Saturday 13 October 2012

ஒரு சின்ன கதை சொல்லணும் ...அதில் பெரிய மெசேஜ் இருக்கணும் ..........







 இன்று அறிவுரை சொல்லலான்னு நினைகிறேன் .நான் சிறு வயது பையன் தான் . ஆனால் அறிவுரை கூறும் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது .இருந்தாலும் நான் பார்த்து பழகின நண்பர்களிடம் ஒரு கெட்டபழக்கம் இருக்கிறது ..அது எண்ணதுன்னா?  கோவம்தாங்க இந்த கோவத்த நான் நிறைய இடத்துல பாத்து இருக்கேன் ஒன்னுமே இருக்காது ஆனா மூக்குக்கு மேல கோவம் படுவாங்க ......கோவம் படும் இடத்துல கோவம் பட்டால் சரி ..ஒன்னுமே இருக்காது ஆனா அங்கே சண்ட ..சரி எனக்கு தெருஞ்ச ஒரு சின்ன கதையையும் .அதில் உள்ள பெரிய மெசேஜையும் ..அதன் அடிப்படையில் நம் மக்களின் வாழ்க்கை நடைமுறையையும் பார்ப்போம்  ...


ஒரு வயதானோர் மிகவும் ஏழ்மையானவர் ...அவர் தள்ளாடி கொண்டு காலில் செருப்பு கூட இல்லாமல்  நடந்து சென்று கொண்டு இருந்தார்..அப்போது தன் தேவைக்காக ஒரு வீட்டில் வெளிய இருந்து யாசகம் கேட்டு கொண்டு இருந்தார் .அப்போது அந்த வீட்டில் உள்ளவர் ஒரு மதபோதகர் அவர் வெளிய வந்து .இந்த வயதானோரை பார்கிறார்..பார்த்தவுடன் இந்த மத போதகருக்கு தெரிந்து விடுகிறது. .இவர் மிகவும் ஏழ்மையாக இருக்கிறார் .என்று .பார்த்தவுடன் இந்த மத போதகர் தன கையில் இருந்த சிறிது பணத்தை இவருக்காக தருகிறார் .ஆனால் இந்த வயதானோர் வாங்க மறுக்கிறார் ..இந்த மத போதகர் ஏன் நீங்க வாங்க மறுக்கீர்கள்  என்று கேட்டார் .அதற்க்கு அந்த வயதானோர் கூறினார் .நான் அந்த மரத்துக்கு அடியில் உறங்கி கொண்டு இருந்தேன் .என்னுடைய பிஞ்சு போன பழைய செருப்பை   யாரோ திருடி சென்று விட்டார்கள் ..அதனால் என்னால் இந்த வெயிலில் நடக்க முடியவில்லை .நீங்க எனக்காக பணம் எல்லாம் தரவேண்டாம் .எனக்கு ஒரு செருப்பு மற்றும் வாங்கி தாருங்கள் அதுவே போதும் என்றார் .இதை கேட்ட அந்த மத போதகருக்கு சரியான கோவம் ..இந்த முதியவர் கிட்ட செருப்பு திருடிய அந்த நபரை  சபிக்க போனார் இந்த மத போதகர் .இதை கேட்ட அந்த முதியவர் அய்யா ! தயவு செய்து உங்களின் வாயால் அவனை சபிக்காதிர்கள் .ஏன் என்றால் நீங்க ஐந்து நேரம் தொழுகை நடத்தக்கூடிய  ஒரு மத போதகர் வேண்டாம் .அறியாமல் செய்த தவறு .என்னிடம் செருப்பை திருடிய அந்த நபருக்கு..அந்த பிஞ்சுபோன செருப்பு கூட இல்லாதது நாள்தானே அவன் அந்த செருப்பை திருடினான் என்னையும் விட அவன் வறுமையில் இருப்பதனால் தான் .திருடி இருக்கின்றான் .அதனால் அவனை விட்டு விடுங்கள்  ...அவனை சபிக்காதீர்கள் .அவனுக்காக நீங்க தொழுகும் பொழுது அவனின் வறுமை தீரவும் அவன் நல்ல மனிதனாக மாறவும் நீங்க தூவா[ப்ராத்தனை] பண்ணுங்கள் அதுவே போதும் .என்றார் .இதை கேட்ட அந்த மத போதகர்..அந்த முதியவரை கட்டி தழுவினார் ...சகோதர சகோதரிகளே கோவப்  படும் இடத்தில கோவம்  வராமல் .அந்த முதியவர் எப்படி அன்பாக நடந்து கொண்டார் .இது போல் நாம் எப்போதாவது நடந்து இருப்போமா ? இல்லை ..நின்னா கோவம் நடந்த கோவம் ...சரி நம்ம மக்களின் கோவத்தை பாக்கலாம் 




டீக்கடைல டீ வர கொஞ்சம் நேரம் ஆச்சுனா போதும் அங்க சண்ட ...பஸ்ஸுல போகும் பொழுது சில்லறை இல்லன போதும் அங்கயும்  சண்ட .. எ டி எம் லா பணம் எடுக்கும் பொழுது பணம் எடுகுறவன் கொஞ்சம் லேடாச்சுன போதும் வெளிய வெயிட் பண்றவங்க அவ்வளவுதான் .இருக்குற கெட்ட வார்தய்லயே திட்டுவாங்க அவன மனசுல ........வண்டியில  போகும் பொழுது. பஸ்ல போகும் பொழுது .ட்ரைன்ல போகும் பொழுது .அங்க இங்க இப்படி சொல்லிகொண்ட போகலாம் ..சரி யோகா பண்ணும் இடத்துல அமைதி இருக்கும் அங்க போன அங்கயும் சண்ட .யோகா க்ளாஸ்க்கு பண கட்டலன்னு விரட்டி விரட்டி அடிக்கிறானுங்க .....சரி ஆம்பளைங்க தான் இப்படினா .பொம்பளைங்க சண்ட இதுக்கு மேல இருக்கு .பொம்பளைங்களுக்கு கோவமே வராதுன்னு நினைத்தேன் ஆனால்...ஒரு சம்பவம் நடக்குற வரைக்கும். அது எதுனா தண்ணீ பிடிக்கும் பொழுது போடுவாங்க பாருங்க சண்ட ..பொறுமையா தண்ணி புடுச்ச அழகாக எல்லாருக்கும் தண்ணி கிடைக்கும் .இவங்க சண்ட போட்டுட்டு இவங்களுக்கும் தண்ணீ கிடைக்காம .இவங்க பின்னாடி இருக்குரவங்களுக்கும் தண்ணி கிடைக்காம ...கடைசில யாருமே தண்ணீ பிடிக்க மாட்டங்க .கார்பரேசன் காரன் தண்ணீய நிறுத்திடுவான்...
கோவப் பட்டாதான் ஆம்பள .ஒத்துக்குறேன் . ஆனால் கோவப் படும் இடத்துல  எவன் கோவப் படமா இருக்கானோ  .அவன் மேல எனக்கே கோவம் வரும் .....என்ன பொருத்தவரைக்கும் ...நாம் எல்லாரிடமும் அன்பாக பேசுவோம் எதுக்கு எடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விளுகுறது நல்லாவா  இருக்கு. ..போகும் பொழுது என்னத்த கொண்டு போக போறோம் அன்பாக பேச பழகுவோம் நண்பர்களே !!! நம்முடைய மனச அன்பால பூட்டுங்க அதுவே போதும் நமக்குள்ள இருக்குற மிருகம் வெளிய போய்டும் ..நாம் கோவம் படும் பொழுது நமது முகத்தை நாமே கண்ணாடியில் பார்த்தால் போதும்  நமக்கு நம்மையே பிடிக்காது  ....அன்பை பற்றி  திருவள்ளுவர் அழகாக கூறியிருக்கிறார் 

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.....

    மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.....



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

    அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்....

அன்பை பற்றி வள்ளுவர் எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார் பார்த்திங்களா அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் பொருத்திய வீனா போன உடம்பு ஆகும்னு சொல்றாரு ...எதுக்குப்பா கோவம் படனும் அன்பாக இருங்களே வாழ்க்கை நல்ல இருக்கும் இந்த டையலாக் நான் சொல்றது ..கோவம் வரணும் அதுவும் காரணமான கோவமாக இருக்கணும் அப்படி காரணமாக வந்த கோவம் கூட நிலைக்ககூடது ...மறந்தரனும் ..யாரவது அப்படி பண்றோமா கிடையாது...யார்மேலாவது கோவத்தோடு பேசிட்டோயமையானால் .அதை மறந்து பழையபடி இருக்க்கனும் .அப்படி யார் இருக்காங்க  அதுவும் கிடையாது .இத பற்றி நம்ம நபி[ஸல்] அழகாக கூறியிருக்கிறார் 

 ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்...புகாரி .6076



இஸ்லாத்தில் அன்பு காட்டுவதில் சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் மனஸ்தாபம் கொண்டு மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது  அனுமதி இல்லாதது..என்று நபி[ஸல்] அவர்கள் உறுதியாக கூறுகிறார்கள் .....ஆனால் நாம் எல்லார்கிட்டயும் சண்ட போடுறோம் ........நம்மை மாற்ற ஒருவர் நபரால்  தான் முடியும் அந்த நபர் நாம் தான்......
நன்றி ! நண்பர்களே என்றும் உங்கள் நட்புடன் >>>>ரினாஸ்<<<<








17 comments:

  1. அருமையான பகிர்வு நண்பா.

    ReplyDelete
  2. பதிவு மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்லதொரு ஹதீஸை எங்களோடு பகிர்ந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்தை என்னுடன் பகிர்ந்தமைக்கு நன்றி

      Delete
  4. Arumai..Jazaakallah khair...naam ellarum pinpatra vendia arumaiyana pathivu

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..உங்களின் வருகைக்கும்.கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  5. மிக நெகிழ்ச்சியான அருமையான கதை தம்பி படிச்சிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி [பின்குறிப்பு ] டீ சூட குடிக்கும் பொழுதுதான் நல்ல இருக்கும் சகோ .ஆறிப்போன எப்புடி ?

      Delete
  6. மாஷா அல்லாஹ் தம்பி.... அற்புதமான, ஆழமான கருத்துடைய கதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி [பின்குறிப்பு ] டீ சூட குடிக்கும் பொழுதுதான் நல்ல இருக்கும் சகோ .ஆறிப்போன எப்புடி ?

      Delete
    2. இது டீ இல்ல. தேன். எப்போதும் தித்திக்கும்.

      Delete
  7. கோவைத்தம்பி

    மிக நெகிழ்ச்சியான
    அருமையான
    கதை தம்பி
    படிச்சிட்டேன்

    அருமை அருமை

    ReplyDelete
    Replies
    1. /// கோவைத்தம்பி /// சொல்லுங்க திருப்பூர் அண்ணா ....நன்றி படுச்சதுக்கு

      Delete
  8. நல்ல கருத்து தம்பி! ஆகையால் அவசரமாக யாரையும் சபிக்க கூடாது!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete