Saturday 22 September 2012

குளிர்பானங்களைக் குடிப்பது நல்லதா?மற்றும் இந்திய போலீஸார் மட்டும் தொப்பையோடு இருப்பது ஏன்?


 குளிர்பானங்களைக் குடிப்பது நல்லதா?
         
குளிர்பானங்களை அடிக்கடி குடிக்கக் கூடாது. காரணம் என்னவெனில் எல்லா குளிர்பானங்களிலும் பாஸ்போரிக் அமிலம் உள்ளது. லெமன் சுவை கொண்ட குளிர்பானங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டுவகை அமிலங்களும் பற்களுக்கு எதிரி. இந்த அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலை சுரண்டி எடுத்துவிடும். குளிரூட்டப்பட்ட குளிர்பானங்களை



 பற்களில் படும்படியாகக் குடிப்பது மிக மிகக் கெடுதல். ஸ்ட்ரா வைத்து உறிஞ்சி நேரிடையாக வயிற்றுக்குள் அனுப்புவது ஓரளவு பரவாயில்லை. சில பன்னாட்டுக் நிறுவன குளிர்பானங்களில் அவை நீண்டநாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பூச்சி மருந்துகளை சேர்க்கிறார்கள். அவை உடல்நலத்துக்கு மிகவும் கேடானவை. அத்தகைய பானங்களை எப்போதும் தவிர்க்கலாம்.......


   இந்திய போலீஸார் மட்டும் தொப்பையோடு இருப்பது ஏன்?

உணவுமுறைதான் காரணம். வெளிநாட்டில் முக்கிய உணவு தானியம் கோதுமை. இந்தியாவில் அரிசி. அதையும் மீறி வெளிநாட்டு போலீஸாருக்கு தொப்பை விழுந்தால் அந்த தோப்பையைக் குறைக்க போலீஸ் டிபார்ட்மெண்ட் டாக்டர்களின் உதவியோடு புதிய மாத்திரை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மாத்திரையை விழுங்கியதும் சிறுகுடலின் சுவரில் போய் அது ஒட்டிக் கொள்ளும். அங்கே ஒட்டிக் கொள்ளும் மாத்திரை உடம்புக்குத் தேவையான சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை ஜீரணம் செய்யவிடாமல் தடுத்து கழிவாக வெளியே அனுப்பிவிடுகிறது, அதனால் தொப்பை விழாது. இந்த மாத்திரை கரைந்துவிட்டால் மற்றொன்றை சாப்பிட்டுக் கொள்ளலாம்..........................
 நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<<



8 comments:

  1. பல புதிய தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  2. குளிர் பானத்தை பற்றி
    இன்னும் அதிக விழிப்புணர்வு
    மக்களிடம் ஏற்படவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. எங்க கேக்குறாங்க மக்கள் ....குளிர் பானத்தில் குளுர்ச்சி இல்லை என்றால் சண்டைக்கு போறாங்க சகோ

      Delete
  3. ரினாஸ்...

    தொப்பைக்கு மாத்திரை போட்டு தான் குறைக்கிறார்களா?? நான் உடற்பயிற்ச்சி தான் செய்யச் சொல்வார்கள் என்று நினைத்தேன்... மாத்திரை என்றால் இங்கயும் அதயே பின்பற்றலாமே????

    ReplyDelete
    Replies
    1. இந்த மாத்திரை மேட்டர் நான் ஒரு புத்தகத்தில் படித்தேன் சகோ.....இங்கு அதை பயன் படுத்தவில்லை என்றால் முதலில் இவர்கள் வாங்கும் சம்பளத்துக்கும் உண்மையாக வேலை செய்தால போதும் தொப்பை வராது சகோ

      Delete
  4. You are doing great job my friend. Congrats.
    I invite you to visit my blog on healthy living: www.frutarians.blogspot.in and offer your comments.

    Ashwinji

    ReplyDelete