Sunday 7 October 2012

உயிர் எழுத்துக்கள் மூலம் பழகுவோம ? நண்பர்களே


 உயிர் எழுத்துக்கள் மூலம் பழகுவோம ? நண்பர்களே


நான் இந்த இணையத்தில்  இருபத்தி  நான்கு பதிப்புகளை பதிந்துஉள்ளேன் இது என்னுடைய இருபத்தி ஐந்தாவது பதிப்பு  ..ஏன் நான் உங்களிடம் நான் இருபத்தி ஐந்து என்று தெளிவாக குறிப்பிட்டு கூறுகின்றேன் என்றால் உங்களுக்கு வேண்டுமென்றால் இருபத்தி ஐந்து சிறியதாக இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை என்னுடைய இந்த இணையத்தின் . மிக பெரிய இடத்துக்கு வந்துள்ளேன் என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது .  இந்த இருபத்தி ஐந்து. ஐம்பது ஆகவும் . ஐம்பது நூறாகவும் தொடர உங்களின் ஆதரவும் எல்லாம் வல்ல இறைவனின் அருளும் வேண்டும்......

சரி இந்த இருபத்தி ஐந்தாவது பதிப்பில்  மக்களுக்கு  என்ன சொல்ல வரலாம்  என்று நினைத்தேன் . இதுவரைக்கும் பொதுவான .ஆன்மிகம் கலந்த பதிப்பை தங்களுடன்  பகிர்ந்து கொண்டேன். ஆனால் என்னுடைய தாய்மொழி தமிழ்  பற்றி தங்களிடம் சிறு விளக்கம் தர முன் வந்துள்ளேன்.. அப்படியே என்னுடைய இந்த இணையத்தின் பெயர் உங்களுக்கு தெரியும் வாங்க பலகாலம். சரி உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு அந்த பன்னிரண்டு எழுத்துகளின் மூலம் நாம் எவ்வாறு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளலாம் என்பதை பார்ப்போம் நண்பர்களே ...


  • தடைபடாமல் குரல் வளையிலிருந்து வரும் ஒலி, உயிரெழுத்து எனப்படும்.
  1. உயிரெழுத்து என்பது பெயர்ச்சொல் என்ற இலக்கண வகையினைச்சார்ந்ததாகும்.
  2. ஒரு மொழியின் முதன்மையான எழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் என்கிறோம்.
  3.  ஆகிய 12எழுத்து க்களும், தமிழின்உயிரெழுத்துக்கள் ஆகும்.

             அ அன்பை பற்றி பேச 
             ஆ ஆருயிர் நண்பனாக பேச 
             இ இனிமையான முறையில் பேச 
              ஈ ஈகைப்  பற்றி பேச 
              உ உண்மையை மட்டும் பேச 
              ஊ ஊருக்காக பேச 
              எ எளிமையான முறையில் பேச 
              ஏ ஏழைகளை பற்றி பேச 
              ஐ ஐம்புலன்களைப் பற்றி பேச 
             ஒ ஒற்றுமையாக பேச 
             ஓ ஓவியத்தைப்பற்றி  பேச 
                ஔ ஔவையையும்  பற்றி பேச......... >>>>வாங்க பலகாலம்<<<<                     நண்பர்களே ! 




தமிழ் மொழி (Tamil language) தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின்முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம்,தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில்ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது...ஆகும்  

தமிழ், இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 300-ம் ஆண்டைச் சேர்ந்தபிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும்.[7] இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.[8] பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 200 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கி. மு. 500 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.[9]பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம்ஆகும்..தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
பக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர்மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவற்றைத் தமிழிலிருந்து நீக்க உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி. பி. 800இற்கும் 1000இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்,மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது...

மொழிக்குடும்பம்

தமிழ், தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளாகைக்காடிபெட்டக் குறும்பாசோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம்:
தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.....

தமிழ் பேசப்படும் இடங்கள்...


தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம்கேரளம்ற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர்மலேசியாமொரீசியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.தென்னாப்பிரிக்காகயானாபிஜிசுரினாம் மற்றும் ட்ரினிடாட்டும் டொபாகோவும் போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.
மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியாகனடா,ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.........நன்றி இதுவரைக்கும் போதும் இனி அடுத்த பதிப்பில் தமிழை பற்றி நிறைய  பார்ப்போம் என்றும் நட்புடன் >>>>ரினாஸ்<<<<


10 comments:

  1. தமிழ் மொழி பற்றி பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ

      Delete
    2. கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக வருகின்றன்.உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.உங்கள் செயல்களைக் கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்அவைகளே உங்கள் நடத்தையாகின்றனஉங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன!

      அருமைகள் நிறைந்த தமிழ் மொழிக்கு என் மனம் ஆர்ந்த நன்றிகள்
      சகோரர் றினாஸ் கான் அவர்களுக்கு

      Delete
    3. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது சகோ..உங்களின் வருகையும் ..இந்த அழகான கருத்துக்கும் நன்றி சகோ யஹ்யா ஹொரோவபதான,இலங்கை

      Delete
  2. ரினாஸ்...

    நல்ல பதிவு..வித்தியாசமான களங்கள்..தொடரட்டும்... நிச்சயம் உங்களுக்கென்று தனி இடம் கிடைக்கும்..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ .

      Delete
  3. அருமை நண்பரே! பல கருத்துக்களையும் சேர்த்து ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறீர்கள், பயனுள்ள தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. .முதல் முறையாக என் தளத்துக்கு வந்துருக்கும் உங்களை ..வருக வருக என்று வரவேட்கின்றேன்

      Delete
  4. அருமையான பதிவு நண்பா.

    தங்கள் வலையைத் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறேன்.
    தங்கள் பணி பாராட்டுதலுக்குரியது.

    தொடர்ந்து பலஆயிரம் பதிவுகள் தர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. /// தங்கள் வலையைத் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறேன்.
      தங்கள் பணி பாராட்டுதலுக்குரியது./// ரொம்ப சந்தோசமாக இருக்கிறது சகோ.....உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete