Saturday 17 November 2012

இஸ்லாமியர்களின் விளம்பரம் !!


தீபாவளிக்கு ரிலீசான ...விஜய்யின்  துப்பாக்கி படத்தில் ..இஸ்லாமியர்களை தாக்கும் விதத்தில் ஒரு காட்சி இருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே ..அந்த காட்சியை தவிர்க்க  கூறி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன அல்லவா ......இதனால் விஜய்யின் வீட்டில் போலிஸ் பாதுக்காப்பு......தேசிய முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் ...பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் ..இப்படி இந்த ஒருவாரத்தில் .இந்த படத்தை பற்றி ...நடந்த விசயங்களை கூறிக்கொண்டே போகலாம் .......


என்னை பொறுத்தவரை.  எந்த வித இஸ்லாமிய அமைப்புகளும் இந்த படத்தை பற்றி எதுவுமே பேசாமல் இருந்தால் .இந்த படம் எல்லா தியேட்டர் களிலும் ..நாலு நாளில் தூக்கி இருப்பார்கள் ..படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது ......ஆனால் இந்த படத்தில் இஸ்லாமியர்களை தாக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட அந்த ஒரு காட்சியால் ..ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் கண்டனத்தால் .படத்துக்கு பெரும் விளம்பரம் கிடைத்துவிட்டது .....படமே பாக்காத இஸ்லாமியர்கள் ..இந்த படத்தை போய் பார்ப்பதை நான் பார்த்தேன் .....இஸ்லாமிய மக்கள் குடும்பம் குடும்பமாய் அப்படி இந்த படத்தில் என்னதான் .இஸ்லாமியர்களை தப்பாக சொல்லி இருக்கிறார்கள்  என்பதை தெரிந்து கொள்ள இந்த படத்தை போய் பார்க்கிறார்கள் ...ஏன் என் குடுப்பதில் கூட என் அம்மா ..என் கிட்ட கூறுகிறார்கள் ..>>>>ரினாஸ்<<<<  இந்த துப்பாக்கி படத்ததோட சி டி கேசட்டு இருந்த வாங்கி தாட ..அதுல என்னமோ நம்மள பத்தி தப்பா போட்டு இருக்காமே  .அப்படின்னு எங்கம்மா என் கிட்ட கேக்குறாங்க ..என்ன பொருத்தவரைக்கும் இஸ்லாமியர்களின் விளம்பரம் இந்த படத்துக்கு பக்க பலமாக மாறி விட்டது ....படம் பாக்காதவங்க கூட இந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள் .

இந்த சினிமா காரர்கள் இப்படித்தான் ..நாம் இதை கண்டுக்காம இருந்தால் இந்த படத்துக்கு இவ்வளவு வரவேற்ப்பு  கிடைத்திருக்காது ....இனி அடுத்தது கமலின் விஸ்வரூபம் 



என்ற படம் முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது ..அதுக்கும் நாம் கண்டனம் என்று கூறி ..விளம்பரம் படுத்தவேண்டாம் என்பது .என்னுடைய தாழ்மையான கருத்து ...........நன்றி நட்புடன் என்றும் உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<


44 comments:

  1. உண்மைதான்!இவர்களுக்கு இலவச விளம்பரம் கிடைத்துள்ளது!

    ReplyDelete
    Replies
    1. //உண்மைதான்!இவர்களுக்கு இலவச விளம்பரம் கிடைத்துள்ளது!/// இலவச விளம்பரம் கிடைக்கவில்லை சகோ .இலவச விளம்பரம் குடுத்து இருக்கிறோம் சகோ

      Delete
  2. நீங்க சொல்வது சரி தான், ஆனால் ஒருத்தரும் கேட்கமாட்டாங்க!!!

    ReplyDelete
    Replies
    1. ///நீங்க சொல்வது சரி தான், ஆனால் ஒருத்தரும் கேட்கமாட்டாங்க!!!/// வருத்தமாக இருக்கிறது சகோ

      Delete
  3. அப்போ அந்த 48 பேரில் நீங்கள் ஒருவர் இல்லையா??!!

    ReplyDelete
    Replies
    1. நம்முடைய எதிர்ப்பினால் .சினிமா வளர்கிறது என்பதுதான் ..என்னுடைய ஆதங்கம்

      Delete
  4. ஓசியில் அவர்களுக்கு விளம்பரம்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்

      Delete
  5. ரினாஸ்..

    இந்த விளம்பரத்தால் இந்த படம் 100 நாள் ஓடினாலும் சரி....அது ஓட ஓட நமது போராட்டத்தின் வெற்றியும் சேர்ந்தே பேசப்படும்...ஆனால் இனி அப்படி ஒரு படம் எடுக்க கண்டிப்பாக யோசிப்பார்கள்.... ஒட்டு மொத்தத்தில் இது நமது வெற்றி... இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்... முஹம்மது நபி சல் அவர்களை கிண்டல் பண்ணி படம் எடுத்தார்களே, அதிலும் நமக்கு சாதகமான விஷயங்கள் ஏராளம் உண்டு... டீக்கடையில் டிஸ்கஸ் பண்ணுவோம், இன்ஷா அல்லாஹ்....

    ReplyDelete
  6. எனக்கு இந்த போஸ்டில் உடன்பாடு இல்லை..ஆனாலும் உங்களுக்காக பிளஸ் வோட்டு... பரிந்துரை வரும்படி செய்து விடலாம்..டோன்ட் வொர்ரி.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  7. முஹம்மது ஆசிக்கின் இந்த போஸ்ட் இதை நல்ல முறையில் அலசி உள்ளது... பார்க்கவும்..

    http://pinnoottavaathi.blogspot.com/2012/11/blog-post_17.html

    ReplyDelete
  8. கமல் ஹாசன், படத்தை எடுத்த மாதிரியே ஓட்டலாம் என்று இருந்தால் அவருக்கும் இன்றைய கதி தான். விளம்பரம் அவருக்கு கிடைப்பது முக்கியம் இல்லை, எந்த மதம்களையும் , சினிமா காரன் அவன் இஷ்டம் போல் எடுத்து, நாம் பார்த்து வருகிற காலம்கள் எல்லாம் மலையேறியாகி விட்டது. இனி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் இது. இந்த மக்கள் இல்லை என்றால் இந்த சினிமா காரன் யாவரும் இல்லை. பெட்டியை பூட்டி விட்டு போகவேண்டியது தான். மக்களை எதிர்த்து யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதை இந்த சினிமா நாடோடிகள் புரிந்தால் சரி.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் புரிவார்கள் என்று நம்புகிறேன்

      Delete
  9. ஹலோ இந்த மாதுறி வேறு எவணும் படம் எடுக்கக்கூடாது அதுக்குத்தாண் ஒகே

    ReplyDelete
    Replies
    1. நம்முடைய எதிர்ப்பினால் .சினிமா வளர்கிறது என்பதுதான் ..என்னுடைய ஆதங்கம் சகோ

      Delete
  10. சீறாமல் பொறுத்து பொறுத்து அமைதியா போனா பாம்பை கூட மிதித்தே கொன்று விடும் இந்த சமூகம்... ! சீற்றம் தேவை...! அவசியமான நேரங்களில்... இந்த பதிவு மீ நோ லைக்


    மன்னிக்கவும் மைனஸ் ஓட்டுக்காக..!!

    ReplyDelete
    Replies
    1. /// மன்னிக்கவும் மைனஸ் ஓட்டுக்காக..!!/// உண்மையை சொன்னதற்காக எனக்கு இந்த எதிர்ப்பு ..ம்ம் பரவால சகோ

      Delete
    2. என்ன உண்மை சகோ??? இந்த எதிர்ப்பை காட்டாமல் இருந்து இருந்தால் இஸ்லாமியர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல் என்ற விஷம் மக்கள் மனதில் காலத்துக்கும் பதிந்து விடுமே..!!

      படத்தை பார்த்த மாற்று மத நண்பர் ஒருவரின் மகன் கேட்டானாம்.. ஏன்பா இந்த முஸ்லிம் எல்லாருமே தீவிரவாதியாதான் இருப்பாங்கலான்னு..!!?? :(

      இது போல ஒரு கேள்வியை நாளைய இளைய சமுதாயத்தின் மனதில் சினிமா விதைக்கும் பொது அதை கண்டும் காணமல் விட சொல்கிறீர்களா சகோ???


      வீண் விளம்பரம் கிடைத்ததோ... அதனால் படம் ஓடியதோ.. அதெல்லாம் நமக்கு தேவையே இல்லை..! நாம் ஒன்றிணைந்த எதிர்ப்பால் சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் அளவிற்கு வெற்றி கிடைத்துள்ளதே...

      இனிமேல் இஸ்லாமியனை தீவிரவாதியாக சித்தரிக்க கண்டிப்பாக யோசிப்பார்கள்..! அதுதான் நம் நோக்கம் கூட..!!

      Delete
    3. உண்மை இதே போல் எனது இந்து மத நண்பணின் மகள் எங்கள் வீட்டிற்க்கு வந்திருந்த பொழுது
      அவள் அப்பாவை பார்த்து "அப்பா இவங்கெல்லாம் தீவிரவாதி தானேப்பா இவங்க எல்லாரையும் பாம் வச்சி கொல்வாங்கப்பா " என சொல்ல என் நண்பர் அதிர்ந்து விட்டார்
      ஸ் அப்படியெல்லாம் பேச கூடாது ..உனக்கு இதெல்லாம் யார் சொல்லி கொடுத்தா என கண்டித்தார்
      இல்லப்பா சினிமால லாம் அப்படிதான் காட்றாங்கப்பா என்றாள்

      Delete
  11. அவர்கள் என்னையுமல்லவா துப்பாக்கி படம் பர்ர்க்க வைத்துவிட்டார்கள்.

    ReplyDelete
  12. சலாம் சகோ.கான்

    படம் பார்ப்பவர்கள் தியேட்டர் செல்லவேண்டும் என்று அவசியம் இல்லையே..நானும் இந்த படம் பார்த்தேன்..தியேட்டரில் அல்ல..திருட்டு சிடியும் அல்ல..இணைய தளம் இருக்கிறதே..!!! இந்த படம் ஓடக்கூடாது என்று விரும்புபவர்கள் மதுரையில் அழகிரி " காதலில் விழுந்தேன் " எனும் திரைப்படத்திற்கு என்ன வழிமுறையை கையாண்டாரோ அதையே கையாள முடியும்..ஆயினும் அது நமக்கு தேவை இல்லை..விளம்பரம் செய்வது எதற்க்காக கல்லா கட்டத்தானே??? அதையே முடக்கிவிட வாய்ப்பு இருந்தும் நாம் செயல்படுத்தாதது அது நமக்கு தேவை இல்லை என்பதால் மட்டுமே...

    அதனால் அடுத்த எதிர்ப்பு ஏற்படுமாயின் தாங்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறோம்...உங்களுக்கு நமது ப்ளஸ் வோட்டு..

    நன்றி !!!

    ReplyDelete
  13. நன்றி !!!நன்றி !!!நன்றி !!!நன்றி !!!நன்றி !!!

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

    எனக்கும் சில கருத்துக்களை சொல்லுவதற்கு இடம் வைத்த வாசகர்களுக்கும் இந்த புலோஜரின் சொந்தக்காரர் மதிப்புக்குரிய றினாஸ் சகோதரர் அவர்களுக்கும் நன்றிகள்.
    இன்றைக்கு உலகம் என்ற வட்டத்தை நாங்கள் சாதாரணமாக எடுத்து நோக்கும் போது இஸ்லாத்தில் பல தரப்பட்ட விலம்பரங்கள். இன்றைக்கு நமது இஸ்லாமிய தாயிஹல் என்று சொல்லக்கூடிய நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக்கூடிய வர்களும் ஒரு கடை போன்ற பிஸ்னஸ்களை செய்தால் அதில் ஒரு வாகனத்தின் டயரை விற்பனை செய்யதாக இருந்தால் ஒரு பெண்ணை விளம்பரமாக வைத்து விற்பனை செய்கின்றவகளும் இன்றைக்கு ஏறாலம்.

    இஸ்லாம் ஒரு தூய மார்க்கம். இதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏக இறைவனாகிய அல்லாஹ் உருவாக்கியவையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்காக மட்டும் உருவாக்கப் பட்டதல்ல இஸ்லாம். மாறாக அன்று முதல்; இன்று வரை இனிமேல் காலங்கள் உள்ளவரை
    வாழ்ந்த- வாழ்கின்ற- இனி வாழும் மக்களுக்காக எல்லாக் காலத்திலும்- எல்லாப் பகுதிகளிலும் வாழும் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் படியான வாழ்க்கைத் திட்டம் தான் இஸ்லாம்.


    ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும் ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான் இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால் விபச்சாரம்.

    ‘விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான நிலையில் இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை’ எனற ஹதிஸை இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.



    ‘கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம். காதால் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும் விபச்சாரம். இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான உறுப்பு உண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித் தள்ளிவிடும்’ – ஹதீஸின் சுருக்கம்.

    தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.

    வேதனையான விஷயம் என்னவென்றால், நான் ஏகத்துவத்தில் இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய எத்தனையோ பேர் சினிமா பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். முக்கியமாக வெளிநாட்டில் வசிப்பவர்கள், வார விடுமுறை நாட்களில் அன்றைய ரிலீஸ் படத்தை பார்த்துவிட்டு, தாமதமாக உறங்கி, ஷைத்தான் காதில் சிறுநீர் கழிப்பதையும் சட்டை செய்யாமல், கொரட்டை விட்டு தூங்கி, பஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு, நேராக ஜும்ஆ தோழுகைக்கு எழுந்திருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? சிலர் பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் போது தயாராவதை பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும்! எதற்காக தொழுகக்காக அல்ல! தூங்குவதற்காக!

    ‘நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும்’ 17:36.

    சினிமவைப் பார்த்து பொழுதை கழிப்பவர்கள் மேற்கண்ட இறைவசனத்தின்படி, மறுமையில் இறைவனிடம் எப்படித் தான் பதில் சொல்லப் போகிறார்களோ!

    முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடவேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையை நடத்திக் கொண்டிருப்பார்கள்! முடிவாகாத நிலையில், TV யில் நடிகையின் two piece உடையை ரசித்து கொண்டிருப்பார்கள். வெட்கக்கேடு!

    கலாச்சாரச் சீரழிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், “கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா’ என்ற காலம் போய், “பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?’ என்ற ரீதியில் அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்! கலாசார சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது.

    கதையை நம்பி இருந்த காலம்போய், சதையை நம்பி இருக்கும் கலியுக காலம். “கருத்தம்மா’ என்று படமெடுத்தாலும், அதில், “செவத்தம்மாவை’ போட்டால் தான் படம் ஓடும்; அதனால், ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே இயக்குனர்கள் பதிலாக இருக்கும். அப்படியானால், இவர்கள் கூறுவது என்ன? மனிதனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும், அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே கிடையாதா? நவூதுபில்லாஹ்.

    வஸ்ஸலாம் நான் துப்பாக்கி திரைப்படத்துக்கு கருத்து சொல்ல வில்லை பொதுவாக சிமாக்கு சொன்னேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோ ..நலல தெளிவான கருத்து

      Delete
  15. இதை சொன்னால் யார் கேட்பார்கள், விளம்பரம் செய்துக் கொடுக்கவே வழக்கமாக சாதி சங்கம், மத சங்கம் பல உள்ளன. பின் புல வர்த்தகமும் நடைபெறலாம். துப்பாக்கியை விடுங்க, உலக மகா மொக்கை படத்தை டைட்டானிக் கணக்கா விளம்பரம் தேடிக் கொடுக்கப்பட்ட போது இதனையே யாம் சொன்னோம். கேட்பாரில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  16. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். 49:12.

    39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

    39: 54. ஆகவே (மனிதர்களே) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட் மாட்டீர்கள்.

    39:55. நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.

    39:56. “அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;

    39:57. அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால் , நானும் முத்தகீன் – பயபக்தியுடையவர்களில் – ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும் ;

    ReplyDelete
    Replies
    1. ஜஸாக்கல்லாஹ் ஹைர்,

      Delete
  17. well said Rinash Khan

    poor movie got more negative publicity.one more news, vijay may act as a islamic character in next movie (this is like putting something to beggar plate, who need this .. idiots..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  18. சலாம் சகோ.ரினாஷ் கான்..!
    உங்கள் நோக்கம்... துப்பாக்கி படம் எடுத்தவர் நஷ்ட்டப்பட வேண்டும் அல்லது இலாபம் சம்பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றால்... அது நமது நோக்கம் இல்லை.

    ஹிட் படமோ... ஃப்ளாப் படமோ... அதில் தவறான தகவல் மக்களிடம் பரப்பபடக்கூடாது..! அவ்ளோதான்..!

    துப்பாக்கி எடுத்தவர்கள் சம்பாதிப்பது குறித்து எனக்கு கவலை இல்லை. தவறான கருத்துக்கள் நீக்கப்படுவதில்தான் எனக்கு அக்கறை..! இதுபோலத்தான் எல்லாருக்கும். ஆனால்... நீங்கள் விஜய்/முருகதாஸ்/தாணு போன்றவர்களுக்கு தொழில்முறை எதிரியை போல பிசினஸ் நோக்கில் சிந்திக்கிறீர்கள்..! அது தவறு சகோ.ரினாஷ்கான்.

    ReplyDelete
    Replies
    1. /// தொழில்முறை எதிரியை போல பிசினஸ் நோக்கில் சிந்திக்கிறீர்கள்..! அது தவறு சகோ.ரினாஷ்கான்./// சகோ நான் அப்படி நினைக்கவில்லை .அவர்கள் எக்கேடு கெட்டு போகட்டும் ....இஸ்லாத்தால் சினிமா வளர்கிறது என்பதுதான் எனது ஆதங்கம் சகோ

      Delete
    2. ///இஸ்லாத்தால் சினிமா வளர்கிறது///-------------படு அபத்தமான வரி..!

      முதலில்... பதிவின் தலைப்பில் துப்பாக்கிக்கு போஸ்டர் போட்டு விளம்பரம் தந்த உங்களை நீங்கள் திருத்திக்கொள்ளவும்..! கண்டும் காணாமல் போகச்சொல்லும் உங்களால்தான் சினிமாவில் இஸ்லாமிய துவேஷம் வளர்க்கப்படுகிறது என்கிறேன் நான்..!

      Delete
    3. // உங்களால்தான் சினிமாவில் இஸ்லாமிய துவேஷம் வளர்க்கப்படுகிறது என்கிறேன் நான்./// கண்டனத்துக்குரிய கமன்ட் சகோ இது ..என்னை பற்றி முழுமையாக தெரியாது உங்களுக்கு தெரியாமல் இப்படி அபத்தமாக பேசாதீர்கள் ..வயதில் சிறியவன் நான் ..வாக்குவாதம் செய்யும் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது என்னுடைய அனுபவத்தால் .எழுதப்பட்ட பதிப்புதான் இது ....அதை நீங்கள் பாராமல் என்னை .!// உங்களால்தான் சினிமாவில் இஸ்லாமிய துவேஷம் வளர்க்கப்படுகிறது என்கிறேன் நான்./// என்று கூறுவது முறை அல்ல

      Delete
    4. //கண்டும் காணாமல் போகச்சொல்லும் உங்களால்தான் சினிமாவில் இஸ்லாமிய துவேஷம் வளர்க்கப்படுகிறது என்கிறேன் நான்..!//

      இதில்....//கண்டும் காணாமல் போகச்சொல்லும்//-----நீங்க கண்டனம் தெரிவித்த வரியின் ஆரம்பமான இது உங்கள் கண்ணில் படவே இல்லையா...? :-(

      Delete
  19. சலாம்

    //என்னுடைய அனுபவத்தால் .எழுதப்பட்ட பதிப்புதான் இது//

    இதை பலர் முன்பே யூகித்திருக்க கூடும் சகோ..படத்தை பார்த்து தன்னுடைய மகன் கூறுவதாக சகோ.முரளி கண்ணன் சொல்வதை பாருங்கள்

    ****நேற்று இரவு முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் பார்த்துவிட்டு நானும் என் 9 வயது மகனும் திரும்பிவந்து கொண்டிருந்தோம். அவன் என்னிடம்

    “ஏம்பா, இந்த முஸ்லிம் எல்லாமே இந்தியாவை அழிக்கத்தான் இருக்காங்களா? என்று கேட்டான்.****

    தந்தை பதிவு எழுத போய்தானே அறியாதோர் உள்ளத்தில் இப்படி விதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது ..இன்னும் எத்துனை எத்துனை உள்ளங்களில் நுழைந்திருப்பது தெரியாமலே உள்ளது.. இவர்கள் எந்த விளம்பரத்தை பார்த்து படம் பார்க்க சென்றனர்..இதைதான் வேரறுக்க வேண்டியது நம் கடமை..இஸ்லாம் விபச்சாரத்தை தடைசெய்கிறது என்று ஜூம் ஆவில் இமாம் கூறினால் அது விபசாரத்திற்கு விளம்பரம் என்று கூற முடியுமோ..???

    சரி நீங்கள் கூறுவது போல் இது விளம்பரம் என்றே வைத்து கொண்டாலும் இனிமேல் இது போல் படமெடுக்க யாரும் துணிய மாட்டார் அல்லவா..???

    கடைசியில் ..இக்பால் செல்வன் பாராட்டும் அளவிற்கு உங்கள் சிந்தனை அமைந்து விட்டதே என்பது தான் இங்கு வேதனை..


    ReplyDelete
    Replies
    1. ///கடைசியில் ..இக்பால் செல்வன் பாராட்டும் அளவிற்கு உங்கள் சிந்தனை அமைந்து விட்டதே என்பது தான் இங்கு வேதனை./// சகோ நமக்கு சரியுனு படுவது மற்றவர்களுக்கு தவறாக இருக்கலாம் .மற்றவருக்கு தவறுன்னு படுவது நமக்கு சரியாக இருக்கலாம் சகோ ../// நான் சினிமா சரியுனு சொல்லல சகோ ....சினிமாவில் போட்ட அந்த ஒருகாட்சியால் நாம் எதிர்க்கிறோம் ..நம்முடைய எதிர்ப்பு எதிரிக்கு பக்க பலமாக மாருகிரேதே ..அதுதான் எனக்கு வருத்தம் ......இவ்வளவு தூரம் நான் ஏன் கூறுகிறேன் என்றால் ..நான் வேலை பார்க்கும் இடம் மல்டி காம்ளக்ஸ் .இங்கு அனைத்துமே கிடைக்கும் ..இந்த காம்லக்ஸ்சில் நான்காவது தலத்தில் ..சினிமா தியேடேர் இருக்கிறது ...என்னுடைய கடைக்கு ஒரு இஸ்லாமிய குடும்பம் வந்தது ..நான் பேச்சுகுடுத்து...நீங்க எங்க போறிங்கனு கேட்டேன் ..அதற்க்கு அந்த குடும்பத்தலைவி சொன்னாங்க ..நாங்க படமே பார்க்கமாட்டோம் ..ஏன் நாடகம் கூட பார்க்கமாட்டோம் .....சும்மா தொழுக பள்ளிக்கு செல்லும் பொழுது அங்க கருப்பு பலகையில் ..துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை தாக்கி எடுக்க பட்ட படத்துக்கு கண்டனம் என்று எழுதி இருந்தது .....அதை படித்தவுடன் அந்த படத்தில் அப்படி என்னதான் இஸ்லாத்தை பற்றி போட்டுஇருக்காங்கனு ..பார்க்க வந்து இருக்கோம்பா ..என்று அந்த குடுப்பத்தார் ..என்னிடம் கூறினார்கள் ..இதை கேட்டதனால் தான் ..நான் இந்த பதிப்பை போட்டேன் சகோ ..அதை யாருமே புருஞ்சுக்க மாட்டிங்குரிங்க ....

      Delete
    2. ////என்னுடைய கடைக்கு ஒரு இஸ்லாமிய குடும்பம் வந்தது ..நான் பேச்சுகுடுத்து...நீங்க எங்க போறிங்கனு கேட்டேன் ..அதற்க்கு அந்த குடும்பத்தலைவி சொன்னாங்க ..நாங்க படமே பார்க்கமாட்டோம் ..ஏன் நாடகம் கூட பார்க்கமாட்டோம் .....சும்மா தொழுக பள்ளிக்கு செல்லும் பொழுது அங்க கருப்பு பலகையில் ..துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை தாக்கி எடுக்க பட்ட படத்துக்கு கண்டனம் என்று எழுதி இருந்தது .....அதை படித்தவுடன் அந்த படத்தில் அப்படி என்னதான் இஸ்லாத்தை பற்றி போட்டுஇருக்காங்கனு ..பார்க்க வந்து இருக்கோம்பா ..என்று அந்த குடுப்பத்தார் ..என்னிடம் கூறினார்கள் ..////-----------சகோ.ரினாஷ்கான்... எனது மிக மிக வன்மையான கணடனத்தை உங்களின் இந்த கஸ்டமர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

      நீங்கள் கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டிய நபர்கள் இவர்கள்தான்.

      ஆனால், நீங்க அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தீர்களா...?
      அல்லது... உங்கள் கஸ்டமர்கள் எனபதால் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டீர்களா...? :-))

      Delete
    3. ///நீங்க அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தீர்களா...?
      அல்லது... உங்கள் கஸ்டமர்கள் எனபதால் அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டீர்களா...? :-))//// இல்லை இல்லை நான் அவர்களுடன் கண்டனம் தெரிவிக்க வில்லை ஏன் என்றால் அவர்கள் வந்ததோ சனிகிழமை ..என் கடையிலையோ ..எண்ணி அடங்காத கஸ்டமர் என்னால் அவர்களிடம் பர்சுனலாக பேச முடியவில்லை ..ஏன் என்றால் என்னை சுற்றி மாற்று மத ..கஸ்டமர்கள் அதிகமாக இருந்தார்கள் ..நான் ஏதாச்சும் சொல்ல போக ..அவர்கள் மன வருத்தம் அடைய வேண்டாம் என்று விட்டுவிட்டேன் ..பின்பு வரும் பொழுது தெளிவாக கூறலாம் என்று

      Delete
  20. நீங்கள் மேலோட்டமாக நுனிப்புல் மேய்வது போல இந்த விஷயத்தை அணுகியிருக்கிறீர்கள். இதிலுள்ள ஆழமும் நுட்பமும் உங்களுக்கு புரியவில்லை என்றே எனக்குப்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. /// இதிலுள்ள ஆழமும் நுட்பமும் உங்களுக்கு புரியவில்லை /// உண்மைதான் சகோ என்னுடைய வயதும் என்னுடைய அனுபவமுமே இந்த பதிப்பு ஆகும்

      Delete