Thursday 14 February 2013

குழந்தைகள் கண்ணாடி மாதிரி .<><><><><>




         
 இந்த புகைப்படத்தில் இருக்கும் குழ்நதை நான் தான் ஆறு மாத குழந்தையாக  இருக்கும் பொழுது எடுத்தது 
                                                 

நம் வீட்டில் நம் அப்பா அம்மா போடும் சண்டைகளை நாம் நம் நண்பர்களிடம் கூறுவோமா ? இல்லை 
ஏன் என்றால் அதை நாம் அவமானமாக நினைப்போம் .மற்றும் நம் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் இன்ன இன்ன விசயங்களை  வெளியுலகில் சொல்ல கூடாது என்று நமக்கு தெரியும் அதில் அப்பா அம்மா சண்டைகளும் கூட 
ஆனால் குழந்தைகளுக்கு அது தெரியுமா இல்லை ? 

ஏன் என்றால் குழந்தைகளின் பார்வையில் எல்லாமே விளையாட்டு பொருளாகத்தான் தெரியும் குழந்தைகள் கண்ணாடி மாதிரி ..அவர்களிடம் நல்லதை காட்டினால் தெரிவது நல்லதாகத்தான் தெரியும் அவர்களிடம் கெட்டதை காட்டினால் தெரிவது கெட்டத்தாகத்தான்..தெரியும் .....


இப்படி இருக்கும் பொழுது .சன் தொலைக்காட்சியில் ...இமான் அண்ணாச்சி நடத்தும் குட்டீஸ் சுட்டீஸ் ..என்ற நிகழ்ச்சி குழந்தைகளை வைத்து நடத்துவது. அதில் வரும் குழந்தைகளில் இமான் அண்ணாச்சி ..உங்கள் வீட்டில் அப்பா அம்மா சண்டை போடுவார்களா என்று குழந்தைகளிடம் கேலியாக கேக்கிறார் ..குழந்தைகளும் ..அப்பா அம்மாவை  பெல்ட்டால் அடிப்பதையும்..அம்மாக்கு  உதவியாகா அப்பா துணி துவைப்பதையும்  கழுத்தை நெரித்து சண்டை போடுவதையும் ...அந்த குழந்தைகள் வெகுளித்தனமாக..கூறுவதை அனைவரும் சிரித்து ரசித்து அந்த நிகழ்சிகளை பார்கின்றனர் ......

நானும் விழுந்து விழுந்து அதை சிரித்து ரசித்து பார்த்தேன் ஏன் என்றால் நம் வீட்டில் தான் இந்த மாறி நடக்குதுன்னு நினைத்தேன் ஆனால் எல்லோர் வீட்டிலும் இப்படித்தானா ..ஹி ஹி ஹி ஹி ..ஒரே சந்தோசம் .........உங்கள் வீட்டில் ?????

பெற்றோர்களே சண்ட போடுங்க தப்பு இல்ல குழந்தைகள் முன்னாடி சண்ட போடாதிங்க அது குழந்தைகளின் மனதை ரொம்ப பாதிச்சுரும் .இதை நான் சொல்லித்தான் தெருஞ்சுக்கனும்னு இல்லை உங்களுக்கே அது புரியும் .....

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே 
அவர் நல்லவராவதும் தீயவராவதும் .அன்னை வளர்ப்பினிலே 

இது ஏதோ  பாடலில்  வரும் வரிதான் அப்படின்னு நீங்க நினைக்கிரிங்க ..இது உண்மைதான்  ஆனால் இதில் உள்ள தத்துவமும்  100/100  உண்மை 

குழந்தை வளர்ப்பு பற்றி 
நபி[ஸல்] அவர்களும் தெளிவாக கூறுகிறார் 


இவ்வுலகத்தில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கெட்ட குழந்தையாக பிறப்பதில்லை. எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத் தான் பிறக்கின்றன.
அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு தான் அவர்களை நல்லவனாக அல்லது கெட்டவனாக மாற்றி விடுகிறது. (ஆதாரம் புகாரி 1385)

இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.
எனவே நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்வது பெற்றோர்களின் கடமையாகும்.............

 நான் பார்த்து ரசித்த குட்டீஸ் சுட்டீஸ் வீடியோ கீழே பகிர்ந்துள்ளேன் அனைவரும் பார்த்து ரசியுங்கள் .....நன்றி நட்புடன் உங்கள் >>>>ரினாஸ்<<<<





5 comments:

  1. குழந்தை படம் அழகாக உள்ளது.... ஆனால் குட்டீஸ் சுட்டீஸ் nikazssiyil kalanthu koLLum eththanaiyO piLLaikaL வயதுக்கு மீறி பேசுவதை பார்க்கும் போது அவர்களின் பெற்றோர் எப்படி வளர்த்திருப்பார்களோ என்ற சந்தேகம் வருகிறது...

    ReplyDelete
  2. //// குழந்தை படம் அழகாக உள்ளது.//// நன்றி அண்ணா துவா செயுங்கள் அண்ணா

    ReplyDelete
  3. அல்லாஹ் போதுமானவன்...

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்!
    அல்ஹம்துலில்லாஹ்...குழந்தை வளர்ப்பு பற்றி ஒரு நல்ல பதிவு...வாழ்த்துக்கள் சகோதரா!

    ReplyDelete