Tuesday 9 October 2012

என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்!


என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்!

எனக்கு சிறுவயதில் இருந்து சளி தொந்தரவு இருந்துச்சு ...இதனாலயே நான் ஒரு வாரத்துக்கு ஒருமுறைதான் தலைக்கு குளிப்பேன் . சில சமயம் ஒருமாதம் வரைக்கும் குளிக்காமல் இருந்து இருக்கின்றேன் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது இந்த சளி அதிகமாக எனக்கு தொந்தரவு குடுக்க ஆரம்பித்தது  அது அப்படியேமுற்றி போய் ஒரு கட்டத்துல எனக்கு ஆஸ்துமா தொற்றிகொண்டது .






ஆஸ்துமா வந்தால் என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும் .சுவாசம் விட மிக சிரமமாக இருக்கும். தூங்குவதற்கு மிக சிரமமாக இருக்கும்..ஆனால் நான் கவலை படவில்லை என்னை விட என் தந்தைதான் கவலை பட்டார் .என் மகனுக்கு இந்த மாறி நோய வந்த்ருச்சுனு ..எல்லாம் மருத்துவமனைக்கும் கொண்டு போய் சிகிச்சை பார்த்தால் காலம் பூர மாத்திரை சாப்பிடனும் ...மாத்திர சாப்பிட்டால் தான்  உங்க பையன் நலமாக வாழ்வான் என்று மருத்துவர்கள் மேலும் மேலும் என் தந்தைக்கு கவலை ஏற்பட செய்தார்கள் ..

ஆனால் எனக்கு ஜாலியாக இருந்தது ஏன் தெரியுமா ? அப்பத்தான் பள்ளிக்கு போகாமல் வீட்டில் உட்கார்ந்து விளையாட முடியும் ....அப்படியே ஒரு நான்கு வருஷம் போச்சு என் கூட நெருங்கிய நண்பனாக மாறியது ஆஸ்துமா.எனக்கு பழகி விட்டது..இந்த நான்கு வருஷத்தில் எனக்குள்  வந்த இந்த நெருங்கிய நண்பன் ஆஸ்துமாவ என்ன விட்டு விரட்ட என் தந்தை.  எல்லா விதமான மருத்துவர்கல்கிட்டையும்  சென்று மருந்து வாங்கி கொண்டு வந்தார் .அதில்  சித்த மருத்துவம் .ஆய்ர்வேதிக் இப்படி சொல்லி கொண்டே போகலாம் ..சித்த மருத்துவரிடம் நானும் என் தந்தையும் சென்றோம் அவர் உங்க பையனுக்கு நான் குணம் ஆக்கி தருகின்றேன் .என்று கூறி ஒரு மருந்தை தந்தார் .இந்த மருந்தை நீங்க ஒரு மூணு மாத காலம் சாப்பிடனும் இந்த மருந்து சாப்பிடும் பொழுது இந்த மூணு மாதத்தில் .நீங்கள் மாமிசம் சாப்பிட கூடாது .வெறும் காய் கறிகளை மட்டும் சாப்பிடனும் அப்பததான் இந்த ஆஸ்துமா குணமாகும் .என்று கூறினார் இந்த மருந்துக்கு ரூபாய் 5000 ...ஆகும் என்றார் அப்பொழுது என் தந்தையிடம் பணம் இல்லை 3000 .ருபாய் மட்டுமே என் தந்தையிடம் இருந்தது .உடனே வீட்டுக்கு சென்ற அவர் எங்க அம்மா கையில் அணிந்து இருந்த தங்கம் வளையல்களை எனக்காக .வாங்கி கொண்டு அதனை வங்கியில் விற்று பணம் வாங்கி கொண்டு வந்தார் .பின்பு அந்த வைத்தியரிடம் அந்த மருந்தை வாங்கி கொண்டு வந்தார் .அந்த மூன்று மாதத்தில் எனக்காக எங்க வீட்டில் யாருமே கரி மீன் சாப்பிடுவது இல்லை .நான் கூறினேன் என் தந்தையிடம் நீங்க அனைவரும் .கரி மீன் சாப்புடுங்க எனக்காக நீங்க ஏன் சாப்பிடாமே இருக்கணும்னு கூறினேன் .அதற்க்கு என் தந்தை கூறினார் உன்னை பார்க்க வெய்த்து. எங்களுக்கு அந்த இறைச்சி முக்கியம் இல்லை .என் மகன் சாப்டாம இருக்கும் பொழுது எங்களுக்கு எதுக்கு அந்த கரி மீன் .என்று கூறினார் .எனக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது ....

மூன்று மாதமும் கழிந்தது ஆனால் என்னை விட்டு .என் நண்பன் ஆஸ்துமாவுக்கு போக மனம் இல்லை ....என் தந்தையின் முகத்தில் வாட்டம் அப்படியே நான் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதியில் இருகின்றேன் .ஒரு பக்கம் படிப்பு மறு பக்கம் என் நண்பனின் தொந்தரவு .என் நண்பனால் என்னால் படிக்க முடியவில்லை.......


ஒருநாள் என் தந்தைக்கு தொலைபேசியின் மூலம் அவர் நண்பர் அழைத்தார் ...அழைத்தவர் என்னை பற்றி பேச அழைத்தார் .இந்த மாறி மருதமலை பக்கத்தில் ஒரு இயற்கை வைத்திய சாலை இருக்கிறது , அங்கு போய் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தால் .உன்மகனுக்கு இருக்குற ஆஸ்த்துமா .குணம் ஆகும் என்று கூறினார் .... என் தந்தைக்கு மகிழ்ச்சி எவ்வளவோ பாத்தாச்சு இதையும் பார்ப்போம் என்றார் .

அப்படியே மருதமலை பக்கத்தில் இருக்கும் அந்த இயற்கை வைத்தியசாலைக்கு சென்றோம் ...அங்கு உள்ள மருத்துவர் என்னை பரிசோதனை செய்து பார்த்தார் . பார்த்தவர் .என் தந்தையிடம் கூறினார் ,இங்கு ஒரு வாரம் உங்களின் மகனை விட்டு செல்லுங்கள்...நாங்கள் இங்கயே தங்க வெயத்து .சில மூலிகை எல்லாம் உன்ன குடுப்போம் ..இந்த ஒரு வாரதிலயே உங்க மகனுக்கு குணம் ஆயிடும் ,என்று கூறியவர் இதற்க்கு ருபாய் 15000 ..செலவாகும் ஏன் என்றால் தங்கும் இடம் மூன்று நேரம் உணவு .இதற்க்கு எல்லாம் சேர்த்துதான் ருபாய் 15000 ..ஆகும் என்றார் .

என் தந்தையின் முகத்தில் மகிழ்ச்சி ..என் மகனுக்கு சரியாகி விடும் என்று ..ஆனால் ஒரு பக்கம் சோகம் 15000 ..ரூபாய்க்கு எங்க போறது .வீட்டில் ஏதேனும் வளையல் செயின் ஏதாவது வெய்த்து காசு வாங்குவோம் என்றால் வீட்டில் .ஒரு கிராம் தங்கம் கூட இல்லை ...அப்படியே என் தந்தையின் முகத்தில் சோகம் ...நான் அவரின் கண்களை கண்ணீருடன் பார்த்தேன்...

பின்பு எனக்காக கடனை வாங்கி வந்தார் ..அந்த இயற்கை வெய்திய சாலையில் என்னை அழைத்து சென்றார் ..ஆனால் எனக்கோ அங்க செல்ல மணம் இல்லை ஒருவாரம் எப்படி என் தந்தையை விட்டு இருப்பது என்று .அவருக்கும் சங்கடம்தான் எப்படி ஒரு வாரம் என்னை விட்டு இருப்பது என்று ...அப்படியே எனக்காக வாங்கின அந்த ருபாய் 15000 ....அந்த மருத்துவரிடம் குடுத்து என்னை அங்கே விட்டு சென்றார் ..சோகத்துடன் நானும் என் தந்தையும் அங்கே பிரிந்தோம் ....


இயற்கை வைத்திய சாலையில் முதல் நாளில் நான் என் தந்தையிடம் தொலை பேசியின் மூலம் தொடர்பு கொண்டேன் ..நானும் என் தந்தையும் பேசின உரையாடல் 






நான் ; அத்தா[அப்பா] நல்ல இருக்கியா

என் தந்தை ; நல்லா இருக்கேன் பா நீ எப்படி இருக்க உனக்கு அந்த இடம் பிடுச்சு இருக்கா ?

நான் : ம்ம்ம் பிடுச்சு இருக்குப்பா..எனக்கு நைட்  தூக்கம் வர மாட்டிங்குதுப்பா .அதனால என்னுடைய அந்த சின்ன ரேடியோ எடுத்துட்டு வாதா[வாபா] 

என் தந்தை :  ம்ம்ம் கண்டிப்பா  வருகிறேன் இன்று இரவு நானும் உன் அம்மாவும் வரோம் .அப்படியே உன்ன பாத்துட்டு .அந்த ரேடியாவ தரேன் ஓகே 

நான் ; ஓகே தா[பா] சரி வெக்குறேன் ......



என்னை பார்பதற்கு என் தந்தையும் என் அம்மாவும் வந்தார்கள் ..வந்தவுடன் என் தந்தை என்னை கட்டி தழுவி முத்தம் இட்டார் என் அம்மாவும் கண்ணீர் விட்டார்கள் ..பையன் தனியாக இருக்கிறானே என்று அப்படி கொஞ்சம் நேரம் என்னிடம் பேசி விட்டு எனக்காக கொண்டு வந்த .ரேடியோ வ தந்தார்கள் .தந்து விட்டு என் தந்தை நான் நாளைக்கு இரவு வருகின்றேன் பார்த்து இருந்து கொள் என்று கூறி விட்டு சென்றனர் .

இரவு பத்து ஆச்சு எனக்கு தூக்கமே வரலை ...இரவு பன்னிரண்டு ஆச்சு அப்பவும் தூக்கமே எனக்கு வரல அந்த இரவு எனக்கு என்னுடைய வலது கை வலிக்க ஆரம்பித்தது ..நான் துடித்தேன் வலி தாங்க முடியாமல் ....எனக்கு எப்போதும் இந்த மாறி நடந்தது இல்லை . ஆனால் அன்று இரவு ஏதோ எனக்குள் ஒரு மாற்றம் . என்னுடைய வலது கையை அருவாளால் வெட்டினால் எப்படி இருக்குமோ அந்த மாறி மரண வேதனை என் அருகில் உறங்கி கொண்டு இருந்தவர்கள் .என்னுடைய சத்தம் தாங்க முடியாமல் எழுந்தனர் .எல்லோரும் என்னுடைய கையை அமுக்கி ஒன்னும் இல்ல தம்பி தூங்கு தூங்கு என்று கூறி என்னை சமாதானம் செய்தார்கள் .ஆனாலும் வலி விட்ட பாடு இல்லை .இரவு முழுக்க ஒரே அழுகையாக  இருந்தேன் வலி தாங்க முடியாமல் ..பொழுதும் விடிந்தது காலையில் வழக்கம் போல் எல்லோரும் அவர் அவர் வேலையை பார்த்தார்கள் ...எனக்கு ட்ரீட் மென்ட் சற்று நேரத்தில் நடக்க  இருக்கிறது ..அங்கு இருந்தவர்கள் கேட்டார்கள் .தம்பி இப்ப பரவாலய உனது கை வலி ..என்று அக்கறையாக விசாரித்தார்கள் ..சரி நமது கை வழியை பற்றி தந்தையிடம் கூறுவோமே என்று நினைத்து .என்னுடைய மொபைல் எடுத்து என் தந்தைக்கு அழைத்தேன் ..ஆனால் தந்தையின் தொலை பேசி அனைத்து வெய்க்கபட்டுள்ளது ...

எனக்கு ஒன்னுமே புரியல சரி அம்மாவோட மொபைல்க்கு  கூபிடுவோம்னு .அந்த மொபைல்க்கும் கூப்டேன் அதுவும் அனைத்து வெய்க்க பட்டது .சரி பேசாமே இருந்தேன் ..திடிரென்று பார்த்தால் என்னுடைய பெரியப்பா பையன் எங்க அண்ணன் என்னை பார்க்க இயற்கை வைத்திய சாலைக்கு வந்து இருந்தார் .புன்னகையுடன் அவரை வரவழைத்தேன்  ...வந்தவர் என்னிடம் கூறினார் .

நேற்று உங்கப்பா உன்ன பாக்க இங்க வந்துட்டு சென்ற போது ..வண்டியில் போகும் பொழுது ஒரு நாய் குறுக்க வந்துருச்சு ,அதனால தடம் புரண்டு விளுந்துட்டாறு  .பயப்படதே அம்மாக்கு ஒன்னும் ஆகலே .ஆனால் அப்பாக்கு வலது கை உடைந்து விட்டது என்றார்  ...மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்காரு ஆபேரசன் முடிந்து விட்டது .வலது கையில் கட்டு போட்டு இருக்காங்க .ஒரு நாற்பது நாளில் சரியாகி விடும்னு ..சொன்னார் ..அப்படியே என்னையையும் அறியாமல் சத்தம் மிட்டு அழுதேன் ...

அங்கே என் தந்தைக்கு வலது கையில் விபத்து ஆனால் .என் தந்தை அனுபவித்த வழியை அதே இரவு நான் அணுபவித்தேன்.... என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்!..என்று எனக்கு நினைக்கும் பொழுது. இந்த  நாள் தான் என் கண்முன் வருகிறது ..

நன்றி ! நட்புடன் உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<


27 comments:

  1. வாசிப்பதற்கு எளிதாகவும்,வாசிக்கும் போது இனிதாகவும் வாசிப்பை நிறுத்தினால் கோமடியாகவும்
    இது வாழ்க்கையில் அன்றாடம் என்று சொல்ல முடியாத சம்பவம்
    எனவே அருமையான வரிகளுக்கு இனிதான என் இனிய நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல ..உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ

      Delete
  2. ”மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்
    தந்தைஎன் நோற்றான் கொல் எனும் சொல்”.
    குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் குறளானா கருத்துக்கு நன்றி

      Delete
    2. கைதேர்ந்த எழுத்தாளர் போல எழுதியுள்ளீர்!இதுவே தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்பது! மிக அருமை !

      Delete
    3. நன்றி உங்களின் வருகையும் .கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது

      Delete
  3. மிக நேகிழ்ச்சியான பகிர்வு
    எங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி சகோதரரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களின் வருகையும் .கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது

      Delete
  4. Replies
    1. நன்றி நன்றி நன்றி

      Delete
  5. ரினாஸ்....

    நல்ல பதிவு... எல்லாம் பயனுள்ள பதிவுகள்..வாழ்த்துக்கள் தம்பி....

    ReplyDelete
  6. மெய் சிலிர்க்கவைக்கும் அனுபவம்..அந்த ஆஸ்த்மா குணமாச்சா அப்படின்னு சொல்லவேயில்லையே.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி சகோ....எனக்கு இன்னும் ஆஸ்துமா குணம் ஆகலை ...ஆங்கிலம் மருத்துவம் உபயோகம் பண்ணி கொண்டு இருக்கின்றேன் சகோ bandhu

      Delete
  7. நெகிழ்ச்சியான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நெகிழ்ச்சியான கருத்துக்கு நன்றி

      Delete
  8. Replies
    1. .உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. Replies
    1. நெகிழ்ச்சியான கருத்துக்கு நன்றி

      Delete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    நெகிழ்ச்சியான பதிவு

    தொடருங்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வா அழைக்கும் அஸ்ஸலாம்....இன்ஷா அல்லாஹ் தொடர்கின்றேன் ...நீங்களும் என்னை பின் தொடருங்கள் சகோ

      Delete
  11. தம்பி உங்கள் உண்மை சம்பவம் மனசில் பதிந்து போய்விட்டது..இந்த காலத்தில் அப்பாவுக்காக உருகும் மகனும் மகனை விட்டு ஒருநாள் கூட பிரியாத அப்பாவும் ரொம்ப ஆச்சரியமாக இருக்கு..யதார்த்தமான எழுத்து நடை அருமை.நல்ல பிள்ளையாக இப்படியே இருங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி...மனம் மாறாத பிள்ளையாக இருப்பேன் நான்

      Delete
  12. பாசம் கலந்த சோகம்.
    உங்களுக்கு ஆஸ்துமா குணமாகலைனு சொல்லிருகீங்க. அப்பாவோட கை இப்போ எப்படி இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. இறைவனின் அருளால் .அப்பாவோட கை நலம் சகோ

      Delete
  13. மறக்க முடியாத பதிவு தம்பி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி நன்றி உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete