Sunday 9 September 2012


அஸ்ஸலாமு அழைக்கும் 

திருப்தி அடைந்த ஆன்மாவே..!

மனித ஆன்மாக்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது திருக்குர்ஆன். பாவம் செய்யத் தூண்டும் ஆன்மா, இடித்துரைக்கும் ஆன்மா, திருப்தி அடைந்த ஆன்மா. 
  ‘இறைவனுக்கு மாறுசெய், அவனுடைய கட்டளைகளை மீறு, மனம் போன போக்கில் நட’ என்று தீய ஆன்மாவின் தூண்டுதலுக்கு ஒரு மனிதன் பலியாகும்போது, உடனடியாக இடித்துரைக்கும் ஆன்மாவின் மூலம் விழிப்புணர்வு பெற்று, இறைவனுக்கு முழுமையாக அடிபணியும் பாதைக்குத் திரும்புவானேயானால் அவனுடைய ஆன்மாதான் திருப்தி அடைந்த ஆன்மா ஆகும். இந்த ஆன்மாவை நேரடியாக விளித்து இறைவன் கூறுகிறான்: ‘‘திருப்தி அடைந்த ஆன்மாவே! உன் இறைவனின் பக்கம், மகிழ்ந்த நிலையில் செல்! உன் இறைவனின் திருப்தியைப் பெற்ற நிலையில், இணைந்துவிடு என்
நல்லடியார்களுடன்! மேலும் புகுந்துவிடு என் சொர்க்கத்தில்!’’ (திருக்குர்ஆன் 89: 2730)
  திருப்தி அடைந்த ஆன்மா என்றால் என்ன?
*  எந்த ஐயமும் இல்லாமல் முழுமன நிறைவுடன் இணையற்ற ஏக இறைவனை தன் அதிபதியாக
ஏற்றுக்கொள்பவர்.
*  இறைத்தூதர்(ஸல்) கொண்டுவந்த வாழ்க்கை நெறியை சத்தியமானது என்று நம்பி, அதனைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்பவர்.
*  அந்த வாழ்க்கை நெறி எதனைப் பின்பற்றச் சொல்கிறதோ அதனைப் பின்பற்றுபவர்; எதிலிருந்து விலகியிருக்கச் சொல்கிறதோ அதிலிருந்து விலகி இருப்பவர்.
*  அந்த நெறி என்னென்ன தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் வேண்டுகிறதோ அவற்றையெல்லாம் செய்யத் தயாராகி இருப்பவர்.
*  தொழுகை, நோன்பு போன்ற வழிபாடுகளில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டுபவர்.
*  மறுமையில் இறைவனின் உவப்பைப் பெற வேண்டும் எனும் ஒரே குறிக்கோளின் அடிப்படையில் இம்மை வாழ்வை அமைத்துக்கொள்பவர்.
  இப்படிப்பட்டவர்களைப் பார்த்துதான் ‘திருப்தி அடைந்த ஆன்மாவே’ என்று குர்ஆன் அழைத்து சொர்க்கப் பரிசையும் அளிக்கிறது. 
  அந்தத் தூய பரிசுக்குத் தகுதியுள்ளவர்களாக
நம்மையும் ஆக்கிக் கொள்வோமாக! ........அல்லாஹுதால நம் அனைவருக்கும் அருள் புரிவானாக 


No comments:

Post a Comment