Wednesday 12 September 2012

என் வாழ்கையில் நடந்த ஒரு சிரிப்பான நிகழ்வு இதோ உங்களுக்காக .....


என் வாழ்கையில் நடந்த ஒரு சிரிப்பான நிகழ்வு இதோ உங்களுக்காக ..... .....



நான் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது என்னுடைய

பக்கத்து வகுப்பில் இருக்கும்  பெண்களை  ஒரு கிராமத்துக்கு சேவை பண்ணுவதற்காக அழைத்து சென்றார்கள் அவர்களுக்கு என்னை காவலனாக அனுப்ப. எங்க பள்ளி தலைமை ஆசிரியர் முடிவு பண்ணுனாங்க .அப்ப நானும் அந்த பெண்களும்  புறப்பட்டோம்....

அப்பொழுது எனக்குள்ளே என்னையும் அறியாத ஒரு இன்பம் இருக்கத்தானே செய்யும் என்னை சுற்றி பத்து பெண்கள் அப்படியே என் மனசு ரக்ககட்டி பறக்குது ....[ரோசாப்பூ  சின்ன ரோசாப்பூ  டூயட்டுசாங் தான்  ஹிஹிஹி]


அந்த கிராமத்துல சேவை பனி முடிந்த பிறகு  ..அந்த பெண்கள் எல்லாம் தங்குவதற்காக  பந்தல் போட்டு அந்த பந்தளுக்குள் ஓய்வு  எடுத்துக்கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அவர்களுக்கு காவலனாக[காவலன் படம் விஜய் மாதிரி ஹிஹிஹிஹிசும்மா பீல் பண்ணுனேன் ]  நான் வெளியே  உட்கார்ந்து கனவு கண்டு.கொண்டு இருந்தேன் ...[கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னார்கள் அதான் ஹிஹிஹி ].
அப்பொழுது திடீர் என்று  பெண்கள் எல்லோரும்  சத்தம் போட்டு என்னை நோக்கி ஓடிவந்தார்கள் அப்படியே நான் சாக் ஆயுட்டேன் [மெர்சல் ஆயுட்டேன் ] தெரியுமா அந்த பெண்கள் எல்லோரும் என்னுடைய கையை பிடுத்து ரினாஸ் என்னை  காப்பாத்து ரினாஸ் என்னை  காப்பதுன்னு கத்துனாங்க கதருனாங்க ஆனா எனக்கும் ஒண்ணுமே புரியல .


அப்படியே நான் கொஞ்சம் நேரம் மெளனமாக இருந்தேன்....திடீர் என்று  அந்த பெண்கள்  என்ன தூக்கி கொண்டு அந்த பந்தளுக்குள் கொண்டு போய் போட்டார்கள் அந்த பத்து பெண்களும்  என்னை சுற்றி எங்களை காப்பது ரினாஷ் ..என்று கூறி அழ ஆரம்பித்தார்கள்  நான் அவர்களை நோக்கி கூல் டவுன் கூல் டவுன்  என்று கூறி  என்ன ப்ராப்ளம் என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் கூறினார்கள் அங்கே பார் ரினாஷ்  அந்த பெட்டிக்கு அருகில் பாம்பு என்று கூறினார்கள்


..நான் பல்லியை பார்த்தாலே கக்கா போய்டுவேன்..பாம்புனா சொல்லவா வேணும் ...இருந்தாலும் அந்த பொண்ணுங்க முன்னாடி பயத்த காட்ட கூடாதுன்னு நினைச்சேன் அப்படியே ஒரு ஹீரோ [நம்ம தல ] மாதிரி என் முகத்த அவுங்க முன்னாடி காட்டினேன்..


ஆனா நான் மனசுல பயத்த வெச்சுகிட்டு ....பீதி ஆகி பேதி ஆகி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் .அப்படி பயந்தேன் .........அப்படியே ஒரு கம்பு எடுத்து அந்த பாம்பு பக்கம் போய் இறைவா ! என்ன காப்பாத்துன்னு  சொல்லி ஓங்கி ஒரு அடி குடுத்தேன்.. அவ்வளவுதான் 


ஆனா பாம்பு அசையவே  இல்ல நானும் அந்த பாம்பு நல்லா  தூங்குதுன்னு நினச்சு மறுபடியும் ஓங்கி ஒரு அடிகுடுத்தேன் கொய்யால  அப்பவும் அந்த பாம்பு அசையவே இல்ல [நல்ல தூங்குது போல]  மறுபடியும் இறைவனை  நினச்சு  ஒரு அடி குடுத்தேன் அப்பவும் பாம்பு அசையவே இல்ல ..ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா முடியல ..........அப்பறம் தான் தெருஞ்சது அது ஏற்க்கனவே வயசாகி சாக இடம் கிடைக்காம இந்த பந்தளுக்குள்ள வந்து மண்டைய போட்ட பாம்புன்னு  தெருஞ்சது ..



அது அந்த பெண்களுக்கு  தெருஞ்சு போச்சு பொண்ணுங்க முன்னாடி அசிங்க பட்டா சொல்லவா வேணும்  கிலி கிலின்னு கிலுச்சுட்டாலுக.அவ்வ்வ்வ்வ்வ்வ்  என்ன கிண்டல் பண்ணி சிருச்சாங்க 
தலையே துண்டாபோனாலும்  கெத்தா வருவதுதான் பசங்க ஆனா பொண்ணுங்க முன்னாடி அசிங்க பட்டா தல.யாக இருந்தாலும் தல குனுஞ்சு தான் வரணும்    அப்ப என்னை எல்லாம் சொல்லவா வேணும்   எனக்கு ரொம்பவே அசிங்கமாக போச்சு ...வெளியே  காட்டிக்காம அப்படியே பில்லா படத்துல தல நடந்து வர மாறி  கெத்தா வந்தேன் ஆனால் அந்த பெண்கள் பள்ளியில் போய் எல்லார்கிட்டயும் போய்  சொல்லிட்டாங்க எல்லாத்துக்கும் நான் அசிங்க பட்டது தெருஞ்சு போச்சு அப்ப இருந்து செத்த பாம்ப அடுச்ச வெத்தான ரினாஷ்ன்னு  சொல்ல ஆரம்புசுட்டாங்க  ..இது என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத கெத்தா இருந்த நான் வெத்தாயுட்டேன்ன்னு  ஒரு சம்பவம் ஆகும் 
இப்ப இத நினைக்குபொழுது எனக்கு சிரிப்புதான் வருது.......ஹஹஹஹஹஹ் அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா ..




14 comments:

  1. சரி ஓக்கே...முதல் முறையா உங்க தளத்துக்கு வந்து இருக்கேன்... பாராட்டி தொலையுறேன்.....

    நல்லா இருக்கு.. நல்ல நகைச்சுவை...

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. ஹ ஹ ஹ ஹ ஹ ..ஹ ஹ ஹ ....

    ReplyDelete
  3. நல்லா இருக்கு ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணே உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  4. ம்ம்ம்ம் பிக்சர்ஸ் நல்லா இருக்கு......சிராஜ் சொன்ன மாதிரி வேறவழி இல்லாம ....ம்ம்ம்ம் நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹ ஹ ஹ ..ஹ ஹ ஹ ..முதல் முறையாக என் தளத்துக்கு வருகை தந்தமைக்கு உங்களை வருக வருக வருகன்னு வரவேட்கின்றேன்

      Delete
    2. நன்றி அண்ணே உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  5. வீரர் ரினாஸ் அவர்களின் வரலாறுகளும் இப்படி ஒரு நிகழ்ச்சியா?

    ReplyDelete
    Replies
    1. //வீரர் ரினாஸ் அவர்களின் //// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அண்ணே அண்ணே வாங்குன காசுக்கு மட்டும் பேசுங்க அண்ணே .
      ஹ்ம்ம்ம்ம்ம்ம் நன்றி அண்ணே உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  6. ///வீரர் ரினாஸ் அவர்களின் //// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அண்ணே அண்ணே வாங்குன காசுக்கு மட்டும் பேசுங்க அண்ணே .
    ஹ்ம்ம்ம்ம்ம்ம் நன்றி அண்ணே உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  7. நல்ல இருக்கு தம்பி. ஆமா ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு பார்டி வைக்க வில்லையே ஏன். படங்கள் அருமை!

    ReplyDelete
  8. நன்றி அண்ணா ...அண்ணா நான் ப்ளாக் ஆரம்புச்சு 3 ஆண்டுகள் ஆகுது அண்ணா

    ReplyDelete
  9. அது ஏற்க்கனவே செத்து போன பாம்புனு

    ஹா ஹா ஹா

    ReplyDelete