Thursday 11 October 2012

என்னால் சங்கடபட்டவர்கள் .என்னாலயே சிரியுங்கள் ..



நான் இந்த இணையத்தில்[blog ] கடைசியாக ....ஒரு பதிப்பை பகிர்ந்து இருந்தேன் .அது என்ன என்றால் . என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்! என்ற தலைப்பில் எல்லா நண்பர்களிடமும் பகிர்ந்து இருந்தேன் இதை படித்த நண்பர்கள் பல நபர்கள் .இந்த இணையத்தில் அவர்களால் கமன்ட் குடுக்க முடியாமல் .என்னுடைய பேஸ்புக்[facebook ] இணையத்திலும். என்னுடைய மின்னஞ்சலிலும்[email ] தொடர்பு கொண்டு . என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்! என்ற பதிப்பை பற்றி நிறைய பேசினார்கள் இந்த பதிப்பின் மூலம் நிறைய நபர்கள் .தன் குடும்பத்தை நினைத்து அழுதார்களாம் .அவர்களின் மலரும் நினைவுகள் அவர்களின் கண்முன் வந்ததாம் . தன குடும்பத்தைவிட்டு பிரிந்து வெளிநாட்டில் வேலை பாக்கும் .நபர்கள் அதிகமாக தங்களின் அப்பா அம்மா வை மிகவும் தொலைத்தவர்களாக .இருக்கிரார்கலம் ..இப்படி ஒவ்வொருவரும் தங்களின் ஆதங்கத்தை கூறினார்கள் .நான் போட்ட கடைசி பதிப்பினால்.இவர்கள் அனைவரும் மனது அளவில் பாதித்துல்லார்கள்.எனது வாழ்க்கை மிகவும் சோகமான வாழ்க்கை என்று அனைவரும் நினைத்து இருப்பார்கள் .ஆனால் அது தவறு மிகவும் காமடியான கலகலப்பு உள்ள வாழ்க்கை என்பதை .நான் என்னுடைய வாழ்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . இந்த நிகழ்ச்சி ஏற்க்கனவே நான் இந்த இணையத்தில் பகிர்ந்ததுதான் .நினைவூட்ட வந்துள்ளேன் . என்னால்  சங்கடபட்டவர்கள் .என்னாலயே சிரியுங்கள் ........



என் வாழ்கையில் நடந்த ஒரு சிரிப்பான நிகழ்வு இதோ உங்களுக்காக .....




நான் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது என்னுடைய
பக்கத்து வகுப்பு என்சீசீ ல இருக்குற பொண்ணுகளை ஒரு கிராமத்துக்கு சேவை பண்ணுவதற்காக அழைத்து சென்றார்கள் அவர்களுக்கு என்னை காவலனாக அனுப்ப எங்க பள்ளி தலைமை ஆசிரியர் முடிவு பன்னுனாக ....அப்ப நானும் அந்த பொண்ணுகளும் புறப்பட்டோம்

அப்பொழுது எனக்குள்ளே என்னையும் அறியாத ஒரு இன்பம் இருக்கத்தானே செய்யும் என்னை சுற்றி பத்து பெண்கள் அப்படியே என் மனசு ரக்ககட்டி பறக்குது ....


அந்த கிராமத்துல சேவை பண்ணிமுடுச்ச பிறகு ..அந்த பெண்கள் எல்லாம் பந்தல் போட்டு அந்த பந்தளுக்குள்ள ஒய்வு எடுத்துகொண்டு இருந்தார்கள் அப்பொழுது அவர்களுக்கு காவலனாக நான் வெளிய உட்கார்ந்து கனவு கண்டு   கொண்டு இருந்தேன் .....
அப்பொழுது திடிருன்னு பெண்கள் எல்லோரும் சத்தம் போட்டு என்னை நோக்கி ஓடிவந்தார்கள் அப்படியே நான் சாக் ஆயுட்டேன் தெரியுமா அந்த பெண்கள் எல்லோரும் என்னுடைய கையே பிடுத்து ரினாஸ் என்ன காப்பாத்து ரினாஸ் என்ன காப்பதுன்னு சொன்னாங்க ....


எனக்கு ஒன்னுமே புரியல அப்படியே நான் கொஞ்சம் நேரம் மெளனமாக இருந்தேன்....திடிருன்னு அந்த பொண்ணுங்க என்ன தூக்கி கொண்டு அந்த பந்தளுக்குள்ள கொண்டு போய் போட்டார்கள் அந்த பத்துபொன்னுகளும் என்னை சுற்றி எங்களை காப்பது ரினாஷ் ..என்று கதருனார்கள் நான் அவர்களை நோக்கி என்ன ப்ராப்ளம் என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் கூறினார்கள் அங்க பாரு அந்த பெட்டிக்கு அருகில் பாம்பு என்று கூறினார்கள் 


.....நான் பல்லியை பார்த்தாலே பயபுடுவேன் ..பாம்புனா சொல்லவா வேணும் ...இருந்தாலும் அந்த பொண்ணுங்க முன்னாடி பயத்த காட்ட கூடாதுன்னு நினைச்சேன் அப்படியே ஒரு ஹீரோ மாதிரி என் முகத்த அவுங்க முன்னாடி காட்டினேன்..


ஆனா நான் மனசுல மிகவும் பயந்துகொண்டு பீதி யாகி ...பேதி ஆகல அவ்வளவுதான் அப்படி பயந்தேன் .........அப்படியே ஒரு கம்பு எடுத்து அந்த பாம்பு பக்கத்துல போய் அல்லாஹு என்ன காப்பதுன்னு சொல்லி ஓங்கி ஒரு அடி குடுத்தேன் 


ஆனா பாம்பு அசையவே இல்ல நானும் அந்த பாம்பு நல்ல தூங்குதுன்னு நினச்சு மறுபடியும் ஓங்கி ஒரு அடிகுடுத்தேன் அப்பவும் அந்த பாம்பு அசையவே இல்ல மறுபடியும் அல்லாஹுனு நினச்சு ஒரு அடி குடுத்தேன் அப்பவும் பாம்பு அசையவே இல்ல ..........பின்பு தான் தெருன்சது அது ஏற்க்கனவே செத்து போன பாம்புனு ......


அது அந்த பொண்ணுகளுக்கு தெருஞ்சு போச்சு என்ன கிண்டல் பண்ணி சிருச்சாங்க எனக்கு ரொம்பவே அசிங்கமாக போச்சு ...வெளிய காட்டிக்காம அப்படியா கெத்தா வந்தேன் ஆனால் அந்த பொண்ணுக பள்ளியில் போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டாங்க எல்லாத்துக்கும் நான் அசிங்கம் பட்டது தெருஞ்சு போச்சு அப்ப இருந்து செத்த பாம்ப அடுச்சவனு சொல்ல ஆரம்புசுட்டங்க ..இது என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் ஆகும் இப்ப இத நினைக்குபொழுது எனக்கு சிரிப்புதான் வருது..........................
இப்ப அனைவரும் சந்தோசமாக இருப்பிர்கள் என்று நம்புகிறேன் நன்றி அடுத்த பதிப்பில் சந்த்திப்போம் .இப்படிக்கு உங்கள் அன்பான நண்பன் >>>>ரினாஸ்<<<<


15 comments:

  1. All The Best Aruayana sirippin asthivaram jazakkallahu haira

    ReplyDelete
  2. உங்கள் உறவுகளின் அஸ்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?
    நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்
    இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்
    இன்றய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்
    இன்றய குணங்கள் தாம் அவருடய நாளைய விதி!
    எனவே ஆரோக்கியமான, வளர்ச்சியடையக்கூடிய மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில் புளித்துப் போகாது. ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி நன்றி ...உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. இதுக்கு பேரு இப்போ லேட்டஸ் பாஷையில “பல்பு” வாங்குறது.

    அப்புறம் ஒரு சின்ன அட்வைஸ், கொஞ்சம் ”ஸ்பெல்லிங் மிஸ்டேக்”ல கவனம் செலுத்தினா தேவலை. :)))

    ReplyDelete
    Replies

    1. ///அப்புறம் ஒரு சின்ன அட்வைஸ், கொஞ்சம் ”ஸ்பெல்லிங் மிஸ்டேக்”ல கவனம் செலுத்தினா தேவலை. :)))////கூடவே பொறந்தது என்னைக்கும் மாறது ஹ ஹ ஹ ..ஸ்பெல்லிங் பிரச்சனை ஸ்கூல் லைப் ல இருந்து இருக்குற பிரச்சனை இன்ஷா அல்லாஹ் கவனம் செலுத்துகிறேன் சகோ

      Delete
  4. தினமும் ஒரு பதிவு போட்டு.. அண்ணன் Suvanap Piriyan கு டப் பைட் கொடுக்கிறீங்க போல.. நடத்துங்க..நடத்துங்க...

    ReplyDelete
  5. செத்த பாம்ப அடிச்சவரு நீங்க தானா? இவ்வளவு நாலு கேள்விப்பட்டேன், இப்போ தான் பாக்குறேன்... ஹா ஹா ஹா!

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹ ஹ ...நானே அது நானே

      Delete
  6. ha ha ha ha
    super super super
    kalakunga rinash
    by
    abzal khan

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹ ஹ ...நன்றி சகோ

      Delete
  7. ஹ...ஹ...ஹ...ஹ...ஹ...ஹ...ஹா..!
    சூப்பர்

    எங்க வீடு பக்கத்துலயும் ஒரு பாம்பு இருக்கு. அடிக்க வர்றீங்களா?

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ...ஒரு பாம்ப அடுச்சதே போதும் ..ஹ ஹ நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்

      Delete