங்களில் வாத்துக்கள் சாலையை அடைத்து நின்றுவிடும், அவற்றின் மீது நீங்கள் மோதிவிட்டால் அதுவும் கடும் குற்றமே. விபத்து எனச் சொல்லி தப்பிக்க முடியாது ... //
  ---குற்றம் என்பது சரிதான். இங்கே சவூதியில் ஒட்டகம்.

  அப்புறம்.....

  //அது எப்படி விபத்து என அடித்து சொல்லுகின்றீர்கள் ... //---காரணம்... நான் எடுத்துப்போட்ட பதிவின் வரியில் ////அவனை அறியாமல்//// என்ற வாசகம் உள்ளதால்..!

  இதெல்லாம்தான் விபத்து...

  உதா. நீங்கள் வாகனம் செலுத்துகின்றீர்கள்.. அப்போது பச்சை விளக்கு எரிகின்றது, எனவே தொடர்ந்து அதே வேகத்தில் செல்ல... பாதசாரி ஒருவர் திடும் என குறுக்கே கடக்கும் போது பிரேக் போட்டும் மார்ஜினே இல்லாத நிலையில் நீங்கள் உங்கள் வாகனத்தில் பாதசாரி வந்து விழுந்தால் விபத்து. கொலை அல்ல.

  அதுவும் நீங்கள் குடிக்காமல் வண்டியை செலுத்தி இருந்தால், அது விபத்துதான்.

  இப்போது....

  நீங்கள் பதில் சொல்லவேண்டியது இதுதான்..!

  மனு நீதி மன்னன் மகன் தேரில் போன ரோட்டில் சிகப்பு விளக்கு எரியும் போதுதான் கோமாதாவின் புள்ளை பெடஸ்ட்ரியன் கிராஸில் நடந்து போனதா..?

  மனு நீதி மன்னன் மகன் தேரில் போகும்போது குடித்து இருந்தானா..?

  சாலையில் வழிவிடாமல் அடைத்து நின்று கொண்டு இருந்த கோமாதா புள்ளை மீது வேணுன்னே மோதினானா..?

  ///அவனை அறியாமல்///---என்றால் இதற்கு என்ன அர்த்தம்..???

  ReplyDelete
 7. ///ஒரே கேள்வி? அந்த சோழனுக்கு,"மனு" என்ற அடை மொழி ஏன்?

  மனுஸ்ம்ரிதிக்கும் இந்த சோழனுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?///


  என்ன டாக்டர் இப்படி கேட்டு புட்டீங்க...?


  உங்களுக்கு அந்த கதையில் இளங்கோவடிகள் சொல்ற உள்குத்து மேட்டர் நிஜமாலுமே புரியலையா சகோ.நிம்பள்கி..? :-))

  மனு தர்மம் என்ன சொல்லும்னா... பிராமின் செய்ற குற்றத்துக்கு தண்டனை இல்லை. ஆனால், அதே குற்றத்தை மற்ற மூன்று வர்ணங்கள் செய்தால் கடும் தண்டனை உண்டு. இங்கே கொலைக்குற்றத்தில் ஈடுபட்டது ஒரு ஷத்ரியன்.

  இப்போ... அந்த மன்னன் மகன் கொன்றது யாரை..? மனிதனை அல்ல...! /////ஒரு பசுவின் கன்று////// ஒன்றை..! அதாவது.... மனிதனை விட உயர்வான 'கோமாதாவின் புள்ளை'யை...!

  எனவேதான் அந்த தண்டனை..! இதுவே ஒரு மானை வேணும்னே கொன்று பொட்டு விட்டு வந்து இருந்தாலும்... அவனின் வேட்டை திறனை பற்றி புகழ்ந்து பாடி எழுதி இருப்பார் இளங்கோவடிகள்..!

  ஒரு வாதத்துக்கு வேணும்னே ஒரு பசுவை ஒரு மனிதன் கொன்றாலும்... மரண தண்டனை என்ற குற்றம் எந்த நாட்டு சட்டத்திலும் இல்லை. நம் நாட்டில் மோடி பிரதமராக வந்தால்... ஒருவேளை இந்த மனுநீதி சட்டம் வரக்கூடும்..!

  ReplyDelete
 8. //மனு நீதி மன்னன் மகன் தேரில் போன ரோட்டில் சிகப்பு விளக்கு எரியும் போதுதான் கோமாதாவின் புள்ளை பெடஸ்ட்ரியன் கிராஸில் நடந்து போனதா..?

  மனு நீதி மன்னன் மகன் தேரில் போகும்போது குடித்து இருந்தானா..?

  சாலையில் வழிவிடாமல் அடைத்து நின்று கொண்டு இருந்த கோமாதா புள்ளை மீது வேணுன்னே மோதினானா..? //

  இதுக் குறித்து நீங்கள் ஆராயமாலயே கருத்துச் சொன்னது மட்டும் நியாயமா சொல்லுங்கள் மு.ஆ அவர்களே !!!

  முதலில் இக்கதை நடந்ததா ? அடுத்து நடந்திருந்தால் அதற்கான ஆதாரம், ஆதாரத்தில் என்ன சொல்லி இருக்கின்றது என்பவை போன்றவை ஆராய வேண்டி உள்ளது ...

  எல்லாளே சோழனின் மகன் தேரோட்டும் போது அவனை அறியாமல் கன்றின் மீது ஏற்றினானா ? அல்லது ஆநிரைகள் நிறைந்த பகுதியில் நிதானமின்றி தேரைச் செலுத்தினானா என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவை... அப்புறம் ஒரு முடிவுக்கு வருமோ ?

  ReplyDelete
 9. //மனுஸ்ம்ரிதிக்கும் இந்த சோழனுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?//

  எனக்குத் தெரியவில்லை .... தமிழகக் குறிப்புக்களில் அதுக் குறித்து இருக்கா எனத் தெரியவில்லை ...

  சிங்கள மகாவம்சத்தில் பௌத்த சட்டங்களுக்கு இணங்க ஆட்சி செய்தவன் என்பதால் தர்மராஜா என்றழைக்கப்பட்டான் எல்லாள சோழன். தமிழர்கள் பௌத்தர்களாக இருக்கும் போது '' பௌத்த தருமம் '' என்பது வைதிகத்துக்கு தாவிய பின் தருமம் மனுவாகி இருக்கக் கூடுமோ ? வரலாற்றுப் புலிகள் பதில் சொல்லக் கடவ !

  ReplyDelete
 10. //எல்லாளே சோழனின் மகன் தேரோட்டும் போது அவனை அறியாமல் கன்றின் மீது ஏற்றினானா ? //

  ////அவனை அறியாமல்////---இப்படித்தான் இந்த பதிவில் சொல்லி இருக்கார். அதற்கான பின்னூட்டம்தான் என்னுது..!

  ///அவனை அறியாமல்///---என்றால் இதற்கு என்ன அர்த்தம்..??? ===என்ன என்று கேட்டேன். பதில் இல்லை..! :-))

  அறிந்து நடந்து இருந்தால்தான் அது கொலை..! அவ்ளோதான் என் தரப்பு வாதம் குளோஸ்..! பை... பை...!

  //ஆநிரைகள் நிறைந்த பகுதியில் நிதானமின்றி தேரைச் செலுத்தினான்//---என்று ஆய்வுக்கு பின்னர் ஆதாரத்துடன் மீண்டும் நீங்கள் வந்தால், அதனை ஏற்று இப்பதிவு திருத்தப்பட்டால்...

  அப்போது எனது கருத்தை நான் வாபஸ் வாங்கிக்கொள்ள தயார்..!

  ReplyDelete
 11. மனு என்ற பெயர் ஏன் வந்தது? மனு என்ற பெயர் இடைச் செருகலே!

  ReplyDelete
 12. மனு நீதி நான் முழுவதும் படித்துள்ளேன்; விவாதம் செய்பவர்கள் படித்துப் பாருங்கள்; ஒற்றுமை புரியும்!

  மனுவின் - நீதி படி - மனுவினுடைய - நீதி - தவறாமல் ஆட்சி செய்த சோழன்--i.e., சூத்திரன். சோழன் ஒரு சூத்திரன்.

  இதனால் சகலருக்கும் சொல்லபப்டும் நீதி: ஒரு சூத்திரன் ஒரு பசுவின் கன்னைக் கொன்றாலும் அவனுக்கு தண்டனை மரணம் மட்டுமே. இது இடை செருகலே!

  ReplyDelete
 13. கதைகள் தெரிந்துகொண்டேன்..

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கு நன்றி சகோ

   Delete
 14. மனுநீதிச்சோழன் கதையொரு கட்டுக்கதையாகத்தான் இருக்கவேண்டும். அது வைதீகப்பார்ப்ப்னர்களால் புனையப்பட்டிருக்கவேண்டும். இளங்கோ அக்கதையை ஒரு காவியச்சுவைக்காகவே பயன்படுத்தியிருப்பார். அவர் சமணர். எனினும் இப்படிப்பட்ட மக்களிடையே நிலவிய வைதீகப்புனைவுகளைப் பயன்படுத்தியவர். வைதிகமத நெடி சிலம்பில் அடிக்கக் காரணம் அம்மதம் அவர் காலத்தில் பிரபலமாகவிருந்தது. எனவே பெரும் பணக்காரத் தம்பதிகளான கோவலன் கண்ணகி திருமணம் அந்நகரத்தில் பெரும்பேர்பெற்ற புரோஹிதனொருவனால் வைதீகமுறைப்படி நடந்த்து. அக்காட்சியை சிலம்பில் படித்து தெரிந்து கொள்ளவும்.
  மேலும் அவர் கதையில் பல பார்ப்பனர்கள் வந்து போகிறார்கள். வைதீகப்பார்ப்ப்னர்கள். ஒரு எ.கா மாடல மறையோன். பல ஹிந்துமத நம்பிக்கைகள் பேசப்படுகின்றன.

  சிலம்பு எந்தச்சங்க இலக்கியமுமன்று. அது 12ம் நூற்றாண்டில் எழுதப்பட்டகாவியம். இளங்கோ சேர இளவல் என்பது கட்டுக்கதை. என்பதெல்லாம் தமிழறிஞர்கள் ஒத்துக்கொண்ட உண்மை. வையாபுரிப்பிள்ளை, ரா பி சேதுப்பிள்ளை போன்றோர். கோவலனும் கண்ணகியும் கற்பனை மாந்தர்கள் என்று வை.பிள்ளை சொல்கிறார். (இலக்கியச்சிந்தனைகள்)

  எனவே 12ம் நூற்றாண்டு நூல் வைதீகப்பார்ப்ப்னர்களை ஏற்றுப்போற்றுவது நடக்க்க்கூடிய ஒன்றே. அப்போது சோழர்கள் முழுக்க முழுக்க வைதீக மதத்தையே போற்றினர். அவர்களுள் ஒருவன் இச்சோழனாகவிருப்பான். மனுநீதிச்சோழன் என்ற பெயர் வைதிகப்பார்ப்ப்னர்களின் புனைவு. அவர்களைக்கேட்பாரெவருமில்லை அன்று.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ ....உங்களின் கருத்து அருமை

   Delete
 15. Hello Passerby...
  கண்ணகி மதுரையை எரிக்கும் போது, சிலரை (அந்தணர்களை) தீ அழிக்கக் கூடாது என்று சொன்னாராமே? மேலும், தன கணவனை ஒருவன் கொன்றால் (அநியாயமாகக் கொன்றாலும்) ஒரு ஊரை எரிப்பது எப்படி நியாயம்...இந்த ஒன்றில் இளங்கோ என்ற கவி செத்து விட்டான்; இப்படிப்பட்ட மட்டமான கற்பனை காப்பியமே அல்ல;

  இதில் கவனிக்க வேண்டியது...அந்தணர்களை தீ அழிக்கக் கூடாது---இதுவும் இடைசெருகலா?

  ReplyDelete
  Replies
  1. அந்தணர் என்போர் அறவோர் என்பதனால்.

   Delete
 16. அந்தணர் என்போர் அறவோர் என்பதனால்....இதுவும் இடைசெருகலே; ஆதியில் இருந்து அந்தணர் என்றால் பிராமணர்கள் தான்; பல சமூக போராளிகள் தமிழ் அறிஞர்கள் தாக்கத்தினால் இந்த வார்த்தைக்கு புது அர்த்தம்.

  நீங்கள் சொல்வது படி பெரிய புராணத்தில் சிவபெருமான் தன் பக்தரை சோதிக்க அந்தணர் வேடத்தில் வந்தார். அப்படி, அந்தணர் வேடத்தில் வந்து பக்தனின் மனைவியை பெண்டாளா நினைத்த அந்தணர்-----அறவோரா அல்லது பிராமணார?

  ReplyDelete