Follow by Email

Wednesday, 28 November 2012

நான் கோயம்புத்தூர்காரங்கோ நீங்க ?


                                                      எங்க கோயம்புத்தூர் ரயில் நிலையம் 

தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை; 
மதுரையைக் கடக்கிறது வைகை; 
நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி; 
தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது; 
திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது;
 என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.

வற்றாத ஒரு நதியுமில்லை; வானளாவிய ஒரு கோவிலுமில்லை; இதிகாசத்திலே இடமுமில்லை; எந்த அரசும் இந்நகரைக்[கோயம்புத்தூர்] கவனிப்பதுமில்லை; இன்னும் சொல்ல வேண்டுமானால் , 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.
தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக்[சென்னை] கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார். இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை; ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?
விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன; ஆனால்,

எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.
சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம். மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம். கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம். வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது. எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.
பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை. உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...
அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான். எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.
இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது


 கோவையை மேலும் அழகாக காட்டுகிறது  உலகமக்களை  ருசிக்க தூண்டும்   
சிறுவாணி ; 
மரியாதைக்குரிய கொங்குத் தமிழ், 

அத்துப்படியான
ஆங்கிலம், 

இதமான
காலநிலை, 
அதிரடியில்லாத அரசியல்... இவற்றையெல்லாம் தாண்டி, அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து  உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.
புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி பீடு நடை போடுகிறது. அதைக்கொண்டாட வேண்டிய அழகான ஊர் . என்ர ஊரு கோயமுத்தூருங்கோ! ............................ நன்றி இனி அடுத்து கோவையை பற்றி என் முகம் அறியாத கோவை நண்பன் அருமையான முறையில் இயக்கிய பாடலை கீழ பகிர்ந்து இருக்கின்றேன் அதையும் பார்த்து ரசியுங்கள் நன்றி இப்படிக்கும் உங்கள் கோவை நண்பன் >>>>ரினாஸ்<<<< 

.16 comments:

 1. தெரியாத பல விசயங்களை தெரிந்து கொண்டேன். நல்ல பதிவு.வாழ்த்துக்கள் தம்பி

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள் சகோ

   Delete
 2. நான் கோயம்பத்தூர் இல்லீங்க..
  ஆனால் கோயம்பத்தூர்ல தான் இருக்கன்..
  கோவையை பற்றி எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதியிருக்கிறேன்.. ஓய்வு கெடைக்கும்போது பாருங்க..

  என்னை பயமுறுத்தியது கோவை..!
  http://anbu.blogspot.com/2012/11/blog-post_23.html

  ReplyDelete
  Replies
  1. ///
   ஆனால் கோயம்பத்தூர்ல தான் இருக்கன்.. // கோவையில் எங்க இருக்கீங்க சகோ
   //// கோவையை பற்றி எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதியிருக்கிறேன்.. ஓய்வு கெடைக்கும்போது பாருங்க.. //// பார்த்து படுச்சு பதில் கமன்டும் போட்டுவிட்டேன் சகோ ....நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் சகோ

   Delete
 3. Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள் சகோ விஜி

   Delete
 4. Rinash Khan yeen yennai bolok pannuna ? sari vidu yennai nee purinthathu awalathu thaan

  ReplyDelete
  Replies
  1. சகோ நான் எப்ப உங்களை ப்ளாக் பண்ணுனேன் சகோ

   Delete
 5. appa yeen vara maattuthu un peyaru pooi poru yen peyaru varuthaa yenru

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ஒன்னுமே புரியல சகோ எதுல சகோ மூகநூலையா .....முகநூல்ல உங்க பெயர் என்ன ?

   Delete
 6. நன்றி நன்றி நன்றி நான் அஹமட் யஹ்யா
  எங்க நாடு இலங்கை...இலங்கையில் 24 மாவட்டங்கள் இருக்கின்றது
  அதில் வட மத்திய மாகாணம்..எனும் அனுராதபுரம் என்ற பகுதியில்
  நாங்கள் வசிக்கின்றோம்..இலங்கையைப் பற்றி சொல்ல வேண்டுமானால்
  அது பெரும் சரித்திரங்களாக சொல்லலாம் இவ்விடத்தில் சொல்லுவதற்கு
  நேரமும், காலமும் இடங்கொடுக்க மறுக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ ..நேரமும் காலமும் இருந்தால் ..நீங்கள் இலங்கையை பற்றி அழகான முறையில் கூறுங்கள் ....நாங்கள் காத்து இருக்கின்றோம்

   Delete
 7. பாட்டைக் கேட்டு வரி எழுதுறதுக்குள்ள தாவு தீருது. பாதிதான் எழுதி இருக்கேன்!!

  கோவை கோவை இது மயக்கம் தந்தது
  கோவை கோவை இது காதல் மண்ணிது
  உழைப்பு உழைப்பு இது கோவை சொன்னது
  உயர்வு உயர்வு இது கோவை தந்தது
  ஒரு புது சரித்திரம் படைக்கத் துடிக்கும்
  உயிரினைத் தூண்டும் ஊரிது
  சுய முயற்சியால் பல புதுமைகள் படைக்கத்
  தன்னம்பிக்கை ஊட்டும் ஊரிது
  சிறு தொழிலையே வரவேற்கும் பார்
  இது பாசம் கொண்டது
  வெறும் அன்பையே விடையாய் சொல்லும்
  கோயமுத்தூர் இது!
  சிறுவாணி சுவையின் நினைப்பும்
  கரிசலும் செம்மண்ணும்
  சிம்பொனி போல் கொங்குத்தமிழும்
  வேறெங்கும் இருக்கா?
  சாயங்காலச் சில்லெனக் காற்றும்
  சோர்வான உடலைச் சீண்டும்
  காந்தம் போல் மனதினை இழுக்கும்
  இது போல வருமா?
  அட, நறுக்கென்ற நக்கல்கள்
  சிறு நையாண்டி லோலாய்கள்
  பல நட்பான நேசங்கள்
  மிகப் பளிச்சென்ற பழக்கங்கள்
  நோம்பின்னு வந்தாலே
  சாணம் தெளித்துக் கோலம் போடுவோம்
  ஆடின்னு வந்தாலே
  தள்ளுபடியிலே மிதப்போம்
  புத்தாண்டு சிறப்பு
  எல்லா மதத்துக்கும் தமிழ் மனசு, வரும் வரவேற்பு
  அறுபது முதல் யாருக்கும் தனி மரியாதை
  இங்க பாரு பாரு
  கோவை கோவை இது கோவன் தந்தது
  கோவை கோவை மான்செசுடர் சவுத் இது
  இந்தியன் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்ந்தது
  கல்வி கல்வி எங்கள் கோவையின் அழகிது
  காந்திபுரம் வெல்கம்சு யூ
  ஆர்.எஸ்.புரம் லவ்சுயூ
  சாய்பாபா காலணி கோயம்பத்தூர் சிந்தாமணி
  எங்க ஊரை சுத்திப் பாரு நீ
  அழகுமிகு உக்கடம்
  வாக்கிங்போக ரேசுகோர்சு
  சாப்பிங்போக டவுன்கால்
  மணக்கமணக்கப் பூ மார்க்கெட்

  மச்சான் அப்ப இராமநாதபுரம்?

  இந்தப் பாட்டு பொறந்த எடமே
  இராமநாதபுரந்தானுங்ணோவ்...

  கோணியம்மன் அருளிருக்கு
  பேரூரு பெருமையிருக்கு
  மருதமலை துணையிருக்கு
  புலியகுளம் பிள்ளையார் பவர் இருக்கு
  கிருஷ்ணா சுவீட்சு மைசூர்பாகு தித்திக்கும் ஊருங்க
  அன்னபூர்ணா சாம்பாரு கொதிக்கும் ஊருங்க
  முத்துக்கடை பேல்பூரி இப்போ ஸ்பீடான ஊருங்க
  பப்ளிக் டியூட்டியச் சொல்லி இந்தப் பாட்டை நீங்க கேளுங்க
  ஏழாம் நெம்பர் பஸ்சுல ஏறி ஊரைச் சுத்திப் பாருங்க
  பர்முடாசுல கோயமுத்தூரு ஏன் இல்லேன்னு கேப்பீங்க?

  சாமின்னு செல்லமாய் அழைக்கும்
  ஈன்ற தாய் இனிக்கும் சில பேச்சும்
  தம்பீன்னு பாசங்கள் பொழியும்
  இது போல் வருமா?
  வந்தோரை வாழவைக்கும் பூமியெங்கும்
  இது போல் இல்லை!
  மனிதர்கள் மனமோ வெள்ளை
  இது போல் வருமா?

  ReplyDelete
  Replies
  1. முதலில் உங்களை நான் அன்போடு வரவேட்கின்றேன் ..வருக !வருக!
   இந்த பாட்டை நான் எத்துணையோ முறை கேட்டு இருக்கின்றேன் ஆனால் எனக்கு வரிகளை எழுதனும்னு தோணலை அப்படி தோணி இருந்தாலும் ..எனக்கு நாக்கு தள்ளி இருக்கும் ......ஒவ்வொரு முறையும் பாட்டை நிறுத்தி நிருத்தி எழுதுவது ...எனக்கு சோம்பேறித்தனம் ..ஆனால் சகோ உங்களை நான் பாராட்டுகின்றேன் ஏனென்றால் .....நீங்கள் இவ்வளவு பொறுமையாக இந்த பாட்டை இதுவரைக்கும் எழுதி இருக்கிங்களே ..ம்ம்ம்ம்ம்ம் சூப்பர் ....தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் சகோ பழமைபேசி

   Delete
 8. Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ...பழனி.கந்தசாமி

   Delete