Saturday, 6 February 2016

விசாரணை படம் குட்டி விமர்சனம்





நடிகர் : அட்டகத்தி தினேஷ் . சமுத்திரகனி .மற்றும் பலர் 

இயக்கம் : வெற்றி மாறன் 

இசை : ஜி வி பிரகாஸ் 

உண்மை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் .: விசாரணை 

குட்டி விமர்சனம் :

ஆந்திராவில் வேலை பார்க்கும் அப்பாவி மூன்று தமிழ் நாட்டு இளைஞர்களை ஆந்திர போலீசார் கைது செய்து ..
அடித்து கொடுமை படுத்தி அவர்களை செய்யாத குற்றத்தை செய்ததாக 
ஒப்புகொள்ள சொல்கிறார்கள் 

இடைவேளை வரை அவர்களை அடித்து துவைக்கிறார்கள்.....
திரையில் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு அடியும் .திரை அரங்கில் இருக்கும் மக்களை பயம்புடுத்துகிறது ...

தமிழ்நாட்டு போலீசான சமுத்திரகனி அந்த இளைஞர்களை காப்பாற்றி தமிழ்நாட்டுக்கு அழைத்து செல்கிறார் ....
தமிழ்நாடு  போலிஷ் நல்லவன் .வல்லவன் என்று புகழ் பாடும் அட்டகத்தி தினேஷ் மற்றும் இளைஞர்கள் 
க்ளைமாக்ஸ்ல் அந்த ஆந்திர போலிஷ்காரகளே பரவாலை என்று நினைக்கும் அளவுக்கு காட்சி அமைத்து இருப்பது ..அருமை ......
மொத்தத்தில் விசாரணை போலிஷ்காரர்களின் சுயரூபத்தை தோலுரித்து காட்டுகிறது....
இந்த படத்துக்கு என்னுடைய மதிப்பெண் 5/4
                                                நன்றி . நட்புடன் உங்கள் ரினாஸ் 


Sunday, 3 January 2016

திக்கு வாய் குணமாக



திக்கு வாய் என்பது ஒரு வார்த்தையை கூறமுடியாமல் தட்டு  தடுமாறி அந்த வார்த்தையை கூற முடியாமல் திணறுவதே திக்கு வாய் என்று கூற படுகிறது. அல்லவா
சரி திக்கு வாயை குணபடுத்துவது எப்புடி? என்பதை பார்ப்போம்
எனக்கு திக்குவாய் இருந்தது ஆனால் இப்பொழுது நான் திக்கி திக்கி பேசுவது இல்லை எனக்கு எப்புடி திக்குவாய் குணமானது என்பதை உங்களுக்கு கூறுகிறேன் திக்குவாய் உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.........
நான் ஒரு திக்குவாய்
திக்கு வாய் போக்க மருந்துகள் என்று கூறி என் பாட்டி  தந்த சிகிச்சை
[1]  காடை கோழி  முட்டையை பச்சையாக குடிப்பது [ காசு விரையம் ஆனதுதான் மிச்சம்]
[2]  பொடி பொடி கூழாங்கற்களை  வாயில் போட்டு பேசுவது [ நேரம் வீணானது தான் மிச்சம்  ]
]3]  தனி அறையில் நியூஸ் பேப்பரை சத்தமாக வாசிப்பது [தொண்டை வலி வந்ததுதான் மிச்சம் ]
[4]  டங் கிளினர் வைத்து அடிகடி நாக்கை சுத்தம் செய்வது  [ஆனால் நாக்கு புண்ணானதுதான் மிச்சம் ]  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆனால் எதுவுமே யூஸ் ஆகலை
இதனால் எல்லோரும் என்னை கிண்டல் அடித்தார்கள் அந்த கிண்டலே எனக்கு வெறியாக மாறியது எனக்குள் உள்ள திக்குவாய் இப்போது காணாமல் போய்விட்டது .... அது எப்புடி? தானே கேக்குறிங்க  இதோ சொல்றேன் பாருங்க

திக்கு வாய் வர காரணம் நம் ஆள் மனதில் இருக்கும் ஒரு வித பயம் தான் காரணம்..என்பதை உணர்ந்தேன் அந்த பயத்தை கொஞ்சம் கொஞ்சமாக என் மனதில் இருந்து போக்கினேன்
எனக்கு சில சில எழுத்துக்கள் உச்சரிக்க வராது
உதாரணம்: கு .பூ .து .கே
குரங்கு என்று கூற திக்குவேன் இதை மாற்ற நினைத்தேன்
குரங்கு என்ற கூற சந்தர்ப்பம்  வந்தால் ஆங்கில வார்த்தையை உபயோகம் செய்வேன் அதாவது மங்க்கி. என்று கூறி வந்தேன் ...
பஸ்சில் பயணம் செய்யும் பொழுது .. பூமார்கட்  போக டிக்கெட் கேப்பேன் ஆனால் என் வாய் திக்கும்
உடனே பூமார்கட் என்று கேட்பதற்கு பதில் ஆங்கில வார்த்தையான FLOWER மார்க்கெட் என்று மாற்றி  கேட்ப்பேன்
இந்த மாறி நமக்கு எந்தெந்த வார்த்தைகள் திக்குமோ அதை கூறுவதற்கு பதிலாக ஆங்கிலத்தையோ அல்லது வேறு ஏதாவது மொழிகளில் அந்த வார்த்தைகளை கூறி பழகினோம் என்றால் நால் பட நால் பட நமக்கு திக்குவாய் என்பதே மறந்து போகும்
எனக்கு அப்படித்தான் சரியானது
மற்றும் இறைவனிடம் அழுது துவா[பிராத்தனை] கேளுங்கள்

மூஸா நபி அவர்களுக்கு திக்கு வாய் இருந்தது. அதைப் பற்றி அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்ட போது

இறைவா என்னுடைய உள்ளத்தை விசாலமாக்கு. என்னுடைய காரியத்தை லேசாக்கிவை. எனது நாவிலுள்ள முடிச்சை நீ அவிழ்த்துவிடு. என்று சொன்னார்கள்.. திருக்குர்ஆன் 20:27

இன்ஷா அல்லாஹ் நாமும் இது போல் துவா [பிராத்தனை ]செய்து மற்றும் நமது பேச்சின் ஸ்டைலை கொஞ்சம் மாற்றுவோம் என்றால் கண்டிப்பாக திக்குவாய் என்பதே இல்லாமல்  நல்ல மாற்றத்தை காண முடியும்
                                                                               நன்றி
                                                                                           நட்புடன் உங்கள் ரினாஸ் 


Wednesday, 19 November 2014

தொழுகையும் நம் ஆடையும்

[குறிப்பு] நான் பார்த்த சிறு சிறு விசயங்களை வைத்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன் இதில்  ஏதேனும் தவறு மற்றும் எழுத்து பிழை இருந்தால்  சுட்டி காட்டுங்கள் ... பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்..........

தொழுகையும் நம் ஆடையும்   



நாம் வித விதமான  புதுசாக அணியும் ஆடைகள்  அனைத்தும்  கல்யாணங்களுக்கும் சில பல விசேசங்களுக்கும் தான் .........
தொழுகையில் ஏனோ தானோன்னு. எது கண்ணுல படுதோ அதை போட்டுக்கிட்டு அவசரம் அவசரமாக   தொழுக போகிறோம் 



நாம் புதுசாக சுத்தமான ஆடைகளை அணிந்து நம் வீட்டின் கழிவறைக்கு செல்வோமா? இல்லை  

லுங்கியோ .. இல்ல ஏதேனும் நைட்.டிரஸ்ஸோ  அணிந்து தான் கழிவறைக்கு செல்கிறோம் 

நாம் பெரும்பாலும் வீட்டில்[இரவில் ] இருக்கும் பொழுது லுங்கியோ நைட் ட்ரசையோதான் அணிவோம்.
அப்படி இருக்கையில் பெரும்பாலான மக்கள் பஜ்ருடைய தொழுகைக்கு  வரும் பொழுது லுங்கி.நைட் டிரஸ் இந்த மாறி ஆடையை அணிந்து கொண்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது 
நாம் எங்கே செல்கிறோம்  இறைவனை வணங்க .இறைவனிடம் பேச 
நம்முடைய இன்பம் துன்பம் அனைத்தையும் நம்மை படைத்த இறைவனிடம் உரையாட செல்கிறோம் . 

அப்படி இருக்கையில் நம்முடைய உடையில் நாம் கவனம் செலுத்த வேண்டாமா ? 
ஒரு ஐ/டி கம்பனிக்கு நாம் வேலைக்கு செல்கிறோம் . லுங்கி மற்றும் நைட்.டிரெஸ்ஸை அணிந்து தான் செல்வோமா ? இல்லை அப்படி சென்றால் அவன் நம்மை தொரத்தி விடுவான் இல்லையா  டிப் டாப்பாக தான்  செல்வோம் .
ஒரு மனிதனை சந்திக்க செல்லும் போதே நாம். நம் உடையில் கவனம் செலுத்துகிறோம் அப்படி இருக்கையில் நம்மை படைத்த இறைவனை வணங்க செல்லும்  பொழுது நாம் ஏன் உடையில் கவனம் செலுத்துவது இல்லை ?
அனைவரும் சிந்திக்க வேண்டும் 
ஆடை தூய்மை பற்றி அல்லாஹ் கூறுவதை கேளுங்கள் 

அல்லாஹ் கூறுகிறான் 

உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக

அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக... திருக்குர்ஆன் 74:4-5

தூய்மை இஸ்லாத்தின் ஒரு பகுதி .. நபிமொழி 

இதனால் நாம்  கடனை வாங்கி புத்தாடை அணியவேண்டும் என்பது கிடையாது தொழுகைக்கு வரும் பொழுது நம்மிடத்தில் இருப்பதில் தூய்மையான ஆடையை அணிந்து வந்தாலே போதுமானது 
முக்கியமாக பஜ்ருடைய தொழுகையில் நாம் லுங்கி .நைட்.டிரஸ் போடுவதை தவிர்த்து கொள்வோம் அனைவரும் தூங்கி எழுந்ததும்  பஜ்ருடைய தொழுகைக்கு செல்லும் பொழுது ..........அப்படியே பல் துலக்கி விட்டு அசுத்தமான ஆடையுடன் . பள்ளிக்கு செல்வதை பார்க்க முடிகிறது இன்ஷா அல்லாஹ் இனி நாம் தொழுகையின் போது நாம் தூய்மையான ஆடைகளை அணிந்து  கொண்டு தொழுவோமாக................
                        
                          ஜஸகல்லாஹுஹைர்                                         


இதில்  ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் ... பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.



Friday, 5 July 2013

வருது வருது ரமலான் வருது ..........






           ரமலான் எம்மை நோக்கி வந்துகொண்டுஇருக்கிறது .வான்மறை வந்திறங்கிய மாதம் .அருள் மறையாம் திருமறைக் குரான் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதன் சிறப்பு பெற. நோன்பு இருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும் .

நோன்பு என்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு ..உண்ணுதல் பருகுதல் .உடலுறவில் ஈடுபடுதல் ..ஆகியவை அதிகாலை முதல் மாலை வரை செய்யாமல் இருப்பது ஆகும்.

நோன்பு மனிதனின் ..நடைமுறைகளை சீராக்கி அவனிடம் உருவாகும் கெட்ட சிந்தனைகளை அழித்து...அவனை ஒழுக்கமுள்ள மனிதனாக மாற்றுகிறது ...

நோன்பை பற்றி அல்லாஹ் கூறுகிறான் .

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்..திருக்குர்ஆன் .2:183

மேற்படிய வசனம் நோன்பு என்பது தூய்மையாக இருக்க உதவக்கூடியது.என்பது தெரிகிறது 

இன்று உலகைக்  உலுக்கி வரும் அநேக பிரச்சனைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதைத்  நுணுக்கமாக ஆராய்ந்தால் அறியலாம் ...அவற்றுள் .......

1.உடல் இச்சை 
2. கோபம் 
3.தவறான உணவுமுறை 
4.தவறான பேச்சு 

இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும் 

உடல் இச்சை....

மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது..உலக இருப்புக்கும் உயிரினங்களின் உற்பத்திக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும் ..எனினும் இந்த உணர்வு சரிபடுத்தப்  பட வேண்டும்..கட்டு படுத்தப்  படவேண்டும் .தவறானமுறையில் இந்த உணர்வுகளைக் தீர்த்து கொள்ள கூடாது...

இன்று நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாக கொண்டவை ஆகும் ....இளம் பெண்கள் அதிகமானவர்கள் ..கொலை செய்ய படுவதும் தற்கொலை செய்யப்  படுவதும் ..இந்த பாலியல் பிரச்சனைகளால் தான் ..[உதாரணத்துக்கு] டெல்லியில் ஓடும் பஸ்ஸில் ஒரு இளம்பெண்ணை கற்பழித்து ..கொலை செய்தார்கள் இதை அனைவரும் அறிந்ததே ....உலகம் சந்தித்து வரும் பாலியல் நோய்களை தீர்த்து கொள்ள ..அரசுகள் திண்டாடி கொண்டு வருகிறது 

ஆனால் நோன்பு நோற்க்கும் ஒருவன் தனது மனைவியிடம் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னை கட்டு படுத்தி கொள்கின்றான் .நோன்பு பாலியல் உணர்வை கட்டுபடுத்தும் என்பதாலேயே இது ..சாத்தியமாகின்றது...

பாலியல் உணர்வை பற்றி நபி மொழியை பார்ப்போம் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இளைஞர்களே  உங்களில் , திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப்பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும் என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நூல்: புகாரி - 1905.  

கோபம்....

இன்று மனிதன் இயந்தரமாகி மனிதத் தன்மையைத் இழந்து வருகின்றான்.கோபத்தை கட்டு படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான் 

ஆனால் நோன்பு மனிதனின் கோப உணர்வுகளை கட்டு படுத்துகின்றது .நீ நோன்புடன் இருக்கும் பொழுது யாரவது உன்னிடம் சண்டையிட்டால் .அவனிடம் நீ... நான் நோன்பாளி என்று கூறி விலகிவிடு என்று இஸ்லாம் கூறுகின்றது 
கோப உணர்வுகளை ஒருவன் கட்டுப்படுத்தி வாழ பழக்க பட்டால் அவன் பல ஆபத்துகளில் இருந்து விடுதலை பெற்று விடலாம்.....

தவறான உணவு முறை

உலகம் இப்பொழுது பாஸ்ட் புட்டுக்கு மாறி வருகிறது ...அதாவது கண்ட கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் தின்று ..உடலில் கொழுப்புகள் அதிகமாக மாறி உடல் கொழுப்புகளை கரைக்க .சிலர் மருத்துவர்களை நாடுகின்றார்கள்...ஒரு மனிதன் நோன்பு வைக்கும் பொழுது ...இந்த பிரச்சனைகளில் இருந்து அவன் எளிதாக விடை பெறலாம் ..என்று அறிவியல் அறிஞர்களே ஆராய்ந்து கூறும் அளவுக்கு நோன்பு ஒரு நன்மையை மனிதனுக்கு  வகுக்கின்றது...

தவறான பேச்சு 
 
தவறான பேச்சுகளில் இருந்தும் .தவறாக பேசுபவர்களும் இந்த நோன்பு மாதத்தில் .அதிகம் அதிகமாக பள்ளியுடன்  இணைவார்கள்...இந்த நோன்பு மாதத்தில் சண்டைக்கும் சச்சரவுக்கும் செலவழிக்காமல்..இபாதத்துக்கும் பக்குவத்தை ஏற்படுத்துவதர்க்கும்...அனைவரும் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் ...எல்லாம் வல்லா அல்லாஹுதால உதவி செய்வானாக   

நன்றி ..இப்படிக்கு உங்கள் நண்பன் ரினாஸ் 



Saturday, 27 April 2013

பலவீனம் இல்லை .......






அஸ்ஸலாமு அழைக்கும் சகோதர சகோதரிகளே ...

அல்லாஹ்வுக்கு பலவீனம் இல்லை ........

இதோ திருமறையில் தன்னை பற்றி அல்லாஹ் கூறுகின்றான் 


தூக்கம் இல்லை .......

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்..... திருகுர்ஆன்.2:255

சோர்வு இல்லை .....

நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை...திருகுர்ஆன்.50:38

மரணம்இல்லை 

அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்..திருகுர்ஆன்.3:2

மறதி இல்லை 

(மலக்குகள் கூறுகிறார்கள்; நபியே!) "உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பது அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்..திருகுர்ஆன்.19:64

பசி தாகம் இல்லை .

அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை..திருகுர்ஆன்.51:57

உதவியாளன் இல்லை 

"அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அமைத்தும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. திருகுர்ஆன்.17:111

வீண் விளையாட்டு இல்லை 

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்றும்;) திருகுர்ஆன்.. 3:191

தேவை இல்லை ..

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான்...திருகுர்ஆன்.22:64

மனைவி இல்லை 

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். திருகுர்ஆன்.6:101

மகன் இல்லை ..

இன்னும் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்" என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை. இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன. திருகுர்ஆன்.2:116

பெண் மக்கள் இல்லை ...

இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான். திருகுர்ஆன்.6:100

பெற்றோர் இல்லை ...

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. திருகுர்ஆன்.112:3




Wednesday, 27 February 2013

இஸ்லாத்தில் ஐந்தில் ஒன்று <><><><>







இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றில் மட்டும் தான் ஒற்றுமையாக இருக்கிறோம்.


1. கலிமா (ஈமான்) 
- இதில் மட்டும் தான் ஒற்றுமை 

2. தொழுகை 
- விரலை ஆட்டலாமா, கூடாதா?
- தொப்பி போடலாமா, போடா கூடாதா?
- நெஞ்சில் கட்டுவதா? வயிற்றில் கட்டுவதா?
- ஆமீன் சத்தமா சொல்லலாமா?

3. நோன்பு 
- சவூதி பிறையா?
- ஊர் பிறையா?
- சர்வதேசப் பிறையா?

4. ஜகாத் 
- ஒரு பொருளுக்கு வாழ்க்கையில் ஒரு முறையா?
- அல்லது வருடத்திற்கு ஒரு முறையா?

5. ஹஜ் 
- இங்கும் அதே பிறை பிரச்சனை தான்.

சில விஷயங்கள் மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின்  கலந்து ஆலோசித்த பிறகு  மக்களிடம் முறையான சட்ட விளக்கங்களாக வெளிவர வேண்டும்.  அதையெல்லாம் விட்டு விட்டு ஆளுக்கொரு பத்வா  என்று மக்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இதெற்கெல்லாம் சமுதாயத்தலைவர்கள் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை மறுத்துவிட முடியாது.

இஸ்லாத்தின் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆரம்பித்து, சிறு, சிறு ஷரியக்களில் நுழைந்து இப்போது அரசியல் சாக்கடையில் இஸ்லாமிய போர்வையில் நுழைந்திருக்கிறோம். கேவலமான அரசியல்வாதிகளை ஆதரிக்க ஹதீஸ்களை ஆதாரமாக காட்டும் பாணியை நானே நேரில் பார்த்து கொதித்து போயிருக்கிறேன். எங்கு தான் சென்றுகொண்டிருக்கிறோம்?

சகோதர மதத்தவர்களிடமே (வேதம் கொடுக்கப்பட்டவர்கள்) உங்களுக்கும், எங்களுக்கும் பொதுவான கருத்தின் பக்கம் வாருங்கள் என இஸ்லாம் அழைப்பு கொடுக்கும் போது, நமக்குள் ஏனிந்த பேதம், இயக்க வெறி, ஒற்றுமையற்ற தன்மை? நாமும் பொதுவான கருத்தின் பக்கம் கவனம் செலுத்தி சிறு சிறு விஷயங்களுக்காக நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளும் நிலைமை மாறும்காலம் எப்போது வரும்? ஒரு சகோதரனை, மனம் வருந்தும் படியாக நடத்துவது அல்லது பேசுவதை அவர் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்கிற ஹதீஸை நான் கேட்டிருக்கிறேன். அப்படி இருக்க அந்த ஹதீஸின் நடைமுரைபடித்தான் இயக்கவாதிகள் வாழ்கிரோமா? சிந்திப்பது நம்முடய கடமையாக இருக்கிறது. 

இதற்கும் என்ன விதமான பதில்கள் வரும் என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். பெருமானாரின் (ஸல்) வாக்கிற்கிணங்க நாம் கடல் நுரைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.............
                                                       

                                                             நன்றி சகோ ..Habeebulla
                                                               


நபி(ஸல்) அவர்கள் தனது உம்மத் 73 பிரிவுகளாக பிரிந்து விடும் என்றும் அதில் ஒன்றை தவிர ஏனைய பிரிவினர் நரகம் செல்வர் என்று  கூறியுள்ளார்கள்  ...
இந்த பிரிவுகள் பிரிந்தால் என்ன செய்யவேண்டும் என்பதையும்  நபி(ஸல்) கூறியிருக்கிறார்கள் ....


ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார் 

மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதூ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தார்கள். நான், 'இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதூ?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், 'அந்தக் கலங்கலான நிலை என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்" என்று பதிலளித்தார்கள். நான், 'அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்" என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், 'அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்... (என்ன செய்வது)?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலம்) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)" என்று பதிலளித்தார்கள். ....(புகாரி :ஹதீஸ்:3606 ,7084 )  

இதன் மூலமாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது அனைவருக்கும் தெருஞ்சு இருக்கும் என்று நம்புகிறேன் 
நன்றி இப்படிக்கு உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<




Thursday, 14 February 2013

குழந்தைகள் கண்ணாடி மாதிரி .<><><><><>




         
 இந்த புகைப்படத்தில் இருக்கும் குழ்நதை நான் தான் ஆறு மாத குழந்தையாக  இருக்கும் பொழுது எடுத்தது 
                                                 

நம் வீட்டில் நம் அப்பா அம்மா போடும் சண்டைகளை நாம் நம் நண்பர்களிடம் கூறுவோமா ? இல்லை 
ஏன் என்றால் அதை நாம் அவமானமாக நினைப்போம் .மற்றும் நம் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் இன்ன இன்ன விசயங்களை  வெளியுலகில் சொல்ல கூடாது என்று நமக்கு தெரியும் அதில் அப்பா அம்மா சண்டைகளும் கூட 
ஆனால் குழந்தைகளுக்கு அது தெரியுமா இல்லை ? 

ஏன் என்றால் குழந்தைகளின் பார்வையில் எல்லாமே விளையாட்டு பொருளாகத்தான் தெரியும் குழந்தைகள் கண்ணாடி மாதிரி ..அவர்களிடம் நல்லதை காட்டினால் தெரிவது நல்லதாகத்தான் தெரியும் அவர்களிடம் கெட்டதை காட்டினால் தெரிவது கெட்டத்தாகத்தான்..தெரியும் .....


இப்படி இருக்கும் பொழுது .சன் தொலைக்காட்சியில் ...இமான் அண்ணாச்சி நடத்தும் குட்டீஸ் சுட்டீஸ் ..என்ற நிகழ்ச்சி குழந்தைகளை வைத்து நடத்துவது. அதில் வரும் குழந்தைகளில் இமான் அண்ணாச்சி ..உங்கள் வீட்டில் அப்பா அம்மா சண்டை போடுவார்களா என்று குழந்தைகளிடம் கேலியாக கேக்கிறார் ..குழந்தைகளும் ..அப்பா அம்மாவை  பெல்ட்டால் அடிப்பதையும்..அம்மாக்கு  உதவியாகா அப்பா துணி துவைப்பதையும்  கழுத்தை நெரித்து சண்டை போடுவதையும் ...அந்த குழந்தைகள் வெகுளித்தனமாக..கூறுவதை அனைவரும் சிரித்து ரசித்து அந்த நிகழ்சிகளை பார்கின்றனர் ......

நானும் விழுந்து விழுந்து அதை சிரித்து ரசித்து பார்த்தேன் ஏன் என்றால் நம் வீட்டில் தான் இந்த மாறி நடக்குதுன்னு நினைத்தேன் ஆனால் எல்லோர் வீட்டிலும் இப்படித்தானா ..ஹி ஹி ஹி ஹி ..ஒரே சந்தோசம் .........உங்கள் வீட்டில் ?????

பெற்றோர்களே சண்ட போடுங்க தப்பு இல்ல குழந்தைகள் முன்னாடி சண்ட போடாதிங்க அது குழந்தைகளின் மனதை ரொம்ப பாதிச்சுரும் .இதை நான் சொல்லித்தான் தெருஞ்சுக்கனும்னு இல்லை உங்களுக்கே அது புரியும் .....

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே 
அவர் நல்லவராவதும் தீயவராவதும் .அன்னை வளர்ப்பினிலே 

இது ஏதோ  பாடலில்  வரும் வரிதான் அப்படின்னு நீங்க நினைக்கிரிங்க ..இது உண்மைதான்  ஆனால் இதில் உள்ள தத்துவமும்  100/100  உண்மை 

குழந்தை வளர்ப்பு பற்றி 
நபி[ஸல்] அவர்களும் தெளிவாக கூறுகிறார் 


இவ்வுலகத்தில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கெட்ட குழந்தையாக பிறப்பதில்லை. எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத் தான் பிறக்கின்றன.
அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு தான் அவர்களை நல்லவனாக அல்லது கெட்டவனாக மாற்றி விடுகிறது. (ஆதாரம் புகாரி 1385)

இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.
எனவே நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்வது பெற்றோர்களின் கடமையாகும்.............

 நான் பார்த்து ரசித்த குட்டீஸ் சுட்டீஸ் வீடியோ கீழே பகிர்ந்துள்ளேன் அனைவரும் பார்த்து ரசியுங்கள் .....நன்றி நட்புடன் உங்கள் >>>>ரினாஸ்<<<<