Thursday, 13 December 2012

சலாம்’ கூற மறந்த அரசு ஊழியர் மீது வழக்கு!



தான் தெரிவித்த ‘ஸலாம்’- முகமனுக்குப் பதிலளிக்கவில்லை என்று அரசு ஊழியர் ஒருவர் மீது ஜெத்தா நகர பிரஜை ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார். இத்தகவலை சவூதி அரேபியாவின் அல்ஹயாத் நாளேடு வெளியிட்டுள்ளது.


இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மனுதாரரின் வழக்குரைஞர் அப்துல் அஸீஸ் அல் ஸாமில் “குறிப்பிட்ட ஒருநாளன்று அந்த அரசு ஊழியரின் அலுவலகத்திற்குச் சென்ற மனுதாரர் சலாம் உரைத்த போது பதிலுரைக்காமல் இருந்தார்.

சவூதி அரேபிய சட்டப்படி, அரசு ஊழியர் என்பவர் நல்ல குணாம்சங்களோடு நன்னடத்தைக் குரியவராக இருக்கவேண்டும் – இது சட்ட விதி நான்கிற்கு உட்பட்டது” என்றார். மேலும், “இஸ்லாம் மத ஆசாரப்படி, சலாமுக்கு பதில் சலாம் உரைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் அதன்படி நடக்கவில்லை” என்றும் வழக்குரைஞர் அப்துல் அஸீஸ் அல் ஸாமில் கூறினார்.

சலாமுக்கு பதிலுரைக்காத விதயம் சவூதி அரேபியாவில் அரிதே என்றாலும் இவ்வழக்கில் அந்த அரசு ஊழியருக்கு ஷரியா சட்டப்படி தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்று வழக்குரைஞர் அல்ஸாமில் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்வது அரசு ஊழியர்களின் இயல்பாக இருக்க வேண்டும்” என்றார் அல்ஸாமில்......

இப்படி இருக்கும் பொழுது  நமது ஊரில் சலாம் சொல்லுவதற்கு நாம் தயங்குகிறோம் ..மற்றும்..தெரிந்த முகத்திற்கு மட்டும் நாம்  சலாம் சொல்கின்றோம் ....என்ன கொடுமை இது 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும்.10 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்...புகாரி .அத்தியாயம் 79, எண் 6231

நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<





Wednesday, 12 December 2012

இத்துனை ஆர்ப்பாட்டங்கள் எதற்கு ?




ஒரு சாதரணமான மனிதனுக்கு இன்று பிறந்தநாள் அதுவும் இன்று ...12/12/12 ..இந்த நாளை நாம் இவ்வளவு விமர்சியாக பார்க்க..அப்படி என்னதான் இருக்கிறது இந்த நாளில்  என்று பார்த்தால் பெரிதாக கூறும் அளவுக்கு ஒன்றும் இல்லை ..
ஒன்று வேணா விமர்சியாக கூறலாம் ..12/12/12 காண இன்னும் நூறு வருடம் வேண்டும் ..அவ்வளவுதான் ..இப்படி இருக்கும் பொழுது ..ஒரு சாதாரன நம்மை போன்ற மனிதனுக்கு இன்று பிறந்த நாள் ..அவர் யார் என்று  உங்களுக்கே தெரியும் ..நடிகர் .ரஜினிகாந்த் ...இவரின் பிறந்தநாள் வருடம் வருடம் வருகிறது ..ஆனால்  இந்த வருடம் 12/12/12 வருவதனால் ...ஒரே சிறப்பு என்று பலர் கூறுகிறார்கள் ..இதனால் பல தொலைக்காட்சிகளில்  ..தீபாவளி பொங்கல் போன்ற தினங்களுக்கு சிறப்பான நிகழ்சிகளை போடுவது போல ..இவரின் பிறந்தநாள் அன்றும் ....சில  தொலைக்காட்சிகளில் ...>>>>சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு <<<< உங்கள்---------- டீ வியில் சிறப்பு நிகழ்சிகளை காண தவறாதீர்கள் ..........என்று தேவை இல்லாத பில்டப் எதற்கு இந்த மாறி இவரை இப்படி ஒரே அடியாக தூக்கி பேசுகிறார்கள் .அப்படி இவர் நம் நாட்டுக்கு என்ன நல்லது செய்தார் ...ஏழை மக்களுக்கு இலவச  மருத்துவமனைகளை ..இவர் கட்டினார ?  இல்லை ஏழை மக்களுக்கு இலவச கல்வியை வழங்கினாரா ? இல்லை ஆதரவு இல்லாத எத்துணையோ மக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஏதாவது நன்மை செய்தாரா ? இதில் ஏதாவது ஒன்றை அவர் செய்திருந்தால் ..இந்த மாறி  தொலைக்காட்சிகளில் கொண்டாடுவதற்கு அர்த்தம் உண்டு...ஒன்னுமே பண்ணாத இந்த மனிதருக்காக ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ..என்பதுதான் எனது கேள்வி ரஜினி ரசிகர்கள் என் மீது கோவம் படவேண்டாம் ......உங்கள் மனம் புண் படுவதற்காக நான் இந்த பதிப்பை போடா வில்லை ..ஆதங்கம் மாகத்தான் இந்த பதிப்பை நான் போடுகிறேன் அவ்வளவுதான் ......
நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<


Tuesday, 11 December 2012

.நம்மெல்லாம் அப்பவே அந்த மாறி இப்ப சொல்லவா வேணும்


அமெரிக்கர்கள் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறார்கள்.”

இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.”

இந்தியர்களும் தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அறிவித்தார்கள், “எங்களது மூதாதையர் வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.” 
 ஹ ஹ ஹ ஹ ஹ ..நம்மெல்லாம் அப்பவே அந்த மாறி இப்ப சொல்லவா வேணும் 


Monday, 10 December 2012

இதுக்கு மேல எதுவும் இல்ல ..........



நம் உலகத்தில உள்ள புவி அமைப்பின் சில உச்சங்களை ...நான் படித்து தெரிந்து கொண்டேன் ..நீங்களும் அறிவதற்காக இங்கே பகிர்ந்து இருக்கின்றேன் இதோ 

மிக உயர்ந்த பகுதி                        எவரெஸ்ட் சிகரம், நேபாளம்
மிக தாழ்ந்த பகுதி                         சாக்கடல், ஜோர்டான்
மிகப் பெரிய கடல்                        தென் சீனக்கடல், பசிபிக் பெருங்கடல்
மிக நீளமான ஆறு                        நைல், ஆப்பிரிக்கா
மிக பெரிய பாலைவனம்                   சஹாரா, வட ஆப்பிரிக்கா
மிக வெப்பமான பகுதி                     தலோல், டானகில் டிப்ரெஷன், எத்தியோப்பியா (34.4 செல்ஷியஸ்) (வருட சராசரி)
மிக குளிரான பகுதி                       பிளோட்டோ ஸ்டேஷன், அண்டார்டிகா (-56.7 செல்ஷியஸ்) (வருட சராசரி)
மிக ஈரமான பகுதி                        மௌசின்ராம், மேகாலயா, இந்தியா (11,873 மி.மீ) (வருட சராசரி)
மிக உலர்ந்த பகுதி                        அட்டகாமா பாலைவனம், சிலி
மிகப்பெரிய கண்டம்                       ஆசியா
மிகப்பெரிய உப்பு நீர் ஏரி                  காஸ்பியன் கடல்
மிகப்பெரிய நன்னீர் ஏரி                           சுப்பீரியர் ஏரி, அமெரிக்கா – கனடா
மிகப்பெரிய நீர்வீழ்ச்சி                      ஏஞ்சல், வெனிசுவேலா
மிகப்பெரிய டெல்டா                       சுந்தரவனம், இந்தியா
மிகப்பெரிய தீவு                                  கிரீன்லாந்து
மிகப்பெரிய தீவுக்கூட்டம்                   இந்தோனேஷியா
மிகப்பெரிய சமவெளி                      கங்கைச் சமவெளி
மிகப்பெரிய வனம்                         கோனிஃபெரஸ், வட ருஷ்யா
மிகப்பெரிய ஆலையம்                     அங்கோர்வாட், கம்போடியா
மிகப்பெரிய விமான நிலையம்        மன்னர் காலத் சர்வதேச விமான நிலையம், சௌதி அரேபியா
மிகப்பெரிய தேவாலயம்                    செயின்ட் பீட்டர்ஸ் பஸலிக்கா, வாடிகன்
மிகப்பெரிய இராணுவம்                           பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி, சீனா

நன்றி மீண்டும் அடுத்த பதிப்பில் இணையும் உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<<


Tuesday, 4 December 2012

மறக்கமுடியாத சம்பவம் [பாகம் இரண்டு ]

மறக்க முடியாத சம்பவம் என்ற தலைப்பில் நான் உலகில் நடந்த மக்களின் மனதில் இன்னும் நீங்காத நிகழ்வுகளை நான் என்னுடைய மறக்க முடியாத சம்பவம் பாகம் ஒன்றில் தெரிவித்து இருந்தேன் ..அது போல இந்த இரண்டா பாகத்தில் நான் வசிக்கும் கோயம்புத்தூர்ல்  நடந்த மக்களின் மனதில் இன்னும் நீங்காத நினைவுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்து இருக்கின்றேன் ................




கோயம்புத்தூர்ல் வசிக்கும் துணிக்கடை அதிபரின். மகள்  முஸ்கின் மகன்  ரித்திக் .....இருவரையும் அவர்களின் வீட்டில் முன்னாள்  கார் டிரைவராக வேலை பார்த்த  மோகன் என்னும் வீனபோனவன் ..கடத்தி சென்று .அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தும் .மற்றும் அந்த சிறுவனையும் அந்த சிறுமையையும் .கொலை செய்து வாய்க்காலில் .தூக்கி வீசி எறிந்தான் ..பின்பு காவல்துறையினர் மோகனை கைது செய்து ...என் கவுண்டரில் சுட்டு கொலை செய்தனர் என்பது குறிப்பிட தக்கது ..........




கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த, தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில், 58 பேர் பலியாயினர். தடை செய்யப்பட்ட அல் - உம்மா இயக்கத் தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானி உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதானி உள்ளிட்ட எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். பாஷா உள்ளிட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .....தமிழ்நாட்டில் குண்டு வெடித்தது கோவையில் மட்டு தான் என்பது குறிப்பிட தக்கது ......




கோவை உக்கடம் கோட்டைமேடு இஸ்லாமியர்கள் அதிக வசிக்கும் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து 12 பேர் பலியானார்கள் பெரும் மழை வெள்ளத்தால் அந்த அடுக்கு மாடி கட்டிடமே தரைமட்டமானது .இதனால் பல இஸ்லாமிய குடும்பங்கள் இருக்க இடமின்றி தவித்தனர்..இந்த சம்பவத்தையே இன்னும் கோவை மக்கள் மனதிலிருந்து புரட்டிப் போட முடியவில்லை....




உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும்சேர்த்து நடத்தப்பட்டது.....இதனால் கோயம்புத்தூர்ல் உலக தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டார்கள்..........
நன்றி நட்புடன் உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<



Sunday, 2 December 2012

இறைவனின் அருள்




என் நண்பரின் வாழ்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு இதோ .............................
என் நண்பர் ஊர் அரசர்குலம் ..அவர் திருநல்வேலியில் நடக்கும் ஒரு இஸ்லாமிய மாநாட்டுக்காக ...செல்ல தன ஊருக்காரர்களை அழைத்து ஒரு நான்கு சக்கர வாகனம் வண்டியை பிடித்து சென்றார் .....மாநாடும் முடிந்தது சரி அப்படியே திருநல்வேலியில் உள்ள இருட்டு கடை அல்வா கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டு அப்படியே திருநல்வேலியை ஒரு வளம் வந்து ...பின்பு சொந்த ஊர்ருக்கு செல்ல அதே வேனில் புறப்பட்டனர் ...வண்டி அப்படியே மிக வேகமாக வந்து கொண்டு இருந்தது ......
திடிரென்று என் நண்பருக்கு வயிற்று வலி வர ஆரம்பித்தது ..இருட்டு கடை அல்வாவ ஒரே ஆல் யாருக்கும் குடுக்காம சாப்பிட்டால் வயிற்று வலி வரதானே செய்யும் .........சரி அவர் வண்டியை ஓட்டும் டிரைவரிடம் சென்று தம்பி எனக்கு வயிறு வலிக்கிறது ..அப்படியே ஒதுக்கு புறமாக ஏதாவது தண்ணீர் வசதியுடன் இடம் இருந்தால் நிறுத்து ..நான் மலம் கழிக்க வேண்டும் என்றார் ...டிரைவரும் சரி சரி என்று தலை ஆட்டி விட்டுட்டு ....வண்டியை நிருத்தாமே ஓட்டி சென்றார் ..என் நண்பருக்கும் அடக்க முடியாமல் அந்த டிரைவரை பார்த்து டே அறிவு கெட்டவனே வண்டியை நிறுத்துடா என்று கோவத்துடன் கூறினார் ..பின்பு அந்த டிரைவர் வண்டியை நிறுத்தினார் .....என் நண்பரும் மலம் கழிக்க சென்று விட்டார் ...உடனே அந்த டிரைவர் வண்டியிலிருந்து இறங்கி ...புகை பிடித்து கொண்டு இருந்தார் ..சற்று வண்டியின் கீழ பார்த்தால் ..வண்டியின் பேட்டரியின் கரண்ட சப்ளே ஆகும் ஒயர் .இஞ்சின் மேல பட்ட படி இருந்தது ....உடனே டிரைவர் சாக் ஆயிட்டார் ..இப்படியே இன்னும் ஒரு ஐந்து நிமிடம் வண்டியை ஓட்டினால் ..இந்நேரம் வண்டியில் தீ பற்றி இருக்குமே என்று பெரும் மூச்சு விட்டார் ..என் நண்பருக்கு வயிற்று வலி ஏட்பட்டதுனால் தானே வண்டியை நிறுத்தினோம் இல்லை என்றால் ..இந்நேரம் அனைவரும் வண்டியில் தீ பற்றி அனைவரும் எரிந்து இருப்போமே ..என்று பயந்த படியே ..என் நண்பரை கட்டி தலிவினார் அந்த டிரைவர் ...............இறைவனின் அருளால் அந்த நான்கு சக்கர வாகனத்தில் உள்ள அனைவரும் தப்பித்தனர் ......இந்த கதையில் வரும் என் நபர் என்று நான் குறிப்பிடும் நபர் .என் முகநூல் நண்பர் ஜப்பார் அவர்களின் வாழ்கையில் நடந்த நிகழ்வு தான் இது ....நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<



Saturday, 1 December 2012

என் கிட்ட வண்டி இருக்கு உங்க கிட்ட ?




நம்மிடம் வண்டி இருந்தால் மட்டும் போதாது ..அதனை எப்புடி பயன்படுத்தவேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும் ......,,இதோ 
குண்டும்குழியும் நமது சாலைகளில் எப்பொழுதும் இடம்பெற்றிருக்கும் அணிகலன்கள். அரசியல் பாதாளத்தில் வாழும் ஆட்சியாளர்களின் கருணை மிகுந்த பார்வை தேர்தல் நேரத்தில் சாலைகளில் ஒட்டுப் பிளாஸ்திரி போடுவதோடு முடிந்து விடுகிறது. மற்ற நேரங்களில் குண்டும் குழியுமே நமது சாலைகளின் நிரந்தர அடையாளங்கள்.
ஆனால் சாலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் நம்மூரில் குறைவதே இல்லை. கடன் வாங்கியாவது கார்கள், இருசக்கர வாகனங்கள் வாங்குவது சகஜமாகிவிட்டது. ஆனால் இந்த வாகனங்களால் ஏற்படும் மாசுபாடு, எரிபொருள் செலவு, போக்குவரத்து நெருக்கடி, உடல்நலக் கேடு, நேர விரயம் போன்றவற்றை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை.
இவற்றை மீறி வாகனங்களை பயன்படுத்த நாம் துணிந்து விட்ட பிறகு, அந்த வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். இவை எல்லாமே இயந்திரங்கள், சரியாகப் பராமரிக்காவிட்டால் பழுதாகி செலவு வைப்பதுடன், நிறைய பிரச்சினைகளையும் கூடவே கொண்டு வரும்.
முதல் கட்டமாக வாகனங்களின் டயர் காற்றழுத்தத்தை அதற்குரிய வகையில் சரியாக பராமரிக்க வேண்டும். டயரின் காற்றழுத்தம் 2 கிலோ குறைவாக இருந்தால் 5 - 8 சதவீதம் பெட்ரோல்/டீசல் விரயமாகும். இது டயரின் செயல்பாட்டுத் திறன், ஆயுளையும் குறைக்கும்.
வண்டியை ஓட்டும்போது அந்த வண்டிக்கான "ஆப்டிமம் ஸ்பீட்" என்று வண்டியில் குறிப்பிடப்பட்டுள்ள வேக எல்லைக்குள் ஓட்டினால் நிறைய எரிபொருளைச் சேமிக்க முடியும். உங்கள் வண்டியில் உள்ள ஸ்பீடா மீட்டரில் இந்த எல்லையை சிவப்பாக குறித்திருப்பார்கள். அதேபோல் வண்டியை வேகமாக - ஒரு குறிப்பிட்ட கியரில் ஓட்டிச் சென்று சடாரென்று வேகத்தைக் குறைப்பதும் எரிபொருள் செலவை அதிகரிக்கும், எஞ்சினின் திறனையும் குறைக்கும்.
போக்குவரத்து சிக்னலில் வண்டி நிற்கும் போது,  வண்டியை அணைத்துவிடுவது நல்லது. திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது செலவாகும் பெட்ரோலும், 14 விநாடிகள் எரியும் பெட்ரோலும் ஒரே அளவுதான். எனவே, சிக்னலில் குறைந்தபட்சம் 14 விநாடிகள் நேரமிருந்தாலே வண்டியை அணைத்து விடலாம்.
ஒரு வாகனத்தில் 40 கி.மீ வேகத்தில் ஒரு நிமிடத்துக்கு பயணம் செய்ய 15 மில்லி பெட்ரோல் தேவை. அப்படிச் செல்லும்போது ஒரு நாளைக்கு 7 சிக்னல்களில் வண்டியை அணைத்து வைத்தால் 100 மில்லி பெட்ரோலை சேமிக்க முடியும். இப்படி மாதத்தில் 3 லிட்டர் வரை சேமிக்கலாம். ஊரிலுள்ள அனைத்து வாகனங்களும் இதைப் பின்பற்றினால் ஒரு மாதத்தில் பல லட்சம் லிட்டர் பெட்ரோலை சேமிக்க முடியுமே.
காரில்தான் செல்ல வேண்டும் என்று நாம் நினைத்தால், குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே காரை பயன்படுத்தலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்பவர்கள், ஒரே திசையில் பயணிக்கும்போது காரை பகிர்ந்து கொண்டு செயல்படலாம்.
மேலும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும்போது, நமது வேலைகள் அனைத்தையும் திட்டமிட்டு, ஒரே முறையில் முடித்துவிடுவது எரிபொருள் செலவு, அலைச்சல், நேரம் அனைத்தையும் குறைக்கும்.
பொதுவாக மின்ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன் படுத்துவது சிக்கனமானது, மாசுபாட்டை குறைக்கக் கூடியது, அயர்ச்சியைத் தவிர்க்கக் கூடியது. ஓரளவு தொலைவுக்கு சைக்கிளையும், அதைவிட குறைந்த தூரத்தை நடந்தும் கடப்பது நல்லது......
நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<