Wednesday 17 October 2012

என்னை மன்னித்து விடுங்கள் !!!!




அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே ! இந்த ப்ளோகில் நான் கடைசியாக ஒரு பதிப்பு போட்டு இருந்தேன் >>>நான் கவிதை எழுதினேன் நீங்க ?<<< என்ற தலைப்பில் அந்த பதிப்பில் நான் சில சில தவறான வார்த்தைகளை உபயோகம் செய்து இருந்ததால் .என்னுடைய முகநூல் நண்பர்கள் .என் மீது அதிகபடியான பாசத்தினால் .அந்த பதிப்பில் உள்ள தவறை என்னிடம் சுட்டி காட்டினார்கள்..அந்த பதிப்பின் மீதும் அவர்களின் எதிர்பை தெரிவித்தார்கள் ..நான் விளையாட்டாக செய்த தவறு ..அதற்காக நான் மிகவும் கவலை படுகின்றேன் ...அதனால் நான் அந்த பதிப்பை அவங்களுக்காக அளித்து விட்டேன்...இதற்காக அந்த முகநூலில் உள்ள >>>டீக்கடை<<<<க்ரூபில்உள்ள நண்பர்கள் அல்லாஹுக்காக என்னை மன்னித்து விடுங்கள்...இன்ஷா அல்லாஹ் இது போன்ற தவருங்கள் இனி நடக்காது ........சரி இந்த பதிப்பில் என்ன போடலாம், இன்று பொதுவான பதிப்பை தங்களுடன் பகிர விரும்புகின்றேன்......இளநீர் பற்றி கூற ஆசை படுகின்றேன் .........  







இளநீரில் இருப்பவை 

சோடியம் குளோரைடு,பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்ட மின்கள் நிறைந்திருக்கின்றன.

மருத்துவ குணம் எப்படி?

தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக்காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறிவிடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித்துடிப்பு தளர்வு, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு வெளியேறுவதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச் சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச் சீராக பாதுகாப்பதோடு, வெப்பநிலையை சரிவர உள் வாங்கி முறையே வெளித்தள்ளுகிறது. இதனால் வேனல்பிடிப்பு, வேனல் அதிர்ச்சி, அயர்ச்சி போன்ற கோடையின் ஆபத்தான விஷயங் கள் இல்லாமல் போகிறது.

எப்படிச் சாப்பிடலாம்?

இளநீரை உடனடியாக குடித்துவிடுவது தான் நல்லது. இரண்டு / மூன்று மணி நேரங்கள் வைத்திருப்பதோ, ‘ஃபிரிட்ஜில்’ வைத்திருந்து குடிப்பதோ அதன் மருத்துவக் குணங்கள் மந்தப்படுத்தக் கூடும். வேண்டுமானால் அரை மணிநேரம் வைக்கலாம். இதில் எதனையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக் கூடாது. இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.

இளநீருக்கு மாற்று குளிர்பானமா?
குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் ‘கார்பனேட்டட் வாட்டரும்’, காற்றும் தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும். இவையெல்லாம் தொடர்ந்து குடிப்பதில் உள்ள பக்க விளைவுகள். ஆக இளநீர் இளமைக்கும் வலிமைக்கும் இதம்.....
நன்றி நண்பர்களே ..மீண்டும் அடுத்த பதிப்புடன் உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<




17 comments:

  1. தவறு என்று தெரிய வரும்போது அதுவும் நட்புக்கு மதிப்பு கொடுத்து பதிவை தூக்கியதற்கு நன்றி சகோதரரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ...தொடர்ந்து உங்களின் ஆதரவை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்

      Delete
  2. புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்க்கு நன்றி சகோ..


    ஹா..ஹா..ஹா எங்கயோ கேட்ட குரல்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ...தொடர்ந்து உங்களின் ஆதரவை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்

      Delete
  3. இதெல்லாம் எங்கே எப்போ நடந்துச்சு?

    (ஆமா நான் யாரு... எங்கே இருக்கேன் -டயலாக் நியாபகம் வருது :-)

    ஆனாலும் ஏனோதானோன்னு புரிஞ்சத வச்சு கமென்ட் பண்றேன். வாழ்த்துகள் தம்பி.. பதிவை நீக்கியதற்கு பாராட்டுக்கள் (இன்னும் எத்தன பதிவு தூக்கப்போறீங்களோ அஹ்ஹூ அஹ்ஹூ)

    ReplyDelete
    Replies
    1. ஆஹ்ஹா...கடைல ஏவாரம் நடக்க வலி சொல்லிவிங்கனு பார்த்த ..கடைய எப்ப காளிபன்னுவிங்கனு கேக்குரிங்கலே சகோ ......Amina Mohammed

      Delete
  4. இளமைக்கு இள நீர்.நல்ல விஷயம்
    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ ....உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் சகோ

      Delete
  5. அநேகமா உங்க எல்லா பதிவுகளையும் படித்து கமன்ட் போட்டிருக்கேன்... இந்த கவிதையை மிஸ் பண்ணிடேனே.... ஓக்கே... தவறிருந்தா திருத்தி வெளியிட்டிருக்கலாமே....:))

    ReplyDelete
    Replies
    1. //// அநேகமா உங்க எல்லா பதிவுகளையும் படித்து கமன்ட் போட்டிருக்கேன்/// ரொம்ப மகிழ்ச்சி சகோ..தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் சகோ .... ///// தவறிருந்தா திருத்தி வெளியிட்டிருக்கலாமே....:))//// தவறுன்னு ஆனா பிறகு அது இருப்பது முறை அல்ல சகோ அதான் நீக்கி விட்டேன்

      Delete
  6. மன்னிப்பு கேட்டு உயர்ந்து விட்டிர்கள் சகோ .....தொடருங்கள் இளநீரை குடித்து விட்டு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ ..தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் சகோ

      Delete
  7. பதிவோட சேர்த்து “Sorry” படமும், உங்களின் நடத்தையும் அருமை!.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ...உங்களின் வருகையையும் .கருத்தையும் தொடருங்கள்

      Delete
  8. உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

    http://enrenrum16.blogspot.com/2012/10/blog-post_18.html

    ReplyDelete
  9. சூப்பர் சகோ. தொடருங்கள் தவறு என்று மனம் வருந்தி விட்டாலே நீங்கள் பெரியவராகி விட்டீர்கள். அதிலும் செய்த தவறுக்கு மறு பதிவில் மன்னிப்பு கேட்டு இன்னும் உயர்ந்து நிலைக்கு வந்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி சகோ ...தொடர்ந்து உங்களின் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிரேன்

      Delete