Wednesday, 26 September 2012

ஜீன்ஸ் பிறந்த கதை.....


ஜீன்ஸ் பிறந்த கதை.....சொல்ல்லுவதர்க்கு சிரிப்புதான் வருது இருந்தாலும் வரலாறை சொல்லித்தான் ஆகணும் 
நாமெல்லாம் ஜீன்ஸ் பேன்ட் அணிகிறோம் அல்லவா அது எப்படி உருவானது. யாருக்கு தெரியும் இப்படித்தான் நானும் இருந்தேன் என்னை பொருத்தவரைக்கும் ஜீன்ஸ் பேன்ட் நான் ஒரு ஏழுநாள் போடுவேன் ஏன் தெரியுமா ஏனா அது சீக்கிரம் அழுக்கு ஆகாது நான் தினந்தோறும் சட்டையை மாற்றுவேன் பேன்ட் மாற்ற மாட்டேன் ஏன்என்றல்..அத தினந்தோறும் எங்க அம்மாவால துவைக்க முடியாது அது துவைக்கும் போதுஎல்லாம் நான் எங்க அம்மா கிட்ட திட்டுவாங்குவேன் ....அம்மா சொல்லுவாங்க ஏண்டா நல்ல காட்டான் பேன்ட் வாங்க வேண்டியதுதானே இத தொவச்சு தொவச்சு என் கை கால் எல்லாம் வலிக்குதுடானு சொல்லுவாங்க. சரி ஒவ்வொரு ஆண்களுக்கும் ஈர்க்கும் வகையில் இது இப்படி வளர்ந்து இருக்கிறதே இது எப்படி உருவானது இதோ உங்களுக்காக 







  
நம்மவர்களைப் போல் தங்கம் என்றால் எல்லா நாட்டிலுமே ஒரு மோகம் உண்டு. 1850 ஆண்டு சான்பிரான்சிஸ்கோவின் ஒரு பகுதியில் தோண்ட தோண்ட தங்கம் கிடைப்பதாக யாரோ புரளி பரப்ப, அதை நம்பிய அந்நகரத்து மக்கள் அங்கு சென்று இரவு பகலாய் தோண்டினார்கள். அங்கு தோண்ட வந்தவர்கள் தங்குவதற்கு கூடாரம் போடுவார்கள் என்று நம்பி ஒருவன் கூடாரத் துணிக் கடை போட்டான். வியாபாரம் சுமார்தான். ஆனால், தோண்டுபவர்கள் அணிந்திருந்த ஆடைகள் தோண்டும்போது அதிகமாக கிழிவதால், நல்ல முரட்டு ரகத்திலான துணி குறித்து மக்கள் யோசிக்கும்போதே, வியாபாரி கூடாரத் துணியில் பேண்ட் தைத்து விற்க தொடங்கிவிட்டான். இது தான் ஜீன்ஸ் பிறந்த கதை.......
அனைவரும் தெரிந்து கொண்டிர்களா நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>ரினாஸ்<<<<



Tuesday, 25 September 2012

கண்ணாடியின் கதை...


கண்ணாடியின் கதை...

கண்ணாடி . நம்மை பொறுத்தவரை கண்ணாடியை நாம் முகம் பார்பதற்கும் ..மூக்கு கண்ணாடியாகவும் பயன் படுத்தி வருகிறோம் அல்லவா இது எப்படி உருவானது என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா கிடையாது.. இதோ உங்களுக்க்க ......
சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான். அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான். கண்ணாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கி.மு. ஆயிரம் ஆண்டுவாக்கில் வெட்டவெளிகளில் கண்ணாடிக் குழம்புகளை வார்த்து கண்ணாடி செய்யும் முறை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டளவில் கண்ணாடிகளாலான சிறிய பொருட்களை உருவாக்கிக் கொண்டார்கள். 
பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய நகரங்களான பாக்தாத் மற்றும் கெய்ரோவில் கண்ணாடி செய்யும் கலை வளர்ந்தது. இதனால் தான் இந்தக் காலகட்ட கண்ணாடிகளை இஸ்லாமியக் கண்ணாடிகள் என்று அழைத்தார்கள். பன்னிரண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை வெனிஸ் நகரில் இந்தக் கலை உச்சகட்டம் தொட்டது. பாதரசத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடிகளை செயற்கையாகச் செய்யும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர். 



ஆனால், இந்த நுணுக்கங்களை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், பதினேழாம் நூற்றாண்டளவில் இந்த ரகசியம் கசிந்து, ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்ணாடிகள் செய்தன. 17 முதல் 19ம் நூற்றாண்டு வரை கண்ணாடிகளால் டெலஸ்கோப், தெர்மாமீட்டர், மைக்ரோஸ்கோப் போன்ற பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தன. 

இதன் தொடர்ச்சியாக பார்வைக் கோளாறுக்கான கண்ணாடிகள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டன.

 1903ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளை தயாரிக்கும் தானியங்கி இயந்திரம் உருவானது. கண்ணாடியில் உள்ள சுத்தத் தன்மையை வைத்தே அது எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். நம் உருவங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், அந்தந்த காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பிரதிபலிப்பது ஒரு அழகான ஆச்சரியம்தான்.......நன்றி என்றும் உங்கள் நட்புடன் ரினாஸ் 




Monday, 24 September 2012

கண்ணீர் எப்படி உருவாகிறது?.........


 கண்ணீர் எப்படி உருவாகிறதுணா

  எங்க அம்மா வீட்டுல நாடகம் பாத்துட்டு. அதுல வர பெண்கள் எல்லாம் கட்டிக்கொண்டு வர புடவை நமக்கு இல்லையேன்னு  அழுவாங்க. அப்ப கண்ணீர் வருவது எனக்கு தெரியும்.....நான் ஒரு புதுசா ஏதாச்சும் வாங்கிட்டு வந்த என்னுடைய தம்பி அது எனக்கு வேணும்னு அழுவான் அப்ப அவனது கண்ணுல கண்ணீர் வருவது எனக்கு தெரியும் ....இப்படித்தான் கண்ணீர் வருதுன்னு நினச்சேன் ஆனா கண்ணீர் இப்படியா உருவாகிறது இத படிங்க நண்பர்களே !!

கண்ணீர்த் துளிகள் உப்பு நீராலானவை. கண்விழி தக்கவாறு சுழல்வதற்கேற்ப ஈரப்பசை தரும் சுரப்பி, இயல்பான நீருக்கு மேல் அதிகமாகச் சுரப்பதால் கண்ணீர் ஏற்படுகிறது. கண் எல்லா நீரையும் வடிக்க இயலாததால் மிகுதியான நீர் கண்ணீர்ப் பெருக்காக வெளியேறுகிறது.
கண்ணீரைத் தோற்றுவிக்கும் சுரப்பி கண்ணீர் சுரப்பி (Lachymal gland) என அழைக்கப்படுகிறது. கண்ணீர் என்பதற்கான லத்தீன் மொழிச் சொல் லக்ரிமா (Lacryma) என்பதாகும். அச்சுரப்பி கிட்டத்தட்ட வாதுமைக் கொட்டை அளவு வடிவில் (Almond nut) கண்ணின் மேலே அமைந்துள்ளது. ஆறு அல்லது ஏழு நுண்ணிய நரம்புக் குழாய்களால் கண்விழியில் மேற்பரப்பில் அது திறந்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் கண்மூடித் திறக்கும்போது (blink) கண்ணின் மேற்பரப்பு முழுமையும் பரப்பலாகிறது. மேல் கீழ் கண்ணிமைகள் சேருமிடத்தில் தேவைக்கு மேலான நீர் சேகரிக்கப்பட்டு கண்ணின் உள் மூலையில் இரண்டு வாய்க்கால் வழியே வந்து மூக்கின் அருகிலுள்ள கண்ணீர்ப் பைக்கு எடுத்து வரப்படுகிறது (Lachymal Sac).

வெங்காயம் அல்லது வீட்டு அமைப்பில் தோன்றும் நவச்சார ஆவி (Ammonia) போன்ற சேர்மம் ஆகியவற்றின் மூக்கைத் துளைக்கும் மணம் அல்லது துன்பம், மகிழ்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளால் ஏற்படும். அழுத்தம் போன்றவற்றால் கிளறப்படும்போது கண்ணீர் சுரப்பி வழக்கமான நீருக்குமேல் மிகவும் உண்டாகிறது. அதனால் கண்ணீர்ப்பை மிகவும் நிரம்பி நீர் மூக்கில் நுழைக்கிறது. குழாய்கள் ததும்பி வெளிப்படுத்துகின்றன. இத்ததும்பி வழிதல் நீர்ம ஒழுக்காக ஓடுகிறது..........................................நன்றி இப்படிக்கு உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<<


Saturday, 22 September 2012

குளிர்பானங்களைக் குடிப்பது நல்லதா?மற்றும் இந்திய போலீஸார் மட்டும் தொப்பையோடு இருப்பது ஏன்?


 குளிர்பானங்களைக் குடிப்பது நல்லதா?
         
குளிர்பானங்களை அடிக்கடி குடிக்கக் கூடாது. காரணம் என்னவெனில் எல்லா குளிர்பானங்களிலும் பாஸ்போரிக் அமிலம் உள்ளது. லெமன் சுவை கொண்ட குளிர்பானங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டுவகை அமிலங்களும் பற்களுக்கு எதிரி. இந்த அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலை சுரண்டி எடுத்துவிடும். குளிரூட்டப்பட்ட குளிர்பானங்களை



 பற்களில் படும்படியாகக் குடிப்பது மிக மிகக் கெடுதல். ஸ்ட்ரா வைத்து உறிஞ்சி நேரிடையாக வயிற்றுக்குள் அனுப்புவது ஓரளவு பரவாயில்லை. சில பன்னாட்டுக் நிறுவன குளிர்பானங்களில் அவை நீண்டநாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பூச்சி மருந்துகளை சேர்க்கிறார்கள். அவை உடல்நலத்துக்கு மிகவும் கேடானவை. அத்தகைய பானங்களை எப்போதும் தவிர்க்கலாம்.......


   இந்திய போலீஸார் மட்டும் தொப்பையோடு இருப்பது ஏன்?

உணவுமுறைதான் காரணம். வெளிநாட்டில் முக்கிய உணவு தானியம் கோதுமை. இந்தியாவில் அரிசி. அதையும் மீறி வெளிநாட்டு போலீஸாருக்கு தொப்பை விழுந்தால் அந்த தோப்பையைக் குறைக்க போலீஸ் டிபார்ட்மெண்ட் டாக்டர்களின் உதவியோடு புதிய மாத்திரை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மாத்திரையை விழுங்கியதும் சிறுகுடலின் சுவரில் போய் அது ஒட்டிக் கொள்ளும். அங்கே ஒட்டிக் கொள்ளும் மாத்திரை உடம்புக்குத் தேவையான சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை ஜீரணம் செய்யவிடாமல் தடுத்து கழிவாக வெளியே அனுப்பிவிடுகிறது, அதனால் தொப்பை விழாது. இந்த மாத்திரை கரைந்துவிட்டால் மற்றொன்றை சாப்பிட்டுக் கொள்ளலாம்..........................
 நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<<



Thursday, 20 September 2012

தீப்பெட்டி தோன்றிய வரலாறு.......




நெருப்பை சிறுபெட்டிக்குள் அடைக்க இயலும் என்று கண்டுபிடித்த அந்த அதிசய மனிதர் யார் என்றால், அவர்தான் ஜான் வாக்கர் என்ற ஒரு ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர்.
ஒரு முறை இந்த ஜான்வாக்கர் வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்திய துப்பாக்கியில் விரைவாக தீப்பற்ற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருந்தார். அப்பொழுது பொட்டாஷையும், ஆன்டிமணியையும் ஒரே குச்சியில் குழைத்துப் பூசினார். அந்தக் குச்சியோ தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்த சிறு இரும்புக் குண்டு அதன் மீது தவறி விழுந்து உரசியதில் தீப்பிடித்து எரிவதைக் கண்டார். அப்பொழுதிலிருந்து துப்பாக்கி சுடுவதை நிறுத்திவிட்டு இதுபோன்று பல நூறு குச்சிகளில் பொட்டாஷையும், ஆன்டிமணியையும் குழைத்துப் பூசி, மிருகங்கள், அதிக பறவைகள் நடமாடும் இடங்களில் ஊன்றி வைத்திருக்கிறார். அப்பொழுது அதன் வழியாக சென்ற விலங்குகள், பறவைகளின் உடல்களில் இந்த குச்சிகள் உரசியதில் தீப்பிடித்துக்கொண்டதாம்.
இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த ஜான்வாக்கர் என்பவர் வெறும் குச்சியில் தீப்பிடிக்கும் முறையை மட்டும்தான் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு அனைவராலும் எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இவர் கண்டுபிடித்த குச்சி முறை எதில் உரசினாலும் தீப் பிடிக்கும் வகையில் அமைந்ததே இந்த எதிர்ப்புக்குக் காரணம். அதன் பிறகு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பெட்டியின் இருபுறங்களிலும் பாஸ்பரசைத் தடவி அதில் தேய்த்தால் மட்டுமே தீப்பிடிக்கும் வகையில் பாதுகாப்பான முறையை ஸ்வீடனைச் சேர்ந்த ஜான், காரல் லன்டஸ்ட்ராம் இருவரும் கண்டு பிடித்தனர். அதன் பிறகு பெட்டிக்குள் தீ அடைக்கப்படுவதால் இதற்கு தீப்பெட்டி என்று பெயரிட்டு இந்த உலகம் மகிழ்ந்தது.....  நன்றி நட்புடன் >>>ரினாஸ்<<<<<



Wednesday, 19 September 2012

செல்போன் எப்போது பிறந்தது?

இப்படித்தான் செல்போன் வந்தததோ !!!!!

செல்போன் எப்போது பிறந்தது?
செல்போன் பிறந்த வருடம் 1979 ம் ஆண்டு. அமெரிக்கா தான் செல்போனின் பிறந்த வீடு. செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு 15 வருடங்கள் கழித்து அதாவது 1994 ம் வருடம் தான் இந்தியாவுக்குள் நுழைந்தது. அறிமுகமாகி குறைந்த வருடங்களில் அதிகம் பேரை சென்றடைந்தது கடந்த நூற்றாண்டில் செல்போன் தானாம்.