Saturday, 8 April 2017

என்ம‌க‌ள்

என் மகளுக்காக சின்ன சின்ன கவிதைகள் 
படித்து பாருங்கள் நண்பர்களே !

இது 
ஒரு நடக்கும் 
பொம்மை ! 
#என்ம‌க‌ள் 

வீட்டில் சந்தனமரம்
வளர்ப்பது குற்றமாமே
பிறகெப்படி நீ...?
#என்ம‌க‌ள்

உலக அழகிப் பட்டமெல்லாம்
உனக்கெதற்கு
நீ உலகையே அழகாக்குபவள்
#என்ம‌க‌ள்! 


உன்னை பார்த்ததும் வாடியது,
சற்றுமுன் பூத்த பூ..!
#என்ம‌க‌ள் 

பல நூற்றாண்டுகள் ஆகுமாமே
ஒரு வைரம் உருவாக.
நீ மட்டும் எப்படி
பத்தே மாதத்தில் உருவானாய்...
#என்ம‌க‌ள் 

என் வாழ்வே நீ 
என் வாழ்வில் எல்லாமே நீ 
#என்மகள்

இரண்டே புள்ளிகள்தான்
ஆனாலும் அழகிய கவிதை
அவளது‌ கண்கள்...!
#என்மக‌ள்

அவளை
சிறைபிடிக்க
நினைத்து
நான் கைதியானேன்...!
#என்ம‌க‌ள் 

ஒத்திகை பார்க்காத
நடனம்...
அவளின்  நடை...!
#என்ம‌க‌ள்

இந்த தவ‌ழும்
பொம்மைக்கு பிடித்தது த‌வ‌ழாத‌ பொம்மைகளை...
#என்ம‌க‌ள் 


இப்போதெல்லாம் நீ தூங்குவதற்கு 
அழுவதில்லை 
உன்னை நான் தூக்குவதற்காகவே 
அழுகிறாய் 
#என்ம‌கள் 

க‌ட‌ங்காரி 100 முத்த‌மாக‌ இருந்தாலும் வாங்கி கொள்கிறாள் ஒன்றை கூட‌ திருப்பி த‌ருவ‌தில்லை...
#என்ம‌க‌ள் 

எதை எதையோ சாதித்து விடுகிறாய் உன் ஒரே ஒரு அழுகையால்!
#என்ம‌க‌ள்

க‌ர்ப்ப‌மாக‌ இருக்கும் பொழுது உன் அம்மா கடித்தது மாங்காயா, மருதாணியா
இத்தனை சிவப்பா 
#என்ம‌க‌ள் 

நீ சிரிக்கும் பொழுதெல்லாம் உன் அழ‌கு சிற‌கடித்து ப‌ற‌க்கிற‌து
#என்ம‌க‌ள் 

நன்றி !

மகள்களை பெற்ற அனைத்து அப்பாக்களுக்கும்  கவிதைகள் பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன் 
                                                                           நன்றி  
உங்கள் அன்பு  
நண்பன்  ரினாஸ்  
mob no : 9944486627



Sunday, 19 March 2017

கலப்படம் இல்லாமல் பொய் இல்லாமல் உறவுகளுடன் எப்புடி பழகுவது ?

கலப்படம் இல்லாமல் பொய் இல்லாமல் உறவுகளுடன் எப்புடி பழகுவது ?
என்பதுதான் நம் அனைவரின் மனதிலும் ஏற்படக்கூடிய சந்தேகம் 
நாம் நபிகள் நாயகம் அவர்களின் ஹதீஸ்களைக் கேக்கிறோம் படிக்கிறோம் ஆனால் நம் வாழ்வில் நடைமுறை படுத்துகிறோமா? என்று பார்த்தால் அதுதான் கிடையாது அப்படித்தானே ? 
சரி நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள்  தாய் தந்தை மற்றும் மற்ற உறவுகளுடன் எப்புடி அன்பாக இஸ்லாத்தின் அடிப்படையில்  பழக வேண்டும் என்பதை கூறியிருக்கிறார் என்பதை சுருக்கமாக பார்ப்போம்  





முதலில் தாய் 
தாயின் காலடியில் சொர்க்கம் - நபிகள் நாயகம்
இந்த ஹதீஸை எவர் மறக்கிறாரோ அவர்கள்தான் தாயை முதியோர் இல்லத்தில் சேர்ப்பார் 

தந்தை
தந்தை திரிப்தியில் அல்லாஹ்வின் திரிப்தி உள்ளது - நபிகள் நாயகம்
இந்த ஹதீஸை எவர் மறக்கிறாரோ அவர்கள்தான்  தந்தையை எதிரியாக பார்ப்பார் 

சகோதர சகோதரிகள் 
தனக்கு விரும்பியதையே தன சகோதரனுக்கு விரும்பாதவரை எவர் ஒருவரும் ஈமான் கொள்ள முடியாது -நபிகள் நாயகம்
இந்த ஹதீஸை எவர் மறக்கிறாரோ அவர்கள்தான்  சகோதர சகோதரிகளிடம் அந்நியமாக  இம்மையில் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் 

கணவன் 
        மனைவியிடத்தில் சிறந்தவரே மக்களில் சிறந்தவர் -நபிகள் நாயகம்
இந்த ஹதீஸை எவர் மறக்கிறாரோ அவர்கள்தான் இம்மையில் மனைவியியை அடிமை போல் நடத்துபவர்கள் 

மனைவி 
கணவனின் பொருத்தம் இல்லாமல் எந்த ஒரு பெண்ணும் சொர்க்கம் செல்ல முடியாது -நபிகள் நாயகம்
இந்த ஹதீஸை எந்த பெண் மறக்கிறாரோ அவர்கள் தான் கணவனுக்கு இம்மையில் கட்டுப்பட்டு நடக்காமல் இருப்பவர்கள் 

உறவுகள் [ சொந்தங்கள் ]
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கம் செல்லமாட்டான் -நபிகள் நாயகம்
இந்த ஹதீஸை மறக்கும் மக்களும் சரி மறக்காத மக்களும் சரி இதில் தான் அதிகம் தவறு செய்து விடுகிறார்கள் 
பெரும்பாலான மக்கள் உறவை முறித்து தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் உறவுகளுடன் நெருங்கி பழகுவதே கிடையாது 

மக்கள்
எவரால் மனித இனத்துக்கு நன்மை ஏற்படுகின்றதோ அவரே மனிதரில் சிறந்தவர் - நபிகள் நாயகம்
மனிதர்கள் மீது அன்பு செலுத்துவதற்கு இந்த ஹதீஸ் நினைவில் இருந்தால் போதும் 

                                                                               நன்றி
  உங்கள் நண்பன்.  ரினாஸ் 
   mob no : 9944486627 


Thursday, 14 April 2016

என் பார்வையில் தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி

1]எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து மது ஒழிப்பிற்காக.போராட்டம் விவசாய மக்களுக்காக போராட்டம் .தமிழ் மக்களுக்காக போராட்டம் என்று இன்னும் எத்துணையோ விசியங்களுக்காக  குரல் கொடுத்து கொண்டு இருக்கின்றவர் வயது எழுபதை தாண்டி விட்டது .- வைகோ

2]உடல் நிலை சரியில்லை தொண்டை மற்றும் முதுகில்  ஆபரேசன் செய்து இருப்பதால் பேச்சிலும் நடையிலும் தள்ளாட்டம் தவிர .மதுவினால்  ஏற்பட்ட தள்ளாட்டம் கிடையாது இவரின் பேச்சை கிண்டல் செய்யும் மக்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும் இவரின் பேச்சால் எத்துணையோ படங்கள் வெள்ளிவிழா கண்டவை .ரமணா திரைப்படத்தில் க்ளைமேக்ஸ்  காட்சியில் மாணவர்களை பார்த்து இவர் மூச்சுவிடாமல் பேசும் காட்சியை ரசிக்காதவர்களே இல்லை இன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பேச்சில் தடுமாற்றம்  150-க்கும் மேற்பட்ட  படங்களில்   நடித்து இருக்கிறார் டூப் போடாமல் எத்துணையோ சண்டை காட்சிகளை அசால்ட்டாக செய்தவர் . சண்டை காட்சிகளுக்கு பெயர் போனவர் திரையுலகில்  நிறைய நலிந்த கலைஞர்களை தூக்கி விட்டவர் - விஜயகாந்த் 

3]இருளில் இருக்கும் தலித் மக்களின்வாழ்வில் வெளிச்சம் கொண்டு வர உழைப்பவர்.. நூறு பேர் இருக்கும் இடத்தில் இவர் பெயர் கூறினால் அதில் ஐம்பது பேர் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் . அரசியலிலும் சரி மக்களிலும் சரி இவருகென்று தனி மரியாதை இருக்கிறது -திருமாவளவன் 


4]முதலாளித்துவத்தை எதிர்க்கும் - கம்யூனிஸ்டுகள் 


இந்த கூட்டணிக்கு ஏன் நாம் ஒரு வாய்ப்பை குடுக்க கூடாது ...
தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி



சிந்திப்பீர் செயல்படுவீர் 
நன்றி  உங்கள் நண்பன் ரினாஸ்  







Saturday, 6 February 2016

விசாரணை படம் குட்டி விமர்சனம்





நடிகர் : அட்டகத்தி தினேஷ் . சமுத்திரகனி .மற்றும் பலர் 

இயக்கம் : வெற்றி மாறன் 

இசை : ஜி வி பிரகாஸ் 

உண்மை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் .: விசாரணை 

குட்டி விமர்சனம் :

ஆந்திராவில் வேலை பார்க்கும் அப்பாவி மூன்று தமிழ் நாட்டு இளைஞர்களை ஆந்திர போலீசார் கைது செய்து ..
அடித்து கொடுமை படுத்தி அவர்களை செய்யாத குற்றத்தை செய்ததாக 
ஒப்புகொள்ள சொல்கிறார்கள் 

இடைவேளை வரை அவர்களை அடித்து துவைக்கிறார்கள்.....
திரையில் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு அடியும் .திரை அரங்கில் இருக்கும் மக்களை பயம்புடுத்துகிறது ...

தமிழ்நாட்டு போலீசான சமுத்திரகனி அந்த இளைஞர்களை காப்பாற்றி தமிழ்நாட்டுக்கு அழைத்து செல்கிறார் ....
தமிழ்நாடு  போலிஷ் நல்லவன் .வல்லவன் என்று புகழ் பாடும் அட்டகத்தி தினேஷ் மற்றும் இளைஞர்கள் 
க்ளைமாக்ஸ்ல் அந்த ஆந்திர போலிஷ்காரகளே பரவாலை என்று நினைக்கும் அளவுக்கு காட்சி அமைத்து இருப்பது ..அருமை ......
மொத்தத்தில் விசாரணை போலிஷ்காரர்களின் சுயரூபத்தை தோலுரித்து காட்டுகிறது....
இந்த படத்துக்கு என்னுடைய மதிப்பெண் 5/4
                                                நன்றி . நட்புடன் உங்கள் ரினாஸ் 


Sunday, 3 January 2016

திக்கு வாய் குணமாக



திக்கு வாய் என்பது ஒரு வார்த்தையை கூறமுடியாமல் தட்டு  தடுமாறி அந்த வார்த்தையை கூற முடியாமல் திணறுவதே திக்கு வாய் என்று கூற படுகிறது. அல்லவா
சரி திக்கு வாயை குணபடுத்துவது எப்புடி? என்பதை பார்ப்போம்
எனக்கு திக்குவாய் இருந்தது ஆனால் இப்பொழுது நான் திக்கி திக்கி பேசுவது இல்லை எனக்கு எப்புடி திக்குவாய் குணமானது என்பதை உங்களுக்கு கூறுகிறேன் திக்குவாய் உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.........
நான் ஒரு திக்குவாய்
திக்கு வாய் போக்க மருந்துகள் என்று கூறி என் பாட்டி  தந்த சிகிச்சை
[1]  காடை கோழி  முட்டையை பச்சையாக குடிப்பது [ காசு விரையம் ஆனதுதான் மிச்சம்]
[2]  பொடி பொடி கூழாங்கற்களை  வாயில் போட்டு பேசுவது [ நேரம் வீணானது தான் மிச்சம்  ]
]3]  தனி அறையில் நியூஸ் பேப்பரை சத்தமாக வாசிப்பது [தொண்டை வலி வந்ததுதான் மிச்சம் ]
[4]  டங் கிளினர் வைத்து அடிகடி நாக்கை சுத்தம் செய்வது  [ஆனால் நாக்கு புண்ணானதுதான் மிச்சம் ]  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆனால் எதுவுமே யூஸ் ஆகலை
இதனால் எல்லோரும் என்னை கிண்டல் அடித்தார்கள் அந்த கிண்டலே எனக்கு வெறியாக மாறியது எனக்குள் உள்ள திக்குவாய் இப்போது காணாமல் போய்விட்டது .... அது எப்புடி? தானே கேக்குறிங்க  இதோ சொல்றேன் பாருங்க

திக்கு வாய் வர காரணம் நம் ஆள் மனதில் இருக்கும் ஒரு வித பயம் தான் காரணம்..என்பதை உணர்ந்தேன் அந்த பயத்தை கொஞ்சம் கொஞ்சமாக என் மனதில் இருந்து போக்கினேன்
எனக்கு சில சில எழுத்துக்கள் உச்சரிக்க வராது
உதாரணம்: கு .பூ .து .கே
குரங்கு என்று கூற திக்குவேன் இதை மாற்ற நினைத்தேன்
குரங்கு என்ற கூற சந்தர்ப்பம்  வந்தால் ஆங்கில வார்த்தையை உபயோகம் செய்வேன் அதாவது மங்க்கி. என்று கூறி வந்தேன் ...
பஸ்சில் பயணம் செய்யும் பொழுது .. பூமார்கட்  போக டிக்கெட் கேப்பேன் ஆனால் என் வாய் திக்கும்
உடனே பூமார்கட் என்று கேட்பதற்கு பதில் ஆங்கில வார்த்தையான FLOWER மார்க்கெட் என்று மாற்றி  கேட்ப்பேன்
இந்த மாறி நமக்கு எந்தெந்த வார்த்தைகள் திக்குமோ அதை கூறுவதற்கு பதிலாக ஆங்கிலத்தையோ அல்லது வேறு ஏதாவது மொழிகளில் அந்த வார்த்தைகளை கூறி பழகினோம் என்றால் நால் பட நால் பட நமக்கு திக்குவாய் என்பதே மறந்து போகும்
எனக்கு அப்படித்தான் சரியானது
மற்றும் இறைவனிடம் அழுது துவா[பிராத்தனை] கேளுங்கள்

மூஸா நபி அவர்களுக்கு திக்கு வாய் இருந்தது. அதைப் பற்றி அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்ட போது

இறைவா என்னுடைய உள்ளத்தை விசாலமாக்கு. என்னுடைய காரியத்தை லேசாக்கிவை. எனது நாவிலுள்ள முடிச்சை நீ அவிழ்த்துவிடு. என்று சொன்னார்கள்.. திருக்குர்ஆன் 20:27

இன்ஷா அல்லாஹ் நாமும் இது போல் துவா [பிராத்தனை ]செய்து மற்றும் நமது பேச்சின் ஸ்டைலை கொஞ்சம் மாற்றுவோம் என்றால் கண்டிப்பாக திக்குவாய் என்பதே இல்லாமல்  நல்ல மாற்றத்தை காண முடியும்
                                                                               நன்றி
                                                                                           நட்புடன் உங்கள் ரினாஸ் 


Wednesday, 19 November 2014

தொழுகையும் நம் ஆடையும்

[குறிப்பு] நான் பார்த்த சிறு சிறு விசயங்களை வைத்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன் இதில்  ஏதேனும் தவறு மற்றும் எழுத்து பிழை இருந்தால்  சுட்டி காட்டுங்கள் ... பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்..........

தொழுகையும் நம் ஆடையும்   



நாம் வித விதமான  புதுசாக அணியும் ஆடைகள்  அனைத்தும்  கல்யாணங்களுக்கும் சில பல விசேசங்களுக்கும் தான் .........
தொழுகையில் ஏனோ தானோன்னு. எது கண்ணுல படுதோ அதை போட்டுக்கிட்டு அவசரம் அவசரமாக   தொழுக போகிறோம் 



நாம் புதுசாக சுத்தமான ஆடைகளை அணிந்து நம் வீட்டின் கழிவறைக்கு செல்வோமா? இல்லை  

லுங்கியோ .. இல்ல ஏதேனும் நைட்.டிரஸ்ஸோ  அணிந்து தான் கழிவறைக்கு செல்கிறோம் 

நாம் பெரும்பாலும் வீட்டில்[இரவில் ] இருக்கும் பொழுது லுங்கியோ நைட் ட்ரசையோதான் அணிவோம்.
அப்படி இருக்கையில் பெரும்பாலான மக்கள் பஜ்ருடைய தொழுகைக்கு  வரும் பொழுது லுங்கி.நைட் டிரஸ் இந்த மாறி ஆடையை அணிந்து கொண்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது 
நாம் எங்கே செல்கிறோம்  இறைவனை வணங்க .இறைவனிடம் பேச 
நம்முடைய இன்பம் துன்பம் அனைத்தையும் நம்மை படைத்த இறைவனிடம் உரையாட செல்கிறோம் . 

அப்படி இருக்கையில் நம்முடைய உடையில் நாம் கவனம் செலுத்த வேண்டாமா ? 
ஒரு ஐ/டி கம்பனிக்கு நாம் வேலைக்கு செல்கிறோம் . லுங்கி மற்றும் நைட்.டிரெஸ்ஸை அணிந்து தான் செல்வோமா ? இல்லை அப்படி சென்றால் அவன் நம்மை தொரத்தி விடுவான் இல்லையா  டிப் டாப்பாக தான்  செல்வோம் .
ஒரு மனிதனை சந்திக்க செல்லும் போதே நாம். நம் உடையில் கவனம் செலுத்துகிறோம் அப்படி இருக்கையில் நம்மை படைத்த இறைவனை வணங்க செல்லும்  பொழுது நாம் ஏன் உடையில் கவனம் செலுத்துவது இல்லை ?
அனைவரும் சிந்திக்க வேண்டும் 
ஆடை தூய்மை பற்றி அல்லாஹ் கூறுவதை கேளுங்கள் 

அல்லாஹ் கூறுகிறான் 

உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக

அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக... திருக்குர்ஆன் 74:4-5

தூய்மை இஸ்லாத்தின் ஒரு பகுதி .. நபிமொழி 

இதனால் நாம்  கடனை வாங்கி புத்தாடை அணியவேண்டும் என்பது கிடையாது தொழுகைக்கு வரும் பொழுது நம்மிடத்தில் இருப்பதில் தூய்மையான ஆடையை அணிந்து வந்தாலே போதுமானது 
முக்கியமாக பஜ்ருடைய தொழுகையில் நாம் லுங்கி .நைட்.டிரஸ் போடுவதை தவிர்த்து கொள்வோம் அனைவரும் தூங்கி எழுந்ததும்  பஜ்ருடைய தொழுகைக்கு செல்லும் பொழுது ..........அப்படியே பல் துலக்கி விட்டு அசுத்தமான ஆடையுடன் . பள்ளிக்கு செல்வதை பார்க்க முடிகிறது இன்ஷா அல்லாஹ் இனி நாம் தொழுகையின் போது நாம் தூய்மையான ஆடைகளை அணிந்து  கொண்டு தொழுவோமாக................
                        
                          ஜஸகல்லாஹுஹைர்                                         


இதில்  ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் ... பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.



Friday, 5 July 2013

வருது வருது ரமலான் வருது ..........






           ரமலான் எம்மை நோக்கி வந்துகொண்டுஇருக்கிறது .வான்மறை வந்திறங்கிய மாதம் .அருள் மறையாம் திருமறைக் குரான் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதன் சிறப்பு பெற. நோன்பு இருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும் .

நோன்பு என்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு ..உண்ணுதல் பருகுதல் .உடலுறவில் ஈடுபடுதல் ..ஆகியவை அதிகாலை முதல் மாலை வரை செய்யாமல் இருப்பது ஆகும்.

நோன்பு மனிதனின் ..நடைமுறைகளை சீராக்கி அவனிடம் உருவாகும் கெட்ட சிந்தனைகளை அழித்து...அவனை ஒழுக்கமுள்ள மனிதனாக மாற்றுகிறது ...

நோன்பை பற்றி அல்லாஹ் கூறுகிறான் .

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்..திருக்குர்ஆன் .2:183

மேற்படிய வசனம் நோன்பு என்பது தூய்மையாக இருக்க உதவக்கூடியது.என்பது தெரிகிறது 

இன்று உலகைக்  உலுக்கி வரும் அநேக பிரச்சனைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதைத்  நுணுக்கமாக ஆராய்ந்தால் அறியலாம் ...அவற்றுள் .......

1.உடல் இச்சை 
2. கோபம் 
3.தவறான உணவுமுறை 
4.தவறான பேச்சு 

இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும் 

உடல் இச்சை....

மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது..உலக இருப்புக்கும் உயிரினங்களின் உற்பத்திக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும் ..எனினும் இந்த உணர்வு சரிபடுத்தப்  பட வேண்டும்..கட்டு படுத்தப்  படவேண்டும் .தவறானமுறையில் இந்த உணர்வுகளைக் தீர்த்து கொள்ள கூடாது...

இன்று நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாக கொண்டவை ஆகும் ....இளம் பெண்கள் அதிகமானவர்கள் ..கொலை செய்ய படுவதும் தற்கொலை செய்யப்  படுவதும் ..இந்த பாலியல் பிரச்சனைகளால் தான் ..[உதாரணத்துக்கு] டெல்லியில் ஓடும் பஸ்ஸில் ஒரு இளம்பெண்ணை கற்பழித்து ..கொலை செய்தார்கள் இதை அனைவரும் அறிந்ததே ....உலகம் சந்தித்து வரும் பாலியல் நோய்களை தீர்த்து கொள்ள ..அரசுகள் திண்டாடி கொண்டு வருகிறது 

ஆனால் நோன்பு நோற்க்கும் ஒருவன் தனது மனைவியிடம் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னை கட்டு படுத்தி கொள்கின்றான் .நோன்பு பாலியல் உணர்வை கட்டுபடுத்தும் என்பதாலேயே இது ..சாத்தியமாகின்றது...

பாலியல் உணர்வை பற்றி நபி மொழியை பார்ப்போம் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இளைஞர்களே  உங்களில் , திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப்பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும் என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நூல்: புகாரி - 1905.  

கோபம்....

இன்று மனிதன் இயந்தரமாகி மனிதத் தன்மையைத் இழந்து வருகின்றான்.கோபத்தை கட்டு படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான் 

ஆனால் நோன்பு மனிதனின் கோப உணர்வுகளை கட்டு படுத்துகின்றது .நீ நோன்புடன் இருக்கும் பொழுது யாரவது உன்னிடம் சண்டையிட்டால் .அவனிடம் நீ... நான் நோன்பாளி என்று கூறி விலகிவிடு என்று இஸ்லாம் கூறுகின்றது 
கோப உணர்வுகளை ஒருவன் கட்டுப்படுத்தி வாழ பழக்க பட்டால் அவன் பல ஆபத்துகளில் இருந்து விடுதலை பெற்று விடலாம்.....

தவறான உணவு முறை

உலகம் இப்பொழுது பாஸ்ட் புட்டுக்கு மாறி வருகிறது ...அதாவது கண்ட கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் தின்று ..உடலில் கொழுப்புகள் அதிகமாக மாறி உடல் கொழுப்புகளை கரைக்க .சிலர் மருத்துவர்களை நாடுகின்றார்கள்...ஒரு மனிதன் நோன்பு வைக்கும் பொழுது ...இந்த பிரச்சனைகளில் இருந்து அவன் எளிதாக விடை பெறலாம் ..என்று அறிவியல் அறிஞர்களே ஆராய்ந்து கூறும் அளவுக்கு நோன்பு ஒரு நன்மையை மனிதனுக்கு  வகுக்கின்றது...

தவறான பேச்சு 
 
தவறான பேச்சுகளில் இருந்தும் .தவறாக பேசுபவர்களும் இந்த நோன்பு மாதத்தில் .அதிகம் அதிகமாக பள்ளியுடன்  இணைவார்கள்...இந்த நோன்பு மாதத்தில் சண்டைக்கும் சச்சரவுக்கும் செலவழிக்காமல்..இபாதத்துக்கும் பக்குவத்தை ஏற்படுத்துவதர்க்கும்...அனைவரும் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் ...எல்லாம் வல்லா அல்லாஹுதால உதவி செய்வானாக   

நன்றி ..இப்படிக்கு உங்கள் நண்பன் ரினாஸ்