என் நண்பரின் வாழ்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு இதோ .............................
என் நண்பர் ஊர் அரசர்குலம் ..அவர் திருநல்வேலியில் நடக்கும் ஒரு இஸ்லாமிய மாநாட்டுக்காக ...செல்ல தன ஊருக்காரர்களை அழைத்து ஒரு நான்கு சக்கர வாகனம் வண்டியை பிடித்து சென்றார் .....மாநாடும் முடிந்தது சரி அப்படியே திருநல்வேலியில் உள்ள இருட்டு கடை அல்வா கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டு அப்படியே திருநல்வேலியை ஒரு வளம் வந்து ...பின்பு சொந்த ஊர்ருக்கு செல்ல அதே வேனில் புறப்பட்டனர் ...வண்டி அப்படியே மிக வேகமாக வந்து கொண்டு இருந்தது ......
திடிரென்று என் நண்பருக்கு வயிற்று வலி வர ஆரம்பித்தது ..இருட்டு கடை அல்வாவ ஒரே ஆல் யாருக்கும் குடுக்காம சாப்பிட்டால் வயிற்று வலி வரதானே செய்யும் .........சரி அவர் வண்டியை ஓட்டும் டிரைவரிடம் சென்று தம்பி எனக்கு வயிறு வலிக்கிறது ..அப்படியே ஒதுக்கு புறமாக ஏதாவது தண்ணீர் வசதியுடன் இடம் இருந்தால் நிறுத்து ..நான் மலம் கழிக்க வேண்டும் என்றார் ...டிரைவரும் சரி சரி என்று தலை ஆட்டி விட்டுட்டு ....வண்டியை நிருத்தாமே ஓட்டி சென்றார் ..என் நண்பருக்கும் அடக்க முடியாமல் அந்த டிரைவரை பார்த்து டே அறிவு கெட்டவனே வண்டியை நிறுத்துடா என்று கோவத்துடன் கூறினார் ..பின்பு அந்த டிரைவர் வண்டியை நிறுத்தினார் .....என் நண்பரும் மலம் கழிக்க சென்று விட்டார் ...உடனே அந்த டிரைவர் வண்டியிலிருந்து இறங்கி ...புகை பிடித்து கொண்டு இருந்தார் ..சற்று வண்டியின் கீழ பார்த்தால் ..வண்டியின் பேட்டரியின் கரண்ட சப்ளே ஆகும் ஒயர் .இஞ்சின் மேல பட்ட படி இருந்தது ....உடனே டிரைவர் சாக் ஆயிட்டார் ..இப்படியே இன்னும் ஒரு ஐந்து நிமிடம் வண்டியை ஓட்டினால் ..இந்நேரம் வண்டியில் தீ பற்றி இருக்குமே என்று பெரும் மூச்சு விட்டார் ..என் நண்பருக்கு வயிற்று வலி ஏட்பட்டதுனால் தானே வண்டியை நிறுத்தினோம் இல்லை என்றால் ..இந்நேரம் அனைவரும் வண்டியில் தீ பற்றி அனைவரும் எரிந்து இருப்போமே ..என்று பயந்த படியே ..என் நண்பரை கட்டி தலிவினார் அந்த டிரைவர் ...............இறைவனின் அருளால் அந்த நான்கு சக்கர வாகனத்தில் உள்ள அனைவரும் தப்பித்தனர் ......இந்த கதையில் வரும் என் நபர் என்று நான் குறிப்பிடும் நபர் .என் முகநூல் நண்பர் ஜப்பார் அவர்களின் வாழ்கையில் நடந்த நிகழ்வு தான் இது ....நன்றி நட்புடன் >>>>ரினாஸ்<<<<
| Tweet |













